சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன Khan11

இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன

2 posters

Go down

இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன Empty இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 14:11

இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விசா விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தையின் போது, இதற்கான முடிவு எடுக்கப்படும்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் மற்றும் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை தொடருகிறது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே இலகுவான விசா நடைமுறைகளை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, ஏற்கனவே உள்ள விசா ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகளை இறுதி செய்ய கூட்டு செயல் திட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான சந்திப்பு நடைபெறும் சமயத்தில் விசா விதிமுறை திருத்தம் கையெழுத்தாகி அமுலுக்கு வரும். புதிய விசா விதிமுறைகளை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியாவும் பாகிஸ்தானும் முதன் முறையாக சுதந்திரமான ‘விசா’ பகுதிகளாக இருக்கும்.

புதிய விதிகளின்படி பத்திரிகையாளர், தொழிலதிபர்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவ சிகிச்சை பெற வரும் நோயாளிகள் ஆகியோருக்கு விசா விதிமுறைகள் தளர்த்தப்படும். இத்தகைய ‘விசா’ க்கள் மூலமாக முக்கிய நகரங்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் செல்ல முடியும்.

இரு நாட்டு மக்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து புரிந்துணர்வை அதிகப்படுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், எந்த நகரின் வழியாக இந்தியாவுக்குள் வருகிறாரோ? அந்த நகர் வழியாகவே பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்ற விதிமுறை தற்போது உள்ளது. இதையும் இந்தியா ரத்து செய்கிறது. இந்தியாவின் எந்தவொரு நகரின் வழியாகவும் அவர்கள் திரும்பலாம்.

வெளியுறவு செயலாளர் பயணம்

இதற்கிடையே, வெளியுறவு செயலாளர் மட்டத்திலான இரண்டு நாள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ், நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் சென்றார். அவருடன் வெளியுறவு இணைச் செயலாளர்கள் யாஷ்சின்கா, வெங்கடேஷ் வர்மா, இந்திய தூதர் சரத் சபர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றது.

பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷிருடன் முதல் நாள் பேச்சு வார்த்தையை இந்திய குழுவினர் தொடங்கினர். அமைதி, பாதுகாப்பு, அணுசக்தி என மூன்று பிரிவாக பேச்சு வார்த்தை பிரிக்கப்பட்டது. அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக முதல் சுற்று பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் காஷ்மீர் மற்றும் அணுசக்தி விவகாரங்கள் இடம் பெற்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன Empty Re: இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 18:37

நல்ல விடயம் தகவலுக்கு நன்றி


இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum