சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Today at 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! Khan11

வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!

4 posters

Go down

வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! Empty வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!

Post by உதுமான் மைதீன். Sat 1 Jan 2011 - 15:44

'The Social Network' 500 மில்லியன் நண்பர்களை உருவாக்கியவரானாலும்,
தனித்து இருப்பதைத் (loneliness) தவிர்க்க முடியாது என்ற கோணத்தில்
ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி
இருக்கும் சினிமா.
வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! It58_1511_B2ஃபேஸ்புக்
தொடங்கப்பட்ட 2003-ல் இருந்து, ஒரு மில்லியன் பயனீட்டாளர்களை அது அடைவது
வரையிலான நிகழ்வுகளைக் காதல், காமம், கல்லூரி வாழ்க்கை, நட்பு, துரோகம்
என்று கதம்பமாக அள்ளித் தெளிக்கிறார் கதாசிரியர் ஆரன் சோர்கின்.
ஸக்கர்பெர்க்காக நடித்திருக்கும் ஜெசி அய்சன்பெர்க்கின் நடிப்பு பிரமாதம்!
20 வயதான அவனுக்குப் பிரபலமான ஹார்வர்ட்
பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எவருடனும் எளிதில்
நட்புகொள்ள முடியாத ஒருவித தனிமை விரும்பி என்றாலும், தன்னைச் சுற்றி
நடக்கும் நிகழ்வுகளை மிகக் கூர்மையாகக் கவனித்து, அலசும் திறன் உண்டு.
தனிப்பட்ட விதத்தில் நட்பு வட்டம் இல்லை என்றாலும், மனித நட்பு வட்டங்களைப்
புரிந்துகொண்டு அவர்களது சமூக இடர்ப்பாடு அனுபவங்களை இணையத்தில் லகுவாகக்
கொண்டுவர முடிந்ததை விஷுவலாகச் சொல்லியிருக்கும் இடங்கள்
பிரமிக்கவைக்கின்றன. இளைய + இணைய சமுதாயம் பார்க்க வேண்டிய படம்!
ஓ.கே. Digital Convergence பற்றி அலசிக்கொண்டு
இருந்தோம். டி.வி-யையும் இணையத்தையும் இணைக்க, மேற்கொள்ளப்பட்ட/பட்டு
வருகிற முயற்சிகளையும் அவற்றின் தாக்கங்களையும் பார்க்கலாம்.
இணையத்தின் ஆதிக்கம் பரவி வரும் இந்த நாளிலும், டி.வி
என்பதே மிகப் பரவலாக மக்களை அடையும் ஊடகம். கிட்டத்தட்ட 7 பில்லியன்
மக்கள்தொகை கொண்ட இந்த புவிக்கோளத்தில், 4 பில்லியன் பேர்களை டி.வி
சென்றடைவதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். அமெரிக்க டி.வி. பயனீட்டாளர்
மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து மணி நேரம் செலவிடுகிறாராம். ஆனால்,
இணையம் மற்றும் அலைபேசி தொழில்நுட்பங்கள், டி.வி. கொடுக்கும் பொழுதுபோக்கு
மற்றும் தகவல் தொடர்பு பயன்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைத்
தொடர்ந்து ஏற்படுத்திவருவது தெரிந்ததே!
டி.வி-யில் நிகழ்ச்சிகள் வெளியிடும்போதுதான் நீங்கள்
பார்க்க முடியும். இணையத்தில் நீங்கள் எப்போது எதைப் பார்க்க வேண்டும்
என்று விரும்புகிறீர்களோ, அதை அப்போது பார்க்க முடிகிறது. டி.வி. அகலமாக
இருக்கிறது. அதன் விளம்பரங்கள் முழு திரையிலும் தெரிகிறது. கணினியில்
இணையம் மூலமாகப் பார்க்கும் விளம்பரங்கள் திரையில் ஒரு பகுதியை மட்டுமே
ஆக்கிரமிக்க முடியும். இரண்டு ஊடகங்களுக்கும் இடையே உள்ள சில
ஒற்றுமைகளையும் பல எதிர்மறைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! It58_1511_Bஇன்னும்
சில ஆண்டுகளில் நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி, டி.வி-க்காகத்
தயாரிக்கப்பட்டதாகவோ, இணையத்துக்காகத் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். அதை
உங்களது டி.வி-யிலோ, கணினியிலோ ஏன், அலைபேசியிலோ உங்கள் வசதிப்படி பார்க்க
முடியும். இந்தத் தகவல் ஒன்றிணைப்பு கொடுக்கும் வியாபார வாய்ப்புகள் இணைய
ஜாம்பவான் நிறுவனங்களைப் பல்வேறு பரிசோதனைகளைச் செய்ய வைத்தபடி உள்ளன.
டி.வி-க்குள் இணையத்தையும் இணையத்துக்குள் டி.வி-யையும் கொண்டுவரும் சில
முயற்சிகளைப் பார்க்கலாம்!
முதலில் மைக்ரோசாஃப்ட். டி.வி. என்ற சாதனம்
இருக்கையில், இணையத்தில் இணைக்க கணினி என்ற மற்றொரு சாதனம் தேவை இல்லை என்ற
நோக்கத்தில் வெளியிடப்பட்ட மைக்ரோசாஃப்டின் வெப் டி.வி. (http://www.webtv.com/)
அத்தனை பிரபலம் ஆகவில்லை. டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கும்போது இணையம்
செல்ல முடியாது என்ற பெருங்குறையுடன், மோசமான பயனீட்டாளர் அனுபவத்தைக்
கொடுக்கும் வெப் டி.வி-யை மைக்ரோசாஃப்ட் விரைவில் கல்லறைக்கு அனுப்பிவிடும்
என்றே தோன்றுகிறது.
அடுத்து ஆப்பிள். இந்த நிறுவனத்தின் ஆப்பிள் டி.வி. (http://www.apple.com/appletv/)
சாதனம் இணையத்தையும் டி.வி-யையும் நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சிகளில்
முக்கியமானது. இதன் அடிப்படை சிம்பிள். சீட்டுக்கட்டு சைஸில் இருக்கும்
சாதனத்தை உங்கள் டி.வி-யில் இணைத்து, உங்கள் வீட்டு இணைய வயர்லெஸ்
நெட்வொர்க்கில் இணைத்துவிட்டால் போதும். உங்கள் கணினியில் பார்க்க முடிகிற
தகவல்களை வயர்லெஸ் சாதனத்துக்குப் பாய்ச்சி (streaming) அதை டி.வி-யில்
பார்த்துக்கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் போன்ற சாதனங்களில் இருந்தும் தகவல்
பாய்ச்சல் நடத்தலாம் என்பது இன்னொரு ப்ளஸ். தகவல்களைக் கொண்டுவரும்
இணைப்புக்கு இணையத்தைப் பயன்படுத்தும் இந்தத் தொழில்நுட்பம் ஆப்பிள்
ரசிகர்களால் வேகமாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், சராசரிப்
பயனீட்டாளர்களுக்கு இதைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருக்கும். காரணம்,
ஆப்பிளின் சர்வாதிகாரக் கொள்கை. அவர்களது மென்பொருளான ஐட்யூன்ஸ் மூலமாக
மட்டுமே இந்தத் தகவல் பாய்ச்சலை நடத்த முடியும்.
கடைசியாக, பெரியண்ணா கூகுள் என்ன செய்கிறார்? கூகுளின் டி.வி. (http://www.google.com/tv/)
முயற்சி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாகவும் பயனீட்டாளர் அனுபவத்தை
மேன்மைப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது. அடுத்த வருடத் தொடக்கத்தில்
வெளியிடப்படலாம் என்று நம்பப்படுகிற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
டி.வி இணைப்பு, இணைய இணைப்பு இரண்டுமே தேவை. உதாரணத்துக்கு 'பங்குச் சந்தை'
என்று தேடினால், இப்போது டி.வி. நெட்வொர்க்குகளில் வெளியாகிக்கொண்டு
இருக்கும் பங்குச் சந்தை செய்திகளும், பங்குச் சந்தை பற்றிய வலைதளச்
செய்திகளும் ஒன்றாக வெளியிடப்பட, உங்களுக்கு எது தேவையோ அதைப்
பார்த்து/படித்துக்கொள்ளலாம். டி.வி. பார்க்கும் அனுபவத்துக்கும், இணையத்தை
நுகரும் அனுபவத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை கூகுள்
நிரப்பிவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. பார்க்கலாம்.
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! Empty Re: வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!

Post by மீனு Sat 1 Jan 2011 - 17:40

அப்படியே நானும் ஒரு வேலையை தேடிக்கிறேன் நன்றி தகவலுக்கு!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! Empty Re: வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!

Post by ஹனி Sat 1 Jan 2011 - 19:08

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! Empty Re: வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!

Post by *சம்ஸ் Sat 1 Jan 2011 - 20:05

நன்றி பகிர்விற்க்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வருங்காலத் தொழில்நுட்பம்  - டி.வி.+ இணையம்! Empty Re: வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum