Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்
2 posters
Page 1 of 1
மர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்
புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் ஊடுருவியுள்ளதாக தக வல் பரவியதையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் வன்முறைச் சம்ப வங் களி ன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயம் டைந்துள்ளனர். இதேவேளை, மன்னார் பேசாலைப் பகுதியில் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனி தர்களை துரத்திச் சென்ற பொதுமக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக சிறுவர்கள் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
புத்தளத்தில் களேபரம் புத்தளம் நகர சபைக்குட்பட்ட மணல் குன்று கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவர் பிரவேசித்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து குறித்த நபர்களை தேடிச் சென்ற பொது மக்களுக்கும் கடமையிலிருந்த பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்து இவர்களுள் நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தினால் புத்தளம் நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து புத்தளம் பிரதான வீதியில் பயணித்த வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர்.
அச் சமயம் கடமையை முடித்து விட்டு பொலிஸ் நிலையம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் பலத்த தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தளம் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் பலத்த அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் புத்தளம் நகர சபைக்குட்பட்ட மணல்குன்று கிராமத்தில் மர்ம மனிதர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை இளைஞர் ஒருவர் அவதா னித்து ள்ளார்.
குறித்த இளைஞர் கூக்குரலிடவே அவ்விடத்தில் கூடிய பொது மக்கள் மர்ம மனி தர்களை தேடிச் சென்றுள்ளனர். அப்போது குறித்த மர்ம நபர்கள் கிராம சேவை யாளர் ஒருவரின் வீட்டினுள் ஓடி ஒளிந்ததாகவும் ஆனால் குறித்த வீட்டிலிருந்து பொலிஸார் இருவரே வெளியே வந்ததாகவும் தகவல்கள் பரவியுள்ளன.
இதனையடுத்து அவ்விடத்துக்கு வருகைதந்த பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி காயமடைந்தோரில் 13 வயது சிறுவன் ஒருவனும் பெண் ஒருவ ரும்அடங்குகின்றனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயணித்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
நகரில் கலவரம்
மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தகவல் பரவியதையடுத்து புத்தளம் நகரிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து புத்தளம் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டன.
இச் சமயம் அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் அவர் மீது பலத்த தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலதிக பொலிசாரும் கடற்படையினரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு கூடியிருந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு தரப்பினர் வேண்டுகோள் விடுத்த அதேநேரம் வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர கூட்டம்
நிலைமை மோசமடைந்ததையடுத்து புத்தளம் பெரிய பள்ளிவாசலில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேடியர் கமகே, புத்தளம் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, புத்தளம் ஜம்இய்யதுல் உலமா நிர்வாகிகள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன்போது புத்தளத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை உடனடியாக கட்டுப் படுத் துவது தொடர்பில் ஆராயப்பட்டது. புத்தளம் நகரில் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலி சாரையும் கடற்படையினரையும் உடனடியாக திருப்பியழைப்பது எனவும் இராணு வத்தினரை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானி க்கப்பட்டது. அத்துடன் பொது மக்கள் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் மக்கள் வழமை போன்று தமது நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரிகேடியர் கமகே கேட்டுக் கொண்டார்.
இதற்கமைய தற்போது இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகி ன்றர். பொது மக்களும் தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளனர்.
பேசாலையிலும் பதற்றம்
இதேவேளை, மன்னார் பேசாலை பகுதியில் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் பேசாலை கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கடற்படை முகாமுக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் குறித்த கடற்படை முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு பொதுமக்களும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புகாரணமாக சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 8.30 மணியளவில் பேசாலை கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். அப்போது அங்கிருக்கும் கடற்படை முகாமுக்குள் மர்ம நபர்கள் சென்று ஒளிந்து கொண்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மர்ம நபர்களை ஒப்படைக்குமாறு கோரி பிரதேசவாசிகள் முற்றுகைப் போராட்டத்தை மேற்கொண்டனர். பொதுமக்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்புத் தரப்பினர் கோரிய போதும் அதற்கு மக்கள் இணக்கம் தெரிவிக்காததால் வானத்தை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனையடுத்து மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினார்.
ஆலயமணி ஒலி
இதன்காரணமாக அப்பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக் கொண்டு வரப்பட்டதும், ஆலய மணிகளில் ஒலி எழுப்பப்பட்டு பிரதேச மக்கள் அனைவரும் புனித வெற்றிமாதா ஆலய முன்றலுக்கு அழைக்கப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் வெற்றிமாதா ஆலய முன்றலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் ஆயர் உரையாற்றுகையில்,
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களாகிய நீங்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. எனக்கு அறிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நான் ஆவன செய்வேன் என்றார். இக்கூட்டம் நேற்று நள்ளிரவு வரை இடம்பெற்றது. _
Re: மர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்
அப்படி போடு அருவாள...
Similar topics
» புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!
» மர்ம மனிதனால் இன்று அட்டாளைச்சேனை பீதியில்
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
» கொள்ளைக்காரருக்கு பொலிஸ் சீருடையை இரவல் கொடுத்த கான்ஸ்டபிள்!
» மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
» மர்ம மனிதனால் இன்று அட்டாளைச்சேனை பீதியில்
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
» கொள்ளைக்காரருக்கு பொலிஸ் சீருடையை இரவல் கொடுத்த கான்ஸ்டபிள்!
» மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum