சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

குறத்திமகன் படம் Khan11

குறத்திமகன் படம்

Go down

குறத்திமகன் படம் Empty குறத்திமகன் படம்

Post by anuradha Sun 2 Aug 2015 - 12:29

குறத்திமகன் படம்

குறத்திமகன் படம் 5bbfe989d5b9411605d02efd99bba712_pt_xl
குறத்திமகன் படம் Kalaingnam1
குறத்திமகன் படம் Kurathimagan0002
குறத்திமகன் படம் Kurathimagan0004
குறத்திமகன் படம் Kurathimagan0008
குறத்திமகன் படம் Kurathimagan0011
குறத்திமகன் படம் Kurathimagan0009
குறத்திமகன் படம் Kurathimagan0010

குறத்திமகன் படம்
 
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், "ஆதிபராசக்தி' திரைப்படத்திற்கு பிறகு தயாரித்து இயக்கிய வண்ணப்படம் "குறத்திமகன்'. குறவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சமுதாயத்தில் மிகவும் பிற்பட்டநிலையில் வாழ்ந்து வருவதை எடுத்துகாட்டும் வகையிலும், குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருத்தி தன் மகனை எப்பாடுபட்டாவது நன்கு படிக்க வைத்து, பெரிய மனிதனாக ஆக்க வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்ற எடுத்து கொண்ட முயற்சியையும்,  இந்த படம் விளக்கியது. 
கலைமணியின் கதைக்கு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி  இயக்கியதுடன், அதை தனது ரவி புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவும் செய்தார். குறவர் இனத்தின் தலைவனான மலைக்கோட்டை(ஜெமினிகணேசன்)யின் மனைவி கே.ஆர்.விஜயா. அவர் தனது இனத்தைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்று பாடுபடுகிறார். இது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து கே.ஆர்.விஜயாவை ஜாதியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக கூற, அவர்  தனது மகனுடன் அங்கிருந்து தப்பித்து, நல்ல உள்ளம் படைத்த ஒருவரிடம் குழந்தையை சேர்ப்பித்து, படிக்க வைக்கிறார்.
அந்த குழந்தையும் வளர்ந்து, பெரியவனாகி நன்கு படித்து, பெரியமனிதனாகும் போது, குறவர் இனமே கே.ஆர்.விஜயாவை வாழ்த்துகிறது.  ஜெமினி, விஜயாவின் மகனாக மாஸ்டர் ஸ்ரீதர் நடித்தார்.  ஸ்ரீதரின் தோழனாக கமலஹாசன் சில காட்சிகளின் வந்து போவார்.
சிறிய வயதில் சக்சைபோடு போட்ட கமல், வாலிபராகி நடித்து பெயர் பெற்றபடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் ஸ்ரீதருக்கு ஜோடியாக ஜெயசித்ரா அறிமுகமானார். இந்த படத்தில் இருந்து  அவரது சுட்டித்தனமான நடிப்பு துவங்கியது.
வி.எஸ்.ராகவன், ஜி. சகுந்தலா, ஓ.ஏ.கே. தேவர், சுருளிராஜன், நம்பியார், வி.கே. ராமசாமி, உசிலைமணி, உடையப்பா என பலர் நடித்திருந்தனர்.
அனைவரும் தங்களுக்கு அளித்த  வாய்ப்பை நிறைவாகபயன்படுத்தி இருந்தனர். குறவர் கூட்டத்தில் ஒருவராக வரும் சுருளிராஜனின் நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது.
தங்களது இனத்தைச் சேர்ந்தவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். தினசரி குளிக்க  வேண்டும் என்று கே.ஆர்.விஜயா சொல்லும் போது, அதை ஒரு பெரிய குற்றமாக எடுத்து கொண்டு, "குளிக்க சொல்றாளே' என்று நீட்டிமுழக்கி தனது வெண்கல குரலில் சுருளிராஜன் கூறும் போது தியேட்டரே கைதட்டலால் அதிரும்.
கல்லூரியில் கேன்டீன் நடத்தி பல்வேறு தகிடுதத்தங்களை செய்து எம்எல்ஏ ஆகி, பணவெறி பிடித்து அலையும் பாத்திரத்தில் நம்பியார் தனக்கே உரிய பாணியில் அபாரமாக நடித்திருப்பார்.
"குறத்தி வாடி என்குப்பி இந்த கூட்டத்தில நீ பொறந்தே தப்பி...'
"காடைபிடிப்போம், கவுதாரிபிடிப்போம்.. காக்கா பிடிக்க மாட்டோம் யாரையும் காக்கா பிடிக்க மாட்டோம் போன்ற கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களுக்கு  திரை  இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இனிய இசை அமைத்தார்.
பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வெளிவந்த இந்த படம், பெரும் வெற்றியை பெற்றது.
படம் ஓடிய திரையரங்குகளில் எல்லாம் குறவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக இது அமைந்திருந்ததால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கும் படமாக திகழ்ந்த குறத்திமகன் வெற்றி பெற்றதில் வியப்பில்லை.

“”அண்ணே… குறத்தி மகனாகப் பிறந்தாலும் பண்புள்ள மகனாக இருக்க அந்த கேரக்டருக்கு கமல ஹாசன் பொருத்தமா இருக்கும்ணே” என்றேன்.
“”சரி… அந்தப் பையனை நான் பார்க் கணுமே. கார் எடுத்துட்டுப் போய்  கூட்டி வா” என்றார் கே.எஸ். கோபால கிருஷ்ணன்.
கம்பெனி கார் வெளியில் போயிருந்தது. கார் வரும்வரை காத்திருக்க முடியாது. லேட்டாகும்… என்பதால் என் சொந்தச் செலவில் டாக்ஸி பிடித்து எல்டாம்ஸ் ரோடு கமல் வீட்டுக்குப் போனேன்.
கமலைப் பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.
சலிப்புடன் முகம் சுளித்தார் கமல்.
“”ஏம்ப்பா…”
 “”சினிமாவில் முதல்ல டான்ஸ் மாஸ்ட ராகணும்கிறது என்னோட திட்டம். இப்போ கூட என் டான்ஸ் குழுவோட நிகழ்ச்சி நடத்த டூர் போயிட்டு வந்திருக்கேன். நடிக்கிறதில் எனக்கு ஆர்வமில்லாமல் இருக்கு” என்றார் கமல்.
“”சந்தோஷம்ப்பா. நீ பெரிய மாஸ்டரா வா. அதே சமயம் குறத்திமகன் கேரக்டர்ல நடிச்சுப் பார். ஒருவேளை உனக்குப் பிடிச்சுப் போச்சுன்னா… தொடர்ந்து நடிக்கலாம் லப்பா” எனச் சொன் னேன். எனது வற்புறுத்த லுக்கு சம்மதித்து என்னு டன் காரில் ஏறினார் கமல்.
கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற  பிறகு, குழந்தைப் பருவம் தாண்டிய பிராயத் திற்கும், வாலிபப் பிராயத்திற்கும் இடைப்பட்ட வயதில்… அவரை யாருமே நடிக்க அழைக்காததால் கமலுக்கு நடிப்பின் மீதே வெறுப்பு ஏற்பட்டிருந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
18 அல்லது  19 வயது கமலை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் முன் நிறுத்தினேன். கமலின் தோற்றம் அவருக்கு திருப்தி தந்தது. கோபாலகிருஷ்ணன் தனது படங்களில் நிறைய டயலாக் எழுதுவார். அதனால் டயலாக் பேப்பரை கமலிடம் கொடுத்துப் பேசச் சொன்னார். கமலுக்கு அப்போது கீச்சுக்குரல். இதனால் டயலாக் வெடிப்பாக வெளிவரவில்லை.
“”கலைஞானம்… தம்பிய பக்கத்து ரூம்ல உட்கார வை” என்றார். அதன்படி கமலை அமர வைத்துவிட்டு வந்தேன்.
“”பையன் நல்லா இருக்கான். ஆனா வசனம் பேசறது எடுப்பா இல்ல. மாஸ்டர் ஸ்ரீதர் சான்ஸ் கேட்டு வந்திருக்கான். அவனை டயலாக் பேச வச்சுப் பார்ப்போம்” என்றார்.
அதன்படி மாஸ்டர் ஸ்ரீதரை அழைத்து டயலாக் பேப்பரைக் கொடுத்தார். கடலை பொறிச்ச மாதிரி டய லாக் வெடிப்பாகப் பேசினார் ஸ்ரீதர்.

“”பெர்ஸனாலிடில கமலை விட ஸ்ரீதர் கம்மி. ஆனா டயலாக் நல்லா பேசுறான். இவனையே குறத்தி மகனா போடலாம். குறத்தி மகனை வளர்க்கிற வாத்தியாரோட மகன்  கேரக்டரை கமலுக்கு கொடுக்கலாம்” என்றார் கோபாலகிருஷ்ணன். கமலும் சம்மதித்தார். மறுபடி அவரை டாக்ஸியில் அழைத்துப்போய் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன்.
நரிக்குறவர்களை தனது கற்பகம் ஸ்டுடியோவிற்கு வரவழைத்து அவர் களுடன் ஒருநாள் முழுக்க பேசிப் பாஷை கற்றுக்கொண்ட கோபாலகிருஷ்ணன் மறுநாள் கே.ஆர்.விஜயாவுக்கும் ஜெமினிக் கும் அந்த பாஷையை கற்றுக்கொடுத்து அசத்தினார்.
1972-ல் வெளியான “குறத்தி மகன்’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தீவிர காங்கிரஸ்காரர். அதனால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கேமரா திரும்புகிற பக்கமெல்லாம் அப்போதைய பிரதமர்  இந்திராகாந்தியின் புகைப் படங்கள் தெரிவது போல் எடுத் திருந்தார்.
மத்திய அரசு விருதுக்கு படத்தை அனுப்பியதுடன், இந்திரா காந்திக்கு இந்தப் படத்தைக் போட்டுக் காட்டவும் ஏற்பாடு செய்து படப்பெட்டியுடன் தனது பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்தார் கோபாலகிருஷ்ணன்.
நேரமின்மையால் படம் பார்க்க தாமதித்த இந்திரா, சுமார் ஒருமாதம் கழித்து “குறத்தி மகன்’ படம் பார்த்தார்.
“”கல்வி விழிப்புணர்ச்சி உண்டாக்கு கிற அருமையான திரைப்படம் இது. ஆனாலும் இந்தப் படத்திற்கு அரசு விருது கொடுத்தால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும். என் புகைப்படத்தை அதிகமாகக் காட்டியது தவறு” என இந்திரா சொல்லியதாகத் தகவல் வந்து சேர்ந்தது.
“குறத்தி மக’னில் நான்கு ஸீன்களில் (இரண்டு ஸீன்களில் டயலாக்) மட்டுமே கமல் நடித்திருந்தார். ஆனாலும் கமல் மனம் மாறி நடிப் பைத் தொடரும் விதமாக “உணர்ச்சிகள்’ படத்தைத் தொடங்கினார். கமலை நடிப்புத்துறைக்கு தூண்டியதில் “குறத்திமகன்’ படமும், நானும்தான் காரணம் என்பதை கமலே கூட மறுக்க முடியாது. இதனாலேயே எனக்கும் கமலுக்கும் அண்ணன்- தம்பி போன்ற உறவு வளர்ந்தது.
கற்பகம் ஸ்டுடியோவிற்குள் நரிக்குறவர் இன மக்கள் திரண்டு வந்து கே.எஸ்.கோபால கிருஷ்ணனை சந்தித்தார்கள்.
“”சாமீய்! படத்துல… நாங்கள்லாம் படிச்சாத் தான் முன்னுக்கு வரமுடியும்னு சொன்னீக சாமீய். படிப்போட அருமை, பெருமை எங்களுக்குப் புரியுது. நீங்களே எங்க புள்ளைக படிக்கிறதுக்கு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுக் குடுங்க” என கோரிக்கை வைத்தனர்.
“”நீங்களும் படிச்சு முன்னேறணும்ங்கிற இந்தக் கதையை எழுதுனதே இவர்தான்” என என்னை அவர்கள் முன்னால் அறிமுகப்படுத்தினார் கோபாலகிருஷ்ணன்.
எனக்கு கும்பிடு போட்ட அந்த மக்கள், அவரை விடுவதாக இல்லை.
பள்ளிக்கூடம் என்பது தனி மனிதனால் சாத்தியமில்லாத விஷயம். ஆனாலும் அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொன்னார் கோபாலகிருஷ்ணன்.
“”நீங்கள்லாம் நேரா கோபாலபுரம் போங்க. அங்கதான் இருக்கு முதலமைச்சர் வீடு.   அவரப் பாத்து ” “குறத்தி மகன்’ படம் பார்த்தோம். அதுபடி படிக்க ஆசப்படுறோம். ஸ்கூல் கட்டித் தாங்க’னு கேளுங்க. முதலமைச்சர் நிச்சயம்  செய்வாரு. அப்புறம் முதலமைச்சரைப் பார்க்கிற ஐடியாவ நான் குடுத்ததா சொல்லிடாதீங்க” என அனுப்பி வைத்தார்.
விருகம்பாக்கத்திலிருந்து நடைபயணமாகவே கோபாலபுரம் வந்த நரிக்குறவர்கள் முதல்வர் வீடு முன் அமர்ந்துவிட்டனர். உதவியாளர்கள் மூலம் கலைஞருக்கு விஷயம் சொல்லப்பட்டது.
வெளியே வந்து அந்த மக்களிடம் பேசிய கலைஞர், உடனடியாக உத்தரவு போட்டார். அதுதான் சைதாப்பேட்டையிலிருக்கும் பள்ளிக்கூடம்.
ஒரு சமயம் நான் தூர்தர்ஷனில் பேசுவதற்காகப் போயிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் ஓடிவந்து என் காலைத் தொட்டு வணங்கினார்.
“”ஐயா! நான் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவன். எம்.ஏ. படிச்சிருக்கேன். “குறத்தி மகன்’ சினிமாதான் அதுக்கு தூண்டுகோலா இருந்திச்சு” என்றார்.
பத்திரிகைகளும், அரசும் இந்தக் கதை எழுதிய எனக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்கிற என் ஆதங்கத்தை தீர்த்து வைத்தது இந்தச் சம்பவம்.
“ஆதி பராசக்தி’, “குறத்தி மகன்’, “வாழையடி வாழை’, “வந்தாளே மகராசி’,  “நத்தையில் முத்து’, “ரௌடி ராக்கம்மா’ ஆகிய படங்களில் கே.எஸ். கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றி னேன். “குறத்தி மகன்’ வெற்றியைப் பார்த்து தயாரிப்பாளர் எம்.எஸ்.காசி விஸ்வநாதனிடமிருந்து அழைப்பு வந்தது.
எம்.சோமசுந்தரமும், எஸ்.கே.மொய்தீனும் சேர்ந்து “ஜூபிடர் பிக்ஸர்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தார்கள். பி.யூ.சின்னப்பாவை அறிமுகப்படுத்தியது, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கியது, எம்.எஸ்.விஸ்வ நாதன், சின்னப்பா தேவர், எஸ்.ஏ.நடராஜன் போன்றவர்களை வளர்த்தது, அண்ணாவின் “வேலைக்காரி’யைத் தயாரித்தது… இப்படி பல பெருமைகள் உண்டு  ஜூபிடர் நிறுவனத்திற்கு.
அப்படிப்பட்ட “ஜூபிடர்’ சோமசுந்தரத்தின் மகன்தான் காசி விஸ்வநாதன். “பாமா விஜயம்’, “நெஞ்சம் மறப்பதில்லை’ படங்களைத் தயாரித்த காசிவிஸ்வநாதனுக்கு “வாயாடி’ என்கிற கதையைச் சொன்னேன். அவருக்கும், டைரக்டர் மதுரை திருமாறனுக்கும் பிடித்துப்போனது.
“”நான் சாந்தமான, பக்திமயமான கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். ஆனா வாயாடிப் பெண்ணாக நடித்ததில்லை. இது எனக்கு சரிப்படுமா?” என தயங்கித் தயங்கி  நடிக்க ஒப்புக்கொண்டார் கே.ஆர்.விஜயா. படம் மிகப்பெரிய வெற்றி.
“”கலைஞானத்துக்கிட்ட கதை வாங்கிட்டு வாங்க, உடனே கால்ஷீட் தர்றேன்” என கே.ஆர்.விஜயா சொல் கிற அளவிற்கு நான் வரவேற்புக்குரியவனானேன்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum