Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
+4
இன்பத் அஹ்மத்
ஹம்னா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
First topic message reminder :
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதை நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாகப்பட்டதும் ஆஷுரா நோன்பை (கடமையாகக் கருதி) நோற்பது விடப்பட்டது.
"தம் வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தாலே தவிர, இப்னு உமர்(ரலி) ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்!" என்று நாஃபிவு(ரஹ்) கூறினார்.
Volume :2 Book :30

Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் தினத்திலும், ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
Volume :2 Book :30
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று கூறினார். அந்த மனிதர் “(அவர்) திஙகட்கிழமையன்று -(நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)” என்று கூறியதாக நான் நினைக்கிறேன்- அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் “நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!” என்று கூறினார்கள்.
Volume :2 Book :30
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: “ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!”
Volume :2 Book :30
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தஙகக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்!” என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.
Volume :2 Book :30
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது: குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!
Volume :2 Book :30
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"தமத்துஉ' எனும் முறையில் இஹ்ராம் அணிந்தவரே அரஃபா நாள் வரை நோன்பு நோற்கலாம்! பலியிடும் பிராணியும் கிடைக்கவில்லை. நோன்பும் நோற்கவில்லையென்றால் மினாவில் தங்கும் நாள்களில் நோன்பு நோற்கலாம்!"
ஆயிஷா(ரலி) அவர்களும் இவ்வாறு கூறினார்கள் என உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!"
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30
"ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!"
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர்!"

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆபீ {ரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர்.

ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.
முஆவியா(ரலி) ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு ஆஷூரா நாளில் மிம்பரில் நின்றுகொண்டு, 'மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி(ஸல்) அவர்கள், இது ஆஷூரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர்விட்டு விடட்டும்' என்று கூறினார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்" என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
ஆஷூரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!" என்றார்கள்.
Volume :2 Book :30
ஆஷூரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!" என்றார்கள்.
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!"
Volume :2 Book :30
"ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!"
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷூரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்!
Volume :2 Book :30
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷூரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்!
Volume :2 Book :30
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
ஹதீஸ் தொகுப்புக்கு நன்றி நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
நன்றி காலத்திற்கேற்ற தகவல்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
சிறந்த தொடர் ஹதீஸ் தொகுப்புக்கு பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்
நன்றி சாதிக் சிறந்க ஹதீஸ் தொகுப்பிற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தஜ்ஜால் பற்றிய சில ஹதீஸ்கள் -1
» தஜ்ஜால் பற்றிய சில ஹதீஸ்கள்-2
» இஃதிகாஃப் பற்றிய ஹதீஸ்கள்
» அச்சநிலைத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள்
» உளூச் செய்வது - பற்றிய ஹதீஸ்கள் (ஸஹீஹ புகாரியிலிருந்து)
» தஜ்ஜால் பற்றிய சில ஹதீஸ்கள்-2
» இஃதிகாஃப் பற்றிய ஹதீஸ்கள்
» அச்சநிலைத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள்
» உளூச் செய்வது - பற்றிய ஹதீஸ்கள் (ஸஹீஹ புகாரியிலிருந்து)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum