சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Yesterday at 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம் Khan11

ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Go down

Sticky ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by யாதுமானவள் on Tue 19 Jul 2011 - 21:21


சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், தமிழில் மிகச் சிறந்த புலமை பெற்றவர் .

தான் ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் உடனே அவரைச் சிறையிலடைத்து விடுவார்.

அப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது என்னவெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர்.
பதில் தவறாக இருப்பின் இரண்டிரண்டு பேராக நிற்கவைத்து இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்ள அஞ்சுவார்களாம்.

அந்த குலோத்துங்க சோழனுக்குத் தந்தையில்லாததனால் கவி ஒட்டக்கூத்தரே அவருக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பினை ஏற்றார். பாண்டிய மன்னனின் மகளே குலோத்துங்க சோழனுக்குப் பொருத்தமானவள் என்றறிந்து பெண் கேட்கச் சென்றார்.

பாண்டிய மன்னன் இதைக் கேட்டதும், "எங்கள் பாண்டிய நாட்டில் பெண்ணெடுக்க உங்கள் சோழ மன்னனுக்கு என்ன தகுதியிருக்கிறது என ஒட்டக்கூத்தரைப்பார்த்துக் கேட்க, உடனே ஒட்டக்கூத்தர் கீழ்வரும் பாடலைப் பாடினார்.

ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரர்க்குள் வீரனொரரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே

என்ன சொல்கிறாறென்றால்,
"சோழ மன்னர்கள் மார்பில் சூடும் ஆலம்பூ மாலைக்குப் பாண்டிய மன்னர்கள் தரிக்கும் வேப்பம்பூ மாலை ஈடாகுமா?, சோழன் குலம் சூரிய குலம், பாண்டியர்கள் குலம் சந்திரகுலம், சூரியனுக்குச் சந்திரன் ஈடாகுமா?
வீரர்களுள் சிறந்தவன் புலிக்கொடி தரித்த சோழன் தானே மீன்கொடியைத் தரித்த பாண்டியன் இல்லையே? சோழநாட்டின் தலைநகரான அலைகடல் ஆர்ப்பரிக்கும் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் தலைநகரான கொற்கை நகர் ஈடாகுமா?

இப்படி எல்லாவகையிலும் சிறந்த சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமா?" என்று பொருள்படும்படிப் பாடுகிறார் .

இதனை கேட்ட பாண்டிய மன்னனின் அவைப் புலவர் புகழேந்தி நம் பாண்டிய நாட்டைத் தரம் குறைத்து வேறு நாட்டுப் புலவன் பாடுவதா என உணர்ச்சிமேலிட அதற்கு எதிர்ப்பாட்டாக ஒரு பாடல் பாடுகிறார்.

ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்த தம்மானே
ஒப்பரிய திருவிளையாட் டுறந்ததையிலோ அம்மானே
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவைபபரந் ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே

என்று பாடினார்.

பிரித்துப் படிக்க:
ஒருமுனிவன் நேரி யிலோ உரை தெளித்தது அம்மானே
ஒப்பரிய திருவிளையாட்டு உறந்ததையிலோ அம்மானே
திருநெடுமால் அவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப் பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவை பரந்ததும் சோழன் பதம் தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வது அரிதே அம்மானே
(கடி : பேய் தாதகி: ஆலம் ; கண்ணி : கொழுந்து )

அதாவது,
"அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையிலா? அல்லது சோழ நாட்டிலுள்ள நேரி மலையிலா?
சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நடந்தது உறந்தையிலா அன்றி கொற்கையிலா?
மஹாவிஷ்ணு மீனாகத்தான் அவதாரம் எடுத்தாரேயன்றிப் புலியாக அல்லவே?
சிவபெருமானின் ஜடாமுடியில் சந்திரனைச் சூடினாரேயன்றிச் சூரியனை இல்லையே ?
புலவர்கள் இயற்றிய நூல்களின் பெருமையை சங்கப்பலகை நீரை எதிர்த்துக் கரைசேர்ந்து உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்ச்சி *(கரை எதிரல்)* வையை ஆற்றில்தான் நடந்தததே அன்றிக் காவிரி ஆற்றிலா?
பேய் பிடித்தவர்களைக் காப்பாற்ற, பேயை விரட்டப் பயன்படுவது வேப்பமரத்தின் இலைதானேயன்றி ஆலிலையா? ஒரு முறை கடல் (பரவை) பாண்டிய மன்னரைப் பணிந்ததாம்,
அது சோழ மன்னரைப் பணியவில்லையே. பாண்டிய மன்னர்கலின் பராக்கிரமம் சொல்லற்கரிது" என்பதாகும்

(கரை எதிரல்)

கரை எதிரல் என்பது சங்க காலத்துப் புலவர்களுக்குப் போட்டி நடக்கும். அதில் அவர்கள் தத்தம் கவிதைகளை எழுதி வைகயாற்றில் எல்லோரும் ஓரிடத்தில் குழுமி அந்தக் கவிதைகளை அலைகளில் போடுவார்களாம். அந்த அலையை எதிர்த்து மேலெழுந்து மீண்டுவரும் ஓலைகளே சிறந்த கவிதைகள் கொண்டவையாக அக்கவிதைகளே சிறந்த கவிதை என்று ஏற்றுக்கொள்வார்களாம். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும் கவிதைகளெல்லாம் சிறப்பானவை அல்ல என்று கூறி அலைகளில் மீண்டு வந்த புலவர்களின் கவிதைக்குப் பரிசு கொடுத்து அவர்களைச் சிறப்பிப்பார்களாம். இது கரை ஏறல் அல்லது கரை எதிரல் என்றுஅழைப்பர். இது ஒரு திருவிழா போலவே அக்காலஙளில் கொண்டாடப்படுமாம் புலவர்களின் கவித்திறமையைச் சோதிக்க. அதைத்தான் புலவர் புகழேந்தி இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்

இப்படி எதிர்ப்பாட்டுப்பாடி புகழேந்திப் புலவரும் விட்டுக்கொடுக்காமல் தன்நாட்டு பராக்கிரமத்தைப் பாட அதன்பிறகு குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் முடிந்தது. புகழேந்திப் புலவரைத் தன் மகளுக்குச் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன்.

தன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுரைத்த புகழேந்திப் புலவர் மீது கோபம் கொண்டு அவரை எதிரியாகவே நினைத்துக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தர் அவரை சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.

தன்னாட்டுப் புலவரை சிறையிலடைத்தமை கேட்டு மகாராணி மன்னனிடத்தில் கோபம் கொள்கிறாள். ஒட்டக்கூத்தருக்கு இவ்வளவு அதிகாரமா? அவரை எதிர்த்து ஏன் பேசவில்லை என மன்னன் மீது கோபம் கொண்டு குலோத்துங்கன் அந்தப்புரத்திற்கு வரும்போது தன் அறையின் கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள். அவளைச் சமாதானம் செய்ய புலவர் ஒட்டக்கூத்தனை மன்னன் அனுப்ப அவர் கதவுக்கு அப்புறம் நின்று கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதைக் கேட்ட ராணி இன்னும் கோபமடைந்து இரண்டாவது தாழ்ப்பாளைப் போட்டு விடுகிறார்.

அதனால் தான் "ஒட்டக் கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்"என்ற ஒரு வாசகம் பிரசித்தி பெற்றது.

அந்தப் பாடல் என்ன வென்று பிறகு பார்ப்போம்.


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by kalainilaa on Tue 19 Jul 2011 - 21:40

வரலாற்று செய்திகளை ,அரியா நிலையில் இருந்த எங்களுக்கு ,
அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by rinos on Tue 19 Jul 2011 - 22:23

யாதுமானவள் அக்காதானே இந்த பதிவை தந்தார்கள் சாருக்கு தப்பு நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

நன்றி அக்கா பகிர்வுக்கு
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by யாதுமானவள் on Tue 19 Jul 2011 - 22:49

kalainilaa wrote:வரலாற்று செய்திகளை ,அரியா நிலையில் இருந்த எங்களுக்கு ,
அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .

நன்றி தோழரே!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by யாதுமானவள் on Tue 19 Jul 2011 - 22:56

rinos wrote:யாதுமானவள் அக்காதானே இந்த பதிவை தந்தார்கள் சாருக்கு தப்பு நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

நன்றி அக்கா பகிர்வுக்கு

சரி மன்னிச்சுடுங்க ரிநோஸ்.

நன்றி !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by rinos on Tue 19 Jul 2011 - 22:57

யாதுமானவள் wrote:
rinos wrote:யாதுமானவள் அக்காதானே இந்த பதிவை தந்தார்கள் சாருக்கு தப்பு நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

நன்றி அக்கா பகிர்வுக்கு

சரி மன்னிச்சுடுங்க ரிநோஸ்.

நன்றி !
இதில் தவறு எனக்கா கலை நிலா சாருக்கு அக்கா எதுக்கு மன்னிப்பு?
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by யாதுமானவள் on Wed 20 Jul 2011 - 13:42

rinos wrote:
யாதுமானவள் wrote:
rinos wrote:யாதுமானவள் அக்காதானே இந்த பதிவை தந்தார்கள் சாருக்கு தப்பு நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

நன்றி அக்கா பகிர்வுக்கு

சரி மன்னிச்சுடுங்க ரிநோஸ்.

நன்றி !
இதில் தவறு எனக்கா கலை நிலா சாருக்கு அக்கா எதுக்கு மன்னிப்பு?

கலை நிலா அவர்களைத்தான் மன்னிச்சுடுங்க ரிநோஸ் என்று சொன்னேன். ... (என்னை பொண்ணா consider பண்ணுங்கப்பா....)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by நண்பன் on Wed 20 Jul 2011 - 14:37

யாதுமானவள் wrote:
rinos wrote:
யாதுமானவள் wrote:
rinos wrote:யாதுமானவள் அக்காதானே இந்த பதிவை தந்தார்கள் சாருக்கு தப்பு நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

நன்றி அக்கா பகிர்வுக்கு

சரி மன்னிச்சுடுங்க ரிநோஸ்.

நன்றி !
இதில் தவறு எனக்கா கலை நிலா சாருக்கு அக்கா எதுக்கு மன்னிப்பு?

கலை நிலா அவர்களைத்தான் மன்னிச்சுடுங்க ரிநோஸ் என்று சொன்னேன். ... (என்னை பொண்ணா consider பண்ணுங்கப்பா....)

இவ்வளவு நடந்திருக்கா சாரிக்கா ஒரு சின்ன மிஸ்டேக் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அக்கா
நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by Atchaya on Wed 20 Jul 2011 - 18:38

என் அன்பு வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஓட்டகூதர் பற்றிய பதிவை தந்துள்ளதை , அடியேன் பார்க்காததினால், ஒட்டகூத்தர் பற்றிய பதிவை பதிந்துள்ளேன்....
:”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by யாதுமானவள் on Wed 20 Jul 2011 - 19:28

ரவி, நீங்க என்ன சொல்லி இருக்கீங்கன்னு புரியலையே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒட்டக்கூத்தர் - புலமையைப் பருகுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum