சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Khan11

தினம் ஒரு (இன்றைய) குறள்

+22
முனாஸ் சுலைமான்
lafeer
jasmin
Atchaya
sadir
பர்வின்
ஜிப்ரியா
ராசாத்தி
ஷஹி
rammalar
றிமா
விஜய்
SENAIULA81
Ameer
இன்பத் அஹ்மத்
மீனு
நிலா
T.KUNALAN
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
நண்பன்
*சம்ஸ்
26 posters

Page 15 of 20 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20  Next

Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Fri 12 Nov 2010 - 1:26

First topic message reminder :

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Dddd_c10

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
( குறள் எண் : 940 )

மு.வ : பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
சாலமன் பாப்பையா : துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.

Last edited by *ரசிகன் on Sat 9 Apr 2011 - 4:46; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by Atchaya Sat 3 Sep 2011 - 6:27

உண்மை...அறிஞ்சன் அன்றே சொன்னது இன்றளவும் உண்மை..
தொடருங்கள் உங்களின் அழகு பணியை... :!+: :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 11:12

இவைகளைக் கற்று வருவதால் தானோ எமது உள்ளமும் பக்குவமடைகிறது

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 11:46

நன்றி ஐயா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Sun 4 Sep 2011 - 6:23

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?
( குறள் எண் : 1225 )
மு.வ : யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
சாலமன் பாப்பையா : காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Mon 5 Sep 2011 - 6:20

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
( குறள் எண் : 1173 )
மு.வ : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
சாலமன் பாப்பையா : அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Tue 6 Sep 2011 - 6:24

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
( குறள் எண் : 1052 )
மு.வ : இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா : நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 6:23

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
( குறள் எண் : 402 )
மு.வ : (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா : படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 6:26

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
( குறள் எண் : 1302 )
மு.வ : உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா : உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Fri 9 Sep 2011 - 10:15

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
( குறள் எண் : 560 )
மு.வ : நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
சாலமன் பாப்பையா : காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 6:23

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
( குறள் எண் : 1036 )
மு.வ : உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
சாலமன் பாப்பையா : உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by Atchaya Sat 10 Sep 2011 - 6:24

://:-: :”@: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 6:14

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
( குறள் எண் : 190 )
மு.வ : அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?
சாலமன் பாப்பையா : புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Mon 12 Sep 2011 - 6:15

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
( குறள் எண் : 414 )
மு.வ : நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
சாலமன் பாப்பையா : கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 6:19

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
( குறள் எண் : 1189 )
மு.வ : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையா : இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Wed 14 Sep 2011 - 6:29

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
( குறள் எண் : 215 )
மு.வ : ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா : உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 6:23

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
( குறள் எண் : 952 )

மு.வ : உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 2:11

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

( குறள் எண் : 614 )

மு.வ : முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

சாலமன் பாப்பையா : முயற்சி
இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி,
களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 6:25

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

( குறள் எண் : 295 )

மு.வ : ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

சாலமன் பாப்பையா : உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Mon 17 Oct 2011 - 6:37

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
- (குறள் : 662)
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 8:49

மீண்டும் தொடந்தமைக்கு நன்றி தல தொடருங்கள் :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Tue 18 Oct 2011 - 6:21

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
- (குறள் : 225)
தவ வலிமையுடையவரின் ஆற்றல் பசியைப் பொறுத்துக் கொள்ளல்; ஆயின் அதுவும் அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஆற்றலை விடத் தாழ்ந்ததே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Tue 18 Oct 2011 - 21:24

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

- (குறள் : 341)
ஒருவன் எந்த எந்தப் பொருளிலிருந்து பற்று விடுபட்டவன் ஆகின்றானோ, அவன் அந்த அந்தப் பொருளால் துன்பம் அடைவதில்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by lafeer Wed 19 Oct 2011 - 6:19

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 517195 தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 517195 தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Wed 19 Oct 2011 - 6:25

lafeer2020 wrote:தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 517195 தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 517195 தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 517195
நன்றி லாபீர் :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by *சம்ஸ் Wed 19 Oct 2011 - 13:29

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
- (குறள் : 730)
அவைக்களத்திற்கு அஞ்சி தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர் உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு (இன்றைய) குறள் - Page 15 Empty Re: தினம் ஒரு (இன்றைய) குறள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 15 of 20 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum