சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அடியே' திரைப்பட விமர்சனம்!
by rammalar Today at 14:29

» புரட்டாசி மாதம் - கவிதை
by rammalar Today at 14:20

» மழை - கவிதை
by rammalar Today at 14:18

» வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்...
by rammalar Today at 14:13

» முதிய தம்பதிகளின் சகிப்புத் தன்மை! - கவிதை
by rammalar Today at 14:11

» மாற்றியவர் யாரோ- ஒரு பக்க கதை
by rammalar Today at 14:10

» கண்மூடித்தனம் - ஒரு பக்க கதை
by rammalar Today at 13:57

» மீண்டும் திரும்பாத பள்ளிப்பருவ காலம்! - கவிதை
by rammalar Today at 13:56

» படத்திற்கு கவிதை...
by rammalar Today at 13:53

» பள்ளிப் பருவம் - கவிதை
by rammalar Today at 13:52

» இருண்ட வாழ்வின் ஒளியாக வந்தவள்! - கவிதை
by rammalar Today at 13:51

» பேல்பூரி - (பல சரக்கு-இணையத்தில் ரசித்தவை)
by rammalar Today at 0:39

» கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு - விடுகதைகள்
by rammalar Yesterday at 13:51

» திருமண ஆசை வந்துடுச்சி..!
by rammalar Yesterday at 9:01

» கொழுப்பு இல்லை தாயி, சுகர்தான் 350 இருக்கு!
by rammalar Yesterday at 8:55

» அரிசி தரும் பயன்கள்
by rammalar Yesterday at 8:34

» கொலு- டிப்ஸ்
by rammalar Yesterday at 8:32

» இணையத்தில் ரசித்த பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 28 Sep 2023 - 16:25

» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by rammalar Thu 28 Sep 2023 - 15:24

» அகங்காரத் தீ - நீதி போதனை
by rammalar Thu 28 Sep 2023 - 15:11

» பல சரக்கு
by rammalar Tue 26 Sep 2023 - 20:42

» கல்யாணமா... எனக்கா..? - விழிகள் விரிக்கும் த்ரிஷா
by rammalar Tue 26 Sep 2023 - 20:28

» கவிமாடம் - கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 16:26

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by rammalar Tue 26 Sep 2023 - 11:25

» கோள்களை வெல்வோம் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:19

» மரங்கள் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:08

» நடிகை நிமிஷா விஜயன்
by rammalar Tue 26 Sep 2023 - 2:52

» விக்ரமாதித்யன் கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 2:37

» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
by rammalar Tue 26 Sep 2023 - 2:18

» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by rammalar Tue 26 Sep 2023 - 2:08

» உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
by rammalar Mon 25 Sep 2023 - 19:23

» வரும் ஆனா வராது தம்பி! -வலைவீச்சில் ரசித்தவை
by rammalar Mon 25 Sep 2023 - 19:00

» அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
by rammalar Mon 25 Sep 2023 - 18:47

» போனுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு!!
by rammalar Mon 25 Sep 2023 - 16:23

» குழந்தைப் பருவம்
by rammalar Mon 25 Sep 2023 - 16:07

வேப்பம்பூ Khan11

வேப்பம்பூ

3 posters

Go down

வேப்பம்பூ Empty வேப்பம்பூ

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 22:03

வேப்பம்பூ Poo
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி:
தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 50 கிராம்

புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)

வெல்லம் - 2 மேஜைக்கரண்டி

கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு

எண்ணை - ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.

புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.

வேப்பம்பூ ரசம்:
தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 50 கிராம்

வேக வைத்த துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி(கரைத்துக் கொள்ளவும்)

புளி - சிறிய எலுமிச்சை அளவு

ரசப்பொடி - 2 தேக்கரண்டி

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க

பெருங்காயம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியைக் கரைத்து, ரசப்பொடி கலந்து நன்றாக கொதிக்க விடவும். அதில் பருப்பு, தண்ணீரை சேர்த்து, வேப்பம்பூவை வதக்கி, அதில் கலந்து... பின்னர் தாளிக்கவும். உப்பு, பெருங்காயம் கலந்து இறக்கவும். இதை சாப்பாட்டிற்கு முன்னால் சூப்பாகவும் குடிக்கலாம்.

வாரம் ஒரு தடவை இந்த ரசத்தை நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் அழியும். பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

வேப்பம்பூ துவையல்:
தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 100 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் - 4

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணை - 2 தேக்கரண்டி.

செய்முறை:

வாணலியில் வேப்பம்பூ, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்தையும் நன்கு அரைத்து, பின்பு உளுத்தம்பருப்பை `நறநற'வென அரைத்து சுவையுங்கள். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

வேப்பம்பூ பொடி...
தேவையான பொருட்கள்:

காய்ந்த வேப்பம்பூ - 200 கிராம்

உளுத்தம் பருப்பு - 50 கிராம்

கொத்தமல்லி - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 6 முதல் 8

உப்பு, பெருங்காயப் பொடி - தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, அரைத்து பொடி செய்து கலந்து கொள்ளவும். சூடான சாதத்தில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி பொடியை தூவி, சிறிது நெய் கலந்து சாப்பிட்டால் பித்த நோய்களான வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை நீங்கும்.

வேப்பம்பூ உருண்டை...
தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 2 மேஜைக்கரண்டி

வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு.

செய்முறை:

வேப்பம்பூவை சிறிது நெய் விட்டு வறுத்து, பொடியாக்கி, வெல்லத்துடன் சேர்த்து உருண்டை செய்து கொள்ளவும். வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்பூச்சி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். (வேப்பம்பூ பதப்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான கடைகளில் கிடைக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேப்பம்பூ Empty Re: வேப்பம்பூ

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 22:05

பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

://:-: ://:-: ://:-: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வேப்பம்பூ Empty Re: வேப்பம்பூ

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 23:10

முனாஸ் சுலைமான் wrote:பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

://:-: ://:-: ://:-: :”@:

மறுமொழிக்கு நன்றி முனாஸ் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேப்பம்பூ Empty Re: வேப்பம்பூ

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 23:20

நல்ல மருத்துவ குணமுள்ள வேம்பு!

துளசியும் வேப்பமரமும் ஒரு வீட்டில் வளர்த்தால் ஒரு மருத்துவர் இருப்பதர்க்குச் சமம்னு தமிழ் நாட்டில் சொல்லுவாங்க...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வேப்பம்பூ Empty Re: வேப்பம்பூ

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 23:23

யாதுமானவள் wrote:நல்ல மருத்துவ குணமுள்ள வேம்பு!

துளசியும் வேப்பமரமும் ஒரு வீட்டில் வளர்த்தால் ஒரு மருத்துவர் இருப்பதர்க்குச் சமம்னு தமிழ் நாட்டில் சொல்லுவாங்க...

ஆமா எங்க ஊரிலும் சொல்லுவாங்க அக்கா அப்படித்தான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேப்பம்பூ Empty Re: வேப்பம்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum