Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கும் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்
Page 1 of 1

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் இருவர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளிகள் 27 பேர், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை தாயுடன், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி பட்டறைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.
விசைத்தறி பட்டறையிலிருந்து 12 வயதில் மீட்கப்பட்ட ராமலிங்கம், குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு வரை படித்த இவர், பின்னர் பொதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து படித்த ராமலிங்கம், பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1160 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
இவரைப்போல், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1123 மதிப்பெண்கள் பெற்றார்.
மூர்த்தி பெற்றோருடன் கட்டட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 11 வயதில் மீட்கப்பட்டார். பின்னர் சிறப்புப்
பள்ளியில் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததும், பொதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த இருவரும், குடும்பச் சூழ்நிலை காரணமாக மீண்டும் பெற்றோருடன் வேலைக்குச் செல்ல முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராமலிங்கத்துக்கு மாவட்ட ஆட்சியரும், மூர்த்தி பள்ளி
ஆசிரியர்களும் ஊக்கமளித்ததன் பேரில், மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கலந்தாய்வில் பங்கேற்ற இவர்களில் மூர்த்திக்கு சேலத்திலுள்ள மோகன்குமாரமங்லம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ராமலிங்கத்துக்கு திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை இவர்களுக்கு அளித்திருக்கும் அதேவேளையில், படிப்புக்கு ஆகும் செலவு குறித்த எண்ணம் இவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர் மூர்த்தி கூறியது:
குடும்பச் சூழ்நிலை, ஆழ்ந்து படிக்க வேண்டும் எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இப்போது மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கும், பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்தவம் படித்து, எனது கிராமத்தில் ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவேன். பெற்றோரின் வருமானம், குடும்பச் செலுவுகளுக்கே போதவில்லை. எனவே, மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
முதல் தலைமுறை மாணவர் என்பதால், கல்விக் கட்டணம் ரத்தாகும் என்றாலும், பிற செலவுகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார்.
இவர்களைப்போல் அதிக மதிப்பெண்களை பெற்ற 27 பேர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, விசைத்தறி வேலையிலிருந்து மீட்கப்பட்டவர். இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1112 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்
» உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்
» சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி: மாணவர்கள் குற்றச்சாட்டு
» இலங்கையில் 40 ஆயிரம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள்!!!!!
» வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum