Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
Page 1 of 1

சென்னை, ஆக.26-
சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
உண்மையான
சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்
அளிக்காமல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க
வேண்டும்.இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற் கல்வி
ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர
ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
இதனால்
இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்
பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய்
செலவு ஏற்படும்.
முனைவர் முத்துக்குமரன் குழு
அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும்
இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொதுப் பாடத் திட்டம்
மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது. இதனை நன்கு உணர்ந்த எனது அரசு, ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள்,
கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உட்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும்
உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக் கல்வி ஆண்டில் 1082 கோடியே 71
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.
மேற்கண்ட
திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து
செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.
மேலும்,
நிலை உயர்த்தப் பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர்
பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, 90 கோடியே 70
லட்சம் ரூபாய் செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில்
ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1985
ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
குழந்தைகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன. மாணவர்களிடம்
இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஒரே
மாதிரியான புத்தகப் பைகள் கற்றலுக்குத் தேவையான ஜாமெட்டரி பாக்ஸ்
கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள்
மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல்
வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 119 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
சுத்தம்
மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் பள்ளிக் கூடங்களில் அமையப் பெற வேண்டும்
என்பது எனது திடமான எண்ணம் ஆகும். எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5 ஆயிரம் ஆசிரியர்
அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக, அரசுக்கு ஆண்டு
ஒன்றுக்கு 60 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், குழந்தைகளின்
புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்
பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச்சுமையை தூக்குவதால் ஏற்படும்
உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல்
இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ் நாட்டில் முப்பருவ முறை,
அறிமுகப்படுத்தப்படும்.
முழுக் கல்வியாண்டிற்குரிய
பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு
பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள்
நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை
பெரிதும் குறைக்கப்படுவதுடன், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகச்
சுமையினால் ஏற்படும் இன்னல்கள் நீக்கப்படும் என்பதை மன நிறைவுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும்
மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத்
தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன்
கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
எனவே,
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் புகைப்படத்துடன்
கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவ-மாணவிகளின்
திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்கு அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை
மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின்
சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி
செல்லும் மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல்
அறிமுகப்படுத்தப்படும். இந்த விளையாட்டினால் மாணவ, மாணவியரின் அறிவுத்
திறன் வளர்வதுடன், கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலும் விரிவடையும்.
கணினி
மூலம் கற்பது பள்ளிகளில் தற்போது இன்றியமையாததாக உள்ளது. மாணவ- மாணவிகள்
தமது பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பற்பல குறிப்புகளையும்
பாடத்திற்கு ஏற்ற மேற்கோள்களையும் மற்றும் தேவையான தகவல்களையும் அறிந்து
கொள்வதற்கு கணினி முக்கியமான ஒன்று என்பதனை உணர்ந்து, அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளேன்.
அதனைத்
தொடர்ந்து, எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் பயன் பெறும்
விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளின் வகுப்புறைக்
கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் இன்பர்மேஷன்,
கம்யூனிக்கேஷன் டெக்னாலஜி என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
இத்திட்டத்தில்
எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக
மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா
மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின்
விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச்
சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த
அவைக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக்
கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால்,
மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன்
கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை
உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!
» புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum