சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இப்போ இதுதான் பேஷன். Khan11

இப்போ இதுதான் பேஷன்.

Go down

இப்போ இதுதான் பேஷன். Empty இப்போ இதுதான் பேஷன்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 18:30

கல்லூரி மாணவிகளை தனது கண்களாலே அளவெடுத்துவிடுகிறார், பேஷன் டிசைனர் தபு. பின்பு அவர்களுக்கு என்ன மாதிரி டாப்ஸ், டிசர்ட், ஸ்கர்ட் அழகாக இருக்கும் என்று படங்களாக போட்டுக் காட்டுகிறார். அப்போதே அவர்களது நிறத்திற்கு பொருத்தமான உடை நிறங்களை கூறுகிறார்
`இன்றைய டீன்ஏஜ் பெண்கள் எந்த மாதிரியான உடைகளை விரும்புகிறார்கள்? பேஷன் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது?’ என்று பேஷன் தபுவிடம் கேட்டால் அவர் சொல்லும் தகவல்கள் கல்லூரி மாணவிகளின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் சமீபகால மாற்றங்களையும், பண விஷயத்தில் அவர்கள் காட்டும் அக்கறையையும் புலப்படுத்துகிறது.

“டீன்ஏஜ் பெண்களிடம் உருவாகியிருக்கும் சமூக அக்கறையை முதலில் குறிப்பிட்டாக வேண் டும். அவர்கள் இப்போது பொறுப்பான வாசகங்களைக் கொண்ட டிசர்ட்களைத்தான் விரும்புகிறார்கள். விளையாட்டு பற்றியோ, பெண்களைப் பற்றியோ நல்லவிதமாக எழுதப்பட்ட வாசகங்களே அவர்க ளுக்கு பிடிக்கின்றன. உணர்ச்சிட்டும், கிளர்ச்சிட் டும் வாசகங்கள் எல்லாம் வழக்கொழிந்துவிட்டன. ஸூ ஸூ கேரக்டர்கள் கொண்ட சட்டைகளை அதிகம் விரும்புகிறார்கள்.

உடைகளுக்காக அவர்கள் பணத்தை வாரி இறைக் கவும் தயார் இல்லை. அதிக விலை கொடுத்து காஸ்ட்லியான துணியை வாங்குவதைவிட, அந்த தொகைக்கு நாலைந்து உடைகளை தேர்வு செய்து வாங்குகிறார்கள். ஒரு உடையை அவர்கள் தேர்ந் தெடுக்கும்போது அது உடுத்த சவுகரியமாக இருக் கிறதா? எளிதாக வாங்கும் விதத்தில் விலை இருக் கிறதா? அதிக காலம் உழைக்குமா? என்றெல்லாம் பார்க்கிறார்கள். எந்த துணி அதிக காலம் உழைக் கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியும்.

உடைகளுக்காக அவர்கள் பணத்தை வாரி இறைக் கவும் தயார் இல்லை. அதிக விலை கொடுத்து காஸ்ட்லியான துணியை வாங்குவதைவிட, அந்த தொகைக்கு நாலைந்து உடைகளை தேர்வு செய்து வாங்குகிறார்கள். ஒரு உடையை அவர்கள் தேர்ந் தெடுக்கும்போது அது உடுத்த சவுகரியமாக இருக் கிறதா? எளிதாக வாங்கும் விதத்தில் விலை இருக் கிறதா? அதிக காலம் உழைக்குமா? என்றெல்லாம் பார்க்கிறார்கள். எந்த துணி அதிக காலம் உழைக் கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியும்.

கல்லூரி மாணவிகள் விலை உயர்ந்த ஒரு துணியை வாங்கி சில வருடங்கள் பயன்படுத்துவ தைவிட, விலை அதிகமில்லாத நாலைந்து துணிகளை வாங்கி, அடுத்தடுத்து புதிது புதிதாக அணிந்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு முறைதான் ஒரு துணியை அணியவும் விரும்புகிறார்கள்.

டீன் ஏஜ் பெண்களுக்கு துணிகளை அயர்ன் செய்வதற்கு நேரம் இல்லை. அதனால் அயர்ன் செய்யாமல் துணிகளை அணிந்து கொள்வதை பேஷன் ஆக்கிவிட்டார்கள். அயர்ன் செய்யாமல் அணி கின்ற துணிகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கவும் செய்கிறார் கள்…”- என்று இன்றைய டீன்ஏஜ் பெண்களின் எண்ணங்களை எல்லாம் பிரதிபலிக்கிறார், பேஷன் டிசைனர் தபு.

ஸூஸூ கேரக்டர் பொறித்த டிசர்ட்களை விரும்பும் பெண்கள் பெரும்பாலும் என்ன நிறங்களை தேர்வு செய்கிறார்கள்?


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இப்போ இதுதான் பேஷன். Empty Re: இப்போ இதுதான் பேஷன்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 18:34

“நீலம், மெஜந்தா, சிவப்பு, பச்சை மற்றும் லாலிபாப் கலர்களை பெரிதும் விரும்புகிறார்கள். இந்த டிசர்ட்களுக்கு பெரும்பாலும் ஜீன்ஸ் தான் அணிகிறார்கள். `கேப் ஸ்லீவ்ஸ்’ எனப்படும் `குட்டிக்கை’ கொண்ட டிசர்ட்களுக்கு இப்போது ரொம்ப மவுசு. இந்த வகை சட்டை களில் எண்கள் பதிக்கப்பட்டிருக்கும். தங்களுக்கு ராசியாக கருதும் எண்ணை அச்சிட்டிருக்கும் `கேப்- ஸ்லீவ்ஸ்’சை வாங்கி அணிந்து கொள்கிறார்கள்..

கல்லூரி மாணவிகள் இப்போது `ஹரம் பேண்ட்’டை அதிகம் விரும்புகிறார்கள். இடுப்பில் இருந்து கீழ் நோக்கி இதில் பிளீட்ஸ் இருக்கும். பேண்ட்டின் கீழ் பகுதியில் எலாஸ்டிக் இருப்பதால், இறுதிப் பகுதி இறுக்கமாக கால்களை பற்றிக்கொள்ளும். இதனால் கீழ்ப் பகுதி தரையோடு இழுக்கும் நிலை ஏற்படாது.

இந்த பேண்ட் இடுப்பில் இருந்து கீழ்ப் பகுதி வரை ஒரே அளவாக, தளதளவென அமைந்திருப்பதால் காற்றோட்டமாக இருக்கும். ஹரம் பேண்ட்டில் ஐந்து வகைகள் இருக் கின்றன. காட்டன் பேண்ட்டுகள் அதிக நாட்கள் உழை க்கும். லைக்ரா துணியில் வடிவமைக்கப்பட்ட பேண்ட்களை வாஷிங்மெஷினில் போட்டு துவைக்கக்கூடாது. காக்கி கிரீன், பிரவுன், நிலத்தின் நிறத்திலானவைகளை பார்த்து வாங்கி அணியவேண்டும். இதன் கீழ் பகுதி நிலத்தில் படாது என்பதால் மாதத்தில் ஒருமுறைதான் பெரும்பாலான வர்கள் துவைக்கிறார்கள். இவைகளை அதிகம் துவைக்கக் கூடாது. `டிரைகிளீன்’ செய்ய வேண்டும்.

வீட்டிலே சுயமாக `டிரை கிளீன்’ செய்யலாம். மெடிக்கல் ஸ்டோர்களில் ஒயிட் பெட்ரோல் கிடைக்கும். இதனை பஞ்சில் முக்கி, அழுக்கு இருக்கும் இடத்தில் மட்டும் துடைக்க வேண்டும். அழுக்கு அப்படியே நீங்கிவிடும். பின்பு அந்த இடத்தில் ஸ்பிரே செய்தால் போதும். ஒயிட் பெட் ரோலை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். ஹரம் பேண்ட், ஊதாத பலூன் போன்று இருப்பதால், இதனை பலூன் பேண்ட் என்றும் கூறுவார்கள். இதற்கு டிசர்ட், ஸ்டோல், துப்பட்டா போன்றவைகளை இணைப்பாக பயன் படுத்திக்கொள்ளலாம்.



தட்டை செருப்புகள் கால நிலைக்கும் ஏற்றதாக அமையும். இவை பல்வேறு நிறங்களில் கிடைக் கின்றன…”

டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் பெண்கள் விரும்பி அணியும் `கேட் சூட்’ இப்போது சென்னைப் பெண்களாலும் விரும்பப்படுகிறதே, அதைப் பற்றி கூறுங்கள்?

“கேட் சூட் என்பது ஒரு வித்தியாசமான உடை. இதனை அணிந்துகொண்டு மாடலிங் அழகிகள் `கேட் வாக்` செய்வதால் இந்தப் பெயர் சூட்டியுள்ளார்கள். இது ஒரே உடையால் ஆனது. கால் வழியாக அணிய வேண்டும். கால் முதல் கழுத்து வரையுள்ள இந்த ஒரே ஆடையை அணிந்து கொண்டு இடுப்பில் பெல்ட்டை கட்டிக்கொண்டால் இது மேல், கீழாக இரண்டு உடையாகத் தெரியும். பெல்ட் கட்டிய பின்புதான் பெண்களின் உடல் கட்டமைப்பே இந்த உடை மூலம் வெளிப்படும். டெனிம் மற்றும் லைக்ரா துணியில் இந்த சூட் தயாராகிறது. இந்த உடையில் சிவப்பு மற்றும் கறுப்பு பலருக்கும் பிடித்த மானதாக இருக்கிறது. இந்த உடையில் நிறைய பாக்கெட்டுகள் வைத்துக் கொள்ளலாம்.

இதை அணிந்துகொண்டு மேலே கோட் போட்டுக்கொண்டால், கவர்ச்சி அம்சம் எதுவும் தோன்றாது. கேட்சூட்டின் திறப்பை முன்பகுதியிலோ, பின் பகுதியிலோ வைத்துக்கொள்ளலாம். கீழ் இருந்து மேல் நோக்கி ஒரே ஜிப் வைத்து பேஷன் டிரஸ் போலவும் மாற்றிக்கொள்ளலாம். இதனை அணிந்தால் வளையல் அணியக்கூடாது. விரும்பினால் `பிரேஸ்லெட்’ போட்டுக்கொள்ள லாம். ஹீல்ஸ் செருப்பு அணிந்துகொள்ளலாம்…”
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இப்போ இதுதான் பேஷன். Empty Re: இப்போ இதுதான் பேஷன்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 18:36

அடுத்து `நெட்டட் டாப்’ பற்றி விளக்குகிறார்…

“நெட் துணிகள் எப்போதுமே உள்ளே இருப்பதை வெளியே காட்டுவது போன்று டிரான்ஸ் பெரண்ட்டாக இருக்கும். அதனால் உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதிக்கு தனியாக ஒரு துணியை உள்ளே அணிந்துகொள்ள வேண்டும். இதற்கு பெரும்பாலும் `கோர்செட்’ எனப்படும் நீள வகை ஜாக்கெட்டை பயன்படுத்துகிறார்கள். உள்ளே போடும் கோர்செட் துணி நிறமும், மேலே அணியும் நெட்டட் துணி நிறமும் பொருத்தமாக இருக்கவேண்டும். கல்லூரி மற்றும் அலுவலகங் களுக்கு செல்கிறவர்கள் உள்ளேயும், வெளியேயும் ஒரே நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கான்ட் ராஸ்ட் ஆக அணிந்துகொள்ளலாம்
ஒயிட்- மெஜந்தா, ஒயிட்- கறுப்பு, பர்பிள்- நீலம், நீலம்- பச்சை போன்றவை கான்ட்ராஸ் நிறங்களாகும். கல்லூரிகளுக்கு நெட்டட் டாப் அணிந்துசெல்லும் மாணவிகள் அடர்த்தியான நிறங்களை தவிர்க்க வேண்டும். ஏன்என்றால் அந்த நிறங்கள் மாணவர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. அதனால் அவர்கள் கவனம் சிதறும் என்பதால் இள நிறத்திலானவைகளே சிறந்தது.

இந்த வகை டாப் அணியும்போது வாட்ச் நன்றாக அழகாக இருக்க வேண்டும். ஹேன்ட் பேக்கும் பொருத்தமாக பயன்படுத்த வேண்டும். கூந்தலில் `கிளிப்’ போட்டுக்கொள்ள வேண்டும். ஜீன்ஸ் அணிந்து கொண்டால் ஹீல்ஸ் இல்லாத செருப்பு போட்டுக்கொள்ளலாம்”

பார்ட்டி டிரஸ் என வர்ணிக்கப்படும் `நீல்லென்த் கவுன்’ இப்போது இளம் பெண்களை ஈர்க்கிறது. தங்கத்தில் கோட்டிங் செய்யப்பட்ட புதுவித புடவைகளையும், எம்ப்ராய்டரிங் புடவைகளையும் டீன்ஏஜ் பெண்கள் பண்டிகை காலங்களில் அதிகம் விரும்புவதாக டிசைனர் தபு கூறுகிறார்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இப்போ இதுதான் பேஷன். Empty Re: இப்போ இதுதான் பேஷன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum