சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Khan11

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

+6
நண்பன்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
சுறா
ந.க.துறைவன்
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 24 Nov 2014 - 6:38

பசலை நோய்…!!
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by சுறா Mon 24 Nov 2014 - 6:42

அந்த மருந்து திருமணத்திற்கு பின்பு சாப்பிட்டால் ஊரே ஏத்துக்கும். ஆனா ஜாதிமல்லி விடாது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 27 Nov 2014 - 6:32

பாராட்டுக்கு மிக்க நன்றி சுறா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 27 Nov 2014 - 6:33

நித்திய வாழ்க்கை…!!
*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது

நித்திய வாழ்க்கை…!!
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 1 Dec 2014 - 6:23

ரசிகன்….!!
*
சபா மண்டபத்தில்
நாட்டிய திருவிழாவில்
காலில் சலங்கைக் கட்டி
நாட்டியம் ஆடினாய்.
உன் அலங்கார அழகும்
அபிநய நளினமும்
ஆடிய ஓயிலும் இன்னும்
என் இதயக் கணினியில்
பதிவாகியிருக்குதடி…!.
பாடலுக்கு ஒலித்த – உன்
பாதச் சலங்கையொலி
சல்… சல்… என்று ஒலித்துக்
கொண்டேயிருக்குதடி…!.
மறக்க முடியாதது
இசைக்கேற்ற உதடசைவுகள்
அங்க அசைவுகள்
தாளத் துள்ளல்கள்
பார்வையின் துடிப்புகள்
உன் ரசிகனாகயிருந்து
அனுபவித்தேனடி…!.
வாழ்நாளெல்லாம்
மறக்கவே முடியாததாய்
வரலாற்றின் ஏடுகளில்
பதிவாகி விட்டதடி
இசையாய் இணைந்த
நம் காதல் நினைவலைகள்.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sat 20 Dec 2014 - 6:13

ஆன் – ஆப்…!!
*
குடும்பத்திற்கு விளக்கேற்ற
வந்தவளென்று
உன்னை எல்லோரும்
வரவேற்கிறார்கள்.
ஆனால், நீயோ
பேசும் சொற்களின்
ஸ்விச் ஆப் – பில்
எல்லோரும்
அடங்கிவிடுகிறார்கள்.
நல்ல வேளை
ஆன் – ஆப் எபபொழுது
எங்கே எப்படி
உபயோகிப்பது என்று
சரியாகவே கற்றிருக்கிறாய்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by Nisha Sat 20 Dec 2014 - 14:09

மார்கழி மாதம் அல்லவா! சங்கீதக்கச்சேரி ஆரம்ப மாகி விட்டது போலும். கவிதையில் உணர முடிகின்றதே!

ஆனும் ஆப்பும் ஆணுக்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 22 Dec 2014 - 6:41

மிக்க நன்றி நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by சுறா Mon 22 Dec 2014 - 8:59

பெண்கள் பேச ஆரம்பித்தால் ஆஃப் அடிச்சாலும் பட்டுன்னு இறங்கிடும். அந்த அளவுக்கு ஆப்பு அடிச்சிவிட்டுருவாங்க ஹாஹா.

அருமையான ஆன் ஆப் வரிகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 9:27

அருமையான கவிதைகள் மிக்க நன்றி ஐயா

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 22 Dec 2014 - 13:34

நன்றி ஹாசி்ம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 6:26

SUPER
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 5 Jan 2015 - 13:52

ஏமாற்றம்….!!
*
உன்
சொல் உரைக் கேட்டு
ஏமாந்தவன்
இன்று
கல்லறையில்
உறங்குகிறான்
ஏமாற்றாதப் பறவைகள்
அஞ்சலி செய்கின்றன.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Wed 7 Jan 2015 - 6:37

அஃக் மார்க்….!!
*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 12 Jan 2015 - 6:46

அணைந்தச் சுடர்…!!.
*
குடும்பத்திற்கு
விளக்கேற்ற வந்தக்
குலமகள் என்று
உன்னை
வரவேற்று புகழ்ந்தார்கள்.
என்ன விவகாரத்திற்காக?
உன்
உயிர்ச் சுடரை
அணைத்து விட்டார்கள்?
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 5 Feb 2015 - 7:18

அறிதல்….!!
*
உன்னிதயச் சுவரில்
சித்திரமாய் வரைந்து
வைத்திருக்கிறாயே?
அவன் உருவம்.
அது யாருக்குமே
வெளியில் தெரியாமல்
வழிப்பட்டு,  நீயெங்யோ?
வாழ்ந்துக் கொண்டிருப்பது
அனுமானிக்க முடிகிறது.
அறிந்தவனுக்குத் தெரியும்
அது உனக்கும் புரியும்….!!

Post by நண்பன் Thu 5 Feb 2015 - 9:31

கவிப்புயல் இனியவன் wrote:SUPER
நன்றி
இன்னும் எதிர் பார்கிறேன் கவிஞரே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 5 Feb 2015 - 9:45

பாராட்டுக்கு மிக்க நன்றி இனியவன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 5 Feb 2015 - 9:46

பாராட்டுக்கு நன்றி நண்பன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by Nisha Thu 5 Feb 2015 - 23:51

ந.க.துறைவன் wrote:அறிதல்….!!
*
உன்னிதயச் சுவரில்
சித்திரமாய் வரைந்து
வைத்திருக்கிறாயே?
அவன் உருவம்.
அது யாருக்குமே
வெளியில் தெரியாமல்
வழிப்பட்டு,  நீயெங்யோ?
வாழ்ந்துக் கொண்டிருப்பது
அனுமானிக்க முடிகிறது.
அறிந்தவனுக்குத் தெரியும்
அது உனக்கும் புரியும்….!!

*

இது சரி!

யாரை வரைந்தேன்னு நான் தேடித்தான் கண்டு பிடிக்கணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Fri 6 Feb 2015 - 9:42

தேடிக் கண்டு பிடிங்க மேடம்... பாராட்டுக்கு நன்றி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sun 22 Feb 2015 - 6:58

துக்கப் பால்…!!
*
உன் மரணச் செய்தி
உடனடியாய் அறிந்து
பரபரப்பாய் சுடலைக்கு வந்து
புன்னகைச் சிந்திய
உன் வாய்க்கு
வாக்கரிசிப் போட்டான்.
நன்றியோடு
இன்பத்துப் பால்
ஊட்டிய உனக்குத்
துக்கப் பால்
ஊற்றுகிறான் பார்….!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sat 7 Mar 2015 - 4:47

சுமுகமானத் தீர்வு…!!
*
எப்பொழுதுப் பிரச்சினைகள் எவரால் வெடித்து
எழுமென்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது
எதிர்ப்பார்த்து நிகழ்வதுமல்ல பிரச்சினைகள்
எதிர்பாராமல் நொடியில் நடந்தேறி
எல்லோரையும் கதிகலங்கச் செய்து
எல்லோர் முகங்களிலும் துயர ரேகை
படர விட்டு மற்றவர்கள் எள்ளி நகையாட
செவ்வாய்க்கு கிடைக்கும் அவலாய்
அமைந்து விடுகின்றது பிரச்சினைகள்.
தேடினால் கிடைப்பதில்லை
பிரச்சினைக்குத் தீர்வு
தேடாமலேயே சுயமாய் உதிக்கிறது
சுமுகமானத் தீர்வு….!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by சே.குமார் Sun 8 Mar 2015 - 18:56

தேடினால் கிடைப்பதில்லை
பிரச்சினைக்குத் தீர்வு
தேடாமலேயே சுயமாய் உதிக்கிறது
சுமுகமானத் தீர்வு….!!

உண்மையான வரிகள் ஐயா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum