Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேதியியல் துறை நோபல் பரிசு-2010
2 posters
Page 1 of 1
வேதியியல் துறை நோபல் பரிசு-2010
வேதியியல் துறை சார்ந்த கண்டுபிடிப்புக்காக 2010-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. ரிச்சர்டு எப். ஹெக். இவர் ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். டெலவேர் பல்கலைக்கழகத்தில் பணிசெய்து ஓய்வு பெற்றவர். ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி நெகிஷி. இவர் பர்டியூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஜப்பானின் அகிரா சுஸுகி. இவர் ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்த மூவருக்கும் கரிம வேதியியல் (Organic Chemistry) சார்ந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
கார்பன் அணுக்களை பல்லேடியத்தை வினை ஊக்கியாகக் கொண்டு பிணைக்கச் செய்வதற்கான வழிமுறையை இம்மூவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும், பல்வேறு புரட்சிகர பயன்பாடுகளுக்கு உதவும் பிளாஸ்டிக்குகளை உருவாக்கவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்வித்துறை, தொழில்துறை ஆராய்ச்சி மருந்துகள், விவசாய வேதியியல் பொருள்கள், உயர் தொழில்நுட்ப பொருள்கள் சம்பந்தபட்ட நுண்ணிய இரசாயனப் பொருள்கள் உற்பத்திக்கு இவர்கள் கண்டுபிடிப்பு உன்னத பங்காற்றுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு மூலம் புற்றுநோய், ஹெர்பஸ் வைரஸ் தாக்குதல், எய்ட்ஸ் சிகிச்சைக் கான மருந்துகள் மற்றும் கம்ப் யூட்டருக்கான மிக மெல்லிய திரைகள் போன்ற நுகர் வோருக்கான பயன்பாட்டு பொருள்களை உருவாக்க வழி கிடைத்துள்ளது.
கரிமவேதியியலிலில் மிகவும் கடினமானது ரசாயன மாற்றம், கரி-கரி சேர்க்கைதான். கரி உள்ள இரண்டு மூலக் கூறுகளை அப்படியே சேர்த்தால், அவை சேராது. கரியும் கரியும் ஒருங்கிணைந்து ஒட்டிக்கொள்ளாது. ஆனால், இவ்வகைச் சேர்க்கைகளே பல புதிய ரசாயனங்களைத் தோற்றுவிக்க வல்லவை என்று விஞ்ஞானிகள் அறிந் திருந்தனர். இவ்வகைக் கரி-கரி சேர்க்கையை எளிமையாகச் செய்யும் வழியை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிலிருந்தே பலர் ஆராய்ந்து வந்தனர். கரி-கரி சேர்க்கையை நிகழ்த்துவதற்கு சென்ற நூற்றாண்டில் நான்கு ரசாயன மாற்றங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த நான்கும், கண்டுபிடித்த வர்களுக்கு நோபல் பரிசை ஈட்டித் தந்துள்ளன. விக்டர் க்ரிக்னார்ட் (Victor Grignard) 1912, டீய்ஸ் மற்றும் ஆல்டர் (Otto Deis and Kurt Alder) 1950, பிரவுன் மற்றும் விட்டிக் (Herbert C. Brown and Georg Wittig) 1979 ஆகியோர் ஏற்கெனவே நோபல் பரிசுகளை வாங்கியிருந்தனர். இப்போது 2010-இல் ரிச்சர்ட் ஹெக், ஐ-இச்சி நெகிஷி, அகிரா சுஸூகி (Richard Heck, Eiichi Negishi and Akira Suzuki) ஆகியோர் வாங்கியுள்ளனர். நெகிஷி, ஹெக்கின் மாற்றத்தைச் சற்று மாற்றியமைத்து, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார். ஹெக்குடன் தொடர்பின்றி அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் தனியாக இதைச் செய்தார். இதை வைத்து 1977-இல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர் பர்ட்யூ பல்கலைக் கழகத்துக்கு இடம்பெயர்ந்தார். நோபல் பரிசு வாங்குவதுதான் இவரது வாழ்வின் லட்சியமாக இருந்ததாம். நிறைவேற்றிவிட்டார்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: வேதியியல் துறை நோபல் பரிசு-2010
அகிரா சுஸூகி, ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர், தன் பங்குக்கு, 1979-இல் எழுதிய கட்டுரை யில், பல்லேடியம் தவிர வேறு சில உலோகங் களைக் கொண்டும் கரி-கரி சேர்க்கையை நிகழ்த் தலாம் என்று நிறுவினார். ஹெக் முதலானோர் கண்டது கரி- கரி சேர்க்கைக்கு ஒரு சமயோசிதமான வழி. நேரடியாகச் சேர்க்க முற்படாமல், பல்லேடியம் போன்ற புதியதோர் உலோகத்தை ரசாயன மாற்றங்களை நிகழ்த்த உதவியாக கேட்டலிஸ்ட் (தூண்டி) எனச் சேர்த் தனர். இவை கரி உள்ள தாய் மூலக்கூறுகளை சரியான வழியில் பிரித்து, கரி-கரி சேர்க்கையை ஏதுவாக்கும். ஹெக், நெகிஷி முதலானோ ரின் இவ்வகைக் கண்டு பிடிப்பால், ஆர்கனோ மெட்டாலிக்ஸ் என்ற புதிய கரிம வேதியியல் துறையே உருவாகியது.
இப்படி நிகழ்த்தப்படும் கரி-கரி சேர்க்கையால் நமக்கு என்ன பயன்? ஸ்டைரோஃபோம் கோப்பைகளை உபயோகித் திருப்பீர்கள். இந்த ஸ்டைரோஃபோமின் மூலப்பொருளான ஸ்டைரீன் எனும் ரசாயனத்தை கரி-கரி சேர்க்கை மூலம்தான் செய்கிறார்கள்.
அதேபோல, ஆர்கானிக் எல்.ஈ.டி (Organic LED) எனப்படும் ஒளிர்வான்களில் உள்ள இரசாயனங்களும் இந்த கரி-கரி சேர்க்கையாலேயே உண்டாக்கப்படுகின்றன. அடுத்து மருந்துப்பொருட்கள். வலிலி நிவாரணி களான மார்ஃபீன், நெப்ராக்சின் போன்ற பொருள்களை கரி-கரி சேர்க்கை வழியாகவே செய்கிறார்கள். மாண்டலுக்காஸ்ட் எனப்படும் ஆஸ்துமா மருந்துகளும் இவ்வாறே தயாரிக் கப்படுகிறது.. முக்கியமாக, நுரையீரல், வயிறு, கழுத்து, தலை மற்றும் மார்பகப் புற்றுநோயை எதிர்க் கவல்ல மருந்தான டாக்ஸால் (Taxol) எனும் கீமோதெரபி மருந்தை உருவாக்கும் முறை இதே வழிதான். டாக்ஸால் இயற்கை யாகக் கிடைக்கக் கூடியதே. ஆனால் செடி களிலிலிருந்து இதைப் பிரித்தெடுப்பது சிரமம். செலவும் கூடுதல். இதனால் சோதனைச் சாலையிலேயே எளிமையான ரசாயனங் களைக் கூட்டிச் சேர்த்து, டாக்ஸாலை உண்டாக்குகிறார்கள். ஹெக் பரிந்துரைத்த பல்லேடியம் காட்டலிஸ்ட் வைத்து கரி-கரி சேர்க்கை உண்டாக்கும் ரசாயன மாற்றத்தின் வழியாக, இதைப் போலவே டிராக்மாசிடின் (Dragmacidin) எனும் மருந்து கடல் பாசியிலிலிருந்து பிரித் தெடுக்கப்படுகிறது. இது, பல நோய் வைரஸ்களுக்கு எதிர்வினை என்பதை விட முக்கியமாக, தற்போது எய்ட்ஸ் வைரஸ் களுக்கே எதிர் வினையாக இருக் கக்கூடும் என்று பரிசோதித்திருக்கின்றனர் (மனிதர் களுக்குக் கொடுத்து இன்னமும் சோதிக்க வில்லை). இந்த மருந்தையும், ஹெக் பரிந்துரைத்த பல்லேடி யம் காட்டஸ்ட் வைத்து கரி-கரி சேர்கை உண்டாக்கும் ரசாயன மாற்றத்தின் வழியாக, செயற்கையாக உருவாக்க முடியுமாம்.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010
» நோபல் பரிசு
» குடும்பத்துக்கு நோபல் பரிசு
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010
» நோபல் பரிசு
» குடும்பத்துக்கு நோபல் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum