Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிரகங்கள் ?
Page 1 of 1
கிரகங்கள் ?
கிரகங்கள் நம்மை பாதிக்கிறது உண்மைதான். பூமி சுத்தறதால தான் இரவு பகல், பருவ காலம்,நில நடுக்கம் சுனாமி எல்லாம். சூரியனாலதான் உலகத்துக்கு எல்லா சக்தியும் கிடைக்குது. ஆனா பில் கேட்ஸ் ஆறதுக்கு அம்பானியாறதுக்கும் கிரகம் தான் காரணம்னு சொன்னா எப்படி? தனிப்பட்ட ஒரு மனிதன் வாழ்வில் கிரகங்கள் உண்டாக்கும் மாற்றம் பற்றிய அடிப்படையில்லாத பழைய ஜோதிடக் கருத்துகளும், பிழைப்புக்காக அதை விடாப்பிடியாக பரப்பி ஒரு கூட்டம் மக்களை இருட்டில தள்ளுறது தான் வருத்தமான விஷயம்.
வானத்துல கிரகங்களும் நட்சத்திரங்களும் தனியாக அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பது போல தெரிந்தாலும் ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்கள் போல கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு சக்தியால் கை கோர்த்துக்கொண்டு தான் சுற்றுகின்றன. துணைக்கோள்கள் கோள்களை சுற்றுகின்றன. கோள்கள் சூரியனை சுற்றுகின்றன. எல்லாம் சேர்ந்தது தான் சூரிய மண்டலம். சூரிய மண்டலத்தின் சக்தி ஆதாரமே சூரியன் எனும் நட்சத்திரம் தான். கிரகங்களுக்கு சுய சக்தி கிடையாது.
இது போல் சூரியனுடன் சேர்த்து கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒரு பெரிய சக்தி மையத்தை சுத்தி வருது. இதை பால் வெளி(milky way) ங்கிற கேலக்ஸி என்கிறோம். இது போல பல்லாயிரம் கேலக்ஸிகள் பிரபஞ்ச மையத்தை சுத்துது. இது நா சொல்லலே NASA சொல்லுது.
வானத்தை அண்ணாந்து பாத்தா தெரியற நட்சத்திர கூட்டங்களை இந்த ஜோதிடர்கள் பன்னிரெண்டு ராசியா பிரிச்சு அடுக்கிட்டாங்க. இந்த ராசிங்க எந்த ஷேப்ல அன்னிக்குள்ள ஆளுங்களுக்கு தெரிஞ்சுதோ அதுக்கேத்த மாதிரி ஆடு மாடுன்னு எல்லாம் பேர வச்சுகிட்டாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொரு நட்சத்திரங்களை கூட இது ஆம்பளை நட்சத்திரம் இது பொம்பள நட்சத்திரம் இது ‘அலி’ன்னு நுணுக்கமா பாத்து கண்டு பிடிச்சிட்டாங்க. விட்டாங்களா? அதுக்கு ஜாதி வேண்டாமா? குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் தந்திரமா வகுத்து வச்சிட்டாங்க. அதோட ஒருத்தன் பொறந்த ராசி எதுவோ அதுங்கணக்கா குணமும் இருக்குமாம். மாட்டு ராசின்னா மாட்டு குணம். எப்பூடி? தராசு போல இருக்கிற துலாம் காரங்க நீதிபதியாக சான்ஸ். டாக்ட்ருக்கு சிரிஞ்ச் ராசி இருக்காண்ணு கேட்காதீங்க.
ஒரே ராசியில இருக்கிற நட்சத்திரமெல்லாம் ஒரு இடத்திலா இருக்கு? இல்லை ஒன்னுகொண்ணு பல்லாயிரம் ஒளிவருச தூர வித்தியாசம் இருக்கு. தூரத்தில வர்ர ஆளையும் ரொம்ப ரொம்ப தூ……ரத்துல வர்ர ஆளையும் ஒரே திசையில பார்த்தா அப்பாவும் புள்ளையின்னா சொல்ல முடியும். ஆனா ஒரே ராசியா சொல்றாங்களே.
பூமத்திய ரேகையிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் நேராக நகரும் பூமியின் அச்சான துருவங்கள்ள இருந்து பார்த்தா அது சுத்துவது போலிருக்கும். அதாவது நமக்கு சூரியன் சுள்ளென்று நடுமண்டைய தடவிக்கிட்டு கிழக்கே இருந்து மேக்கால போகும். ஆனா துருவத்துல நாய்குட்டி மாதிரி தொடு வானத்துல சுத்தி சுத்தி வரும். இதனால நிலநடுக்கோட்டுக்கு வடக்கே அலாஸ்க்கா, நார்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் சோசியம் வேலை செய்யாது. காரணம் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணிநேரம் ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆடிப்போய் விடுகிறது.
ஜோதிடர்கள் நம் வானத்த பார்த்து தான் தான் கிரக அமைப்பை கணிக்கிறார்கள். அதனால் மற்ற கிரகங்க்ளோடு பூமியும் சூரியனை மையமாக சுற்றுகிற உண்மையை மறந்து விடுகிறர்கள். உதாரணமாக ஜன்னல் வழியே வெளியே பார்க்கும் போது எந்த வாகனம் எந்த திசையில் நம்ம்மைக் கடந்து செல்கிறது என்று குறிப்பெடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் இருப்பது ஒடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனமாக இருந்தால் அந்த குறிப்பில் என்ன பயன்? இப்போது சொல்லுங்கள் நம் ஜோதிடக் கணக்கு எந்த அளவு உண்மையாக இருக்குமென்று.
நல்லதோ கெட்டதோ நேரடியாக நம்மை அதிகம் பாதிப்பது சூரிய சக்தி அதாவது நம்ம ஸ்டேட் கவர்ண்மென்ட் மாதிரி (ஸ்.. கண்டிப்பாக பாலிடிக்ஸ் இல்லை) அப்புறம் மில்கிவே செண்ட்ரல் கவர்ன்மென்ட் மாதிரி. மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் பக்கத்து ஸ்டேட் மாதிரி. முல்லை பெரியாறு, காவிரி போன்ற பெரிய பிரச்சனையெல்லாம் கிளப்பாது. கிளப்பினாலும் ஜோசியத்துக்கு உதவாது காரணம் நமக்கு பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஒளியே நம்மை அடைய 50 ஒளி வருசம் ஆகும் அதாவது நாம் பொறக்கிறப்ப உள்ள நட்சத்திர பலன் ரிடையர்ட ஆகும் போது தான் வரும். ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். கணக்கு போட்டு பாருங்க நம்ம வாழ்கைய பாழாக்கிறதுக்கு இவ்வளவு தூரத்திருந்து ட்ராவல் பண்ணி ஆள் வரணுமா? நாமளே போதாது? டீடெய்லா வேணும்னா இங்கே பாருங்க.
கோளகள் ஒவ்வொரு ராசி மண்டலங்களா சும்மா போய ரெஸ்ட் எடுத்திகிட்டு சுத்திகிட்டு இருக்காம். நட்சத்திரங்கள் இருக்கிறது பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான ஒளி வருசங்களுக்கு அப்பால இதில சந்திரன் பூமித்தாய் முந்தானைய பிடிச்சுட்டு சுத்துது மத்த கிரகங்கள் தேமேன்னு அது பாடுக்கு சூரியனை சுத்துது . இது எப்போ விருந்துக்கு போச்சு. அதெல்லாம்இல்ல இந்த கிரகங்கள் அந்த ராசிகள்ள இருந்து வர்ற சக்திய ரிப்ளெக்ட் பண்ணுதாம் அதை தான் இப்படி சொல்றாங்களாம். இருக்கட்டும் இருக்கட்டும். அப்போ பக்கத்தில சூரியன் இருந்துகிட்டு நடு மண்டைய பொளக்கிறதே இதும் சக்தியும் எங்கியோ இருந்து வரும் துக்கினியூண்டு நட்சத்திர சக்தியும் ஒண்ணா?
ஜோதிடத்தில் எல்லா கோள்களையும் கணக்கில் எடுப்பதில்லை ஆனால் சூரியனை சந்திரனை மட்டுமல்ல ராகு கேது இல்லாத கிரகத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.நிஜ கிரகத்துக்கும் இதுக்கு சம்பந்தமில்லை கண்ணுக்கு தெரியாத சக்தி மண்டலங்களைத்தான் கணக்கில் கொள்கிறோம்னு சொன்னாலும், அதை கணக்கில் எடுக்காத அறிவில தரும் வானியல் தகவலகளக் கொண்டு தான் பஞ்சாங்கள் திருத்தி வெளியிடுகிறர்கள்.
ஒரு வாதத்துக்கு இதையெலாம் சரின்னு வச்சாலும் எல்லா மக்களையும் ஒண்னா தானே கிரகம் புடிக்கணும்?.ஏன் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி போட்டு தாக்குது?அது அவிங்க அவிங்க பொறந்த நேரமாம். அந்த நேரத்து கிரகங்க பொஸிசன் எப்படி இருக்கிறத கட்டங்களா வரைஞ்சு வச்சு அது தான் ஜாதகம் . ஆனா இந்த கவுண்ட் டவுன் ஏன் குழந்தை பிறந்ததும் ஸ்டார்ட் ஆகுது ? எப்படி அது தனிப்பட்ட் வாழ்வில் பாதிக்கிறது என்பது யாருக்கு தெரியும்.
நியாயப்படி குழந்தை பிறக்கிறதுக்கு ஒன்பது மாசத்துமுன்னே தனி உயிராக தோன்றி விடுகிறது. முதல் செல் தனக்கே உரிய குரோம்சோம்கள் ஜீன் அமைப்புகளோடு உருவாகும் போது அது தனி உயிர் ஆகி விடுகிறது. வயித்தில இருக்கிற குழந்தை இந்த உலகத்தில் இல்லையா? கிரகங்கள் பாதிக்காதா? நண்பன் சொல்றான் கல்யாண டேட்டை வச்சு கணிச்சாதான் சரியா வருமாம். ஏன்னா அதுக்கப்புறம் கிரக பாதிப்பு கடுமையா இருக்காம்.
பிற கிரகங்களின் ஈர்ப்பு விசை ஒன்றுமே இல்லை எனும் அளவு பூமியின் ஈர்ப்பு விசை தான் அதிகம் பாதிக்கிறது. ஆனா காலடியில இருக்கிற பெரிய பூமிக்கிரகம் பத்தி ஜோதிடம் கண்டுகொள்ளவில்லை. ஏன்? ஹையித்தி மக்களை அந்த கிரகம் விழுங்கப் போறதை ஏன் அறிய முடியல? நட்சத்திரங்களின் ரேடியேசன் பாதிக்கிறது என்றால் அதை விட மிக மிக அதிகமான ரேடியசனை சூரியன் சுள்ளென்று தருகிறது .
சோதிட முறைகளிலெயே பல வகை இருக்கிறது. அதுவே ஒன்றையொன்று பொய்யாக்கிடுது. பலன் சொல்றதுக்கு இதுல நெறய கணக்குகள் சிஸ்ட்மெல்லாம் இருக்கு மெனக்கெட்டு எல்லாம் எல்லாம் படிச்சா எப்படி வேணும்னாலும் பலன் சொல்லலாங்கிற அளவு தெளிவாய் குழப்பியிருப்பாங்க.
மொத்தத்தில ஜோதிடத்தை பற்றி ஒரே வரியில் சொன்னால்
பில்டிங் ஸ்டாங்காத்தான் இருக்கு பேஸ்மென்டு வீக்கு.
நன்றி: தமிழ் குருவி
Similar topics
» நவ கிரகங்கள் - 1
» ஜோதிடம் ஒரு அலசல்: கிரகங்கள் என்ன செய்யும்?
» விண்வெளியில் புதிய கிரகங்கள் !
» குமிழ்கள் அல்ல கிரகங்கள்
» பூமி அளவு கொண்ட இரு கிரகங்கள் கண்டுபிடிப்பு
» ஜோதிடம் ஒரு அலசல்: கிரகங்கள் என்ன செய்யும்?
» விண்வெளியில் புதிய கிரகங்கள் !
» குமிழ்கள் அல்ல கிரகங்கள்
» பூமி அளவு கொண்ட இரு கிரகங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum