Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
2 posters
Page 1 of 1
உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
நம் ஒவ்வொருவருக்கும் கை முஷ்டி அளவு இரண்டு பழுப்பு கலந்த கறுஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீரகங்கள் அதனுள் சுமார் 20 லட்சம் நெஃப்ரான்கள் எனப்படும் நுண்ணிய ஜல்லடை போன்ற உறுப்புக்களும், சுமார் 200 மைல் நீளத்திற்கு மயிரிழையிலும் நுண்ணிய குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் உள்ளன. இவை இரண்டிற்கும் இதயத்திலிருந்து வரும் முக்கிய இரத்தக் குழாயிலிருந்து நேரடியாக பெரிய சிறுநீரக இரத்தக் குழாய்கள் மூலம் நிமிடத்திற்கு சுமார் 1,200 மி.லி. இரத்தம் பாய்கின்றது.
நெஃப்ரான்-சிறுநீரகத்தின் அடிப்படை சுத்திகரிப்பு அலகு-உறுப்பெருக்கியின் மூலம்.
சிறுநீரகங்களில் உள்ள நுண்ணிய ஜல்லடை உறுப்புகள்-நெஃப்ரான்கள் தினமும் சுமார் 180 லிட்டர் ஊணீரை இரத்தத்திலிருந்து திரவமாக பிரித்தெடுக்ககின்றன. இதனை மற்ற நுண்ணிய குழாய்கள் வெறும் 1.5 லிட்டர் கழிவுப்புக்கள் மட்டும் உள்ள சிறுநீராக மாற்றி உள்சிறுநீர்க்குழாய் எனப்படும் இரண்டு ட்யூபுகள் மூலம் சிறுநீர்ப்பைக்கு சொட்டு, சொட்டாக அனுப்புகின்றன. சிறுநீர்ப்பையில் சிறுநீர் 300-500 மி.லி சேர்ந்தவுடன் சிறுநீர் கழிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தவுடன் சிறுநீர் வெளிசிறுநீர்க் குழாய் வழியாக வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரகங்கள், அவைகளின் இரத்தக் குழாய்கள், இரண்டு உள்சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை, வெளிசிறுநீர்க் குழாய், சிறுநீரை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு கொண்டு வருதல், அதனுள் சேமித்து வைத்தல், பின்னர் கால நேரம் பார்த்து வெளியேற்றுதல் ஆகியவற்றை கட்டுபடுத்தும் சில பிரத்யேக நரம்புகள் அவைகளின் கட்டுபாட்டில் இயங்கும் தசைகள் ஆகியன இவை அனைத்தும் அடங்கியதே சிறுநீரக மண்டலம் என்பது. எனவே சிறுநீரக வியாதி என்ற சொல் இந்த சிறுநீரக மண்டலத்தின் பல்வேறு பகுதிகளை வெவ்வேறாக பாதிக்கும் பலவித பாதிப்புக்களை குறிக்கும் பொதுவான வார்த்தையாகும். 1000த்தில் ஒருவர் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பது உண்டு. இவர்களில் அநேகமாக அனைவரும் பிரச்சனையும் இன்றி (தங்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதையே கூட அறியாமல் கூட) தங்கள் முழு வாழ்நாளையும் கழித்து விடுகின்றனர்.
(பார்க்க - ஒரே சிறுநீரகத்துடன் வாழ்க்கை)
சிறுநீரகங்கள் என்னென்ன பணிகளை நம் உடலில் செய்கின்றன?
1. நம் உடல் என்ற இரசாயன உயிர் இயந்திரம் தடையின்றி இயங்க நம் இரத்தத்திலும் மற்ற திரவங்களிலும் உள்ள பல்வேறு இரசாயனங்களின் அளவுகள் (உதாரணங்கள் க்ளுகோஸ், சோடியம், பொட்டாசியம், பாஸ்பேட், கால்சியம், பை-கார்பனேட், யூரிக் ஆசிட் போன்றவை) ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் இருக்க வேண்டியது அவசியம். இதில் மிகப் பெரும்பாலான இரசாயனங்களின் அளவுகளை கட்டுப்படுத்தி சரியான வரையறைக்குள் வைக்கும் இரசாயன கட்டுப்பாட்டு கேந்திரமாக சிறுநீரகங்கள் இயங்குகின்றன.
2. நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு உடலிருந்து வேர்வையாக வெளியேறும் நீரின் அளவு இவைகளை கணக்கிட்டு சிறுநீரின் அளவை கட்டுப்படுத்தி நம் உடலின் மொத்த தண்ணீரின் அளவை எடையில் 60% ஆக வைத்திருப்பதும் சிறுநீரகங்கள்தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
3. நாம் உடலின் இயக்கங்களுக்கு சக்தி அளிப்பது, திசுக்களின் வளர்ச்சி, ஆரோக்யம், பழுது பார்ப்பு, பல்வேறு ஹார்மோன்கள், ஜீரண நீர் உற்பத்தி ஆகியவற்றிக்கு உணவு அவசியம். இந்த உணவு செரிமானத்திற்கு பின்னர் பலவகையான செலவு செய்யப்படுகின்றது. இதில் பல்வேறு விதமான கழிவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கழிவுப் பொருட்கள் இரத்தத்திலிருந்து சிறுநீரகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிறிது தண்ணீரில் கலந்து சிறுநீராக பிரித்து அனுப்படுகின்றன. எனவே சிறுநீரகங்கள் நம் உடல் உயிர் இரசாயன இயந்திர தொழிற்சாலையின் துப்புறவுத் பாகமாக பணியாற்றுகின்றன. இவ்வாறு சுத்தப்படுத்தும் போது இரத்தத்திலுள்ள முக்கிய சத்துக்களான அல்புமின், க்ளோபுலின், இரத்த அணுக்கள் ஆகியன வெளியேறி வீணாகாமலும் பார்த்துக் கொள்கின்றன. யூரியா, கிரியேட்டினின் எனத் தொட்டு பலவகையான கழிவுப் பொருட்கள் இப்படி உற்பத்தி ஆகின்றன. இரத்தத்தில் யூரியா கிரியேட்டினின் இவற்றின் அளவை அறிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
4. நாம் வேறு நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உணவுகளில் உள்ள நமக்கே தெரியாத விஷப் பொருட்கள் ஆகியவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான்.
5. இது மட்டுமின்றி சிறுநீரகங்கள் சில முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன. நம் உடலிலபு எலும்ப மஜ்ஜையில் இருந்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் அணுக்களை தூண்ட எரித்ரோபாய்ட்டின் (Erythropoietin) என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இதனால் தான் சிறுநீரக செயலிழப்பில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து இரத்த சோகை ஏற்படுகின்றது. (பார்க்க-சிறுநீரக செயலிழப்பில் இரத்த சோகை) நம் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை சீராக வைத்திருந்தது அதன் மூலம் எலும்புகளை பல முள்ளதாக வைக்க கால்சிட்ரியால் (Calcitriol) என்ற ஹார்மோன் தேவை. சிறுநீரக செயலிழப்பில் இதன் அளவு குறைவதால் எலும்புகள் பலமிழந்து எலும்புகளில் வலி, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுகின்றது. தவிர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரெனின் (Renin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றது. பெரும்பாலான சிறுநீரக பாதிப்புகளில் அதிக ரெனின் உற்பத்தி செய்யப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.நமது சிறுநீரகங்கள் பலவித நோய்களால் பலவிதமாக பாதிக்கப்படலாம். சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) என்பது சிறுநீரகங்களின் கழிவுப்புக்களை சுத்தப்படுத்தும் பணி பாதிப்பதால் வரும் நிலையாகும். இது அதிக பட்ச பாதிப்பாகும். இதற்கு முன்பு வரும் வகை பாதிப்புகளால் உடலில் தண்ணீர் தங்குதல், சிறுநீரில் புரதம் வீணாகுதல், உயர் இரத்த அழுத்தம் ஆகியன மட்டும் கூட உண்டாகலாம். இதைப் பற்றி விவரமாக அறிய அதற்குரிய பகுதிகளில் காணுங்கள்.
நன்றி தமிழ் கிட்னி :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
மறுமொழிக்கு நன்றி :];: சரண்யாசரண்யா wrote: :”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
» மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
» தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......
» அறிந்து கொள்ளுங்கள் :
» அறிந்து கொள்ளுங்கள் தகவல்
» மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
» தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......
» அறிந்து கொள்ளுங்கள் :
» அறிந்து கொள்ளுங்கள் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum