சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

எட்டாம் எண் - சிறப்புகள் Khan11

எட்டாம் எண் - சிறப்புகள்

Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty எட்டாம் எண் - சிறப்புகள்

Post by rammalar Wed 13 Sep 2023 - 8:53

அஷ்ட பைரவர்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய கையால் அளந்தால் 
8 சாண் அளவுதான் உயரம் இருக்கும் என்று ஒரு கணக்கு உண்டு. 
“எண் சாண் உடம்பு” என்று ஒரு சொல்லாடல் உண்டு. 

பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை. அதில் மிக முக்கியமாக 
10 அவதாரங்கள். அந்த பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் 
கிருஷ்ணாவதாரம். அது மட்டுமில்லை அவன் எட்டாவது 
பிள்ளையாகப் பிறந்தான்.

முருகனுடைய தலங்களில் ஒரு பிரசித்தி பெற்ற தலத்துக்கு 
எட்டுக்குடி என்று பெயர். திதிகள் பல இருந்தாலும் இரண்டு திதிகள் 
விலக்கப்பட்ட திதிகளாக (சுப காரியங்கள் செய்யக்கூடாத 
திதிகளாகச் சொல்லுவார்கள்) அஷ்டமி என்பது கிருஷ்ணபகவான் 
பிறந்த திதி. நவமி என்பது ஸ்ரீராமன் பிறந்த திதி. 

சைவத்தில் பைரவ வழிபாடு என்று உண்டு. அதிலும் தேய்பிறை 
அஷ்டமியிலே இந்த வழிபாடு விசேஷம். 
இந்த பைரவர்களும் எட்டுவிதமாக இருப்பார்கள். அவர்களுக்கு 
அஷ்ட பைரவர்கள் என்று பெயர்.

நம்முடைய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதம் ஆகஸ்ட் மாதம். 
இந்த ஆகஸ்ட் மாதம் எட்டாவது மாதம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty Re: எட்டாம் எண் - சிறப்புகள்

Post by rammalar Wed 13 Sep 2023 - 8:54

அஷ்ட பிரபந்தம்

ஒரு குழந்தை தாயின் கருவறையில் 10 மாதங்கள் இருக்கும் 
ஆனால் எட்டாவது மாதத்தில்தான் குழந்தை முழு வளர்ச்சி அடையும்.
‘‘பிள்ளை பெருமாள் ஐயங்கார்’’அற்புதமான நூலை 
எழுதியிருக்கிறார். 

அந்த நூலுக்கு அஷ்ட பிரபந்தம் என்று பெயர். ஒரு புலவர் இந்த 
நூலைப் படித்து விட்டால் அவர் பெரும் புலவராகத் திகழலாம் 
என்கின்ற வழக்கு தமிழ் வல்லுநர்களிடம் உண்டு. 
இதனுடைய அமைப்பும் பொருள் சிறப்பும் எளிதில் புரிந்து கொள்ள 
முடியாத தன்மையும் கருத்தில் கொண்டு அஷ்ட பிரபந்தம் கஷ்ட 
பிரபந்தம் என்று சொல்வார்கள். ஆனால் அற்புதமான பிரபந்தம்.

அஷ்ட பந்தனம்

திருக்கோயில்களிலே குடமுழுக்கு செய்கின்ற பொழுது அஷ்ட 
பந்தனம் என்று எட்டு வகை பொருட்களை மருந்தாகக் கட்டி 
குடமுழுக்கு செய்வார்கள். 

அந்த எட்டு பொருள்கள்: 
அஷ்டபந்தனம் - சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, 
தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி 
வடமொழியிலே அஷ்டகம் பாடுதல் என்று ஒரு முறை உண்டு. 
பல பாராயண நூல்கள் 8 பாடல்களில் (பலன் சேர்க்காமல்) அமைந்ததால் 
அவற்றை அஷ்டகம் என்பார்கள். 

மகாலட்சுமி அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம், ரங்கநாதர் அஷ்டகம் என்று 
எல்லா தேவதைகளுக்கும் இந்த அஷ்டக நூல் பாடி வைத்திருக்கிறார்கள். 
இப்படி பல சிறப்புகளைக் கொண்டது எட்டாம் எண்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty Re: எட்டாம் எண் - சிறப்புகள்

Post by rammalar Wed 13 Sep 2023 - 8:56

அஷ்டநாகங்கள்

செய்யுள் வகைகளில் ஒரு வரிக்கு எட்டு சீர் அமைந்த 
விருத்தப்பாக்களை எண்சீர் விருத்தம் என்பார்கள். பசுக்கள் யானைகள், 
திசைகள் எட்டாக இருப்பதைப்போலவே நாகங்களும் அனந்த அல்லது 
சேஷ நாகா, குலிகா, வாசுகி, சங்கபால, தக்ஷக், மஹாபத்மா, பத்மா
மற்றும் கார்கோடகா எனும் எட்டு நாகங்கள்.

அதனை அஷ்டநாகங்கள் என்பார்கள். 
திருமணத்திலும் கோவில்களிலும் காப்பு கட்டும்பொழுது இந்த அஷ்ட
 நாகப் பிரதிஷ்டை செய்வார்கள். எண்குணத்தான் பகவானுக்கு 
ஏராளமான குணங்கள் உண்டு. ஆயினும் எட்டு குணங்களை 
மிக முக்கியமாகச் சொல்வார்கள் என்று திருவள்ளுவரும் 
எண்குணத்தான் இதைக் குறிப்பிடுகின்றார்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை 
வணங்காத் தலை.
எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், 
இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே 
பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் 
உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை.

எண் மலர்

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்”. 
மாணிக்கவாசகரின் திருவாசகம் மிக மிக உயர் வான நூல். 
உருக்கமான நூல். சிவபெருமானே சொல்லச்சொல்ல எழுதிய நூல்.  
மணிவாசகரின் திருவாசகத்தை எட்டாம் திருமுறையாகத்தான் 
வைத்தார்கள்.மலர் வழிபாடு என்பது ஆன்மீகத்தில் முக்கியம் 

அந்த மலர்களில் எட்டு வகையான மலர்களைக் கொண்டு வழிபட 
வேண்டும் என்று சாத்திரம் சொல்லுகின்றது. “எண் மலர் கொண்டு” 
என்பது பாசுரம் அந்த மலர்களினுடைய வரிசை புன்னை செண்பகம் 
பாதிரி வெள்ளருக்கு நந்தையாவட்டை அரளி நீலோற்பவம் தாமரை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty Re: எட்டாம் எண் - சிறப்புகள்

Post by rammalar Wed 13 Sep 2023 - 8:57

தானாகத் தோன்றிய எட்டு தலங்கள்

வைணவத்தில் தானாகத் தோன்றிய தலங்கள் என்று சில தலங்களைச் 
சொன்னார்கள். அந்த தலங்கள் எட்டு.
 “ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ் ணம் தோதபர்வதம் ஸாளக்ராமம் 
புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம் சேதி மே ஸ்தானானி 
அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: 
வஸாமி அஹம்” என்ற புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த 
க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. நாங்குநேரி
5. முக்திநாத்
6. புஷ்கரம்
7. பத்ரிநாத்
8. நைமிசாரண்யம்

என்னும் எட்டு திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய 
எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு எழுத்துகளையும் குறிக்கும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty Re: எட்டாம் எண் - சிறப்புகள்

Post by rammalar Wed 13 Sep 2023 - 8:58

திசைகள் எட்டு

ஒரு மனிதன் தன்னுடைய முகத்தை சுருக்கினால், ‘‘என்ன, முகம் 
எட்டு கோணலாக இருக்கிறது?’’ என்பார்கள். அஷ்டகோணல் என்று 
இதற்குப் பெயர். மிகச்சிறந்த முனிவர்களில் ஒருவர் இருந்தார். 
அவருடைய உடம்பை எல்லோரும் கேலி செய்தனர். ஆனாலும் அவர் 
அதைப்பற்றி கவலைப்படவில்லை. 

அவருக்கு நம்முடைய புராண வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் 
உண்டு. அவர்தான் அஷ்டவக்ரகர். அஷ்டவக்கிரர் ஜனக 
மகாராஜருக்கும், யாக்ஞவல்க்கியருக்கும் குருவாக இருந்துள்ளார். 
அவர் சொன்னது அஷ்டவக்ர கீதை.

கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, 
தென்மேற்கு, வடமேற்கு என்று எட்டுத் திசைகளைச் சொன்னார்கள். 
இந்த எட்டுத் திசைக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. 

அஷ்டதிக் பாலகர்கள் என்பார்கள். யாகங்களையும் 
ஹோமங்களையும் செய்கின்றபொழுது இந்த அஷ்டதிக் 
பாலகர்களையும் ஆவாகனம் செய்து வழிபாடு நடத்தி விட்டுத்தான் 
ஹோமங்களைச் செய்தார்கள்.

பெருமாள் கோயில்களிலும் எட்டுவிதமான காவலர்கள் உண்டு. 
இவர்களை வாயில் காப்பவர்கள், கோயில் காப்பவர்கள், என்றெல்லாம் 
ஆண்டாள் பாடுகின்றாள். எட்டுத் திசைகளைச் சொன்னோம்.
 இந்த எட்டுத் திசைகளையும் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், 
அஞ்சனை, புஷ்பதந்தா, சர்வபௌமா, சுப்ரதீகா, என்ற எட்டு யானைகள் 
தாங்குவதாக ஒரு கருத்து உண்டு. 
அதற்கு அஷ்டதிக் கஜங்கள் என்று பெயர். 

சுவாமி மணவாள மாமுனி வைணவத்தைப் பரப்புவதற்காக எட்டு 
பேரை நியமித்தார். அவர்களுக்கு அஷ்டதிக் கஜங்கள் என்று பெயர்.

எட்டு எட்டாக வாழ்க்கை

ஒருவருடைய வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்து அந்தந்த 
பலன்களை அந்தந்த எட்டில் அனுபவிக்க வேண்டும் என்பார்கள். 
இதை எளிமையாக ஒரு திரைப்படப்பாடலில் கவிஞர் வைரமுத்து 
தந்திருப்பார்.

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தை யுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா
நிம்மதியில்ல
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty Re: எட்டாம் எண் - சிறப்புகள்

Post by rammalar Wed 13 Sep 2023 - 9:01

அட்ட வீரட்டத் தலங்கள்

வைணவத்தில் மட்டும் அல்ல, எட்டு என்கிற என்கிற சைவத்திலும் 
உயர்வானதுதான் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சிவபெருமானுக்கு 
உள்ள தலங்களில் எட்டு தலங்கள் 

சிவபெருமானின் வீரத்தைக் காட்டு கின்ற அட்டவீரட்டத் தலங்கள். 
அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது
 குறிப்பிடத்தக்கது.

1.திருக்கண்டியூர்: 
சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்க ழிந்த தலம்

2.திருக்கோவலூர்: அந்தகாகரனைக் கொன்ற இடம்

3.திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்

4.திருப்பறியலூர்: தக்கன் தலையைத் தடிந்த தலம்

5.திருவிற்குடி: சலந்தராசுரனை வதைத்த தலம்

6.திருவழுவூர்:
 கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட தலம்

7.திருக்குறுக்கை: மன்மதனை எரித்த தலம்

8.திருக்கடவூர்: கூற்றுவனை உதைத்த தலம்.
---
நன்றி: குங்குமம்-ஆன்மிகம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எட்டாம் எண் - சிறப்புகள் Empty Re: எட்டாம் எண் - சிறப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum