Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீமான் ஒரு பார்வை .
4 posters
Page 1 of 1
சீமான் ஒரு பார்வை .
தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையான சீமான், தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதுடன், நடிகர் விஜய்யுடன் இணைந்து “பகலவன்” படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க-காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் சீமானும் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கைகுலுக்கத் துடிக்கும் விஜய்யும் இணையவிருப்பது சீமானின் கொள்கை சறுக்கல் என்ற விமர்சனமும் வைக்கபடுகிறது.
மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது ஆனால் சீமான் அவர்களின் ஈழ ஆதரவு, அரசியல் பிரவேசம், ஆக்ரோசப் பேச்செல்லாம் பார்க்கும்போது, புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்ததுபோல் இவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஞானோதயம் கிடைத்தது போல் தெரிகிறது. கலைஞரைத் திட்டினால் பிரபலமாகலாம் எனத் திட்டிக் கொண்டிருக்கிறார் எனத்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… அவரது பேட்டியை ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில் காணும்வரை.
முதலில் அவரையும் மதித்து பேட்டி எடுக்கக் கூப்பிட்டிருக்கிறார்களே என ஒரு ஆவலில் போயிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவரது பேச்சில் ஈழ மக்களின் நலனை விட கலைஞரைத் திட்டி அம்மையாரிடம் அரசியல் ஆதாயம் பெற முடியுமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது…
எதற்கெடுத்தாலும் கலைஞர் அதைச் செய்யவில்லை…இதைச் செய்யவில்லை எனக் கூறுவதை ஜெயா டி.வி யே விரும்புவதில்லை என்பது சீமானுக்குத் தெரியவில்லை.. அதைச் செய்யவில்லை…இதைச் செய்யவில்லை எனச் சொன்னால், அந்த டி.வி யை எப்போதாவது பார்க்கும் பாமர மக்கள் கூட இந்த அம்மா ஆட்சியில் இருக்கும்போது செய்திருக்கலாமே எனச் சொல்லி பார்க்காமல் இருந்துவிடுவார்கள் என்பது ஜெயா டி.வி நிர்வாகிகளுக்குத் தெரியாமல் இருக்காது… சினிமாவில் வெற்றி பெற முடியாததால் அரசியல் பிரவேசம் செய்த சீமானுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை…
அண்டப் புழுகு ஆகாசப் புழுகு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..சிவகங்கை மாவட்டத்திலுள்ள அவரது ஊரில் 18 மணி நேரம் மின்வெட்டு என வாய் கூசாமல் அவர் சொன்ன போதுதான் இதுதான் அண்டப் புழுகு ஆகாசப் புழுகு என்பதை உணர்ந்தேன்..
அவரது பேச்சில் ஈழ மக்களின் பிரச்சனைகளை விட அவரது மாயாண்டி குடும்பத்தார் படத்தை விலை கொடுத்து வாங்கி (இலவசமாக அல்ல) வெளியிட்ட தொலைக்காட்சி அவரது ஒரு பாடலை வெட்டி வெளியிட்ட வருத்தம்தான் இருந்தது…
ஏதோ இவர் திரைத் துறையில் லாப நோக்கின்றி சேவையாற்றுவது போலவும் அந்தத் தொலைக்காட்சி அந்தப் பாடலை வெட்டியது தவறு என்பது போலவும் புலம்பினார்… பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெயா டி.வி. ரபி பெர்னார்டே நன்றி சீமான் எனச் சொல்லி பேட்டியை முடித்தது இன்னமும் நகைச்சுவையாக இருந்தது..
இவர் சினிமாத் துறையில் வெற்றி பெற முடியாததால் அரசியலுக்கு வந்தார் என அனைவருக்கும் தெரியும்.. ஏதோ இவர் வந்து தான் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது போல் காட்டிக் கொண்டார்…
மாயாண்டி குடும்பத்தார் விஷயத்துக்கு வருவோம்…. ஏதோ ஆஸ்கார் விருது பெறும் படமாக இருந்தாலும் சீமான் விலைக்குத் தானே விற்றார்.. ஒரு பாடலை வெட்டி விட்டார்கள் என இன்னொரு தொலைக்காட்சியில் வந்து புலம்புவது நியாயமா….அவர்கள் செய்தது தவறென்றால் அதற்குத் தீர்வு காண எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. கிடைத்தது வரை லாபம் எனப் படத்தை விற்றுவிட்டு பாடலை வெட்டிவிட்டார்கள் எனப் புலம்புவதிலிருந்து சீமானின் அபரிதமான தமிழுணர்வும், ஈழ மக்களின் துன்பத்தை விட இது அவரை எவ்வளவு பாதித்துள்ளது என்பதும் தெரிகிறது…
இதோ இவர்களின் சில முரண்பாடு முட்டைகள்
அப்பாவிகளான ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவ குண்டு மழையிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்; சொந்த மண்ணிலேயே அம்மக்கள் ஏதிலிகளாகி, காடுகளிலும், வனாந்தரங்களிலும் பசி, பட்டினியோடு நாளும் செத்துக் கொண்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களுக்கு நிவாரண உதவி போய்ச் சேரவேண்டு மென்றும் குரல் கொடுத்தால், அப்படிப் பேசுகிறவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர்கள் என்று அறிக்கை விடும் அறிக்கை அரசி ஜெயலலிதா .
சீமான் பேசுவதை ஜெயலலிதா நியாயப்படுத்துவதாக இருந்தால் அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், வைகோ அவர்களின் அத்தகைய பேச்சு இறையாண்மைக்கு விரோதமான உரை என்றும் சட்ட விரோதம் என்று பொடாவின்கீழ் கைது செய்து ஓராண்டுக்குமேல் சிறையில் தள்ளியது ஏன்?
நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டவர் யார்? சாட்சாத் இதே ஜெயலலிதா அம்மையார்தானே. அந்த நேரத்தில் கொலைகாரி என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்தானே - ஒழித்துக்கட்டுவோம் என்று சூளுரைத் தவர்தானே தோழர் வைகோ?
இந்த நிலையில் சீமான் ஜெயலலிதாவிற்கும் வை கோ விற்கும் வக்காலத்து வாங்குவது எந்த அடிப்படையில்? மனந்திருந்திய நிலையிலா? ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டதன்மையிலா?
ஜெயலலிதா பக்கத்தில் நின்றுகொண்டு கலைஞர்மீது கல்லெடுத்து எறிபவர்கள் அந்தரங்கச்சுத்தியுடன் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டாமா?
ஒரு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்காக மனிதாபி மானத்தோடு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் கவி தைக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியவர்தானே ஜெயலலிதா!
ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது முதலமைச்சர் என்ற முறையில் மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தவராயிற்றே ஜெயலலிதா.
மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதும், நோய்க்கு வைத்தியம் செய்வதும் உலகம் ஒப்புக்கொண்ட மனிதாபிமானச் செயல்கள். அதைக்கூட ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காட்டத் தயாராக இல்லாத ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பேசுவதை விட ஏமாற்று வேலை, மோசடி வேலையை தவிர வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?
தமிழ் ஈழம் என்பதை உணர்ச்சியோடு, உணர்வோடு கலந்து உச்சரிக்கக் கூடியவர்கள் திராவிடரியக்கத்துக்காரர்கள்தான்.
எனவே திராவிடர் இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, அதன் மூலமாக லாபம் அடையலாம் என்று சொன்னால் அது கையிலே கிடைத்த முக்கியமான ஒன்றை தூக்கி எறியக்கூடிய சிறுபிள்ளைத்தனமான ஒரு முடிவாகத்தான் அது ஆகும்.
எனவேதான் இதிலே தொலைநோக்குப் பார்வை தேவை என்பதே என் தாழ்மையான கருத்து.
நன்றி தமிழ்

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீமான் ஒரு பார்வை .
இன்றய அரசியல் நாடகங்கள் இவ்வாறுதான் அமைந்துவிட்டது சந்தர்பத்தை சுயநலத்துக்காக பாவிக்கிறார்கள் சீமான் விடயத்திலும் அதுதான் இடம்பெறுகிறது பேச்சளவில் ஆதாயம் தேடுகிறார் அவ்வளவுதான்
Re: சீமான் ஒரு பார்வை .
@. @.முனாஸ் சுலைமான் wrote:சீமானுக்கு பெயர் வேனும் அதற்காக இன்னமும் என்னவெல்லாம் சொல்வார் சீமான்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீமான் ஒரு பார்வை .
@. @. @.சாதிக் wrote:இன்றய அரசியல் நாடகங்கள் இவ்வாறுதான் அமைந்துவிட்டது சந்தர்பத்தை சுயநலத்துக்காக பாவிக்கிறார்கள் சீமான் விடயத்திலும் அதுதான் இடம்பெறுகிறது பேச்சளவில் ஆதாயம் தேடுகிறார் அவ்வளவுதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பரபரப்பு புகார்! - சீமான் மறுப்பு
» ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது
» சீமான் கேட்ட கேள்வி....!!!!
» சீமான் அணிவித்த தாலி..!
» மௌனம் காக்கும் விஜய்-சீமான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum