சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Khan11

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Empty அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:25

First topic message reminder :

எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
 
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம் 


Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:04; edited 1 time in total


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Sun 11 Jan 2015 - 0:11

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து மகிந்த ராஜபக்ச எனும் சர்வாதிகாரியை வீழ்த்தி இருக்கிறார்கள், இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.

சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் வடகிழக்கு, கொழும்பு, மலையக தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி இருக்கின்றன.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற தேர்தல் மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷவே அதிகப்படியான வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த பகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவை விட மகிந்த பெற்ற மேலதிக வாக்குகளை பாருங்கள்-

களுத்துறையில் 46,486, காலியில் 83,132, மாத்தறையில் 85,388, அனுராதபுரத்தில் 42,754, கேகாலையில் 25,597, இரத்தினபுரியில் 86,539, ஹம்பாந்தோட்டையில் 1,04,587, மொனராகலையில் 67,469, குருணாகலையில் 80,266, மாத்தளையில் 12,952. மேற்குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்களில் மைத்திரியை விட மகிந்த 6,35,170 வாக்குகள் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

மைத்திரிபாலாவுக்கு வாக்களித்த சிங்கள பிரதேசங்கள் என்று பார்த்தால் பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா என்பன மட்டுமே இருக்கின்றன. இதில் பொலநறுவை மைத்திரிபாலவின் சொந்த மாவட்டம். அங்கு அவருக்கு 42,334 மேலதிக வாக்குகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும் மகாநுவரவில் 88,409 மேலதிக வாக்குகளும், கம்பஹாவில் வெறுமனே 4 660 வாக்குகளும் என மொத்தமாக 1,35,403 வாக்குகளே மேலதிகமாக கிடைத்திருக்கின்றன.

இவை தவிர்த்து கொழும்பு என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை. தமிழ் முஸ்லிம் மக்கள் மிக செறிவாக வாழும் தேர்தல் மாவட்டம். இங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி மைத்திரிபால 1,62,459 வாக்குகள் மேலதிகமாக பெற்றிருக்கிறார். கொழும்பையும் தனி சிங்கள மக்களின் பிரதேசமாக கொண்டு பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா மாவட்டங்களுடன் சேர்த்தாலும் கூட மொத்தமாக மைத்திரிபாலவிற்கு சிங்கள மக்களால் கிடைத்த மேலதிக வாக்குகள் 2,97,862 மட்டுமே.

ஆனால் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களான யாழ்ப்பாணத்தில் 1,79,120, மட்டக்களப்பில் 1,67,791, வன்னியில் 1,07,040, நுவரெலியாவில் 1,27,266, திகாமடுல்லவில் (அம்பாறை) 1,12,333, திருகோணமலையில் 88,227 வாக்குகள் என மகிந்தவை விட மைத்திரிபால சிறிசேனவுக்கு மொத்தமாக 7,81,777 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

கொழும்பை தவிர்த்துவிட்டு பார்த்தால்-
சிங்கள பிரதேசங்கள் மகிந்தவிற்கு வழங்கிய மொத்த வாக்குகள் 31,40,971.
சிங்கள பிரதேசங்கள் மைத்திரிபாலவுக்கு வழங்கிய மொத்த வாக்குகள் 25,05,801.
அதாவது சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை 6,35,170 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற வைத்துள்ளனர்.

இப்படி மகிந்தவின் வெற்றியை சிங்கள மக்கள் உறுதி செய்திருந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மகிந்த எனும் இனவாத சர்வாதிகாரியை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குப்பலமானது முன்னெப்போதும் இல்லாத அளவில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தப்போகிறது என்பதை தெளிவாக காண முடிகிறது.

இதேவேளை சுமார் 10 வருடங்களுக்கு முன்பே இப்படி மகிந்த தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கவேண்டியவர். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2005 நவம்பர் 17 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தமை மாபெரும் அழிவு சரித்திரத்தை உருவாக்கியது. வட மாகாண தமிழ் மக்கள் வாக்களிக்காத நிலையில் வெறும் 1,90,000 மேலதிக வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத தோல்வியை தழுவினார்.

நல்லவேளையாக இம்முறை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்காது தமது வாக்குகளின் மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். நவீன துட்டுகெமுனு அரசனாக தன்னை நிலை நிறுத்தி, தமிழர்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்ற அரசனாக மகாவம்சத்தில் இடம்பெற துடித்த இனவாதிக்கு தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். வெல்ல முடியாத போர் என்று சர்வதேசத்தாலும் வர்ணிக்கப்பட்ட போரை வென்று காட்டிய மாவீரனாக, சாகும் வரை ஜனாதிபதியாக அதிகாரத்துடன் வாழ ஆசைப்பட்ட மகிந்தவின் பேராசைக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சாவு மணியடித்திருக்கிரார்கள்.

அசைக்க முடியாத மகிந்தவுக்கு சரியான போட்டியாளரை மகிந்தவின் மடியிலிருந்தே பிரித்தெடுத்து சாணக்கியமாக சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சாதித்த சந்திரிகா குமாரதுங்கவும் இங்கு குறிப்பிடப்படவேண்டியவர்.

இலங்கை ஜனாதிபதியாக ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை மீறி, அரசியலமைப்பை மாற்றி, நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி மூன்றாவது முறையாகவும் அதிகாரத்தை சுகிக்க பேராசைப்பட்ட மகிந்த தனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும்போதே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. செல்வாக்கு முற்றாக சரியும் முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வென்றுவிட வேண்டும் என்ற அல்லக்கைகளின் ஆலோசனையை கேட்டு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தேர்தலை மகிந்த சந்தித்தார். மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன இன்னும் 20 வருடங்களுக்கு மகிந்தவை அதிகாரத்திலிருந்து அசைக்கமுடியாது என்று சாத்திரம் கூறியிருந்தார். திருப்பதிக்கு சென்று மகிந்த ஆசியும் வாங்கி இருந்தார். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் மகிந்தவின் ஆட்டத்தை முடித்துவைத்துவிட்டனர்.

குற்றவாளி மகிந்தவை வீழ்த்துவது என்ற நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் தமிழர்களுக்கான சம உரிமை என்ற நோக்கம் நிறைவேறும் காலம் அருகில் இருப்பதாக தெரியவில்லை.

என். ஜீவேந்திரன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Sun 11 Jan 2015 - 0:39

தமிழ் தேசியக்கூட்டமைக்கு தேசிய அரசாங்கத்தில் இணைந்து  கொள்ளும்படியான உத்தியோக பூர்வ அழைப்பு இன்னும் வரவில்லை. அதனால் அரசில் இணைவதையும் அமைச்சு பதவிகளை ஏற்பதை குறித்தும் ஆராயவில்லையாம்!

இரா. சம்பந்தன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Sun 11 Jan 2015 - 1:12

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 10926204_2014438942030154_1681553475504524018_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Empty சந்திரிக்காவின் ரகசியம்!

Post by *சம்ஸ் Sun 11 Jan 2015 - 21:47

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 10922702_761632360586447_961415223965449007_n

தேர்தல் வெற்றியில் பலருக்கும் பங்கிருப்பதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மைதான். இது மிகப்பெரிய கூட்டு வெற்றி. இதில் பெண்கள் எல்லோரும் பெருமைப்படும்படி ஒரு பெண்தான் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.
அவரது வாழ்க்கை அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை.

இலங்கையின் மிகப்பெரிய குடும்பத்தைசேர்ந்தவராயினும், அப்போதைய பிரபல சிங்கள நடிகரான “விஜய குமாரதுங்க” அவர்களை பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 1978 இல் கரம்பிடித்தார். குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது 1988 இல் வெறும் பத்தாண்டு மனவாழ்க்கையின்போது தன் காதல் கணவனை திடீரென இழந்தார்..

UNP ஆதிக்கத்தை தனி ஒரு பெண்ணாக நின்று 1994 இல் எதிர்த்து ஜனாதிபதியானார். 1999 இல் ஒரு குண்டு வெடிப்பில் தனது ஒரு கண்ணை பறிகொடுத்தார். 2005-2014 வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களின் எக்கச்சக்கமான சித்ரவதைகளை தாங்கிக்கொண்டார்.

2015 இல் இலங்கையில் புதிய ஆட்சி மலர முதுகென்பாக இருந்து, தற்போது எதுவுமே செய்யாததுபோல் ஒதுங்கி நின்று மற்றவர்களை தூக்கிவிடுகிறார். கணவனை இழந்தாலும் தனி ஒரு பெண்ணாக அவரின் பங்களிப்பு இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியுள்ளது.

இருப்பினும் அவா் இலங்கைத் தமிழா்களுக்கு என்ன செய்யப்போகின்றாா் என்பதைப் பொறுதிருந்துதான் பாா்க்க வேண்டும். இவரது ஆட்சியிலேதான் கிருசாந்தி குமாரசாமி படையினரால் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தமிழா்கள் காணாமல் போனாா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..
நன்றி புதிய தமிழர்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) - Page 5 Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum