Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
4 posters
Page 1 of 1

பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்:
சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
எம். எஸ். பாஹிம், பிராந்திய நிருபர்கள்
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தினார் கள் என்ற சந்தேகத்தின் பேரில் 20 ற்கும் அதிகமானவர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிட மானவர்களின் நடமாட்டம் தொடர்பாக பொய் வதந்திகள் பரப்பப் பட்டதால் மக்கள் குழப்பம டைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
மர்ம மனிதன் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கூறினார்.
சில பகுதிகளில் மர்ம மனிதர் என்ற பெயரில் அப்பாவிகள் கூட தாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை பொய் வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருவர் கொலை
இதேவேளை அப்புத்தளை தொட்டால கலை பகுதியில் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட இருவரினதும் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் விசாரணையின் போது இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படாததால் அவை பதுளை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் அப்புத்தளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. மாவத்தகம
மாவத்தகம தெல்பொலவத்தை பகுதியில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறக்காமம் பகுதியிலும் இவ்வாறே சந்தேகத்துக்கிடமான இருவர் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டுள்ளதோடு இவர்கள் யானை கணிப்பீட்டிற்காக வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு பொலிஸாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்துக்கு விரைந்தனர். ஆனால் நீண்ட நேரம் குழப்ப நிலை நீடித்ததாக அறிவிக்கப்படுகிறது.
பொத்துவில்
பொத்துவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் வெட்டப் பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கல்முனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
இவ்வாறு மக்களை தாக்குவோரை மடக்கிப் பிடிக்க பொத்துவில் பிரதேச தவிசாளரின் தலைமையில் விழிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை
குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கையை மறைந்திருந்த ஒருவர் பிடித்த சம்பவத்தினால் சம்மாந்துறை பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
குறித்த நபர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கொண்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதோடு பொலிஸ் நிலையம் மீது கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.
இதனால் இரு பொலிஸார் சிறு காயங்களுக்குள்ளானார்கள். ஆனால் அவ்வாறு எந்த மர்ம மனிதரும் பொலிஸ¤க்குள் வரவில்லை என பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி தகநாயக்க கூறினார்.
கல்குடா
வாழைச்சேனை பிரதேசத்தில் கப்பல் ஹாஜியார் வீதியில் வீடு ஒன்றின் வளவு ஒன்றுக்குள் நேற்று முந்தினம் இரவு (11.08.2011) 10.45 மணியளவில் நபர் ஒருவர் ஊடுருவிய சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரதேச மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக் காணப்பட்டனர்.
கந்தளாய்
திருகோணமலை 91 ஆம் கட்டையில் (கிரிஸ் மனிதன்) சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்து கந்தளாய்ப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வாழைச்சேனை
ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான மனிதனின் நடமாட்டத்தால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அடுத்து நேற்று இது தொடர்பான விசேட கூட்டம் ஓட்டமாவடி மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் மா அதிபர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலீஸ் அத்தியட்சகர், இராணுவத் தளபதிகள் மற்றும் கல்குடா பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அசம்பாவிதம் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
குச்சவெளி
இறக்ககண்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய எட்டுப் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
காரைதீவு
காரைதீவுப் பகுதிக்குள் வியாழனிரவு சந்தேகத்துக்கிடமாக மனிதனின் நடமாட்டம் காணப்பட்டதனால் அங்கு பதற்றம் நிலவியது.
மக்கள் வீதியில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர். முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் இணைந்து கம்பு, தடி, கத்தியுடன் இத் தேடுதலை நள்ளிரவு வரை மேற்கொண்டிருந்தனர். எவரும் பிடிபடவில்லை.
ஹொரவப்பொத்தான நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் சந்தேகத்துக்கிடமான மனிதனின் நடமாட்டம் உள்ளதாகவும் இது இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த சில தினங்களாக ஓலுகஸ்கடவல, மொரகேவ, மரதன்கடவல, திறப்பன்கடவல, வெளிமுவபொத்தான ஆகிய பிரதேசங்களில் இனம் தெரியாத நபர்கள் என்று வீடுகளுக்கு சென்று பயமுறுத்துவதாகவும் தெரிய வருகின்றது.
(கல்குடா தினகரன், குச்சவெளி தினகரன், வாழைச்சேனை விசேடம், காரைதீவு குறூப் , கல்நேவ தினகரன், ஏறாவூர் குறூப், கல்முனை குறூப், பதுளை தினகரன் விசேடம், சம்மாந்துறை மேற்கு தினகரன், மாளிகைக்காடு குறூப், சம்மாந்துறை தினகரன், சம்மாந்துறை கிழக்கு தினகரன், பொத்துவில் தினகரன், பெரிய நீலாவணை தினகரன்)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
தப்பித்தவறி தெரியாத இடத்துக்கு போனா நமக்கும் இதே கதிதானோ...!!!
Re: பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
இச்சம்பவங்களைப் பார்க்கும் போது பெரும் ஆபத்தில் கொண்டு விடும் போல் இருக்கிறது அரசு முனைந்து சரியான நடவெடிக்கை எடுக்கணும் இல்லையேல் மீண்டும் ஒரு அவலம் உருவாகலாம்
Re: பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
எதுக்கும் கெப் கழட்டிட வேண்டாம் அப்றம்பர்ஹாத் பாறூக் wrote: தப்பித்தவறி தெரியாத இடத்துக்கு போனா நமக்கும் இதே கதிதானோ...!!!
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» பிரேஸில் கடும் வெள்ளம் : 500 இற்கும் அதிகமானோர் பலி
» சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது
» யுவதியிடம் சல்லாபம்: நீலப்படம் காண்பித்ததால் இளைஞர் ஒருவர் பிலியந்தலையில் நையப்புடைப்பு
» பீதியை கிளப்பும் பிரசாரத்திற்கு காரணம்
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum