Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......
4 posters
Page 1 of 1
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சுpன்னப்பையனைபோல.... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி..... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு.....
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்..... ...
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா..... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து....
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து......
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்....
நன்றி. ஷேக் மூசா (மேலக்காவேரி )

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......

வாழ்த்துக்கள் தோழர் நிச்சயம் பலரின் எண்ணக்குமுறலான கவிதை ஒன்று வாழ்த்துக்கள்.

கவிதை அழகாக இருக்கிறது
ஆனால் தலைப்பு தவறு....!
துபாய்க் கணவா... என்றால்... கட்டாரில் ஒரு கணவன், பகரினில் ஒருகணவன், அமெரிக்காவில் ஒரு கணவன் என நாட்டுக்கு நாடு ஒரு கணவன் உள்ளது போல் ஒரு தோற்றம் கொடுத்துவிடும்.....
எழுதியவருக்குத் தெரிவித்துவிடுங்கள்... "துபாயிலிருந்து வந்துவிடு என்கணவா...." என தலைப்பை மாற்றிவிடச் சொல்லி ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......
நான் இந்த கவிதையை இதோடு மூன்று முறையாக படிக்கிறேன்.
வேறு வேறு இடங்களில். அருமையான கவிதை.
:!+: :!+: :!+: :!+:
வேறு வேறு இடங்களில். அருமையான கவிதை.
:!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......
யாதுமானவள் wrote:அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
கவிதை அழகாக இருக்கிறது
ஆனால் தலைப்பு தவறு....!
துபாய்க் கணவா... என்றால்... கட்டாரில் ஒரு கணவன், பகரினில் ஒருகணவன், அமெரிக்காவில் ஒரு கணவன் என நாட்டுக்கு நாடு ஒரு கணவன் உள்ளது போல் ஒரு தோற்றம் கொடுத்துவிடும்.....
எழுதியவருக்குத் தெரிவித்துவிடுங்கள்... "துபாயிலிருந்து வந்துவிடு என்கணவா...." என தலைப்பை மாற்றிவிடச் சொல்லி ...
அதிகமாய் நாங்கள் சொல்லுவது செல்வது ,சிங்கை ,மலேசியா,அடுத்து துபாய்
அதனால் தான் ,அவர் துபாய் கனவா என்று சொல்லிருக்கலாம் .
நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.......
உரக்க சொல்லுவோம் எழுதிய தோழருக்கு
பாராட்டு .
பாராட்டு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............
» துபாய் டாப் 11 கட்டிடங்கள்-துபாய்
» வந்துவிடு என்னவனே......
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
» திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
» துபாய் டாப் 11 கட்டிடங்கள்-துபாய்
» வந்துவிடு என்னவனே......
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
» திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum