சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Khan11

நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

4 posters

Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 9:56

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Ht2891
வீடுகளில் சமைக்கும் உணவுகளில், மிகவும் சுலபமாக இரண்டே நிமிடங்களில் தயார் செய்யும் உணவுதான் நூடுல்ஸ். இதனை, வாரத்தில் ஒருநாள்   ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் உள்ளது. 

குழந்தைகள் விரும்பிக் கேட்டால் பெற்றோர்களுக்கு செய்து கொடுக்கவும் எளிதான உடனடி உணவாக நூடுல்ஸ் மாறிப்போய் விட்டது. இத்தனை  கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் நூடுல்ஸ் அதன் சுவைக்கு நிகரான அபாயங்களையும் கொண்டுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பது  உடல்நலத்துக்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியது.

நம் உடலுக்கு வரும் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நூடுல்ஸில் சேர்க்கப்படும் மெழுகு உறிஞ்சி உடலில் தங்க விடாமல்   செய்துவிடுகிறது. இதில் மூளைச்செல்களை உருவாக்கும் முக்கிய வைட்டமின்களும் அடங்கும். இது தவிர ஹார்மோன்களை  சரியாக சுரக்கச்செய்து  அழகான சருமத்தையும் கேசத்தையும் பராமரிக்க  கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உதவுகின்றன.

 இவையனைத்தும் மெழுகு சேர்க்கப்பட்ட நூடுல்ஸ்களை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்காமல் போகின்றன. நூடுல்ஸ் இதயம் சம்பந்தப்பட்ட  நோய்களையும் அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உடல் பருமன், இடுப்பிலும் வயிற் றிலும் தேவையற்ற சதைகளை உருவாக்குதல்  போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதனால், மூளைத்தாக்கு நோய் (ஸ்ட்ரோக்), நீரிழிவு போன்றவை எளிதாக வருகின்றன.

நூடுல்ஸில் உள்ள மைதா, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது.  நூடுல்ஸில் வெள்ளை நிறத்துக்காக சேர்க்கப்படும் பிளீச்சிங் பொருளான அலோக்ஸான் (alloxan) கணைய சுரப்பிகளில் இன்சுலினை சுரக்கச்  செய்வதை பாதிப்படையச் செய்து நீரிழிவு நோய் வருவதற்கு வழிவகுக்கிறது. மக்களுக்கு அலோக்ஸான் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

தென்கொரிய ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு இந்தியாவில் பெண்களுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவதால் அதிக தீமைகள் வருவதைத்  தெரிவித்துள்ளது. நூடுல்ஸில் உள்ள ‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை பாதிக்கிறது.  இதனால் பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரும் அபாயம் உண்டாம்.

பெரும்பான்மையான மக்களுக்கு இயற்கை தானியங்களால் செய்யப்பட்ட ஆரோக்கியம் தரும் நூடுல்ஸ் கடைகளில் கிடைப்பது தெரிவதில்லை.  இயற்கை முறையில் வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி போன்றவற்றால் செய்யப்படுகிற நூடுல்ஸ்  இப்போது கிடைக்கின்றன. இவற்றில், உடலுக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி-6, நியாசின், மக்னீசியம்  போன்றவை உள்ளன.

இவை உடலில் தாறுமாறான இன்சுலின் அளவை தடை செய்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டே நிமிடங்களில் தயார்  செய்துவிடக் கூடிய இன்ஸ்டன்ட் உணவு உண்மையிலேயே அவசியமானதுதானா, ஆரோக்கிய மானதுதானா என்பதையும் இனி இரண்டு நிமிடங்கள்  யோசியுங்கள். நூடுல்ஸில் உள்ள‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி  பிரச்னை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2901


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by Nisha Thu 2 Oct 2014 - 11:10

நூடுல்ஸ் குறித்த விழிப்புணர்வுப்பகிர்வுக்காக நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by சுறா Thu 2 Oct 2014 - 12:02

உணவுப்பொருட்களை பற்றி இணையத்தில் படிக்கும் அனைத்தும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by Nisha Thu 2 Oct 2014 - 12:07

சைனீஸ் வகை நூடில்ஸ் இந்த வகை மொழுகு பிரச்சனை இருப்பது நிஜம் தான்!  அவைகளில் எந்த சத்தும் இல்லை. 

ஆனால் சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் செய்யப்படும் மைதா நூடில்ஸ் இந்த வகையில் சேராது. 

அடுத்து டயாபிட்டிஸ் காரர்களுக்கு  நூடில்ஸ், அரிசிசாதாம் போன்ற  உணவுகள் இரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிக்கும் என்பதும் சரி தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by சுறா Fri 3 Oct 2014 - 7:42

Nisha wrote:சைனீஸ் வகை நூடில்ஸ் இந்த வகை மொழுகு பிரச்சனை இருப்பது நிஜம் தான்!  அவைகளில் எந்த சத்தும் இல்லை. 

ஆனால் சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் செய்யப்படும் மைதா நூடில்ஸ் இந்த வகையில் சேராது. 

அடுத்து டயாபிட்டிஸ் காரர்களுக்கு  நூடில்ஸ், அரிசிசாதாம் போன்ற  உணவுகள் இரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிக்கும் என்பதும் சரி தான்!
மைதா இளவயதினருக்கு மிகவும் நல்லது 
ஆட்டா பெரியவர்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

மைதா பற்றின தவறாக புரிதலால்தான் இந்த மாதிரி கதைகள் இணையத்தில் உலாவருகின்றது.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 11:24

எங்க வீட்ல மாசத்துல 4 தடவை செய்துடுவேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by சுறா Sat 4 Oct 2014 - 23:06

பானுஷபானா wrote:எங்க வீட்ல மாசத்துல 4 தடவை செய்துடுவேன்

எதை செய்வீங்கன்னு சொல்லிட்டு போகலையே பாட்டிம்மா  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by Nisha Sat 4 Oct 2014 - 23:30

சுறா wrote:
Nisha wrote:சைனீஸ் வகை நூடில்ஸ் இந்த வகை மொழுகு பிரச்சனை இருப்பது நிஜம் தான்!  அவைகளில் எந்த சத்தும் இல்லை. 

ஆனால் சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் செய்யப்படும் மைதா நூடில்ஸ் இந்த வகையில் சேராது. 

அடுத்து டயாபிட்டிஸ் காரர்களுக்கு  நூடில்ஸ், அரிசிசாதாம் போன்ற  உணவுகள் இரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிக்கும் என்பதும் சரி தான்!
மைதா இளவயதினருக்கு மிகவும் நல்லது 
ஆட்டா பெரியவர்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

மைதா பற்றின தவறாக புரிதலால்தான் இந்த மாதிரி கதைகள் இணையத்தில் உலாவருகின்றது.

ஆமாம்! நான் வீட்டில் இடியாப்பம், பிட்டு, ரொட்டி செய்ய ஆட்டா மாவைத்தான் பயன் படுத்துவேன். பிரௌன் மா என்பதால் சர்க்கரையும் உடலில் சேராது.

மைதா கடையில் பாவிப்பேன். நூடில்ஸ் உணவில் சைனீஸ் வகை நூடில்ஸ் தவிர்த்து இடியப்பா நூடில்ஸ் எனவருவதை வாங்கி காய்கறி சேர்த்து சைனீஸ் ஸ்டைலில் பிரைட் நூடுல்ஸ் செய்யலாம். சோயாசாஸ் சேர்த்தால் சுவையாய் இருக்கும்.

சுவிஸின் நம்மூர் அரிசி சாதம் போல் நூடில்ஸும் உருளைக்கிழங்கும் தான் பிரதான உணவு!இதனுடன் சீஸ் சேர்த்து வித விதமாய் செய்வார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum