Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
நீரிழிவு நோயை குணமாக்கும் மிளகு
Page 1 of 1
நீரிழிவு நோயை குணமாக்கும் மிளகு
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க உதவுகிறது. விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும். பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புகளில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொருக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கிராம் என இரண்டையும் போதிய அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயம் போட்டு அருந்தி வந்தால் சகல விஷக்கடிகளும் முறியும்.சாதாரண காய்ச்சலுக் கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும். சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.
மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 23 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும். 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.
சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும். வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2978
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்
» மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்
» மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்
» ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!
» புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !
» மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்
» மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்
» ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!
» புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|