சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Khan11

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம்

2 posters

Go down

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Empty குழந்தை பிறப்பு ஆயுர்வேதம்

Post by mufees Fri 12 Aug 2011 - 15:14

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Kulanthai%20perapu
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Empty Re: குழந்தை பிறப்பு ஆயுர்வேதம்

Post by mufees Fri 12 Aug 2011 - 15:14

திருமணம் என்ற புதிய உறவுக்கு முழுமையான அர்த்தம் தருவதே குழந்தைதானே!

கண்களுக்கே புலப்படாத ஒரு சின்ன செல்லில் இருந்து ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட மூன்று கிலோ எடையுள்ள ஒரு குழந்தை உருவாவது எவ்வளவு பிரமிப்பான விஷயம்! இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்பவர்கள், குழந்தை பிறப்பைச் சில வருடங்களுக்குத் தள்ளிப் போடுகிறார்கள். அவர்களது கோணத்தில் பார்த்தால் அதில் தப்பில்லை. மேற்படிப்பு, பிரமோஷன், சொந்த வீடு என ஏகப்பட்ட கனவுகள் அவர்களை இப்படி முடிவெடுக்க வைக்கின்றன.

ஆனால், இதில் ஒரு மோசமான விளைவும் உண்டு! இப்படிக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுகிறவர்களிடம் உளவியல் நிபுணர்கள் ஓர் ஆய்வு நடத்தி உள்ளார்கள். இப்போ வேண்டாம் என்று அவர்களுக்குள் உருவாகும் நினைப்பு, ஆழ்மனதில் அப்படியே தங்கி, இந்த எதிர்மறையான உணர்வால் ஒரு சிலருக்குப் பின்னர் குழந்தை உருவாகாமலே போய்விடுகிறதாம்!

அப்படியானவர்களுக்குக் குழந்தை உருவானாலும் அதன் எதிர்காலம் கவலைக்குரியதாக ஆகிவிடுகிறது. நான் வேண்டாத விருந்தாளி என்ற நினைப்போடு அந்தக் குழந்தை இந்த உலகில் அடியெடுத்து வைக்கிறது. காலம் முழுக்க அந்த நினைப்பு அதன் அடிமனதில் இருந்து சித்ரவதை செய்கிறது என்கிறார்கள் ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள்!


கர்ப்பிணிகளைப் பராமரிப்பது என்பது நவீன மருத்துவத்தில் சற்றுத் தாமதமாகத்தான், அதாவது, கர்ப்பம் உறுதியான மூன்றாவது மாதத்துக்குப் பிறகுதான் தொடங்குகிறது. ஆனால், ஒரு பெண் பூப்படையும் போதிலிருந்தே அக்கறையோடு இந்தப் பராமரிப்பை ஆரம்பித்து விடுகிறது ஆயுர்வேதம். வயதுக்கு வந்த பெண்ணுக்கு புட்டு சுற்றுவது, உளுந்து கஞ்சி தருவது எல்லாமே கருப்பையை வலுப்படுத்தத்தான்! பாட்டி வைத்தியமாக வீட்டில் ஏராளமான நாட்டு மருந்துகள் தருவார்கள். ரத்த சோகையிலிருந்து அந்தப் பெண்ணை மீட்கத்தான் இந்த மருந்துகள்.

ஆயுர்வேதத்தில் ரசாயன வாஜுகரண சிகிச்சை என்று ஒன்று இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கும் விந்தணுக் குறைபாடுகளை இந்தச் சிகிச்சை சரிசெய்கிறது. பெண்களுக்கும் மாதவிடாய் தொடர்பான பக்கவிளைவுகளுக்கு எளிதான மருந்துகள் இருக்கின்றன.

அனுபவம் மிகுந்த ஜோதிடர்கள் திருமணத்துக்கு நாள் பார்ப்பதற்கு முன்பாக, மணப்பெண்ணைக் கூப்பிட்டு கடைசியாக மாதவிடாய் ஆன நாளைக் கேட்பார்கள். அதையொட்டி சில கணக்குகள் போட்டு மணநாளையும் சாந்தி முகூர்த்த நேரத்தையும் தீர்மானிப்பார்கள்.

இது எதற்கு? மாதவிடாய் ஆரம்பித்த நாளிலிருந்து சரியாக பன்னிரண்டாவது நாள் முதல் பதினெட்டாவது நாளுக்குள் உறவு நிகழ்ந்தால் மட்டுமே கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால், அந்த நாட்களுக்குள் சாந்தி முகூர்த்தம் நடக்கிற மாதிரி பார்த்துக் கொள்வார்கள்.

இந்தப் பூமியில் பிறக்கிற ஒவ்வொருவரும் சாதனையாளர்கள் தான். பத்துக் கோடிப் பேருக்கான ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்த பிறகே அவர்கள் பிறக்கிறார்கள். ஆம்... தாம்பத்ய உறவின்போது கிட்டத்தட்ட பத்துகோடி விந்தணுக்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒரே ஒரு விந்தணு மட்டுமே மற்ற எல்லாவற்றையும் தாண்டி முன்னேறி கருமுட்டையை அடைந்து, குழந்தைப் பிறப்புக்கான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. ஜெயிக்கும் அந்த ஒற்றை விந்தணு எது என்பது நமது முற்பிறவிகளில் செய்த காரியங்களின் கர்மவினைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் ஆயுர்வேதத்தில்!

சரி... கர்ப்பம் நிச்சயம் என முடிவாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? கர்ப்பிணியின் கணவனும் அவளது குடும்பமும் என்ன விலை கொடுத்தாவது அவளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அவள் காதுகளில் நல்ல செய்திகள் விழவேண்டும், இனிமையான இசை ஒலிக்க வேண்டும், இனிப்பான பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஆயுர்வேத ஆசான்கள்.

ஒரு கர்ப்பிணி அனுபவிக்கும் உணர்வுகள், பார்க்கும் விஷயங்கள், தொடும் பொருட்கள், கேட்கும் சங்கதிகள், சாப்பிடும் உணவுகள்... என எல்லாவற்றின் சாரமும் அப்படியே குழந்தைக்கும் சென்று சேருகிறது. அதனால், கருத்தரித்த முதல் நாளில் இருந்தே குழந்தையின் நல்ல வளர்ச்சிக்கு உகந்த வகையில் தாயின் பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.

கரு உண்டாகி ஒரு மாதம் கழித்து மாதவிடாய் தள்ளிப்போன பிறகுதானே, டாக்டரிடம் சென்று பரிசோதித்து கரு உருவாகி இருப்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது? ஆனால், கரு உருவாகி இருப்பதை அந்த நொடியிலேயே உணர்ந்து கொள்ள முடியும் என்கிறது ஆயுர்வேதம். சங்கம வழிபாடு முடிந்த அந்த நொடியிலேயே வயிற்றில் பாரம் உண்டானது போன்ற உணர்ச்சி இருக்கும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். அதிக சோம்பலாக இருக்கும். நா வறட்சி ஏற்படும். உடல் வாட்டம் உண்டாகும். உடல் சிலிர்த்து மயிர்க்கால்கள் கூச்செறியும். சாதாரணமாக முடியும் ஒரு உறவுக்கும் கருத்தரிப்பில் முடியும் ஒரு உறவுக்குமான வித்தியாசத்தைப் பெண்களால் நன்கு உணர முடியும்.

அந்த நிமிடத்தில் தொடங்கி, நிரம்பி வழியும் ஒரு எண்ணெய்க் குடத்தைப் பக்குவமாகக் கையாள்வது போல குடும்பம், அவளைப் பராமரிக்க வேண்டும் என்கிறார் சரகர். அந்தக் குழந்தையின் பிரகிருதி அந்த நிமிடத்திலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது ஆணா, பெண்ணா என்பதும் அப்போதே முடிவாகி விடுகிறது. அதோடு மட்டுமல்ல... தன் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகள், தாயின் கருப்பைக்கு வெளியே இயங்கும் உலகம் என அனைத்தையும் கருவில் இருக்கும் குழந்தையால் உணர்ந்துகொள்ள முடியும்.

குழந்தைகள் கருவில் இருக்கும்போதே அவற்றின் அம்மாக்கள் பார்க்கும் மெகா சீரியல்களின் டைட்டில் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றை ரசிக்க ஆரம்பித்து விடுகின்றனவாம். பிறந்த பிறகு, அந்தப் பாடலை விஷுவலோடு பார்க்கும் போது, இதை ஏற்கெனவே நான் கேட்டிருக்கேனே என்ற உணர்வு அதற்கு ஏற்படுகிறதாம்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Empty Re: குழந்தை பிறப்பு ஆயுர்வேதம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 15:24

##* ##* :”@:


குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம் Empty Re: குழந்தை பிறப்பு ஆயுர்வேதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum