சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இந்திய-இலங்கை உறவுகள் _ Khan11

இந்திய-இலங்கை உறவுகள் _

Go down

இந்திய-இலங்கை உறவுகள் _ Empty இந்திய-இலங்கை உறவுகள் _

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 16:55

இந்திய-இலங்கை உறவுகள் _ India-Sri-Lanka-flag_2_2
இந்தியா இலங்கையின் நெருங்கிய அயல்நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. இரு தரப்பினரும் அறிவாற்றல்,கலாசாரம்,மதம், மொழி சம்பந்தப்பட்ட மரபுவழித்தொடர்புகளைக் கொண்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சகல விதமான சமகால நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக காலப்போக்கில் முதிர்ச்சி அடைந்து விருத்தியடைந்துள்ளன.

இரு நாடுகளினதும் பங்களிப்பிலான கலாசார, நாகரிக பாரம்பரியம் மற்றும் இருநாட்டு மக்களினதும் விருத்தியடைந்த பரஸ்பர உறவுகள் ஆகியன பன்முக பங்குடைமையை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளன. சமீபத்திய வருடங்களில் அதிஉயர் அரசியல் மட்டத்திலும் வளர்ந்து வரும் வர்த்தக, முதலீட்டு மட்டத்திலும் அபிவிருத்தி,கல்வி, கலாசாரம்,பாதுகாப்பு ஆகியவற்றிலும் முக்கிய சர்வதேச விவகாரங்களில் விரிவான புரிந்துணர்வைப்பொறுத்த வரையிலும் இருநாடுகளும் நெருங்கியதொடர்புகளை ஏற்படுத்திசெயல்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய-இலங்கை பொருளாதார ஈடுபாடு

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய-இலங்கை உறவுகள் _ Empty Re: இந்திய-இலங்கை உறவுகள் _

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 16:55

இந்தியாவும் இலங்கையும் கடந்த தசாப்தத்தில் துரிதமாக வளர்ந்துவரும் பரஸ்பர வர்த்தகத்துடனும் இலங்கையில் பல்வேறு முன்னணி இந்திய கம்பனிகளின் முதலீட்டோடும் இலங்கையில் இருப்பைக் கொண்டுள்ளதுடன் தீவிரமானதும் முன்னேற்றமானதுமான பொருளாதார வர்த்தக பங்குடைமைகளை கொண்டுள்ளன. இலங்கை இந்தியாவின் மிகப்பெரும் சார்க்வர்த்தகப்பங்காளி நாடாகும். அதே போன்று இந்தியா உலகநாடுகளில் இலங்கையின் மிகப்பெரும் வர்த்தகப்பங்காளி நாடாகும்.

எமது தற்போதைய பரஸ்பர பொருளாதார செயற்பாட்டு மட்டத்திற்கு 1998ஆம் ஆண்டிலும் 2000ஆம் ஆண்டிலும் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் அமுலாக்கல் பெரும் தூண்டு கோல்களாக இருக்கின்றன. அதனை அடுத்த 8 வருடங்களில் பரஸ்பர வர்த்தகம் சுமார் ஐந்து மடங்கு அதிகரித்தது. உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக 2009ஆம் ஆண்டில் பின்னடைவு ஏற் பட்டதன் பின்னர் வர்த்தகம் மீண்டும் எழுச்சி பெற்றது. இலங்கையின் புள்ளிவிவரங்களின்படி 2007ஆம் ஆண்டில் 2.07 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த பரஸ்பர வர்த்தகம் 2010ஆம் ஆண்டில் 3.04 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. 2009ஆம் ஆண்டின் இதேகாலப் பகுதியில் 1.73 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்ததாக இருந்த இலங்கைக்கான இந்திய ஏற்றுமதிகள் 2010ஆம் ஆண்டில் 2.57 அமெரிக்க டொலர் பெறுமதிவாய்ந்தவையாக அதிகரித்தன. இது 32சதவீத அதிகரிப்பாகும்.

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய-இலங்கை உறவுகள் _ Empty Re: இந்திய-இலங்கை உறவுகள் _

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 16:56

2009ஆம் ஆண் டில் 333.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்தவையாக இருந்த இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதிகள் 2010ஆம் ஆண்டில் 4781.23 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து 30 சதவீத வளர்ச்சியைக் கண்டது. இந்திய கம்பனிகள் மிகப் பெரும் தொகையான 500 மில்லியன் டொலரை இலங்கையில் முதலீடு செய்துள்ளன. 2010ஆம் ஆண்டில் இலங்கை பெற்றுக்கொண்ட 516மில்லியன் டொலர் மொத்த முதலீடுகளில் 110 மில்லியன் டொலர் இந்திய கம்பனிகளின் முதலீடுகளாகும். ஐஓசி, டாட்டாஸ், பாரதி எயார் ரெல்,பிரமால் கிளாஸ், எல்ஐசி, அஷோக் லேலன்ட், எல்அன்ட்ரி, டாஜ் ஹோட்டேல்ஸ் ஆகியன இலங்கைக்கு வியாபித்துள்ளன. சமீபத்திய மாதங்களில் இரு நாடுகளும் விரிவான பங்குடைமை உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன் இந்த உடன்படிக்கை விரைவில் பூர்த்தியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத் துறையும் இரு நாடுகளுக்குமிடையே முக்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒரு துறையாகும். இலங்கைக்கு இந்தியா மிகப்பெரிய தொரு சுற்றலாச்சந்தை வட்டாரமாகும். 2010ஆம் ஆண்டில் இலங்கைக்கு 125,000 இந்திய சுற்றலாப்பயணிகள் விஜயம் செய்துள்ளார்கள். இலங்கைக்கு அந்த வருடத்தில் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் இது 20 சதவீதமாகும். இதேவேளை இந்தியாவுக்கு அதிகளவில் சுற்றுலா மேற்கொள்ளும் முதல் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய-இலங்கை உறவுகள் _ Empty Re: இந்திய-இலங்கை உறவுகள் _

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 16:57

2010ஆம் ஆண்டில் சுமார் 200,000 இந்தியாவுக்கான சுற்றுலா விசாக்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கியுள்ளது. கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையே படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டதுடன் இருவழி சுற்றுலாப் பயணங்களும் தொடர்புகளும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பொருளாதாரத்தில் முதலீடு செய்யும் பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும், இந்தியாவில் இலங்கையின் முதலீடும் சமீபத்திய வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காண்பித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை,2010ஆம் ஆண்டில் இலங்கையில்110மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து மிகப்பெரும் நேரடி முதலீட்டு நாடாக விளங்குகிறது என்று தெரிவித்துள்ளது. அபிவிருத்தி ஒத்துழைப்பை பொறுத்த வரையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை செய்கிறது. தெற்கு ஆசியாவிலேயே இலங்கைதான் மிகக்கூடுதல் தொகையான உதவிகள், கொடைகள்,சலுகைஅடிப்படையிலான கடன் கள் ஆகியவற்றை இந்தியாவிடமிருந்து பெறுகிறது.

அபிவிருத்தி ஒத்துழைப்பு மூலம் இந்திய-இலங்கை பங்குடைமை அரசியல் புரிந்துணர்வு அடித்தளம், கடந்த காலவரலாறு, பூகோளயதார்த்தங்கள், சமூக,கலாசார கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்புகளை இந்தியா இலங்கையுடன் கொண்டுள்ளது. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு, ஆற்றல் விருத்தி, மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றில் எமது நிபுணத்துவ பகிர்வு ஆகியவற்றினாலும் அது ஊக்குவிக்கப்படுகிறது. அபிவிருத்தி ஒத்துழைப்புக்கென கடைப்பிடிக்கப்படும் மாதிரி ஆலோசகத் தன்மையையும் பதிலளிக்கும் தன்மையையும் கொண்டிருப்பதுடன் இலங்கையுடன் பங்குடைமை அடிப்படையிலானதுமாகும்.

2009ஆம் ஆண்டில் இலங்கையில் ஆயுத யுத்தம் முடிவடைந்ததோடு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பில் பன்மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை அமுல் செய்ய இந்திய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது. நன்கொடை, கடன் ஆகியவற்றிலான திட்டங்கள் இவற்றில் அடங்குகின்றன. இந்த உதவியின் ஆரம்பக்கட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணம், அபிவிருத்தி ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டதாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் ஆயுத யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தவுடன் இந்தியா மேற்கூறப்பட்ட துறைகளில் அதன் ஈடுபாடுகளை அதிகரித்துக் கொண்டது. பிரதம மந்திரி டாக்டர் மன்மோஹன் சிங் இலங்கைக்கு 500 கோடி ரூபா (105 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நிவாரண, புனர்வாழ்வு, புனர் நிர்மாணத் திட்டத்தை அறிவித்தார். மிக அண்மையில் 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையிலான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 50,000 வீடுகளை கட்டிக் கொடுப்பதென அறிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களில், 250,000 குடும்ப பொதிகள், 2009ஆம் ஆண்டுமார்ச் மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 50,000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த அவசரகால மருத் துவமனை, கண்ணிவெடிகளை அகற்ற 7 இந்திய குழுக்களை நியமித்தமை, 10,000 மெற்றிக் தொன் கூரைத்தகடு விநியோகம், இடம்பெயர்ந்த மக்களை மீளக்கு டியமர்த்துவதற்கு 95,000 விவசாய உபகரண விநியோகம், இடம் பெயர்ந்தவர்களுக்கென 400,000 சீமெந்து மூடை விநியோகம், இடம்பெயர்ந்தவர்களுக் கெனஒரு மாதகால அவயவங்களைப் பொருத்தும் முகாம் ஆகியன உட்பட பல் வேறு நிவாரண, மீள் குடியேற்ற உதவிகளை இந்தியா வழ ங்கியுள்ளது. வட மாகாணத்தில் விவசாய சமுதாயத்தின ருக்கு உதவுவதற்கென 500 உழவு இயந்திரங்களும் பல் வேறு வகையான விதை பொருட்களும் வழங்கப்பட்டன.

காலகதியில், புனர்வாழ்வுத் திட்டங்களில் கவனம் திரும்பியதை அடுத்து அதற்கான பல்வேறு திட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. இவற்றில்,யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையம் ஒன்று அமைத்தல், துரையப்பா விளையாட்டரங்கை புதுப்பித்தல், தொழில் பயிற்சி நிலையங்களை அமைத்தல்,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மருத்துவ மனைகளை புனரமைத்து அவற்றுக்கு உபகரணங்களை வழங்குதல், மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்களையும் உபகரணங்களையும் விநியோகித்தல், பேருந்துகள், கணினிகள் விநியோகம் மூலம் கல்வித்துறைக்கான உதவிகள், பலாலி விமானநிலைய புனர்நிர்மாணம், காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு ஆகியன அடங்கும். வட பகுதியில் யுத்தத்தின் போது சேதமடைந்த வீடு கள், பாடசாலை கள் மற்றும் கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்வதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இந்தியா அபிவிருத்தி திட்டங்களை அமுல்செய்து வருகிறது. இல ங்கையில் பேராதனையில் ஆங்கில மொழிப் பயிற்சி நிலை யம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்க ப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத் தின் உதவியுடன் இல ங்கையின் பல பகுதிகளிலும் மின்னணு கற்கை நிலை யங்கள் நிறுவப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் வாகரை பிரதேசத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் ஒன்று அமுல் செய்யப்பட்டது. புத்தளத்தில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டமொன்றுக்கும் இந்தியா உதவியளித்துள்ளது. இத்திட்டம் 2009ஆம் ஆண்டில் பூர்த்தி அடைந்தது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சமூக,கல்வி நிறுவன ங்களுக்கு அவ்வப் போது பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணத்தில் டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு உபகரண விநியோகத்திற்கு உதவியதுடன் 150 படுக்கைவசதிகளைக் கொண்டகட்டிடம் ஒன்றும் இந்திய உதவியுடன் அந்த மருத்துவமனையில் அமைக் கப்பட்டுவருகிறது. நுவரெலியாவில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மக்களுக்கு வசதியான போக்கு வரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான றெயில்-பஸ் சேவையை நடத்துவதற்கான திட்டம் ஒன்றை இந்தியா அமுல் செய்துள்ளது. திருகோண மலையிலுள்ள கிழக்கு மாகாண பல் கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று இந்த வருடத்தில் பூர்த்தி அடைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு கணினிகளை வழங்குவதற்கான திட்டம் ஒன்று தற்போது அமுல் செய்யப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில தொழில்களில் பயி ற்சி அளிப்பதன் மூலம் விதவைப் பெண்களுக்கு வலுவூட்டு வதற்கான திட்டமொன்று சுமார் 2 மில்லியன் டொலர் செலவில் இந்திய சேவா நிறுவனத்தினால் அமுல்செய்ய ப்பட்டுவருகிறது. _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய-இலங்கை உறவுகள் _ Empty Re: இந்திய-இலங்கை உறவுகள் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum