Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
2 posters
Page 1 of 1
காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
புதுடெல்லி, ஆக.6-
டெல்லியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டால், அப்போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் பற்றி விசாரித்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி ஷீலா தீட்சித் பற்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும். அவர் விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக, சுரேஷ் கல்மாடி மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இனிமேல், ஷீலா தீட்சித் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பங்கு பற்றியும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டதே தவறானது. அவர் நியமிக்கப்பட்டது எப்படி என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். காமன்வெல்த் போட்டி ஊழலில், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், மந்திரிகள் குழு ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால், பா.ஜனதாவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:-
எடியூரப்பா மீதான லோக் ஆயுக்தா அறிக்கையையும், ஷீலா தீட்சித் மீதான தணிக்கை அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று கேட்பதற்கு எந்த அறிக்கையும் தேவையில்லை. கர்நாடக சுரங்க தொழிலில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதை வேறு அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது நியாயம் அல்ல. எனவே, ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை.
தணிக்கை அறிக்கை தற்போது பாராளுமன்றத்தின் முன்பு இருக்கிறது. அறிக்கையை பாராளுமன்றம் பரிசீலிக்கட்டும். என்ன நடவடிக்கை எடுப்பது என்று பாராளுமன்றம் முடிவு செய்யட்டும். அதற்கு நாம் அவகாசம் அளிக்க வேண்டும். அதற்கு முன்பு நாம் விவாதிப்பது சரியல்ல. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
இதற்கிடையே, டெல்லி மாநில முதல்- மந்திரி ஷீலா தீட்சித், தனது மந்திரிசபையை அவசரமாக கூட்டினார். அதில், தணிக்கை அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷீலா தீட்சித், தணிக்கை அறிக்கையை படிக்கும் வரை அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
இது எல்லாம் அரசியலில் சகஜம் .காங்கிரசு செய்தால் தவறே இல்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது
» சுரங்க மோசடி: எதியூரப்பா உடனே பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மேலும் 10 புதிய வழக்கு சி.பி.ஐ. அதிரடி திட்டம்
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
» சுரங்க மோசடி: எதியூரப்பா உடனே பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மேலும் 10 புதிய வழக்கு சி.பி.ஐ. அதிரடி திட்டம்
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum