சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Khan11

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

+4
இன்பத் அஹ்மத்
ஹம்னா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Jul 2011 - 14:05

First topic message reminder :

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதை நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாகப்பட்டதும் ஆஷுரா நோன்பை (கடமையாகக் கருதி) நோற்பது விடப்பட்டது.
"தம் வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தாலே தவிர, இப்னு உமர்(ரலி) ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்!" என்று நாஃபிவு(ரஹ்) கூறினார்.
Volume :2 Book :30
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 10:58

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால்விட்டுவிடு" என்றார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 10:58

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!"
"கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்!" என்று அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 10:59

அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
"நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் இப்னு ரவாஹா(ரலி)அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!"
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 10:59

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!" என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 10:59

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 10:59

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது!
"நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர்விட்டு விடவும் செய்யலாம்!"

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:00

நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.
"ரமளான் (நோன்பைவிட்டதற்குப்) பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்!" என்ற வசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதிவிட்டு, இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது!" என்று கூறினார்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:00

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:00

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்."
இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:00

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்."
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:00

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது" என்றார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரி மரணித்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் இறந்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், 'என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:00

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!"
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், 'இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!" என்றார். நபி(ஸல்) அவர்கள். 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!" என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கவர் 'பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?' என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, 'இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!" என்றார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம். 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர், 'பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், 'நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!" என்று தம் விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!"
இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கவர், 'மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!" என்றார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.
"அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா?' என்று ஹிஷாம்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'களா செய்வது அவசியமில்லாமல் போகுமா?' என்று கேட்டார். ('களா செய்வது அவசியமாகும்!' என்பது இதன் பொருள்.)
"அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது!" என்று ஹிஷாம்(ரஹ்) கூறினார்கள் என மஃமர் கூறுகிறார்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:01

அனஸ்(ரலி) அறிவித்தார்.
"நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), அவர்கள் 'நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்" என்றோ 'உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்" என்றோ கூறினார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:02

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்" என்றார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:02

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்க நாடினால் தொடர் நோன்பு நோற்க நாடினால் ஸஹ்ர் வரை அவ்வாறு செய்யட்டும்" என்று கூறினார்கள். நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே!' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (ஆன்மீக ரீதியாக) உணவளிக்கவும் பருகத்தரவும் ஒருவன் இருக்கிறான். இந்நிலையில் நான் இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்" என்றார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:02

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் மக்களின் மீது இரக்கப்பட்டு என்ற வாசகம் இடம் பெறவில்லை.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:02

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்" என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 11:02

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'என் இறைவன் எனக்கு உண்ணருவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று விடையளித்தார்கள்.
Volume :2 Book :30

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நோன்பு பற்றிய ஹதீஸ்கள்  - Page 3 Empty Re: நோன்பு பற்றிய ஹதீஸ்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum