Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும்
2 posters
Page 1 of 1
எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும்
தனது கல்லூரி நாட்களிலுள்ள தோழியே குறித்து எனது நண்பர் ஒருவர், கதைத்து கொண்டிருந்தார். குடிபோதையில் லாரி ஓட்டியவனால், பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது தோழி,கொல்லபட்டதாக கூறினார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா,அல்லது காதல் என்ற உறவா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது ஆனால் காதல் அல்ல என என்றார். உண்மையில் இந்த விதமான உறவு நம் வாழ்க்கையும் கடந்து செல்வது உண்டு. நெருக்கமான நட்பு, தன்னலமற்ற அன்பு ,காமமற்ற அன்பு என கூறி கொண்டே போகலாம். இவ்விதமான நட்பு பற்றி எண்ணி கொண்டிருக்கையில் எனது மனம் சர்ர்ர்ர்…. என 30 வருடத்தை பின்னோக்கி சென்றது. சபீர் என்ற எனது தோழன் என்னுடன் டுயூஷனில் படித்தான்.அவனும் நானும் போட்டி போட்டு படிப்போம்.அவன் கணக்கு பாடத்தில் கொஞ்சம் வீக். பல முறை வீட்டு பாடம் முடிக்க உதவியுள்ளேன். அவனுக்கு என தீன் பண்டங்கள் எடுத்து சென்றுள்ளேன். அவனுக்கு அன்று கவலை என்றால் எனக்கு அந்த நாள் சரியிருக்காது. அவன் ஒரு நாள் வரவில்லை என்றால் வீட்டுக்கு போய் அவன் அம்மாவிடம் கேட்ப்போம். விடுமுறை நாட்களில் அவனே பார்க்க அவனுடைய வீட்டுக்கு வருவோம். அவனுடைய அப்பா கண் சிவப்பாக கோழிமுட்டை மாதிரி இருக்கும். சிரிக்கவோ,முறைக்கவோ மாட்டார்.அவர் எங்கள் பகுதியிலுள்ள பெரும் தொழில் அதிபராக இருந்தார்.
பள்ளியில் யாராவது அடித்துவிட்டால் அவனுடைய தோழர்களிடம் சொன்னால் என் எதிராளிகளை கவனித்து விடுவார்கள். அம்மா என்னை 4 வயதில் டுயூஷன் அனுப்பி விட்டார்கள்.அப்போழுது எங்கள் ஊரில் பாலவாடி அல்லது ஆங்கில L.K.G,U.K.G வகுப்புக்கள் இருந்ததில்லை.கிலாடிஸ் டீச்சர் வீடு தான் எங்கள் பள்ளி!
டீச்சரின் கணவர் காச நோயால் பாதிக்க பட்டிருந்தார். மகனும் முரடணாக இருந்தான். டீச்சரிர் வீட்டில் விறகு அடுப்பு என்பதால் விறகு சரியில்லை என்றால் நாங்கள் புகை மூட்டத்திற்க்குள் தான் இருக்க வேண்டும். டீச்சரின் மகள் தனக்கு இருக்கும் காட்டத்தை கடுகு தாளிக்கும் போது வெளிப்படுத்துவார். ஒருவர் ஒருவராக நாங்கள் இரும ஆரம்பிப்போம். அது போகபோக ஒரு பொழுது போக்காகவே மாறியது. டீச்சர் மகள் எப்போழுது கடுகு தாளிப்பார் என காத்திருக்க தொடங்கினோம் தும்முவதற்க்காய்! டீச்சரின் அம்மா சற்று மனநலம் பாதிக்க பட்டிருந்தார். கோழிகளை கவனித்து வந்தார். அவருடைய வேலையெல்லாம் கோழி குஞ்சு பராமரிப்பதே. அம்மா கோழிகளுடன் குஞ்சு கோழிகள் செல்வதே பார்த்து கொண்டு இருக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.
டீச்சருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர் ஒருவர் அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தார். இளைய தங்கை துணி தைத்து கொண்டே இருப்பார். யாரிடமும் அவ்வளவு பேசுவதை பார்த்ததே இல்லை. அவர் எப்போழுதாவது வெளியே கடைக்கு மற்றும் செல்வார் அவர் சேலை கட்ட மட்டும் ஒரு மணிகூர் எடுத்து கொள்வார். குட்டி-கூறா பவுடர் போடுவது தான் புல் ஸ்டாப் வைத்தது மாதிரி மேக்கப் முடித்துவிட்டார், இனி விடைபெற போகின்றார் என குறியிடும். மேலும் பவுடர் மணம் இதமான மணமுள்ள காற்றை தந்தது.
ரீச்சருக்கு 3 சகோதரர்கள் உண்டு . ஒருவர் பள்ளி ஆசிரியர் பயிற்ச்சி பெற்றுகொண்டிருந்தார் அவரே நாங்கள் ஜேம்ஸ் சேர் என அழைப்போம். நான் அவரிடம் சேட்டை பண்ணுவதற்க்கு அடி வாங்கியுள்ளேன். இனி ஒரு சகோதரர் வீட்டுகுள் காலடி வைத்தவுடனே அவர்கள் வீட்டில் மகாபாரத போர் ஆரம்பித்து விடும் . சட்டி பானை எல்லாம் எடுத்து எறிவது உடைப்பது போன்ற சத்தம் கேர்க்கலாம் . முதல் சகோதரர் ஒரு வாகன ஓட்டியாக இருந்துள்ளார். விபத்தில் சிக்கி நடு முதுகு தண்டவடம் ஒடிந்து படுக்கையில் இருந்தார். அவர் தான் அங்கு அரசர் மாதிரி. தண்ணீர் , சாப்பாடு என அவரை நல் முறையில் கவனித்து கொள்வார்கள். இல்லாவிடில் எல்லோருக்கும் திட்டு விழும். அவரிடம் அவர்கள் வீட்டில் அனைவரும் நடுங்கி நிற்பார்கள். சிலவேளைகளில் அக்குடும்ப சண்டையில் தீர்ப்பு வழங்கி கொண்டிருப்பார், சில வேளைகளில் அவர் நண்பர்களுடன் அரசியல் கதைத்து கொண்டிருப்பார். அவருடைய சத்தம் மட்டுமே எங்களுக்கு பரிசயமாக இருந்தது, கிட்ட போய் பார்ப்பது கிடையாது. அவருடைய உருவம் சத்தம் எல்லாம் எனக்கு ஒரு வித பயத்தை கொடுத்துள்ளது.
எங்கள் கிளாடிஸ் டீச்சர் அழகாக இருப்பார். ஆனால் அவர் வாழ்கை ஒரு போராட்டமே என அவருடைய முகம் சொல்லியது.
எனது குழந்தை பருவத்தில் , அதிக நேரம் எனது வீட்டைவிட அங்கு இருந்தது போல் தான் உணருகின்றேன் .எனது வீட்டில் எனது சகோதரனும் சகோதரியும் சிறு பிள்ளைகளாய் இருந்ததால் எனக்கு கிடைக்க வேண்டிய நிறைய சலுகைகள் மறுதலிக்க பட்டதாகவும் சில வேளைகளில் விட்டு கொடுக்கும் சூழலுக்கும் தள்ள பட்டேன். ஆகயால் டுயூஷன் வீட்டில் நான் செல்ல பிள்ளையாகவே உணர்தேன். அங்கு காலை தமிழும், மதியானத்திற்க்கு மேல் மலையாள மொழியும் கற்ப்பிக்க பட்டேன். பின்பு முதல் வகுப்புக்கு சேர்த்த போது அம்மா, தாய் வழி கல்வி என்ற நோக்குடன் தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். எங்கள் ஆசிரியை ‘குழந்தை டீச்சர்'(பெயர்). முகம் எப்போழுதும் போர்களத்தில் நிற்ப்பது போன்றே இருக்கும். மேலும் தமிழ் ஆசிரியர்கள் , வித விதமாக அடித்தார்கள்.சிலர் கை மொளியில் அடிப்பின் ,சிலரோ தொடையில் கிள்ளுவர், சிலர் கட்டிபிடித்து கவுகூட்டு பக்கம் தேடி நுள்ளி வைப்பர். இலங்கயில் தமிழ் மக்களுக்கு ஆர்மிகாரர்கள் தெரிந்தது போலவே எனக்கு தமிழ் ஆசிரியர்கள் தோன்றினர். மேலும் எனது தோழன் சபீர்,பமீஜா,போன்றவர்கள் மலையாளம் வகுப்பில் இருந்ததால், அம்மாவிடம் சண்டை பிடித்து மலையாளம் வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அஸீஸ் சார்,அயிஷா பீபி டீச்சர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தனர். பேபி டீச்சருக்கு நான் மலையாளம் பள்ளிக்கு செல்வதில் துளியும் விருப்பம் இல்லை.
நானும் அவனுடைய வகுப்பில் கிட்ட கிட்ட உட்கார்ந்து கொள்வோம். எங்கள் நட்பு நன்றாக சென்றது. அவனுடைய கூட்டாளிகள் அப்பாஸ், ராஜன், ஜெயன் போன்றோர் எனக்கும் கூட்டாளிகள் ஆகினர். அதில் ராஜன் 2 வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு சென்று விட்டான். கடிதம் எழுதி கொள்வோம். ஒரு முறை அவனுடைய அப்பாவுடன் என்னை பார்ப்பதற்க்காய் எங்கள் வீட்டிற்க்கு வந்திருந்ருந்தான் . பின்பு அவனை கண்டதே இல்லை. பிந்து,மோன்சி,ஜெயா, ரம்லது,ரஷீதா ,லதா,போன்றவர்கள் வகுப்பு தோழிகள் ஆகினர். சவுதாம்மா என்ற ஒருத்தி எங்கள் வகுப்பில் இருந்தாள் அவள் என்னை அடிப்பாள்.அவளுடைய முகம் அம்மை வந்த தழும்புக்களால் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. இவளை சரிகட்ட ஜெயாவின் உதவி தேவை பட்டது. ஒரு முறை சவுதாவை ஜெயா விரட்டி அடித்துவிட்டாள். பின்பு என்னை பார்த்தால் பயந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தாள் மேலும் அதன் பின் நாங்கள் உற்ற தோழிகள் ஆகினோம். (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன் சேர்ந்து குளத்தில் தாவி தற்கொலை செய்து கொண்டாள்.)
வெள்ளி கிழமைகளில் எங்களுக்கு மதியம் மாணவர் கூட்டமைப்பு சம்மேளனம் நடக்கும். மாணவர்களே சேர்ந்து பாட்டு ,நடனம், பேச்சு என தொகுத்து வழங்குவோம்.எல்லோரிடம் காசு சேர்த்து; மிட்டாய்,சந்தனம் வாங்கி பகிர்ந்து அளித்து வெள்ளி கிழமை என்பது எங்களுக்கு பெரும் விழா போன்றே இருக்கும். எங்கள் பகுதியில் கிடைக்கும் உண்ணி பூக்கள் கொண்டு மேசையை அலங்கரிப்போம்.
4 வது வகுப்பு வந்த போது ஆண்,பெண் என்ற பெரும் சண்டையில் உடைந்தது சபீறுடன் ஆன எனது தோழமையுமே. அவனுடன் பேசினால் எங்கள் பெண்கள் சங்கத்தை அவமதித்தது போன்று ஆகி விடும் என்பதால் அவனை பார்த்தால் பேசுவதே இல்லை, 5-ம் வகுப்புக்கு பின்பு இருபாலருக்கும் தனி தனி வகுப்பறை என்பதால் அவனை பார்க்கும் சூழலே அத்து போனது. 7 ம் வகுப்பு வந்த போது பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு நின்ற போது அவனுடைய வாக்கு எனக்கு கேட்டிருந்தேன். பின்பு 10 வகுப்பு வந்த போது ஒரே வகுப்பில் டியூஷனில் இருந்தோம். சிறு சிரிப்பை தவிற பேசி கொள்ளும் வாய்ப்பை உருவாக்கவில்லை. யாரும் அவதூறாக கதைத்து விட கூடாது என இருவரும் இடைவெளியை உருவாக்கி இருந்தோம். நானும் அம்மா என்ற ராணுவ பிடிக்குள் வந்துவிட்டேன்.ஆகினும் எங்கள் தோழமை அவன் மனதிலும் மாறாது இருந்துள்ளது என அறிந்தேன் இன்னொரு பள்ளி நண்பன் வழியாக.
பின்பு நான் கல்வி என வேறு பிரதேசம் சென்ற போது அவன் வியாபாரத்தில் வந்து விட்டான் அவனது தந்தையை போன்று.
திருமணத்திற்க்கு பின்பு எனது கணவருடன் அவன் கடைக்கு சென்ற போது கதைத்திருந்தேன். அவனுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறினான். அவனுடைய குழந்தைகள் ,மனைவியை காண என்னை அழைப்பான் என விரும்பினேன் ஆனால் அவனுடைய மன நிலை எவ்வாறாக இருந்தது என தெரியவில்லை. ஆகினும் நட்பு, அதையும் தாண்டி புனிதமான அன்பு அழியாதது!
என் நண்பருடைய தோழி தற்போது உலகத்தில் இல்லை என்பது வருத்தமாக இருந்தது. ஆகினும் அவருடைய நினைவில் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.அவருடைய வார்த்தைகளில் இருந்து, பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய உறவு என புரிந்து கொள்ள முடிந்தது. தற்போது ஓர் உயர் பதவியில் இருக்கும் எனது நண்பர், தான் வாழ்க்கையில் வந்து போன தோழி அதும் தற்போது உலகத்தில் இல்லாத தோழியே மனதில் நினைவுகூறுகின்றார் என்றால் இதுவே மனிதம்.இதுவே உண்மையான நட்பின் சிறப்பு.
எப்போழுதும் எனது குழந்தைகளுக்கு மனித உறவுகளின் தேவையை பற்றி சொல்லி கொடுப்பது உண்டு. தீவிரமான ,தன்னலமற்ற உறவுகள் காணுவது பேணுவது அரிதாக உள்ளது.
இணையம் வழி பழைய நட்புகளை காணும் போது, ஏன் புதிய உறவுகள் கிடைக்கும் போதும் நாம் அடையும் மகிழ்சி எண்ணில் அடங்காதது. ஒரு இணைய நண்பரே காண எனது கணவருடன் சென்றிருந்தேன். அவர் பின்பு கதைத்த போது உங்களை விட உங்கள் கணவர் எனக்கு ரொம்ப நண்பர் ஆகி விட்டார் என கூறினார். சமீபத்தில் எனது கணவர் தன்னுடைய பால்யகால நண்பரே(தற்போது காலிபோர்னியா) ஆர்குட் வழியாக கண்டடைந்தார். அவர் இந்திய வந்த போது சந்தித்து நட்புக்கு மேலும் வலு சேர்த்தனர்.
நன்றி
ஜோஸபின் கதைக்கிறேன்.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும்
iLamaik kaala ninaivugaL. asaipoduvathil aanandham. padipporukkum aanandham.
pagirvukku nandri!
pagirvukku nandri!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» நண்பனும் விரோதியும்
» நேற்று இரவுபார்ட்டியில் நண்பனும் அவரின் தோழர்களும்.
» மீனுவும் நண்பனும் ஆடுமாட்டம் (உங்களால் முடியாது )
» என்னுடைய ஏக்கம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum