Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது,
நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.
Re: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.
அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.
அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.
Re: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
பத்மநாப சுவாமி கோவில்கள் நகைகள்:மாநில அரசு விளக்கம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் கோவில் வசமே இருக்கும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளிலிருந்து பல லட்சம் பெறுமானமுள்ள நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் குறிப்பிடுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்பதால் இவை கோவில் வசமே இருக்கும். எனினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
Re: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
என்ன வளம் இல்லை இந்த இந்திய திருநாட்டில்
ஏன் கை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்....அந்தோ பரிதாபம்.....யார்?
இந்தியர்களான நாங்கள்தான். என்னே ...மதவாதிகள்....என்னே அரசியல்வாதிகள்...ஏழைகள் உங்கள் கண்களுக்கு படவில்லையா? இந்தியாவின் கடன் தீர்க்க வேண்டாமா?
ஏன் கை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்....அந்தோ பரிதாபம்.....யார்?
இந்தியர்களான நாங்கள்தான். என்னே ...மதவாதிகள்....என்னே அரசியல்வாதிகள்...ஏழைகள் உங்கள் கண்களுக்கு படவில்லையா? இந்தியாவின் கடன் தீர்க்க வேண்டாமா?
Similar topics
» பத்மநாப சுவாமி கோவில் ரகசியத்தை வெளிப்படுத்தியவருக்கு நோட்டீஸ்
» பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷக் 'கொள்ளையர்களை' கண்டுபிடிக்க அச்சுதானந்தன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» பத்மநாப சுவாமி கோயிலில் ஆய்வுகளினால் ஆசாரக் குற்றம்!
» பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி
» பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு
» பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷக் 'கொள்ளையர்களை' கண்டுபிடிக்க அச்சுதானந்தன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» பத்மநாப சுவாமி கோயிலில் ஆய்வுகளினால் ஆசாரக் குற்றம்!
» பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி
» பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum