சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் Khan11

போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள்

2 posters

Go down

போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் Empty போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள்

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 19:07

போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் Jaffna_student
கடந்த காலப் போர் காரணமாகக் கண்பார்வையை இழந்த அதேநேரம் கைகளையும் இழந்த மூன்று மாணவர்கள் இம்முறை யாழ்ப்பாணத்தில் கடும் சவால்களுடன் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை எழுதி வருகிறார்கள்.
கைதடி முத்துக்குமாரசுவாமி பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவரும் இந்த மாணவர்கள் கைதடி நவீல்ட் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் பாடசாலையில் கற்றவர்கள். இவர்களுடன் மேலும் மூன்று பார்வையற்ற மாணவர்களும் நஃபீல்ட் பாடசாலையில் இருந்து சாதாரண தர பரீட்சை எழுதி வருகின்றனர்.
பாடசாலையின் 56 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக இம்முறையே பார்வையற்ற மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சை எழுதியிருக்கிறார்கள் என்று அதிபர் வி.என்.மகேந்திரன் தெரிவித்தார்.
சிவயோகன் மாதினி, விக்கினராசா விஜயலக்ஷ்மி, கிளைமன் கிறிஸ்ரில்டா, பழனிமுத்து இராஜலக்ஷ்மி, விஜயகுமார் விஜயலாதன், சந்திரராசா விக்னேஸ்வரன் ஆகிய ஆறு மாணவர்களுமே தமது விசேட தேவை நிலையை சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக சாதாரண தரப் பரீட்சையை எழுதி வருகின்றனர்.
வன்னியின் இறுதிப் போரினுள் அகப்பட்ட இந்த மாணவர்கள் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டவர்கள். பின்னர் முகாம்களிலும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். வெடி குண்டுகள் மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களால் இவர்கள் தமது பார்வையை இழந்ததுடன் அவயவங்களையும் இழக்க நேரிட்டது.
எனினும் எதிர்காலத்தில் கல்வியே தமக்குத் துணை நிற்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டுள்ள இவர்கள் கடந்த 8 மாதங்களாக நஃபீல்ட் பாடசாலையில் கல்வி கற்று சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களில் சிலர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்கள் என்று அதிபர் தெரிவித்தார். தாம் பரீட்சையை நன்றாகவே செய்திருக்கின்றனர் எனத் தெரிவித்த இந்த மாணவர்கள் எனினும் வரலாறு மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் அதிகம் உள்ள பாடங்களில் தங்களால் விடையளிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்தனர்.
மாணவர்கள் மூவர் பார்வையற்றிருப்பதுடன் கைகளையும் இழந்திருப்பதால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் என இரண்டு மொத்தம் ஆறு மேற்பார்வையாளர்கள் உதவி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கேள்விகளை வாசித்துவிடுவார் மற்றையவர் மாணவர் வாயால் சொல்லும் பதிலை எழுதுவார். மாணவரின் பதில் ஒலிநாடாவில் பதிவு செய்யப்படும். விடைத்தாளுடன் சேர்த்து அதுவும் அனுப்பப்படும்.
கொழும்பில் இருந்து வந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் மாணவர்களை நேரில் பார்வையிட்டதன் பின்னர் இத்தகைய விடையளிக்கும் முறைக்கு அனுமதி வழங்கிச் சென்றனர் என மகேந்திரன் தெரிவித்தார்.
தாம் எதிர்காலத்தை நோக்கிப் போராடிக் கொண்டிருந்தாலும் தமது அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக மாணவர்கள் கவலைப்பட்டார்கள். இருப்பிடமும் உணவும் கிடைக்கின்றன. அதையும் தாண்டி அத்தியாவசியத் தேவைகள் பல இருக்கின்றன. எமது படிப்புக்கே மேலதிகத் தேவைகள் உள்ளன.
இன்னும் நாம் விசேட தேவை உள்ளவர்கள் என்பதால் மற்றையவர்களின் உதவிகளைக் குறைத்து நாமே தனித்துச் செயற்படுவதற்கான கருவிகள் உபகரணங்கள் அதிகம் தேவையாக உள்ளன. எமது பொருளாதார நிலையில் அவற்றையெல்லாம் பெறமுடியாத நிலையிலேயே இருக்கிறோம் என்று தெரிவித்தார் மாணவி விஜயலக்ஷ்மி.
பலபேர், தொண்டு நிறுவனங்கள் வந்து பார்த்துச் சென்ற போதும் இதுவரையில் தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய உதவிகள் தம்மை வந்தடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் Empty Re: போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள்

Post by எந்திரன் Thu 23 Dec 2010 - 19:34

போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் 876805 போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் 876805 போரில் ஊனமுற்ற நிலையில், கடும் சவால்களுடன் சாதாரண பரீட்சை எழுதும் யாழ். மாணவர்கள் 876805
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics
» பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம். பி. வாழ்த்து
» போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
» தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம்.பி. வாழ்த்து
» க.பொ.த. விசேட பரீட்சை: 1800 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்
»  கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum