Latest topics
» பல்சுவைby rammalar Today at 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Today at 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Today at 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Today at 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Today at 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
3 posters
Page 1 of 1
உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
உடலைக் கெடுக்கும் பழக்கங்களும் உள்ளத்தைக் கெடுக்கும் பழக்கங்களும் தவிர்த்து நான் நலமுடன் வாழ விரும்புகிறேன். இதற்கான அடிப்படைகள் என்ன?
"ரெக்கிட் பென்சிக்சர்' எனும் நிறுவனம் சமீபத்தில் குடும்ப சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கின்றனரா? என சர்வதேச அளவில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. அதில் சுகாதாரமுறைகளைப் பின்பற்றாத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சவுதி அரேபியாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளதாகத் தெரிவிக்கிறது. கழிவறை, சமையலறை மற்றும் பிரிஜ், சமையல் பாத்திரங்கள், கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ் ஆகிய இடங்களிலும் பொருட்களிலும் பாக்டீரியாக்களும், ஒட்டடைகளும் படிந்து மிக மோசமாக உள்ளன.
குறிப்பாக கழிவறைகளை முறையாகப் பராமரிப்பதில்லை. நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்து வருவதால் குடியிருப்புகளில் காற்றோட்டமில்லாத வீடுகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்தால் ஆரோக்கியத்திற்கான அடித்தளம் அமைத்துக் கொள்ளலாம்.
கெளதம தர்ம ஸýத்திரம்: தனிமனிதனுக்கான ஆரோக்கிய வழிகளைக் குறிப்பிடுகிறது. தினம்தோறும் ஸ்நானம் செய். எப்போதுமே சுத்தமாயிரு. சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களைத் தரித்துக் கொள். அசுத்தமே எல்லா நோய்களுக்கும் வாசல். அதனால் அசுத்தத்தை அணுக விடாதே. சக்தியிருப்பின், கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளை என்றும் அணியாதே.
சிகப்பு நிறமுள்ள ஆடை, மிகவும் அதிக விலையுள்ள உடை, பிறருடைய பொறாமையைத் தூண்டக்கூடிய ஆடம்பரமான உடை, பிறர் உபயோகித்த உடை, பூ, மாலை, செருப்பு முதலியவற்றைத் தரித்துக் கொள்ளாதே.
சிவப்பு நிறமுள்ள உடை ஆணின் சரீரத்தில் வெப்பத்தையும் வேட்கையையும் அதிகரிக்கச் செய்யும். மற்றவர் உடுத்திய உடை, பூமாலை, செருப்பு, உணவுப் பாத்திரம் முதலியவை நோய்களை ஒட்டுவாரொட்டியாகப் பரப்பும்.
அவசியமின்றி தாடி, மீசைகளை வளர்க்காதே, உணவுப் பாதை, மூச்சுக் குழாய் பாதை இரண்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள இவை இடையூறு.
நின்று கொண்டும், நடந்து கொண்டும் சாப்பிடுவது, சிரித்துக் கொண்டே பேசுவது, கடந்ததைப் பற்றி வருந்துவது, தன்னால் நிறைவேற்றப்பட்டதொன்றைக் குறிப்பிட்டு மார் தட்டுவது, நண்பர்கள், ஆசிரிய மாணவர்கள், தம்பதியர் ஆகியோர் இடையே மூன்றாமவனாகக் குறுக்கிட்டுக் கலகம் விளைப்பது போன்றவை மூர்க்கத்தனம் என்று போஜ சரித்திரத்தில் மகாகவி காளிதாசர் குறிப்பிடுகிறார். அதனால் நீங்கள் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, கையில் உணவுத் தட்டை ஏந்திக் கொண்டோ உணவருந்தாதீர்கள்.
ஓரிடத்தில் அமர்ந்து மற்ற உடல் அங்கங்களுக்கு ஓய்வு கொடுத்து உண்பதால் உணவை ஏற்கும் உறுப்புகளில் அதிகமாகப் பிராண சக்தி செயல்படும். உணவு நன்கு சுவைக்கப்பட்டு, ஜீரணத் திரவங்களால் பக்குவமாகி, சத்துப் பகுதி ஒழுங்காகப் பிரிக்கப்பட்டு, உணவை ஏந்திச் செல்லும் குழாய்களின் வழியே கொண்டு சேர்க்கும் பணியும் நிறைவாக இருக்கும். இத்தனைக்கும் ஆதாரம் ஓரிடத்தில் உட்கார்ந்து உண்பதே. பேசும்போது சிரித்தால், தான் சொல்ல வந்த கருத்தை மற்றவருக்குப் புரிய வைக்க முடியாது. மறுபடியும் பேசினால் சுவை இருக்காது. அதனால் இந்தச் செயலை நாம் தவிர்க்க வேண்டும். முன் நேர்ந்த தவறைத் திருத்திக் கொள்ள பகுத்தறிவு பயன்படுமானால் அவ்விதம் வருந்துவது சரியே. அப்படியில்லாமல் கடந்ததை நினைத்து வருந்த வேண்டாம்.
நீங்கள் செய்த செயலால் பெரும் வெற்றி பெற்றிருந்தால் அதனால் இறுமாப்புக் கொள்ளாதீர்கள். அது அகம்பாவத்தைத் தரும். வீழ்ச்சிக்கு அதுவே வழி ஏற்படுத்திவிடும்.
மனமொத்த இருவரிடையே புகுந்து கலகம் விளைப்பது பொறாமையினால் ஏற்படுகிறது. அதனால் உள்ளொன்றும் புறமொன்றும் பேசத் தூண்டும் வஞ்சக எண்ணமே நம்மை அழித்துவிடும் என்கிறார் மகாகவி காளிதாசர். இவற்றைத் தவிர்த்தால் உடல், மன ஆரோக்கியத்திற்கு உதவும். நாம் நலமுடன் வாழ இவையே அடிப்படையாகும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
##* நன்றி ஹம்னா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» உடல் வெப்பத்தை தணிக்கும் எலுமிச்சை
» உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்!!!
» உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!
» ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்!!!
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்..
» உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்!!!
» உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!
» ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்!!!
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum