சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

 பழசானாலும் பயன் கூடியது  Khan11

பழசானாலும் பயன் கூடியது

2 posters

Go down

 பழசானாலும் பயன் கூடியது  Empty பழசானாலும் பயன் கூடியது

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 23:15

கொடுத்த மருந்தைப் பார்த்ததும் அவரின் முகம் ஏமாற்றத்தால் நீண்டது. "இண்டைக்கும் இதே மருந்துதானா" . "எல்லோரும் ஏதேதோ புதுப் புது மருந்துகளாகப் பாவிக்கிறம் எண்டு சொல்லுகினம். நீங்கள் இந்த மெட்போமினையே தாறீங்கள்" என்றார்

நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளரா? அப்படியாயின் நீங்கள் மெட்போமின் என்ற சொல்லை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் இதுவும் பெரும்பாலும் சேர்ந்திருக்கும். நீண்டகாலமாகப் பாவிக்கின்றோமே, இது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா? மலிஞ்ச மருந்துதானே நல்லதா? சிறுநீரகத்திற்கு கூடாதாமே? வயிறு ஊதலாக இருக்கிறதே எனப் பல சந்தேகங்களும் அதிருப்திகளும் ஏற்பட்டிருக்கலாம்.

அத்துடன் தொடர்ந்து ஒரே மருந்தை உபயோகிப்பதால் `புதுமை விரும்பிகளுக்கு' அலுத்துப் போயிருக்கலாம். ஆனாலும் இது மிகவும் பயனுள்ளது மட்டுமன்றி பன்முகப் பயன்பாடும் உள்ளது என்பதால் அதனுடைய முக்கியத்துவம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

மனிதர்களின் சாதாரண இரத்த குளுக்கோஸ் அளவானது 60 - 110 ற்கும் இடையில் இருக்கவேண்டும். 60 இற்குக் கீழே குறைவது ஆபத்தானது. அவ்வாறு குறைந்தால் மயக்கத்திற்கும் இட்டுச்செல்லக்கூடும். இந்நிலையை Hypoglycemia என மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். இம்மருந்தின் மிக முக்கியமான பண்பு என்னவென்றால், உபயோகிக்கும் நோயாளியின் இரத்த குளுக்கோஸ் அளவை ஆபத்து ஏற்படும் அளவிற்கு அதீதமாகக் குறைப்பதில்லை. எனவே பாதுகாப்பானது. ஆனால் ஏனைய பல நீரிழிவு மாத்திரைகள் இரத்த குளுக்கோஸ் அளவை அதீதமாகக் குறைத்து Hypoglycemia க்கு இட்டுச் சென்றுவிடுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பழசானாலும் பயன் கூடியது  Empty Re: பழசானாலும் பயன் கூடியது

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 23:16

மெட்போமின் மருந்தின் இன்னொரு முக்கியமான பண்பு அல்லது `பக்கவிளைவு' நோயாளியின் எடையைக் குறைப்பதாகும். பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளின் எடை அதீதமாக இருப்பதுண்டு. இதனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த எடையைக் குறைக்க வேண்டியிருக்கும். மெட்போமின் மாத்திரையானது எடையைக் குறைக்கவும் உதவி செய்வதால் உங்களுக்கு ஒரு போனஸ் பலனும் கிட்டுகிறது.

மெட்போமின் உங்கள் இரத்த கொலஸ்ட்ரோல் அளவையும் சற்றுக் குறைக்கிறது. மொத்த கொலஸ்ட்ரோல் அளவை மாத்திரமன்றி கூடாத கொலஸ்ரோல்களான ரைகிளிசரைட் LDL ஆகியவற்றையும் ஓரளவு குறைக்கிறது. இதனால் குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன், இரத்தக் குழாய்களினது உட்சுவரக் கலங்களின் செயற்பாட்டை (Endothelial Function) ஊக்குவிக்கிறது. இவற்றின் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் ஆகியன ஏற்படும் வாய்ப்புகளும் குறையும் என்பதும் ஆய்வு ரீதியாக அறியப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தை அதாவது பிரஸரைக் குறைப்பதிலும் மெட்போமின் மாத்திரைக்கு பங்குண்டு எனச் சில ஆய்வுகள் கூறுகிறபோதும் இது இன்னமும் உறுதியாக நிச்சயப்படுத்தப்படவில்லை.

மாதவிடாய்க் குழப்பம், மலட்டுத்தன்மை, அதீத எடை, இன்சுலின் எதிர்த்தன்மை (Insulin Resistance) போன்ற உள்ளடங்கிய `பொலி சிஸ்டிக் ஓவரி சின்றோம்' பிரச்சினை இப்பொழுது பல இளம் பெண்களிடையே காணப்படுகிறது. இந்நோயுள்ள பெண்களின் ஆண்மை ஹோர்மோன் அளவைக் குறைத்து கருமுட்டை உற்பத்தியை ஊக்குவிப்பதையும் மெட்போமின் மாத்திரை செய்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பழசானாலும் பயன் கூடியது  Empty Re: பழசானாலும் பயன் கூடியது

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 23:16

பெண்களைப் பற்றிப் பேசும்போது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பொதுவாக இன்சுலின் ஊசியே போடுவார்கள். ஆனால், அண்மைய ஆய்வுகள் கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes) கர்ப்ப காலத்திலும் நீடிக்கும் நீரிழிவு வகை 2 (Type 2 Diabetes) ஆகிய இரண்டிற்கும் மெட்போமின் மாத்திரை உபயோகிப்பது பாதுகாப்பானது என்கிறது.

இன்சுலின் ஊசி போடும் ஒரு சில நீரிழிவு நோயாளருக்கு அத்துடன் நீரிழிவு மாத்திரைகளையும் சேர்த்துப் பாவிக்க வேண்டிய தேவை ஏற்படும். இன்சுலின் ஊசியால் மாத்திரம் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கும் இன்சுலின் ஊசி மருந்தின் அளவைக் குறைக்க வேண்டியவர்களுக்கும் மெட்போமின் மருந்தை ஊசியோடு இணைத்து பாவிக்க முடியும். ஏனைய பெரும்பாலான நீரிழிவு மாத்திரைகள் அவ்வாறு இன்சுலினுடன் சேர்த்து உபயோகிக்க ஏற்றவையல்ல. இன்சுலின் ஊசியுடன் மெட்போமின் மாத்திரையைச் சேர்த்து உபயோகிக்கும்போது இன்சுலின் மருந்தின் அளவை 15 முதல் 25 சதவிகிதம் வரை குறைக்க முடிகிறது என்பது நீரிழிவு நோயாளருக்கு இனிப்பான செய்தியாகும்.

இன்சுலின் ஊசியுடன் மாத்திரமல்லாது ஏனைய பல வகையான நீரிழிவு மாத்திரைகளுடனும் சேர்த்தும் பாவிக்க உகந்தது. உதாரணமான Glibenclamide, Glipizide, Gliclazide, Pioglitazone, Acarbose போன்ற அனைத்து வகை மருந்துகளுடன் இணைந்து பாவித்தாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்த மாட்டாது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பழசானாலும் பயன் கூடியது  Empty Re: பழசானாலும் பயன் கூடியது

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 23:16

மெட்போமின் மருந்தைத் தினமும் மூன்று தடவை போடவேண்டிய தொல்லை இப்பொழுது இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறைகளே உபயோகிக்க வேண்டிய Retard மாத்திரைகளாகவும் தினமும் ஒரு தடவை மட்டுமே போடக்கூடிய SR - Slow Release மாத்திரைகளாகவும் இப்பொழுது கிடைக்கிறது.

அப்படியாயின் மெட்போமின் எந்தவித பக்கவிளைவுகளோ, தொல்லைகளோ அற்ற அதிஅற்புத மருந்து என்று கூறலாமா? நிச்சயமாக இல்லை. வயிற்று ஊதுதல், பொருமல், பசியின்மை, வயிற்றோட்டம், வாயில் உலோகச்சுவை போன்ற சாதாரண பக்கவிளைவுகள் இருக்கலாம். அவை பெரும்பாலும் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருக்கும். பிறகு படிப்படியாக மறைந்துவிடும். சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், அதீத மதுபாவனை போன்றவை இருந்தால் வைத்தியர்கள் இம்மருந்தை அவதானத்துடனேயே உபயோகிப்பார்கள்.

மேலே எழுதியவற்றை அவருக்கு விளக்கியதும் ஏற்றுக்கொண்டு "சந்தோசமாக மெட்போமினுடன் சென்றார்".

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பழசானாலும் பயன் கூடியது  Empty Re: பழசானாலும் பயன் கூடியது

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 6:24

##* ##* :”@:


 பழசானாலும் பயன் கூடியது  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 பழசானாலும் பயன் கூடியது  Empty Re: பழசானாலும் பயன் கூடியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum