Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிறர் கருத்தை கேட்பதில் என்ன தவறு?
Page 1 of 1
பிறர் கருத்தை கேட்பதில் என்ன தவறு?
"யாரையும் குறைத்து மதீப்பீடு செய்தல் கூடாது; எவரையும் உதாசீனமும் செய்யக்கூடாது"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.
அப்பொழுதுதான் தன் காரின் ஒரு சக்கரத்தின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார்.
அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது.
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த ஒரு மனநிலை சரியில்லாதவர் 'என்ன விஷயம்' என்று விசாரித்தார்.
'பைத்தியத்திடம் சொல்லி என்ன பயன்' என்று நினைத்தவர், 'சரி நம்முடைய ஆதங்கத்தையாவது கொட்டி தீர்ப்போம்' என்று விஷயத்தை கூறலானார்.
அனைத்தையும் கேட்ட அந்த மனநிலை சரியில்லாதவர் மிகவும் இயல்பாக, 'இவ்ளோதானா... மீதமுள்ள
மூன்று சக்கரங்களிலும் இருந்து ஒரு, ஒரு போல்ட்டை கழட்டி எடுத்து இந்த
சக்கரத்தில் மாட்டுங்கள். வண்டி பிரச்சனை இல்லாமல் ஓடும்' என்றார்.
கேட்ட ஓட்டுனர் திகைப்பில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வியப்பின் எல்லைக்கே போய் விட்டார்.
இது போன்ற நிறைய சம்பவங்களை நமது வாழ்வில் நாம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம்.
ஆலோசணை கேட்டு என்ன நடந்து விடப்போகிறது என்று பலர், எவரிடமும் ஆலோசனை கேட்பதே இல்லை.
இன்னும் சிலர் என்னை விட இவருக்கு என்ன பெரிதாக தெரிந்து விடப்போகிறது, இவர் இப்படித்தான் கூறுவார் என்று தாங்களாகவே ஒரு கருத்தை வளர்த்துக் கொண்டு எவரையும் அணுகுவதில்லை.
இன்னும் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு விஷயம் குறித்த எந்த கருத்தையும் ஒரு ஆளிடம் கூட கேட்க மாட்டார்கள்.
ஆனால் அந்த வேலையை முடிப்பதற்கு பல மணிநேரம் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருப்பார்கள்.
வேறு சிலர் அவர்களின் கருத்தை கூறிவிட்டு மற்றவர்களின் கருத்துக்கு காத்திராமல் அவ்விடத்தை விட்டு செல்வதில் கவனமாக இருப்பார்கள்.
இதனால் வாழ்வில் நாம் இழந்தவை எத்தனை?
சிறிது யோசித்து பார்ப்போம்.
இழந்தது பணம் என்றால் அதனை சம்பாதித்து விடலாம்.
ஆனால் இழந்தது நேரமும் வாழ்க்கையும் என்றால் என்ன செய்வது?
முறையான ஆலோசனை இல்லாமல் கல்வியில் வழி தவறியவர்கள் முதற்கொண்டு வாழ்க்கையில் வழி தவறிய பலரையும் நாம் தினம், தினம் கண்டு வருகிறோம்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவம்:
எதிரிகளை எதிர்கொள்வதற்கு தங்களின் படைகளை அழைத்து பத்ர் நோக்கி வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்..).
இஸ்லாமியர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் பெரும் போர் அது.
படைகளை ஒரு இடத்தில் முகாமிட கட்டளையிட்டார்கள் நபி(ஸல்..).
உடனே ஹூபாப் அல் முன்திர் (ரலி..) என்ற ஒரு தோழர், 'நாயகமே! இது அல்லாஹ்வின் கட்டளையா அல்லது தங்களின் கருத்தா?' என்று கேள்வி எழுப்பினார்.
'எனது கருத்துதான்' என்றார்கள் நபி(ஸல்..).
'அப்படியென்றால் நாம் முகாமிட இது ஏற்ற இடமில்லை. சிறிது முன்னே சென்று அங்குள்ள கிணறுகளையும் நமது வசமாக்கி அங்கு முகாம்களையும் அமைப்போம்' என்றவர்,
'இதன் மூலம் எதிரிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்கலாம்' என்று காரணத்தையும் கூறினார்.
அல்லாஹ்வின் தூதரான எனது கருத்திற்கு மாற்றுக் கருத்தா? என்று கூறவில்லை நபி(ஸல்..).
மாறாக.....தோழரின் கருத்தை ஏற்றார்கள் நபி(ஸல்..).
அதன்
பின் நடந்ததை உலகறியும். வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த அந்தப்போரில்
முக்கிய பங்காற்றிய அத்தோழரின் பெயரை வரலாறு படித்த பலரும் கூட அறிவதில்லை.
ஆனால் அவரின் கருத்தை உதாசீனம் செய்யாமல் செவி சாய்த்தார்கள் நபி(ஸல்..).
இதனை படித்த மாத்திரத்தில் எத்தனை நாடுகள், இயக்கங்களின் தலைவர்கள், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என்று அனைவரும் எவ்வாறெல்லாம் அடுத்தவர்களின் கருத்துகளுக்கு செவி
சாய்ப்பதில்லை என்று நமது எண்ணத்தை ஓட விடாமல் நமது நிலையை சற்று உரசி
பார்ப்போம்.
எவரையும் குறைத்து மதீப்பீடு செய்தல் கூடாது; எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதுதான் மேற்கூறிய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
மிகப்பெரும்
நிறுவனங்களின் சாதாரண தொழிலாளிகள் தான் பிரமிக்கத்தக்க கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் கூறினார்கள் என்று படித்து பரவசம் அடையும் நாம், நமது வாழ்வில் இதனை ஏற்றுக்கொள்ள ஏனோ இன்னும் தயக்கம் காட்டுகிறோம்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Similar topics
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
» உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்
» பிறர் வேதனை அறிக!
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?
» உங்களின் கருத்தை பகிருங்களேன்... அப்துல்லாஹ்
» பிறர் வேதனை அறிக!
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum