சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Khan11

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:07

என் வீட்டு சமையலில் உப்பை சரியான அளவில்தான் சேர்ப்பதாகக் கூறுகிறார்கள்.​ ஆனால் எனக்கு அதன் அளவு போதாது என்று கூறி உப்பு ஜாடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு,​​ உணவை சாப்பிடும் போது எல்லாவற்றிலும் சிறிது தூவி சாப்பிடுகிறேன்.​ உப்பின் மீது உள்ள பிரியம் எனக்கு ஏதேனும் கேட்டை விளைவிக்குமா?


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். 15kdr20


தண்ணீரிலிருந்துதான் சுவை தோன்றுகிறது.​ அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள்.​ வருடம் என்ற காலம்,​​ ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்ச மஹா பூதங்களான நிலம்,​​ நீர்,​​ நெருப்பு,​​ வாயு,​​ ஆகாயம் இவற்றின் குணங்களின் ஏற்றத் தாழ்வின் கலப்பினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த தனிச் சுவையாகத் தோற்றம் அடைகிறது.

நீர் மற்றும் நெருப்பின் அதிகச் சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு.​ உப்புச் சுவை உமிழ் நீரை பெருகச் செய்கிறது.​ உணவிற்குச் சுவையூட்டுகிறது.​ அதிக சேர்க்கை தொண்டையையும் தாடைகளையும் எரிக்கிறது.​ உங்களைப் பொறுத்தவரை உப்புச் சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை,​​ உடலில் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக,​​ அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.

உப்புச் சரியான அளவில் சேர்க்கும் போது,​​ பசித்தீயைத் தூண்டுகிறது.​ நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது.​ உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது.​ வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது.​ குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது.​ குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது.​ உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது.​ உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்திவிடும்.​ ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச் சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்-​ தலை வழுக்கை,​​ நரை,​​ நாவறட்சி,​​ உடல் எரிச்சல்,​​ மயக்கம்,​​ தோலின் மேல் பரவும் நோய்கள்,​​ வீக்கம்,​​ இசிவு எனும் கை,கால்களில் உண்டாகும் வலிப்பு நோய்,​​ பித்தம்,​​ ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் ரத்த பித்த நோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.


உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத்தான் பயன்படுத்துகிறோம்.​ பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.​ ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை.​ இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.​ ஆண்மையை வளர்ப்பது.​ மனதிற்கு நல்லது.​ வாதம்,​​ பித்தம்,​​ கபம் மூன்றையும் போக்கவல்லது.​ இலேசானது,​​ சிறிதளவு உஷ்ணமுள்ளது.​ நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.

அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.​ அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.​ அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,​​ இந்துப்பையும் சேர்க்கலாம்.

கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும்.​ ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை.​ அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது.​ இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும்.​ இதைக் ​ கருத்தில் கொண்டுதான் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அஷ்ட சூரணம்,​​ ஹிங்குவசாதி,​​ வைச்வாநரம் போன்றவற்றில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:24

மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் பேருந்தில் திரும்பி வரும்போது, செல்போன் ஒயரைக் காதில் சொருகி பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டே வீடு வந்து சேர்கிறேன். இரவு 11 மணி வரை செல்போன் எஃப்எம் ரேடியோவில் பாட்டுக் கேட்கிறேன். இதனால் எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால் என் வீட்டில் கூடுதல் நேரம் காதில் ஒயரைக் காதில் சொருகி பாட்டுக் கேட்பதை ஆட்சேபிக்கின்றனர். நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். K7


பாட்டுக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, ரேடியோ போன்றவற்றின் மூலம் நாம் பாடல்களைக் கேட்கும்போது மேம்போக்காகக் கேட்டு ரசிக்கிறோம். காதினுள் ஒயரைச் சொருகி பாட்டு கேட்கும்போது, அந்தப் பாடல் வரிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்பதால், அந்த வரிகளிலுள்ள அர்த்தம் புரிவதால், உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

தொடர்ந்து ஒலி காதினுள் எழுப்பப்படுவதால், காதிலுள்ள நரம்புகள், நுண்ணிய எலும்புகள், ஒலியின் வழியாகச் சீற்றமடையும் வாயுவினால் வறண்டு துவண்டு விடுகின்றன. பாடல் வரிகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால், மனம் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப செயல் வடிவம் கொடுத்துவிட்டால், வாழ்க்கையின் பாதையே மாறும்படி செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

ஆக,இன்று எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதுவே பின்னாளில் துயரத்திற்குக் காரணமாகலாம். நம் முன்னோர், மனித உடலை ஒரு தேராகவும் புலன்களை அதில் பூட்டிய குதிரைகளாகவும், ஆன்மாவைச் சாரதியாகவும் விளக்கியுள்ளனர். குதிரையை அடக்குவது கடினம். அது சதா துள்ளிக் கொண்டேயிருக்கும். அதற்குக் கடிவாளம் தேவை. உங்களுடைய செவிப்புலன் எனும் குதிரைக்கு உங்கள் உறவினர்கள் "அதிகம் கேட்காதே' எனும் கடிவாளம் போடப் பார்க்கின்றனர். பாட்டை அதிகம் கேட்காமல் அவர்கள் கூறும் நல்ல உபதேசத்தைக் கேட்டால் உங்களுடைய மூளை நரம்புகள் பாதிப்படையாமல், செவிப்புலனின் செயல்பாடு இறுதிவரை தொய்வை அடையாமல் பாதுகாக்கலாம்.

சிலர் பாட்டை ரசித்துக் கேட்கும்போது தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுகின்றனர். தலையைத் தாங்கும் கழுத்துப் பகுதியிலுள்ள முதுகுத் தண்டு வட எலும்புகளின் இடையே அமைந்துள்ள சவ்வுகள் இதனால் இடம் பெயர்ந்துவிடலாம். கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் காது மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் எந்நேரமும் படுபிஸியாக இருக்கிறார்கள். வேறு சிலர் இரவில் காதினுள் ஒயரைச் சொருகி பாட்டைக் கேட்டுக் கொண்டே குறட்டை விட்டு உறங்குகின்றனர். புலனும் மனமும் சோர்வுற்று உறங்கினாலும், காதினுள் இசை வழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் காது நரம்புகள் பலவீனமாகக் கூடும்.

இதற்கு மாற்று வழிதான் என்ன?


செல்போனிலுள்ள ஸ்பீக்கர் பகுதியைக் குறைந்த அளவில் ஆன் செய்துவிட்டால், நீங்கள் பெறும் இன்பத்தை அருகிலுள்ளவர்களும் பெறக் கூடும். உங்களுக்கும் உடல் மனப் பாதிப்பு குறைந்துவிடும். நெய்ப்பு எனப்படும் எண்ணெய்ப் பசையினால்தான் காதினுள்ளே உள்ள நரம்புகளும் எலும்புகளும் துடிப்புடன் செயல்படுகின்றன. எண்ணெய்க் குளியலை மறந்துவிட்டு இந்நாளில் காதினுள் நெய்ப்பு ஏற்படக் காரணமாக நெய், பால், வெண்ணெய், மாமிசங்கள், மீன் வகையறாக்களைக் குறிப்பிடலாம். அதாவது ஒரு வகையில் குறைவுபடும் எண்ணெய் இன்னொரு வகையில் வெண்ணையாகவும் மாமிசமாகவும் மீன் தினுசுகளாகவும் உடலில் அளவுக்கு மிஞ்சி ஈடு கட்டப்படுகின்றது.

வறட்சி தரும் உணவைச் சாப்பிட்டு, எண்ணெய்யும் தேய்த்துக் குளிக்காமல், தொடர்ந்து காதினுள் ஒயரைச் சொருகிப் பாடல்களைக் கேட்கும் நபர் விரைவில் டமாரச் செவிடாக ஆகிவிடுவார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அதனால் நீங்கள் செவிப்புலனைப் பாதுகாக்க, வாரம் இருமுறையாவது நல்லெண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்து, வெதுவெதுப்பாக பொறுக்கும் சூட்டில் இதமாகக் காதுகளினுள்ளே நிரப்பி, காதுகளைச் சுற்றி எண்ணெய்யைத் தடவித் தேய்த்து, அரை மணி நேரமாவது காலையில் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

அன்றைய தினங்களில் முடிந்தவரை ஏஸி அறையில் அமர்வதைத் தவிர்க்கவும். உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். ஏஸி அறையில் அமர வேண்டிய கட்டாயம் இருந்தால், காதுகளில் மெலிதான பஞ்சை அடைத்து வைக்கலாம். காதுகளைப் பாதுகாக்க வசாலசுனாதி எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலம் உபயோகிக்கச் சிறந்தது. பொறுக்கும் சூட்டில், இதமாக இருக்கும்படி காதினுள் இந்த மூலிகைத் தைலத்தை நிரப்பி சுமார் 3-5 நிமிடங்களுக்குப் பிறகு, தலையை ஒருக்களித்து மூலிகைத் தைலத்தை வடித்துவிட்டு, பஞ்சினால் காதுகளைத் துடைத்துவிடலாம். காதினுள் நெய்ப்பைப் பாதுகாத்து, வாத தோஷத்தின் வறட்சி மற்றும் அதன் சீற்றத்திலிருந்து இந்த மூலிகைத் தைலம் நல்ல பாதுகாப்பைத் தருகின்றது. காலையில் பல் தேய்த்த பிறகு இந்தத் தைலத்தைப் பயன்படுத்தலாம்.



ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:28

காய்ச்சலுக்குப் பிறகு..!
சிக்​குன்​கு​னியா காய்ச்​ச​லால் பாதிக்​கப்​பட்டு எழுந்​தி​ருக்க முடி​யா​மல் பல நாட்​கள் படுக்​கை​யி​லேயே கிடந்து சக்​தி​யில்​லா​மல் இருக்​கி​றேன்.​ நல்ல கறி​காய்,​​ பழங்​கள் சாப்​பிட்டு உட​லைத் தெம்​பாக்​க​லாம் என்று முயற்​சித்​தால் பசி மந்​தம் ஏற்​பட்டு வயிறு உப்பி கனத்​துப் போகி​றது.​ உட​லில் புர​தச் சத்​தும் ரத்த விருத்​தி​யும் ஏற்​பட்டு,​​ உடல் ஆரோக்​கி​யம் பெற என்ன வழி?​ புலால் உணவு சாப்​பிட்​டால் சரி​யா​குமா?​

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். 27kdrmedi


காய்ச்​சல் விட்ட பிறகு,​​ உட​லுக்​குப் புஷ்டி தரும் உணவு சாப்​பி​ட​லாம் என்ற ஆசை​யால்,​​ வாழைப் பழம்,​​ பலாப் பழம்,​​ மாம்​ப​ழம்,​​ பால்,​​ நெய் நல்ல கறி​காய்​கள் போன்​ற​வற்றை அள​வுக்கு மீறி உண்டு,​​ அத​னால் பசி மந்​தம் ஏற்​பட்டு வயிறு உப்​பிக் கனத்​துத் திண​றும் உங்​க​ளுக்​குத் தேரை​யர் எனும் முனி​வர் கூறும் அறி​வுரை என்ன தெரி​யுமா?​ துவ​ரம் பருப்பை வேக வைத்து வடி​கட்​டிய நீரில் மிள​கும் பூண்​டும் ரசத்​திற்​குத் தேவை​யான ரசப்​பொ​டி​யும் சேர்த்​துக் காய்ச்சி ரச​மாக்​கிச் சாப்​பிட அந்​தப் பசி மந்​த​மும்,​​ வயிறு வேத​னை​யும் நீங்கி விடும் என்​கி​றார்.​

புர​ தச் சத்​து​மிக்க உண​வு​க​ளில் பருப்​பு​க​ளுக்கு முதல் இட​முண்டு.​ அதி​லும் துவ​ரம் பருப்​பிற்கு நம்​நாட்டு உண​வில் அதிக முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​கின்​றது.​ விருந்​தி​லும்,​​ பத்​திய உண​வி​லும் இது நிச்​ச​யம் இடம் பெறும்.​ விருந்​தில் பருப்பு சாம்​பார்,​​ பருப்பு உசிலி,​​ பருப்பு போளி,​​ பருப்​புப் புட்டு என்ற​வா​றும் பத்​திய உண​வில் பருப்​புப் பொடி,​​ பருப்​புத் துவை​யல்,​​ பருப்பு ரசம் என்ற வகை​யி​லும் துவ​ரம் பருப்பு பயன்​ப​டு​கி​றது.​

கடும் காய்ச்​சல்,​​ மூட்டு வலி முத​லிய உபா​தை​க​ளால் பல​நாட்​கள் தொடர்ந்து படுக்​கை​யி​லேயே கிடந்து எழுந்​தி​ருக்​கக் கூடச் சக்​தி​யில்​லா​மல் இருக்​கும் உங்​க​ளுக்கு ஒரு சிறந்த கஞ்​சி​முறை இருக்​கி​றது.​ பஞ்ச முஷ்​டிக யூஷம் என்று அதற்​குப் பெயர்.​ பஞ்ச என்​றால் ஐந்து.​ முஷ்​டிக என்​றால் ஒரு கைப்​பிடி அளவு.​ யூஷம் என்​றால் கஞ்சி.​ துவரை,​​ உளுந்து,​​ கொண்​டைக் கடலை,​​ பச்​சைப் ​ பயறு மற்​றும் பச்​ச​ரிசி ஆகிய ஐந்​தை​யும் வகைக்கு ஒரு கைப்​பி​டி​ய​ளவு எடுத்​துத் தனித் தனியே நல்ல வெள்​ளைத் துணி​யில் முடிந்து ஒரு பாத்​தி​ரத்​தில் போட்டு அதில் சுத்​த​மான தண்​ணீர் 3 லிட்​டர் விட்டு,​​ அரை லிட்​டர் ஆ​கும் வரை காய்ச்சி,​​ அந்​தத் துணி முடிச்​சு​களை அகற்றி,​​ தண்​ணீரை மட்​டும் வெது​வெ​துப்​பா​கச் சாப்​பி​டு​வ​தால் பசி​யின் களைப்பு,​​ பலக்​கு​றைவு இவற்றை எளி​தில் சமா​ளிக்​க​லாம்.​ நீடித்த உப​வா​சங்​க​ளுக்​குப் பின் கனத்த உணவு ஏற்க முடி​யாத நிலை​யி​லும்,​​ உப்​பில்​லாப் பத்​திய நிலை​யி​லும் இந்​தக் கஞ்சி குடிப்​பது மிக​வும் நல்​லது.​ இயற்​கை​யான புர​தச் சத்​து​மிக்க உண​வாக இது ஏற்​றுக் கொள்​ளத்​தக்​கது.​

பருப்பு வகை அதி​க​மா​கச் சேர்ந்​தி​ருந்​தா​லும் வெந்த பருப்​பு​க​ளின் திரவம் மட்​டுமே சேர்​வ​தால் குட​லில் வாயு கொள்​வ​தில்லை.​ இந்​தக் கஞ்சி சிறிது துவர்ப்​பும் இனிப்​பு​மாக இருக்​கக் கூடி​யது.​ மலத்தை இளக்​கா​மல் கட்​டும்.​ பித்த கப நோய்​க​ளுக்கு மிக​வும் ஏற்​றது.​ நல்ல ரத்த விருத்தி தரும்.​ தோலின் மென்​மை​யும் பள​ப​ளப்​பும் பூச்​சும் இத​னால் அதி​க​மா​கும்.​


நீங்​கள் புலால் உணவு வகை​க​ளைச் சாப்​பிட வேண்​டிய கட்​டா​யம் ஏது​மில்லை.​ மேற்​கு​றிப்​பிட்ட பருப்பு வகை​க​ளைத் தனியே வேக வைத்து,​​ தண்​ணீர் சுண்​டி​ய​தும்,​​ அப்​ப​டியே பருப்​பைச் சுண்​டல் போலச் சாப்​பி​டு​வது,​​ கறி​காய்​களை வேக வைத்து அத்​து​டன் கலந்து சமைத்து உண்​பது என்ற வகை​யில் தின​மும் உண​வில் 5-15 சத​வி​கி​தம் வரை பருப்​பு​களை நாம் உண​வில் சேர்க்க முடி​யும்.​ புலால் உண்​ணா​த​வர்​க​ளுக்​கும் புலால் உண​வி​னால் ஏற்​ப​டும் புஷ்​டிக்கு நிக​ரான புஷ்​டியை பருப்​பில் பெற முடி​யும்.​ ஆனா​லும் அள​விற்கு மீறிய பருப்​பைச் சேர்த்​துக் கொள்​ளும்​போது அதைச் செரிக்​கத் தேவை​யான தாப​மா​னம் இல்​லாம​லி​ருந்​தால் ஜீர​ண​மா​கத் தாம​த​மும்,​​ அந்​தத் தாமத்​தால் ஏற்​ப​டும் நுத​நு​தப்​பி​னால்,​​ குட​லி​லுள்ள பருப்​பில் அழு​கல் ஏற்​பட்டு,​​ அந்த அழு​கிப் போன பருப்பி​லி​ருந்து வாயு உண்​டா​கி​றது.​ அந்த வாயுவே வயிற்று உப்​புசத்​திற்​குக் கார​ண​மா​க​லாம்.​ அத​னால் தாப​மா​னம் உங்​க​ளுக்கு மிக​வும் முக்​கி​யம் என்​ப​தால்,​​ கோரைக் கிழங்கு 10 கிராம்,​​ பர்ப்​பா​ட​கப்​புல் 5 கிராம் வீதம் 1 லிட்​டர் தண்​ணீ​ரில் போட்டு அரை லிட்​டர் ஆகும் வரை காய்ச்சி,​​ வடி​கட்டி,​​ சிறிது சிறி​தாக ஒரு நாளில் குடித்து வந்​தால்,​​ காய்ச்​சல் விரை​வில் விடு​வ​தோடு,​​ குட​லில் தேவை​யான சூட்​டை​யும் பாது​காக்​கும்.​ இந்​தக் குடல் சூடு​தான் தாப​மா​னம்.​ பருப்பு வகை​கள் சரியே ஜீர​ண​மா​னா​லும் பின் நிலை​க​ளில் உண​வுச் சத்து ரத்​தத்​து​டன் சேர்ந்​த​தும் கல்​லீ​ர​லும் சிறு​நீ​ர​கங்​க​ளும் அதி​கம் உழைக்க நேரி​டு​வ​தால்,​​ பருப்​பு​களை அள​வு​டன் சேர்த்து உண்​பதே நல்​லது.​ பசி நன்​றாக எடுக்​கத் தொடங்​கி​விட்​டால் நீங்​க​ளும் வீட்​டி​லுள்ள மற்​ற​வர்​க​ளைப் போல் சாதா​ரண தினப்​படி சாப்​பி​டும் உண​வு​களை சாப்​பி​டத் தொடங்​க​லாம்.​ ​


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:31

குளிர்ச்சி... ஆனால் குளிர்ச்சியில்லை!


சர்க்கரை உபாதையினால் எனக்குப் பாதத்தில் எரிச்சல் இருக்கிறது.​ சந்தனத்தை அரைத்து பாதத்தில் இரவில் பூசி,​​ மறுநாள் காலை பாதத்தைக் கழுவுகிறேன்.​ ஆனாலும் எரிச்சல் குறையவே இல்லை.​ கூடிக்கொண்டேதான் இருக்கிறது.​ இது ஏன்?


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். 04kdr24

தண்ணீர் சேர்த்து அரைத்த சந்தனக் கட்டையின் விழுது,​​ பாதத்திலுள்ள தோலின் மீது ஈரமாகவும் கனமாகவும் பூசினால் தோலின் எரிச்சல் உடனே மறையும்.​ ஆனால் சந்தன விழுது ஈரமாய் இருக்கும் வரையில்தான் எரிச்சல் இருக்காது.​ சந்தன விழுது உலர உலர எரிச்சல் மறுபடியும் தோன்றும்.​ குளிர்ச்சியான சந்தன விழுது தோலின் மீது காய்ந்து போனால் உடலில் உள்ள வெப்பத்தைத் தோலிலுள்ள ஓட்டைகள் வழியே வெளிவர முடியாத வகையில் உள்ளேயே அடக்குகிறது.​ அடக்கப்படுவதால் உஷ்ணம் சந்தனப் பூச்சுக்கு முன்பிருந்ததைவிட உள்ளெரிச்சலை அதிகரிக்கச் செய்கிறது.​ அதனால் நீங்கள் சந்தன விழுது உலரும் முன்பே கழுவிவிடவும்.

குளிர்ச்சியான ஒரு பொருள்,​​ உடல் சூட்டை அதிகரிப்பதும்,​​ சூடான பொருள்,​​ குளிர்ச்சியைத் தருவதுமான விசித்திரமான வித்தியாசங்களை ஆயுர்வேதம் சில உதாரணங்களோடு எடுத்துக் கூறுகிறது.​ அவற்றை நன்றாகத் தெரிந்து உபயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.​ உதாரணத்திற்கு,​​ "எள் உள் உபயோகத்தினால் புத்தியின் ஞாபக சக்தியை வளர்க்கிறது.​ குளிர்ந்த வீரியத்தை உடையது.​ குளிர்ச்சியும் செய்கிறது.​ ஆனால் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் புத்தியின் ஞாபக சக்தியை வளர்க்கும் தாய்க் குணத்தை மட்டும் கொண்டுள்ளது.​ ஆனால் வீரியத்தில் உஷ்ணமாக மாறிவிடுகிறது,​​ உள்ளுக்குச் சாப்பிடும்போது.​ இது மட்டுல்ல,​​ எள்ளுக்கும் அதில் பிறக்கும் எண்ணெய்க்கும் வித்தியாசம்.​ எள் உள் உபயோகத்தில் உடலில் கபத்தை அதிகப்படுத்துகிறது.​ ஆனால் அதன் எண்ணெய் நேர்மாறுதலாக கபத்தைக் குறைக்கிறது.

தயிர் நெய்ப்பு குணம் அதிகம் கொண்டுள்ளதால்,​​ உடல் வீக்கம் உள்ளவர்களுக்கு வீக்க உபாதையை அதிகமாக்குகிறது.​ தயிரிலிருந்து வரும் மோரும் வெண்ணெயும் வீக்க வியாதியைக் குணப்படுத்துகிறது.

தேன் பச்சையாகச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது செய்கிறது.​ தாதுக்களுக்குக் கெடுதி செய்யும் விஷங்களைக் கண்டிக்கும் விசேஷ குணம் உடையது.​ ஆனால் தேனை சூடு செய்தோ,​​ சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிட்டாலோ,​​ உடல் தாதுக்களைக் கெடுத்து விடுகிறது.


கோதுமை மாவைப் பூரியாகவோ ரொட்டியாகவோ சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.​ ஆனால் அதை நல்லெண்ணெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் கண்களுக்குக் கெடுதல் செய்யும்.​ நெய்,​​ தேங்காய் எண்ணெய்,​​ நிலக்கடலை எண்ணெய்களில் பொரித்துச் சாப்பிட்டால் கண்களுக்குக் கெடுதி கிடையாது.​ கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து அனலில் கெட்டி மாவாகக் கிளறி,​​ கண்களின் மேல் இமையின் மேல் சில மணி நேரம் கட்டி வைத்தால்,​​ கண்ணிலுள்ள சிவப்பு நிறம்,​​ நீர் வடிதல்,​​ வலி சேர்ந்த நோய் சீக்கிரம் குணமாகிறது.​ கண்ணுக்கு நல்லெண்ணெயும் நன்மையே.​ கோதுமையும் நன்மையே.​ இரண்டும் சேர்ந்தால் கெடுதி.

அகில் கட்டையும் சந்தனம் போல் நல்ல வாசனைத் திரவியம்.​ உள் உபயோகத்தில் சந்தனம் குளிர்ச்சியைத் தருகிறது.​ ஆனால் அகில் கட்டையை அரைத்து விழுதை உடலில் எரிச்சல் உள்ள இடத்தில் மேலே கனமாய்ப் பூசினால் விழுது உலர உலர உள்ளெரிச்சல் குறைகிறது.​ அதாவது சந்தன விழுது உலர்ந்தால் எரிச்சல் கூடுகிறது.​ அகில் விழுது உலர்ந்தால் எரிச்சல் குறைகிறது.​ காரணம்,​​ உஷ்ண வீர்யம் கொண்ட அகில் கட்டையின் பூச்சு,​​ தோலின் உள்ள வெப்பத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறது.​ உள் வெப்பம் வெளிப்பட்டுவிடுவதால் உள் எரிச்சல் ​ வேதனையும் குறைகிறது.

அதனால் சந்தனத்தை நீங்கள் உலரவிட வேண்டாம்.​ அகில் கட்டையின் விழுதை உலர வைத்து அதன் பிறகு கழுவி வர உங்கள் பிரச்னை தீர வாய்ப்பிருக்கிறது.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:37

எனக்குக் கெட்டியான தயிர் சாதம் என்றால் உயிர். அதில் இஞ்சி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவதில் அலாதியான பிரியம். ஆனால் சிலர் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்கின்றனர். அது ஏன்?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Kadir3


தயிரை உணவுப் பொருளாக உபயோகிக்கும் போது சில கட்டுப்பாடுகளை ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. அவை-

தயிரை இரவில் சாப்பிடக் கூடாது. நெய், சர்க்கரை, பயத்தம் பருப்பு, தேன், நெல்லி முள்ளி இவைகளில் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிடக்கூடாது. தயிரை சுடவைத்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் ஜ்வரம், தலைசுற்றல், சோகை, தோல் வியாதிகள், காமாலை ஏற்படும்.

உணவுப் பொருள்களில் சிறந்த தயிர், பகலில் அனுமதிக்கப்பட்டாலும் இரவில் தடுப்பதன் நோக்கம் என்ன? நெய், சர்க்கரை போன்றவை சேர்ப்பதால் அதில் ஏற்படும் விசேஷ தகுதி என்ன? ஜ்வரம், காமாலை போன்ற நோய்கள் ஏற்பட விசேஷ காரணம் என்ன?

தயிரின் குணங்கள்: வாய்க்கு ருசி அளிப்பது. பலத்தை வளர்ப்பது. உடல் உஷ்ணத்தைக் கொடுப்பது. வாத தோஷத்தைக் குறைப்பது, உடலை பருக்கச் செய்வது, எளிதில் ஜீரணம் ஆகாதது, கபத்தை அதிகரிக்கும்.

தயிர் குளிர்ச்சி என்று சிலர் நினைக்கின்றனர். தயிரின் சுவை புளிப்பாக இருப்பதால் அது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். பசி ஜீரண சக்தி இவைகளை வளர்க்கும் சக்தி உஷ்ணமான பொருளுக்குத்தான் இருக்கும்.

முன்னிரவு கபத்தின் காலம். அப்போது தயிரைச் சாப்பிட்டால் கபதோஷம் அதிகரித்து அதனால் செரிமானக் குறைவு, மூச்சுத் திணறல், இருமல் முதலியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனுடைய பிசுபிசுப்புத் தன்மையால் உடலிலுள்ள உட்புறக் குழாய்களில் தடை ஏற்படும். அதனால் பித்தத்திற்கும், ரத்தத்திற்கும் சேர்க்கை இல்லாததாலும், பித்தம் வெளிப்படுவதில் தாமதம் ஏற்படுவதாலும் சோகை, காமாலை, தோல் வியாதிகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் புளித்த தயிர் சாதத்தை நீங்கள் இரவில் சாப்பிடவேண்டாம்.

அதையும் மீறி நீங்கள் இரவில் தயிரை சாப்பிட விரும்பினால் வரட்சியுள்ள, துவர்ப்புச் சுவைமிக்க, வாயுவை அதிகப்படுத்தாத பயத்தம் பருப்புக் கஞ்சி, சீரகம், பெருங்காயம், இந்துப்பு சேர்த்துச் சாப்பிட நல்லது.

தயிருடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உட்புறக் குழாய்களில் அடைபட்டுப் போகும் நிலைமை இதன்மூலம் நீங்கலாம். நெல்லிக்காய் புளிப்பாக இருந்தாலும், அதிலுள்ள துவர்ப்பு, ரத்தத்தை புஷ்டியாக்குகிறது. தனித் தயிரால் ஏற்படும் பித்த சீற்றத்தை நெல்லிக்காயைச் சேர்ப்பதன் மூலம் தவிர்க்கலாம். சர்க்கரை தயிரின் புளிப்பை மாற்றி அதனுடைய சூட்டையும் குறைத்து விடுகிறது. அதனால் இச்சரக்குகளின் சேர்க்கையை தயிருடன் உணவாக ஏற்க நம் முன்னோர் வற்புறுத்தியுள்ளனர்.

நீங்கள் காலை வேளையில் தயிர் சாதத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட கபம் வளராமல் கட்டுப்படுத்தலாம். உணவின் முடிவில் தயிர்சாதம் சாப்பிட்டால் நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிடவும்.

இனிப்பான தயிர் லஸ்ஸி வடிவில் விற்கப்படுகிறது. இதைப் பெருவாரியான மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பசி உள்ள வேளையில் இதைச் சாப்பிடுவதே நல்லது. அதிகமாகப் புளித்த தயிர் சாதம் சாப்பிட நல்லதல்ல. ஜீரணம் தாமதமாகும். இரைப்பையில் புளிப்பு அதிகமாகி குடல் வேக்காளம், ஸ்தம்பித்த நிலை, தலைசுற்றல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். அதனால் புளித்த தயிரை ஊறுகாய்களில் சேர்த்தோ, மோர்க்குழம்பு போன்றதாகக் காய்ச்சியோ அதிலுள்ள புளிப்பையும் பிசுபிசுப்பையும் குறைத்து உபயோகிப்பது நல்லது.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:39

சர்க்கரை நோயை ஆயுர்வேதம் கட்டுப்படுத்தும்


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். 10medi1


இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம், பசி, களைப்பு ஆகியவை சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகள். எனினும் இத்தகைய அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் (ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல்.) இருக்க வாய்ப்பு உண்டு.

ஆயுர்வேத மருத்துவ அடிப்படையில் ஒருவருக்கு சுமார் 20 வகையான சர்க்கரை நோய்கள் ஏற்படலாம். இவை அனைத்தும் வாத-பித்த-கப தோஷங்கள் அடிப்படையில் ஏற்படுகின்றன.

காரணங்கள்: சீரற்ற வாழ்க்கை முறை, சீரற்ற உணவு முறை, அதிகப்படியான உறக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், பரம்பரை ஆகியவை காரணமாக சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிகிச்சை என்ன? ஆயுர்வேதம் அருமையான சிகிச்சை முறைகளைக் கொண்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள சாந்திகிரி ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பஞ்சகர்மா சிகிச்சைகள்: இவை உடலின் உட்புறத்தை சுத்தி செய்யும் சிகிச்சைகளாகும். வெளிப்புற சிகிச்சைகளாக நீராவி மசாஜ், எண்ணெய் மசாஜ், உடலில் எண்ணெய் ஊற்றுதல், மோரைப் பயன்படுத்துதல், மூலிகைப் பொடி தடவுதல் போன்றவை செய்யப்படும்.

சர்க்கரை நோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மேலே குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அமையும். உணவில், செயல்பாடுகளில் அன்றாடம் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளும் வழங்கப்படும்.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 19:44

இட்லி சாப்பிட்டு மோர் குடியுங்கள்!

எனது வயது 42. அரசு ஊழியை. பரபரப்பான வாழ்க்கை. சென்ற ஒரு வருடமாக மாதவிடாய் நின்றுவிட்டது. குறைந்த ரத்த அழுத்தம் தவிர, வேறு பிரச்னைகள் இல்லை. என் பிரச்னை எது சாப்பிட்டாலும் வயிறு "திம்' என்று உள்ளது. தூக்கம் தூக்கமாக வருகிறது. உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறது. உடல் உள் உறுப்புகள் தளர்ந்து விட்டது போல் உள்ளது. இவை எதனால் ஏற்படுகிறது? இவை மாற என்ன வழி?



ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். 8kdr2


தங்களுடைய நீண்ட கடிதத்தில் காலையில் 1கப் டீ, இரண்டு இட்லி அவசரமாக சாப்பிட்டு வேலைக்குப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆயுர்வேதம் வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி உங்கள் உணவு அமையவில்லை. காலையில் இட்லி சாப்பிடுகிறீர்கள். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப் டீ குடிக்கிறீர்கள். அதில் பால் இருக்கிறது. உப்புடன் கூடிய இட்லியில் பாலுடன் கூடிய டீ சேரும்போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். ஆக, எது ஆரோக்கியத்தைத் தர வேண்டுமோ, அது விஷமாக மாறி உடலை உபாதைக்கு உள்ளாக்குகிறது. அதனால் இட்லியுடன் டீ குடிப்பதைவிட, மோர் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் மோர், இட்லியை வயிற்றில் கரைத்து, வேகமாகச் செரிக்க வைத்துவிடும். அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவாக இது அமையும்.

நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும், பிராண வாயுவின் மூலமாகத்தான் உணவுக்குழாய் வழியாக, கீழ்நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, வயிற்றிற்கு வந்து சேருகிறது. "க்லேதகம்' எனும் கபத்தால் உணவில் நீர் சேர்க்கப்பட்டு கூழ் போன்று ஆகிறது. வயிற்றிலுள்ள பசியைத் தூண்டும் "ஸமானவாயு' என்னும் வாயுவினால் உணவை செரிக்கச் செய்யும் "பாசகபித்தம்' எனும் திரவம் தூண்டப்பட்டு, உண்ட உணவு செரிமானம் ஆகிறது. செரிமானத்தில் முதல் பாகத்தில் நுரையுடன் கூடிய ஒரு நிலையை அடைந்து இனிப்பாக மாறி கபத்தை தோற்றுவிக்கிறது. வயிற்றிலிருந்து நழுவி, சிறு குடலில் நுழைந்து செரிமானத்தின் நடுநிலையில், உணவில் ஒரு வகையான புழுக்கம் ஏற்பட்டு, புளிப்பாக மாறி பித்தத்தை உற்பத்தி செய்கிறது. அதன்பிறகு, பெருங்குடலில் நுழைய அங்குள்ள நெருப்பினால் அதிலுள்ள நீர் முழுவதும் சுண்டப்பட்டு, வரளச் செய்து பக்குவப்படுத்தி, கெட்டியான மலமாகிறது. அந்த நிலையில் காரமான தன்மையைப் பெற்று குடலில் வாயு வெளிக்கிளம்புகிறது. உணவிலுள்ள நீர்த்த பகுதி சிறு நீராகவும் கனத்த பகுதி கெட்டியான மலமாகவும் மாறுகிறது.

இந்த செரிமான நிலைகளில் உற்பத்தியாக வேண்டிய கப-பித்த-வாதங்கள் சரியான வகையில் அமைந்தால் அவை "தோஷங்கள்' என்று பெயர் பெற்று சீராக இயங்கும். உணவில் குடல் பாதையிலுள்ள வேக வைக்கும் தன்மையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு விட்டால் அவை தோஷங்களாக மாறாமல் "மலங்களாக' மாறி நீங்கள் குறிப்பிடும் அதிக தூக்கம், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்புக் குறைவு, உள் உறுப்புத்தளர்ச்சி போன்றவை காணும்.


சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வளர வேண்டும். உங்களுடைய விஷயத்தில் பிராணவாயு -க்லேதகபம்-பாசகபித்தம்-ஸமான வாயு போன்றவை அவசர வாழ்க்கையின் விளைவாக திறம்பட வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அதிலும், முதல் நிலை செரிமானத்தில் ஏற்படும் நுரை மற்றும் இனிப்புச்சுவை, உங்களை மந்தமான நிலைக்குத் தள்ளுகிறது. அதை சரிசெய்ய, உங்களுடைய கைப்பையில் ஒரு சிறிய டப்பாவில் அரை ஸ்பூன் சீரகம், ஓமம்,சோம்பு,4-6 ஏலக்காய் விதை, 2-4 கிராம்பு, ஒரு சிறிய லவங்கப்பட்டை, சுண்ணாம்பு தடவி காம்பும், இலையின் அடிப்பகுதியும் நீக்கப்பட்ட இரண்டு கொழுந்து வெற்றிலை ஆகியவற்றை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லவும். மதிய உணவிற்குப்பிறகு, வெற்றிலையில் மற்றவை அனைத்தையும் சிட்டிகை பாக்கும் சுருட்டி, வாயில் போட்டு மெல்லவும். அதிலிருந்து வரும் சாற்றை, எச்சிலுடன் விழுங்கி, சக்கை இருந்தால் துப்பிவிடவும்.

இவற்றிலுள்ள சூடான வீர்யம், உணவை வயிற்றில் அதிக நேரம் தேங்கவிடாமல் விரைவாக செரிக்கச் செய்வதால், தூக்கத்தைத் தடுத்து, உற்சாகம், சுறுசுறுப்பைத் தரும். உள்உறுப்புகளின் செயலாக்கத்தைக் கூட்டும். சக ஊழியர்கள் வியக்கும் வண்ணம் உங்களின் வேலைத்திறன் மேம்படும்.

ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உதவக் கூடும். ஜீரகாரிஷ்டம் 15 மிலி +முஸ்தாரிஷ்டம் 15 மிலி கலந்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். வில்வாதி லேஹ்யம் 5 கிராம், காலை மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடலாம்.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம். Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum