சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். Khan11

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்.

Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். Empty 2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 21:39

* இஸ்ரேல் நாட்டின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட நாட்டின் அதிநவீன ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக்கோளை முதன்முறையாக ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதிய சாதனை படைத்துள்ளது. ரேடார்கள் பொருத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் நாட்டின் கண்ணாக செயல்படும். எதிரிகளின் ஊடுரு வலைத் தடுக்கவும், தீவிரவாதிகளுக்கு எதி ரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப்படையினருக்கு இது பேருதவி யாக இருக்கும்.

* அண்டார்டிகா பகுதியில் புதிய ஆராய்ச்சி மையம் அமைக்க இந்தியா திட்டமிட் டுள்ளது. இந்த மையம் வரும் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. உலகின் மிக அதிகமான குளிர் பிரதேசமான அண் டார்டிகாவில் ஒன்பது நாடுகள்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங் கள் அமைத்துள்ளன. இப்பெருமையை விரைவில் இந்தியா மீண்டும் பெறவுள்ளது. தற்போது இந்தியா சார்பில் மற்றொரு மையம் புதிதாக நிறுவப்படவுள்ளது. இதற்கு “பாரதி’’ என பெயரிடப்பட்டுள்ளது

* இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், அதோடு தேசிய நீர்வாழ் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட் டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலை மையில் டெல்லியில் நடந்த கங்கை நதி ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

* கடல்பரப்பில் நடமாடும் சந்தேகத்துக் குரிய கப்பல்களையும், படகுகளையும் அடையாளம் காண உதவும் டிரான்ஸ் பான்டர் கருவியை இஸ்ரோ தயாரித் துள்ளது. இஸ்ரோ தயாரித்துள்ள இந்தக் கருவிக்கு தானியங்கி அடையாளம் காணும் கருவி (Automatic Identification System) என்று பெயர். இது கனடா நாட்டு உதவி யுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் வரும் கப்பல் எந்த அளவில், எந்த வடிவில் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைத் துல்லியமாக அறிய இது உதவும்.

* உலகிலேயே அதிகமாக யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் 2-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் இந்தியா விரைவில் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது. இந்தியாவின் குடியரசு தினவிழா வில் கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸரபயேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி உடன்பாடு கையெழுத்தானது.


* ஒலியைவிட வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவுகணை “பிளாக்-2′ ரகத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. ராஜஸ் தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பாலை வனப்பகுதியில் இச்சோதனை வெற்றிகரமாக நடந்தது. 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டது. அடுத்த இரண்டரை நிமிடங்களுக்குள் அது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.

* இந்தியா ரஷ்யாவிடமிருந்து அகுலா-11 என்ற புதிய தலைமுறை முதலாவது அணு நீர்மூழ்கிக் கப்பலை பெற்றது. இந்த அணு நீர்மூழ்கிக் கப்பலால் இந்தியக் கடற் படையின் கடலுக்கடியில் இருந்து தாக்கும் திறன் பல மடங்கு அதிகரிக்கும். கடந்த 25 ஆண்டு களாக அணு நீர்மூழ்கிக் கப்பல் ஏதும் இல்லாமல் இந்தியக் கடற்படை செயல் பட்டு வருகிறது.

* அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று குறிப்பிட்ட இலக்கினை தாக்கவல்ல அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா கடல்பகுதியில் இருந்து, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை யின் தாக்குதல் இலக்கிற்கான தொலைவு 3 ஆயிரம் கி.மீ. என்று பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

* அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு மையம் உலகம் முழுவதும் 900 நதிகளை ஆய்வு செய் தது. அதில் இந்தியாவின் கங்கை நதி உட்பட 45 நதிகளின் தண்ணீர் அளவு குறைந்து வருவதாகவும், இந்த நதிகளில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீர் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் புவி வெப்பமடைவது தொடரும் நிலையில் கங்கை நதி உட்பட 45 நதிகளின் நீரின் அளவு மேலும் குறைந்து 50 ஆண்டு களில் இந்த நதிகளே இல்லாமல் போய்விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* நாட்டில் உள்ள முக்கியமான வேலை வாய்ப்பு அலுவலகங்கள் கணினிமய மாக்கப்படும் பணிகள் விரைவில் நிறை வடைய உள்ளன. இதனால் முக்கிய வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஒன்றாக இணைக் கப்பட்டு அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல் களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்படும்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். Empty Re: 2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 21:43

* அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கி லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் சேர்ந்து உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா தயாரித்து உள்ளது.

* மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையின் பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப்பாலம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கம்பிகள் இணைப்புடன் கூடிய கடல் மேல் அமைந்த இந்தியாவின் முதல் நீளமான பாலம் இதுவாகும்.

* உலகளவில் பழமையான பண்பாடு, கலா சாரங்களை கொண்ட மொழிகள், விளை யாட்டு, பண்டிகை, விழாக்கள், கலைகள் ஆகியவற்றை கண்டறிந்து யுனெஸ்கோ தனது பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது. இதில் மைசூரில் நடைபெறும் தசரா விழா, சிரவணபெலகொலா மஹாமஸ்தாபிஷே கம், நாட்டுபுறபாடல் மற்றும் கோலாட் டம் ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது

* 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. உடல் ஊனமுற்றோருக்கு 18 வயது வரை இலவசக் கல்வியை இந்த மசோதா உறுதி செய்கிறது.

* ஆசியாவில் முதல்முறையாக, இந்தியாவில் ஒரு பெண் ரயில் இன்ஜின் டிரைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆசியாவின் முதல் மோட்டார் பெண் என்று பெயர் பெற்றவர். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா வில் பிறந்த சுரேகா ஜாதவ் என்ற பெண்தான் இந்த பெருமைக்குரியவராவார்.

* நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல் லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத் தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம்


* தூர்தர்ஷன் தனது பொன்விழா ஆண்டில் தடம் பதித்துள்ளது. தூர்தர்ஷன் கடந்த 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தில்லியில் 25 கிலோமீட்டர் சுற்றள வுக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங் கியது.

* ஐக்கிய நாடுகளுக்கான உலக சுற்றுலா அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு மீண்டும் தேர்வாகி உள்ளது இந்தியா. இந்த பதவியின் காலம் நான்கு ஆண்டுகள். கடந்த 19 ஆண்டுகளாக இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் இந்தியா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது

* இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரயான்-1 என்ற செயற்கை கோளை, சந்திரனுக்கு அனுப்பியது.அந்த செயற்கைகோளில் அமெரிக்காவின் விண் வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) தயாரித்த “”எம்-3” என்ற சக்திவாய்ந்த கருவி இணைக் கப்பட்டு இருந்தது. இந்த கருவி சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஏராளமான போட்டோ படங்களை எடுத்து அனுப் பியது. இவற்றை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆராய்ச்சி யில், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.

* கடல் வளம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் “ஓஷன் சாட்-2′ என்ற செயற்கைகோளை உருவாக்கினார்கள். இந்த செயற்கைகோளுடன் ஐரோப்பிய நாட்டு பல்கலைக்கழகங்களின் 6 சிறிய செயற்கைகோள்களும் “பி.எஸ்.எல்.வி-சி-14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.

* நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச் சுறுத்தலை தடுப்பதற்கும், சட்ட விரோத மாக குடியேறுபவர்களை தடுக்கவும் அனை வருக்கும் அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இதற்கான அறிவிப் பையும் வெளியிட்டது.
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு

முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.






2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். Empty Re: 2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 21:51

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.


மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.




2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். Empty Re: 2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 22:02

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.


தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.

நீதிக்கட்சி-காங்கிரஸ் – தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.




2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம். Empty Re: 2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum