சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

இராவண காவியம்  Khan11

இராவண காவியம்

+5
நண்பன்
ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
யாதுமானவள்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இராவண காவியம்  Empty இராவண காவியம்

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 20:46

இராவண காவியம்  Pulava10

இராவண காவியம் - தொடர் 1

இராவணகாவியம் என்ற பெயர் கேட்டவுடன் எல்லோருக்கும் ஆச்சரியத்தில் புருவம் ஒன்றையொன்று தொடுமளவுக்கு நெற்றி சுருங்கும். என்னடா இது காலங்காலமாக இராமாயணத்தைப் படித்தும் கேட்டும் பார்த்தும் வந்திருக்கிறோமே ... அந்த மகா காவியத்தில் சித்தரிக்கப்பட்ட அரக்கன், அசுரன், ராட்சசனுக்கு ஒரு காவியமா என்று உங்களனைவருக்கும் வியப்பாகத்தான் இருக்கும் உண்மை உணரும் வரை.

இராமன் யார்? இராவணன் யார்?

இராமாயணத்தின் நோக்கம் என்ன?
இராவண காவியத்தின் நோக்கம் என்ன?

என்பதைப் பற்றிக் கூறும் ஒரு பெரு முயற்சியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலனான புலவர் குழந்தை அவர்கள் இராவணனின் பெருமை கூறப் புனைந்த காவியம் இராவண காவியம்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் இருபதாம் நூற்றாண்டில் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழிகளிலும் ஒரு மகா காவியம் வெளிவரவில்லை. பாரதியோ , பாரதி தாசனோ, தாகூரோ செய்யாத ஒரு மாபெரும் காவியத்தைப் புலவர் குழந்தை அவர்கள் தீட்டி, இருபதாம் நூற்றாண்டில் மகா காவியம் வெளிவரவில்லை என்ற குறையை நீக்கினார்.

புலவர் குழந்தை அவர்களை இக்காவியம் புனையத் தூண்டுதலாக இருந்தது பாவேந்தர் பாரதி தாசனார் அவர்கள் இராவணனைப் பற்றி எழுதிய "வீரத் தமிழன்" என்ற பாடலினால் ஏற்பட்டது.

"தென் திசையைப் பார்க்கின்றேன்... என்சொல்வேன்
என் சிந்தைலாம் தோள்களெலாம் பூரிக்குதடடா
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தான்
குன்றெடுக்கும் பெருந்தோளன் கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என்றமிழர் மூதாதை என்றமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்! ....

என்று தொடங்கும் இப்பாடல் தான்.

பாவேந்தரின் சிந்தையும் தோள்களும் பூரிக்கும் அளவிற்கு அந்த இராவணனிடத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இவர் சிந்தையை சுட்டுவிரல் தட்டியெழுப்ப, இராமயணத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தார். பிறகு இராமனையே புரட்டிப் போட்டார்.

ஆழிசூழ் இலங்கை வேந்தன் தமிழ்ப் பேரரசன் இராவணன் தமிழர்களால் தூற்றப் படவேண்டியவனல்ல போற்றப் படவேண்டியவன் என்பதை இவ்வுலகுக்கு எடுத்தியம்பினார்.

இராமாயணம் இயற்றப்பட்ட காலம் ஆரியக் கலாச்சாரமும் திராவிடக் கலாச்சாரமும் ஆக இருவேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய காலம். தூய்மையான வாழ்க்கை வாழ்ந்திருந்த திராவிட மக்களிடையே ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த நேரத்தில் வால்மீகியாலும் கம்பனாலும் எழுதப்பட்ட இராமாயணத்திலிருந்தே ஆதாரங்களை எடுத்து ... இராவணனின் மீது சுமத்தப் பட்ட பழியைப் போக்கி இராவணன் தூய்மையானவன் என்றும் இராமனின் தவறுகளையும் உண்மை குணங்களையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு காவியத்தை திடீரென்று ஏற்பார்களா மக்கள்? 1946 ஆம் ஆண்டு வெளிவந்த இக்காவியத்தை 1948 ஆம் ஆண்டு அப்போதிருந்த தமிழக அரசு தடை செய்து விட்டது. 23 ஆண்டுகள் சிறையிலிருந்த இக்காவியம் 1971 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் தடை நீக்கப் பெற்று வீரியத்துடன் வெளிவந்தது.

கலைஞர் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருப்பார்..."

வான்மீகி இராமாயண மூலத்திலிருந்து கம்பன் தனது இராமாயணக் கதையைப் -பாத்திரங்களைப் படைத்தான் எனினும் தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப ஆங்காங்கே பல மாறுதல்களைச் செய்து தமிழுணர்வினைக் காட்டியுள்ளான். வருணனைகளும், சொல்லாட்ட்சியும் விரவியுள்ள கம்பனின் சுவைமிகு செந்தமிழ்ச செய்யுட்களை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட நம்மால் இயலாது. ஆயினும், பன்னீராயிரம் பாடிய பாட்டரசன் கம்பன் எழுப்பாத இன்தமிழ் உணர்வை எழுப்பியவர் புலவர் குழந்தை அவர்கள்"

சுருங்கக் கூறின் [ப]"இராவணகாவியம் தமிழ் இலக்கியத்தின் சாறு”[/b] என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியிருப்பார்; 8 நூற்றாண்டுகளாக இராமாயணத்தைப் படித்தும், இராமனைத் தெய்வமாகப் பூசித்தும் வரும் மக்களுக்கு இராவண காவியம் என்ற ஒலியே சற்று கிலிதருவதாகத் தான் இருக்கும் என்றும்,

ஆரியக் கலாச்சாரத்தை தமிழர்களிடத்தில் திணிப்பதற்கு இராமாயணம் இயற்றப்பட்டது.
அதற்காக இராமன் தெய்வமாக்கப்பட்டன். இராமன் தெய்வமாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இராவணன் அரக்கனாக்கப்பட்டான். இராமன் கையில் மகத்துவம் பொருந்திய ஒரு கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும் கவி கற்பித்துக் கொண்டார். வேலும் வில்லும் வணக்கத்துக்குரிய பொருளாக்கப்படவே தோள் வலியும் மனவலியும் படைத்த ஒரு மாமன்னன் அரக்கனாக்கப் பட்டான். இராமனைச் செந்தாமரைக் கண்ணன் என்று புனைந்த கவி இராவணனின் கண்கள் செந்தழலை உமிழ்பவனவாகத் தீட்டிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த இராவண காவியத்தின் தொடர் சொற்பொழிவை குவைத்தில் கடந்த ஒரு வருடமாக மாதாமாதம் நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இன்று புலவர் குழந்தை அவர்களின் (ஜூலை 1 , 1906 ) பிறந்தநாள். இந்த நாளில் சேனைத் தமிழ் உலாவில் ... இவர் இயற்றிய இராவண காவியத்தின் தொடர் பதிவுகளை ஆரம்பம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

இக்காவியத்தைத் தொடர்ந்து முக்கியமான செய்யுட்களோடு இங்கு பதிவிட்டு விளக்குகிறேன்... அனைவரும் படித்து தமிழின் சுவையைப் பருகி இன்புற்று தமிழ்ப் பேரரசன் இராவணனைப் பற்றி அறியவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!



Last edited by யாதுமானவள் on Sat 2 Jul 2011 - 10:36; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by *சம்ஸ் Fri 1 Jul 2011 - 21:41

சிறப்பான தொடர் அக்கா தொடர்ந்து இங்கு படிக்க ஆர்வமாக உள்ளேன் சிறந்த படைப்புக்கு ஏங்கும் ஒரு தாகமுள்ள பிரியன் நான். நன்றி அக்கா சிறந்த பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 9:11

முன்னுரையின் அபாரத்தில் முழுவதும் படித்திட ஆசை கொள்கிறேன்
இதுவரை நான் அறிந்திராத ஏன் அதிகமானவர்கள் கண்டிராதவொரு புராணக்கதையினை சேனையின் வாயிலாக அறிமுகம்செய்வதில் சேனையோடு அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்
இராமாயணம் மாத்திரமே அறிந்திருந்த எமக்கு இராவண காவியம் புதிய அனுபவமாக ஆச்சரியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனந்தமாய் ஒவ்வொரு பகுதியையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
இங்கு கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கும் கற்றுத்தரும் உங்கள் பணியின் சிறப்பிற்கும் மிக்க நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்

தொடருங்கள் தொடர்கிறோம் நன்றி!
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by ஹாசிம் Sat 2 Jul 2011 - 13:47

சாதிக் wrote:முன்னுரையின் அபாரத்தில் முழுவதும் படித்திட ஆசை கொள்கிறேன்
இதுவரை நான் அறிந்திராத ஏன் அதிகமானவர்கள் கண்டிராதவொரு புராணக்கதையினை சேனையின் வாயிலாக அறிமுகம்செய்வதில் சேனையோடு அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்
இராமாயணம் மாத்திரமே அறிந்திருந்த எமக்கு இராவண காவியம் புதிய அனுபவமாக ஆச்சரியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனந்தமாய் ஒவ்வொரு பகுதியையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
இங்கு கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கும் கற்றுத்தரும் உங்கள் பணியின் சிறப்பிற்கும் மிக்க நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்

தொடருங்கள் தொடர்கிறோம் நன்றி!
@. @. @. சரியாகச்சொன்னீர்கள் சாதிக் தொடருங்கள் அக்கா
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 13:57

வித்தியாசமான தொடர்
தொடருங்கள் அக்கா
தாகத்தோடு தேடுவோருக்கு இது அமுதமாக அமையும்
வாழ்த்துக்கள் அக்கா
நண்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 14:09

உங்களது முனோட்டம்,
எங்களை ,ராவணனை ,காண
ஆசைபடுகிறோம்.

அறிவிப்பு
ஆரம்பமே அசத்தலாய் இருக்கு,
தொடருங்கள்,நல்ல தமிழை
ருசிக்க காத்திருக்கிறோம்.

நன்றி தோழியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 16:56

அனைவருக்கும் நன்றி !

தொடர்கிறது..... !

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும்போதும் வாழ்த்துப் பாடுவது மரபு. அந்த வகையில் புலவர் குழந்தை அவர்கள் தமிழ்த் தாய்க்கு வாழ்த்து சொல்லி; மாபெரும் காவியத்தைத் தொடங்குகிறார்.

தமிழ்த்தாய்க்கு மட்டுமா வாழ்த்து கூறினார்?

தமிழகத்தையும், தமிழ் மக்களையும், தமிழ்ப் புலவர்களையும், தமிழ் அரசர்களையும் போற்றிவிட்டே இக்காவியத்தைத் தொடங்குகிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து!

உலகம் ஊமையாய் உள்ளவக் காலையே
பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே
இலகி இன்றுநா னென்னு மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயினைப் போற்றுவாம்!

உலகில் வாழும் அனைத்து மக்களும் பேச்சு என்பது அறியாமல் ஊமையாக வாழ்ந்திருந்த காலத்திலேயே, பல்வேறு கலைச் செல்வங்களைத் தன்னுள்ளே கொண்டு இன்றைக்கு நானும் ஒரு மொழி என்று சொல்லிகொள்கின்ற அனைத்து மொழிகளுக்கும் தலைமை தாங்கும் தமிழன்னையைப் போற்றுகிறார்!

தமிழ் மக்கள் வாழ்த்து :

ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்
இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ் சொலைப்
பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவோம்!

பிரித்துப் படிக்க:
ஒழுக்கம் என்பது உயிரினம் மேல் அதன்
இழுக்கம் போல் இழிவில்லை எனும் சொல்லைப்
பழக்கம் ஆக்கிப் பயின்று பயின்று உயர்
வழக்கமாம் தமிழ் மக்களைப் போற்றுவோம்.

ஒழுக்கம் என்பது தமது உயிரைவிட மேலானதாக, தரம்கெட்ட வாழ்க்கை முறைபோன்ற இழுக்கு வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து; உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதையே பழக்கமாக்கி சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தமிழ் மக்களைப் போற்றுகிறார்!


தமிழ்ப் புலவர்களுக்கு வாழ்த்து!

பலதுறைத் தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய்
துலக மின்புற வோதியுன் தாய்மொழிக்
கலகி லாததொண் டாற்றிய முத்தமிழ்ப்
புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்!

(பிரித்துப் படிக்க:
பல துறைத் தமிழ்ப் பாட்டும் உரையும் செய்து
உலகம் இன்புற ஓதியும் தாய்மொழிக்கு
அலகு இலாத தொண்டாற்றிய முத்தமிழ்ப்
புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்!)


தமிழில் பல துறைகளில் பாட்டுக்களை இயற்றியும் உரை நூல்களை எழுதியும் உலக மக்கள் மகிழும்படி கருத்துக்களை எடுத்துக் கூறியும் தாய்மொழிக்கு அளவிலாத பணி செய்த முத்தமிழ்ப் புலவர் பெருமக்களைப் போற்றுவோம் என்கிறார் !

தமிழ் அரசர்களுக்கு வாழ்த்து!

மலையுங் காடும் வயலுங் கடலுமா
முலக நான்கு முறுவலந் தேங்கிய
நிலைய மாக நிகழ்த்திய நானிலத்
தலைவர் பொற்கழல் தம்மை வழுத்துவாம்!

ஆஹா... என்ன ஒரு அருமையான பாடல்! நானில மன்னர்களையும் ஒரே பாடலில் அதுவும் ஒரே வரியிலேயே வாழ்த்திவிடுகிறார் புலவர் குழந்தை அவர்கள்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய மிக்க வளம் பொருந்திய நாட்டை ஆண்ட நாநிலத்து அரசர்களையும் ஒருசேர வாழ்த்தி மகிழ்ந்து தன் காவியத்தைத் தொடர்கிறார்.

குறிப்பு :

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்...

குறிப்பு : இராவணன் காலத்தில் திராவிட நாட்டில் பாலை நிலம் கிடையாது. தென்குமரி ஆறும் பஃறுளி ஆறும் வளம் பெற்று நீர் வளமும் நிலவளமும் செறிந்த நாடாயிருந்தது.


காவியத் தோற்றம்:

இக்காவியம் தோன்றுதற்குக் காரணம் என்னவென புலவர் கூறுகிறார்;.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்ற புகழுக்குரிய நம் தமிழ் மக்கள் எட்டுத்திசையிலும் மிக்க பெருமையுடன் வாழ்ந்து வந்த காலத்தில், வடதிசையிலிருந்து திராவிடத்தில் புகுந்த ஆரியர்கள் நம்முடன் கலந்து பழகி நல்லவர்கள் போல நடித்து, இராமன் என்ற ஒரு அரச குமாரனை அழைத்துவந்து நம் தமிழ் மக்களுடன் பகை கொள்ளச் செய்து நம் இனத்தவரையே ஒழித்தார்கள்

தமிழினப் பற்று சிறிதும் இல்லாத சில கொடியவர்களின் துணையோடு தொன்மைச் சிறப்புடைய தலைமகன் இராவணனை அக் கொடிய இராமன் போரிட்டு வெற்றிபெற்று மாமன்னனின் குலத்தையே ஒழித்து விட்டான்.

ஆய்ந்தறியும் திறனில்லாத இராமன் செய்த இக்கொலைச் செயலை வாய்மையில்லாத வால்மீகி வடமொழியில் காவியமாகத் தீட்டிவிட்டான்.

காலம் கடந்து இக்காவியத்தின் உண்மைநிலையைத் தமிழர்கள் உணர்ந்தால் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் பெரும் பகை வளரும் என்பதை உணராத வால்மீகி (வடமொழியில் இருந்ததால்... காலம் கடந்து இதனைத் தமிழர்கள் உணர்வர் என்பதறியாது) பைந்தமிழ் மக்களை அரக்கர்கள் என்றும் அஃறிணையாக குரங்குகள் என்று கூறி நாத்தழும்பேறப் பழித்துப் புனைந்துவிட்டான்.

தமிழினப் பகைவனான கம்பனும் வால்மீகி சொன்ன முழுப் பொய்யை உண்மையான - உயர்வான கதை என்று தமிழர்கள் நம்பும்படியாகத் தமிழில் ஒரு காவியத்தைச் செய்துவிட்டான்...

இதை புலவர் அவர்கள் கீழ்கண்ட பாடலில் அழகாகக் கூறுகிறார்

தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம்முழுப் பொய்யதை எந்தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாமென
அம்மவோ நம்பிடச் செய்து விட்டனன்" .. என்கிறார்!

அதுமட்டுமா?

தங்குலப் பகை தன்னைக் கடவுளா
எங்குலத்தவ ரெண்ணி வணங்கியே
கங்கு லைபகற் கால மெனக்கொளும்
திங்கள் போலத் திறம்பிட லாயினர் என்கிறார்...

அதாவது.. இந்தக் கம்பன் செய்த இப் பொய்க்காவியத்தை மெய்யென நம்பிய நம் தமிழர்கள் நம் தொல்பெருமை வாய்ந்த தமிழ் மறக்குடி மக்களைக் கொடிய பகைவர்கள் போல எண்ணி வெறுத்தும், நம் குலத்தின் பகைவனான இராமனைக் கடவுள் என நம்பி , வணங்கி, இரவினைப் பகல் என்றும் பகலினை இரவென்றும் தவறாக எண்ணி நிலைகுலைந்து விட்டனர் என்கிறார்.

அதனால்...
அம்ம யக்க மகன்று தமிழர்கள்
தம்மி னத்துத் தலைவர் பெருமையைச்
செம்ம னத்துத் தெளிந்திடச் செய்குதல்
எம்மி னத்தி னிருங்கட னாகுமால்

எனவே இந்த மயக்கத்தை நீக்கி தமிழினத் தலைவனாகிய இராவணனின் பெருமையை உணரச்செய்து, தமிழரின் நல்ல உள்ளத்தினத் தெளிவடையச் செய்வதும் நம் தமிழினத்தவரின் தலையாய கடமை ஆகுமாதலால் ...இந்தக் காவியம் தோன்றியது.

விழுந்த ஞாயிறு மேக்கெழு காலையில்
ஒழிந்து வல்லிரு ளோவுறச் செங்கதிர்
பொழிந்து மக்கட்குப் புத்தொளி காட்டல்போல்
எழுந்த தேகொலாம் இப்பெருங் காவியம்

என்கிறார்... அதாவது.. மேற்குத் திசையில் மறைந்த சூரியன் மறுபடி கிழக்குத் திசையில் மேலெழுந்து வரும்போது அடர்ந்த இருள் ஒழிந்து போகுமாறு தன் செங்கதிரைப் பரப்பி புதிய வெளிச்சம் காட்டுவதுபோல இப்பெரும் காவியம் எழுந்தது என்கிறார்.

இக்காவியத்தின் நோக்கமோ...


கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென
விரும்பி வாழுமே யாமை வெருவுற
அரும்பி உண்மை அருந்தமிழ் மக்கள்முன்
திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்

அதாவது… கரும்பை வேம்பு என நினைத்து ஒதுக்கியும் வேம்பைக் கரும்பென எண்ணி விரும்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் அறியாமை இருளை ஓட்டி தமிழர்களின் உண்மை நிலையை உணரச்செய்து மானமுள்ள தமிழர்களாய் வாழச்செய்வதே இக்காவியத்தின் நோக்கமெனக் கூறுகிறார்..

அவையடக்கம்:

குற்றமில்லாத இத்தமிழினத்தின் பெருங்கதையைக் கேட்டால் சிலர் ஏசுவார், சிலர் இது உண்மைதானே என உரைப்பார், உண்மை உணர்ந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்ளாமலிருப்பார் ஆனால் இதைத் தவறென்று எதிர்த்துப் பேசக் கூசுவார். சிலரோ ஆ ஊ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார் என்பதை,

ஏசு வார்சிலர் ஈதுண்மை யேயெனப்
பேசு வார்சிலர் பேச வெதிர்மனங்
கூசு வார்சிலர் கூக்குர லார்சிலர்
மாசிலாத் தமிழ் மாக்கதை கேட்கினே! -- என்று வடிக்கிறார்.

இன்னும் சிலரோ, வழிவழியாய் வந்த மரபை மாற்றும் இது என்ன நெறி? இது ஒரு பழிச் செயல், இது ஆரிய இனத்தவர் மீது கொண்ட பகைமை அடிப்படியில் கூறும் வசை என்பார்கள். இது அநியாயம். இது முறையல்ல, இதை ஒழிக்க வேண்டும். ஒழித்துக்கட்டுவோம் என்று பலரும் கூறுவார்.

ஆனால்....வடக்கிலிருந்து வந்த கதையினை அதன் நிலையை மாற்றி உரைத்து வடவர்களின் கொடும் செயல்களையெல்லாம் தெளிவு படுத்தி எடுத்துரைக்க ஆக்கியதே அன்றி இக்காவியத்தில் குற்றம் சொல்லுமளவுக்குத் தீமை ஏதுமில்லை.

பொய்யையும் புரட்டையும் பல கதைகளையும் புளுகி தெய்வத்தன்மையைத் திருட்டுத்தனமாக நுழைத்த ஆரியர்களின் செயலை அகற்றி உண்மையை கூறித் தமிழர்களை தம்நிலைக்குக் கொண்டுவரச் செய்வதல்லாது வேறு நோக்கமெதுவுமில்லை இக்காவியத்தில்.

மனுநீதி என்று வர்ண சாஸ்திரம் இயற்றி ஒற்றுமையாய் வாழ்ந்திருந்த தமிழர்களிடத்தில் ஜாதி பேதமென்ற வேற்றுமையைப் புகுத்தி ஆரியத்திற்கு அடிமையாக்கி அந்த அடிமை வாழ்விலேயே அழுத்தி வைத்திருக்கும் வாழ்விலிருந்து விடுதலை அடைய நினைக்கும் தமிழர்களுக்குப் பொருத்தமான நூல் இது.

கோதிலாத குழந்தை குதலையைத்
தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்
ஈது நந்தமிழ் ழன்கதை யேயிதை
ஓது வோணுமீங் குங்கள் குழந்தையே

வசை மலிந்த மறுக்கெட வண்டமிழ்ப்
பசை மலிந்து பயின்று பயன்பெற
இசை மலிந்த இராவண காவியம்
திசை மலிந்து சிறந்து திகழ்கவே !

எந்தக் குற்றமும் செய்யாத தம் குழந்தையின் மழலை மொழிகளில் நன்மை தீமைஎன்று குற்றம் காண்பார்களா? மாட்டர்களல்லவா அதே போல, இது நம் தமிழினத்தின் கதை இதைத் தெளிவுபட உரைப்பவன் உங்கள் அன்புக்குழந்தை என்ற பேர் கொண்டவன்.

தமிழினத்தவர்க்கு ஆரியரால் வந்த பழி மலிந்து கிடக்க, அந்தக் குற்றம் நீங்கிடத் தமிழ்ப் பற்றுநிறைந்த இந்நூலை எல்லோரும் பயின்று இராவண காவியத்தின் புகழை எல்லாத் திசைகளிலும் சென்று அடையச் செய்வீராக! என்று கூறி காவியத்தைத் தொடங்குகிறார்.

இக்காவியத்தில் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரிக் காண்டம் போர்க்காண்டம் என மொத்தம் ஐந்து காண்டங்களும், அதில் 57 படலங்களும், 3100 செய்யுட்களும் உள்ளது.

சொற்பொழிவாற்றுவது எளிதெனத் தோன்றுகிறது. தமிழில் தட்டச்சுச் செய்வது மிகவும் கடினமாகவே உள்ளது., இருப்பினும் என்னால் முயன்றவரை இங்கு அனைவரும் பயன் பெறவேண்டுமென்ற எண்ணத்துடன் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் ஊக்கத்துடனும் இக்காவியத்தினை அளிப்பேன் என நம்புகிறேன்.


அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி


Last edited by யாதுமானவள் on Sun 3 Jul 2011 - 23:28; edited 2 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 18:19

மிக மிக அருமையாக விளக்கத்துடன் தருகிறீர்கள் அக்கா
சொற்பொழிவாற்றினாலும் உங்கள் குரலில் நன்றாகத்தான் இருக்கும்
முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் அக்கா
உங்கள் பொன்னான நேரத்தை தமிழுக்கு சேவை செய்யும் உங்கள் நல்ல மனதுக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா
உடல் ஆரோக்கியம் பாருங்கள்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by *சம்ஸ் Sun 3 Jul 2011 - 23:13

சிரமம் பாராது உங்களின் நேரத்தை தமிழுக்கு தொண்டு செய்ய உழைத்த உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.

இத்தனையும் சொற்பொழிவாற்றுவது என்றால் எளிது தட்டச்சி செய்வது என்பது கஷ்டம் என்று அறிவோம் இருந்தும் முடிந்த வரை பகிருங்கள் அக்கா.உங்களின் நல்ல தமிழை ருசிக்க படிக்க காத்திருக்கிறோம்.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 23:20

நண்பன் wrote:மிக மிக அருமையாக விளக்கத்துடன் தருகிறீர்கள் அக்கா
சொற்பொழிவாற்றினாலும் உங்கள் குரலில் நன்றாகத்தான் இருக்கும்
முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் அக்கா
உங்கள் பொன்னான நேரத்தை தமிழுக்கு சேவை செய்யும் உங்கள் நல்ல மனதுக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா
உடல் ஆரோக்கியம் பாருங்கள்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்.

நன்றி நண்பன்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 23:21

*சம்ஸ் wrote:சிரமம் பாராது உங்களின் நேரத்தை தமிழுக்கு தொண்டு செய்ய உழைத்த உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.

இத்தனையும் சொற்பொழிவாற்றுவது என்றால் எளிது தட்டச்சி செய்வது என்பது கஷ்டம் என்று அறிவோம் இருந்தும் முடிந்த வரை பகிருங்கள் அக்கா.உங்களின் நல்ல தமிழை ருசிக்க படிக்க காத்திருக்கிறோம்.



நன்றி சம்ஸ்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 12:05

நோக்கம் தோற்றம் அத்தனையும் பார்க்கும் போதே விபரிதத்துடன் வித்தியாசத்தை விதைத்து நிற்கிறது அபாரமான முயற்சி

இராவண காவியத்தைப் படிக்க ஆர்வமேற்படும் அதே வேளை இராமாயணவாதிகளுக்கு பயப்படவும் செய்கிறது உங்களின் அபார துணிச்சலை வியந்து பாராட்டுகிறேன்

இனிய தமிழை சுகித்திட விளைகிறோம் அள்ளித்தாருங்கள் இறுதிவரை படித்திட மட்டும் காத்திருக்கிறேன்

நன்றி புரட்சிப் பெண் கவிஞரே
தொடருங்கள்


இராவண காவியம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 13:32

சாதிக் wrote:நோக்கம் தோற்றம் அத்தனையும் பார்க்கும் போதே விபரிதத்துடன் வித்தியாசத்தை விதைத்து நிற்கிறது அபாரமான முயற்சி

இராவண காவியத்தைப் படிக்க ஆர்வமேற்படும் அதே வேளை இராமாயணவாதிகளுக்கு பயப்படவும் செய்கிறது உங்களின் அபார துணிச்சலை வியந்து பாராட்டுகிறேன்

இனிய தமிழை சுகித்திட விளைகிறோம் அள்ளித்தாருங்கள் இறுதிவரை படித்திட மட்டும் காத்திருக்கிறேன்

நன்றி புரட்சிப் பெண் கவிஞரே
தொடருங்கள்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 14:33

சாதிக் wrote:நோக்கம் தோற்றம் அத்தனையும் பார்க்கும் போதே விபரிதத்துடன் வித்தியாசத்தை விதைத்து நிற்கிறது அபாரமான முயற்சி

இராவண காவியத்தைப் படிக்க ஆர்வமேற்படும் அதே வேளை இராமாயணவாதிகளுக்கு பயப்படவும் செய்கிறது உங்களின் அபார துணிச்சலை வியந்து பாராட்டுகிறேன்

இனிய தமிழை சுகித்திட விளைகிறோம் அள்ளித்தாருங்கள் இறுதிவரை படித்திட மட்டும் காத்திருக்கிறேன்

நன்றி புரட்சிப் பெண் கவிஞரே
தொடருங்கள்

தங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சாதிக்.

அதே நேரத்தில் அனைவருக்கும் ஒரு விடயம் விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனும் புலவர் குழந்தையும் இரு பெரும் புலவர்கள்.

ஒரு புலவருக்கு இராமனை கதாநாயகனாக்கி ஒரு காவியம் படைக்கும் உரிமை எப்படி உள்ளதோ அதே போல இன்னொரு புலவருக்கும் இராவணனைக் கதானாயகனாக்கிக் காவியம் படைக்கும் உரிமை உண்டு.

முதல் கவி, இராவணனை அரக்கனாகவும் கொடியனாகவும் கற்பனை செய்து சித்தரித்து இழிவு படுத்தியுள்ளார்.

ஆனால் புலவர் குழந்தை அவர்களோ இராமனின் குணங்களாகக் கூறியிருப்பதும் , ஆரியர்களின் குணங்களும் பண்பாடும் செயல்பாடும் தன்னுடைய கற்பனையைக் கொண்டு கதை புனையவில்லை . வால்மீகியும் கம்பனும் படைத்த இராமாயனத்திலிருந்து தான் .. அவர்கள் கூறியதிலிருந்து எடுத்துத் தான் இராவணன் தூய்மையானவன் என்பதைத் தெளிவுபட விளக்கிக் கூறியுள்ளார்.

பொதுவாகவே எல்லோருக்கும் உள்ள எண்ணம்தான் இது... இது இராமாயணத்திற்கு எதிரானது என்று.

ஆனால், அதுவல்ல உண்மை..

தென்னிலங்கை வேந்தன், தமிழ்ப் பேரரசனை அரக்கனாகவும் அடுத்தவன் மனைவிமேல் ஆசைப் பட்டான் என்று வீண் பழி சுமத்தியும் ஏடுகள் வாயிலாக ஏற்படுத்திய கேடுகளைக் காலம் கடந்து துடைத்தெறிந்திருக்கிறார் இக்காவியத்தில்.

இதில் எந்த விபரீதமும் இல்லை. இராமாயணவாதிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக... இராமாயனவாதிகளும் உண்மை உணர்ந்துகொள்ள இதைப் படிக்கவேண்டுமென்பது எமது விருப்பம்.

இந்த நேரத்தில் இன்னொன்றும் நான் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்... இராவண காவியம் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன் நான் ஒரு சீரிய ராம பக்தை. எடுத்ததெற்கெல்லாம் "ஹே ராம் ஹே ராம்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள் இப்போது "நோ ராம் நோ ராம்" என்று சொல்லுமளவிற்குத் தெளிந்திருக்கிறேன்.
என்னைப் போல் கண்மூடித் தனமாக ராமனைக் கடவுளாக ஏற்று வழிபட்டுக்கொண்டிருக்கும் மக்கள் திருந்தட்டுமே ...) :()

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 14:41

இத்தனை விளக்கம் உள்ளுக்குள் இருந்திருக்கிறது என்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது
அனைவருக்கும் எல்லாவிடயத்திலும் சுதந்திரமிருக்கிறது
நான் பயப்பட வேண்டும் என்று சொன்னதே இவ்வாறானதொரு தெளிவினை உங்கள் கருத்தில் கொண்டு வரவேண்டும் என்பதற்காவே
உண்மையில் எதிர்கால கல்வித்திட்டத்திற்கு நாமும் ஒரு துணுக்கை விட்டுச்செல்லலாம்
இராமாயணம் கற்றுத்தரும் பாடசாலைகளில் இராவண காவியம் பற்றியும் அறிமுகம் செய்யலாம்
தெளிவான மனம் படைத்த குழந்தைகள் தீர்மானித்துக்கொள்ளட்டும் எது நல்ல தீர்ப்பென்று
மிக்க நன்றி கவிஞரே


இராவண காவியம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 21:51

சாதிக் wrote:உண்மையில் எதிர்கால கல்வித்திட்டத்திற்கு நாமும் ஒரு துணுக்கை விட்டுச்செல்லலாம்
இராமாயணம் கற்றுத்தரும் பாடசாலைகளில் இராவண காவியம் பற்றியும் அறிமுகம் செய்யலாம்
தெளிவான மனம் படைத்த குழந்தைகள் தீர்மானித்துக்கொள்ளட்டும் எது நல்ல தீர்ப்பென்று
மிக்க நன்றி கவிஞரே

:!+: :!+: :!+:
இந்தக் கருத்தை நான் பலமுறை மேடைகளில் கூறியுள்ளேன்.

தங்களிடமிருந்து வெளிப்பட்ட உண்மையான தமிழுணர்வு கண்டு பூரிப்படைகிறேன். பாராட்டுக்கள் சாதிக்!

இந்த ஒரு பின்னூட்டம்.. நிறைய சொல்கிறது சாதிக் .இராவணகாவியம் வலைத்தளத்தில் ஆரம்பித்ததின் நோக்கம் வெற்றிபெற்று விட்டதாகவே உணர்கிறேன்!

தொடர்ந்து படியுங்கள்! தங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்! நன்றி!


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 22:12

யாதுமானவள் wrote:
சாதிக் wrote:உண்மையில் எதிர்கால கல்வித்திட்டத்திற்கு நாமும் ஒரு துணுக்கை விட்டுச்செல்லலாம்
இராமாயணம் கற்றுத்தரும் பாடசாலைகளில் இராவண காவியம் பற்றியும் அறிமுகம் செய்யலாம்
தெளிவான மனம் படைத்த குழந்தைகள் தீர்மானித்துக்கொள்ளட்டும் எது நல்ல தீர்ப்பென்று
மிக்க நன்றி கவிஞரே

:!+: :!+: :!+:
இந்தக் கருத்தை நான் பலமுறை மேடைகளில் கூறியுள்ளேன்.

தங்களிடமிருந்து வெளிப்பட்ட உண்மையான தமிழுணர்வு கண்டு பூரிப்படைகிறேன். பாராட்டுக்கள் சாதிக்!

இந்த ஒரு பின்னூட்டம்.. நிறைய சொல்கிறது சாதிக் .இராவணகாவியம் வலைத்தளத்தில் ஆரம்பித்ததின் நோக்கம் வெற்றிபெற்று விட்டதாகவே உணர்கிறேன்!

தொடர்ந்து படியுங்கள்! தங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்! நன்றி!



கண்டிப்பாக அக்கா மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:37

இது மதம் சம்மந்தப் பட்டதாக ,இது வரை நினைத்து இருந்த எனக்கு,
இரு இனம் கொண்ட பகை என்ற உண்மையை சொல்லவதை அறியும் பொது,இன்னும் ஆழமாய் படிக்க தோன்றுகிறது.

தமிழுக்கு கம்பனை சொல்வார்கள்,அந்த கம்பனே ,தமிழரை தாழ்த்தி உள்ளார் என்ற புதிய செய்தியை புலவர் குழந்தை ,மூலத்தை அழகாக எங்களுக்கு புரியும் படி உரைத்த தோழிக்கு நன்றி .
உங்கள் உழைப்பு நன்றாகவே தெரிகிறது .காத்திருக்கிறோம்
வரும் தமிழுக்கு,
போக்கட்டும் ராவணனின் அழுக்கு !
நல்லவர்களுக்கா விடியட்டும் கிழக்கு !
உங்களுக்கு பாராட்டு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 9:05

kalainilaa wrote:இது மதம் சம்மந்தப் பட்டதாக, இதுவரை நினைத்து இருந்த எனக்கு,
இரு இனம் கொண்ட பகை என்ற உண்மையை சொல்லவதை அறியும் போது
,இன்னும் ஆழமாய்ப் படிக்க தோன்றுகிறது.

தமிழுக்கு கம்பனை சொல்வார்கள்,அந்த கம்பனே ,தமிழரை தாழ்த்தி உள்ளார் என்ற புதிய செய்தியை புலவர் குழந்தை, மூலம் அழகாக எங்களுக்கு புரியும் படி உரைத்த தோழிக்கு நன்றி .

உங்கள் உழைப்பு நன்றாகவே தெரிகிறது .

காத்திருக்கிறோம் வரும் தமிழுக்கு,
போக்கட்டும் ராவணனின் அழுக்கு ! இராவணனின் மீது சுமத்தப்பட்ட அழுக்கு ! :)
நல்லவர்களுக்கா விடியட்டும் கிழக்கு !
உங்களுக்கு பாராட்டு .

நன்றி கலை நிலா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by mukammat irfan Tue 5 Jul 2011 - 10:04

ok இராவண காவியம்  326371 bay

mukammat irfan
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 10:17

mukammat irfan wrote:ok இராவண காவியம்  326371 bay

எதுக்கு இந்த ஓட்டம்? ஒன்னும் புரியலியே. I 'm Confused .
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 14:26

யாதுமானவள் wrote:
mukammat irfan wrote:ok இராவண காவியம்  326371 bay

எதுக்கு இந்த ஓட்டம்? ஒன்னும் புரியலியே. I 'm Confused .
நல்ல தமிழைப் படிக்க ஆர்வம் இல்லை போல்
நன்றி முகமட் இன்னும் பல பதிவுகள் உள்ளன பாருங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 14:30

அவர் ஆர்வமின்றி ஓடுவதாகத் தெரியவில்லை...
இரு இனம் கொண்ட பகை என்ற உண்மையை சொ
ல்லவதை

இதைப்பார்த்து பயந்து ஓடுகிறாரென நினைக்கிறேன். பரவாயில்லை,, பயமா இருந்தாலும் படிங்க... அப்புறம் தைரியம் வந்துடும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 14:33

யாதுமானவள் wrote:அவர் ஆர்வமின்றி ஓடுவதாகத் தெரியவில்லை...
இரு இனம் கொண்ட பகை என்ற உண்மையை சொ
ல்லவதை

இதைப்பார்த்து பயந்து ஓடுகிறாரென நினைக்கிறேன். பரவாயில்லை,, பயமா இருந்தாலும் படிங்க... அப்புறம் தைரியம் வந்துடும்.
ஒரு வேளை அப்படி இருக்குமோ என்னமோ தெரியல
படிக்க படிக்க ஆர்வம் வரும்
வாருங்கள் உறவே உங்கள் ஆர்வம் பெருகட்டும்
படிங்கள் பயன் பெறுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by Atchaya Tue 5 Jul 2011 - 14:41

ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்தை மீண்டும் மீண்டும் அசைபோட்டு தான் ஒரு முடிவை எடுப்பார்கள். அவர்களின் கோணத்தில் உள்ள நியாயங்களை அவர்கள் எடுத்து வைக்கும் போது தான் சில உண்மைகள் தெரியும். அதற்காக, அதுவே உண்மை ஆகி விடுமா? உங்களின் தொடர்களை படித்த பின் தான் , அதற்க்கான மறுமொழி உங்களைப் போல் இலக்கிய அறிவுடையோர் எடுத்து வைக்க வேண்டும். சகோதரி என்பதற்காக, எங்கள் ஊர் , என்பதற்காக, முடிவை கடைசியில் தான் எடுக்க முடியும். ஆரம்பமாகட்டும் உங்களின் இனிய தொடர். 50 % ஏறக்குறைய இந்த கருத்துகள் ஏற்புடையது. ஆரம்ப காலத்தில் இதே கருத்தை வலியுறுத்தியவர்களில் அடியேனும் ஒருவன். இலக்கியம் படித்து இருபது வருட காலம் ஓடி விட்டது. உற்சாகமாய் தொடருங்கள் தோழி..... :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இராவண காவியம்  Empty Re: இராவண காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum