Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!
நோன்பு பெருநாள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும்,அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் இறைவனை நினைவு கூறுவதற்கான நாள் என்பது தெளிவாகிறது. ஆனால் இதையெல்லாம மறந்துவிட்டு பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, மது அருந்துவது, சூதாடுவது போன்ற அனைத்து தீமையான செயல்களையும் இந்த பெருநாளன்றுதான் செய்கிறார்கள்.
பெருநாள் தொழுகை:
பருவமடைந்த ஆண், பெண் அனைவரின் மீதும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும்.
தொழுகை நேரம்:
பெருநாள் அன்று முதல் வேளையாக தொழுகையை முடிப்பது சிறந்ததாகும். ஆனால் அதிகமான இடங்களில் காலை 10:30 மணிவரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையை தொழுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறுதான் தொழவேண்டும்.
இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். (அறிவிப்பவர் : பர்ரா பின் ஆஸிப் (ரலி) நூல்:புகாரி)
எங்கே தொழ வேண்டும்?
திடலில்தான் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்ஆகிய இருபெருநாள்களிலும் சிறப்புத்தொழுகை இரண்டுரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இருபெருநாள் தொழுகையையும்திடலில் தான்தொழ வேண்டும்.“மற்றபள்ளிகளில் தொழுவதைவிட மஸ்ஜிதுன்நபவியில் தொழுவது 1000 மடங்குநன்மை அதிகம்” (புகாரீ) என்றுசொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைமஸ்ஜிதுந் நபவீயில்தொழாமல் திடலில்தொழுததன் மூலம்திடலில் தொழுவதன்முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவேஇரு பெருநாள்தொழுகைகளையும் திடலில்தான் தொழவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாளிலும், ஹஜ்ஜுப்பெருநாளிலும் (பள்ளிக்குச்செல்லாமல்) முஸல்லாஎன்ற திடலுக்குச்செல்பவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
தடுப்பு (சுத்ரா):
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் சுத்ரா வைத்து தொழுதுள்ளார்கள். நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி)
பெருநாள் தொழுகையில் பெண்கள்:
பெருநாள்தொழுகையில் பெண்கள்கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்.மேலும் மாதவிடாய்ஏற்பட்ட பெண்களும்திடலுக்கு வரவேண்டும். அவர்கள்தொழுகையைத் தவிரமற்ற நல்லகாரியங்களில் கலந்துகொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும்மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்றகன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு)அனுப்புமாறும், அப்பெண்கள்வீட்டிலிருந்து வெளியாகிமுஸ்லிம்கள் தொழுகின்றஇடத்திற்குச் சென்றுஅவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டுமாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம. பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின்தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழிதனது (உபரியான)மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:உம்மு அத்திய்யா(ரலி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
ஒரு வழியில்சென்று மறுவழியில் திரும்புதல்:
பெருநாள்தொழுகைக்காகத் திடலுக்குச்செல்லும் போதுஒரு வழியில்சென்று வேறுவழியாகத் திரும்புவதுநபி வழியாகும்.பெருநாள் வந்துவிட்டால் நபி
ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்)பாதையை மாற்றிக்கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் ரலி), நூல்: புகாரீ
தொழுகைக்குமுன் சாப்பிடுதல்:
நோன்புப்பெருநாள் தொழுகைக்குமுன்னர் நபி (ஸல்) அவர்கள்சாப்பிட்டு விட்டுதொழச் செல்வார்கள்.சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல்நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள்புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் ரலி), நூல்: புகாரீ.
நோன்புப்பெருநாள் தினத்தில்நபி (ஸல்)அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜுப்பெருநாளில் (குர்பானிபிராணியை) அறுக்கும்வரை சாப்பிடமாட்டார்கள்.அறிவிப்பவர்: புரைதா ரலி), நூல்: இப்னுகுஸைமா
முன்பின் சுன்னத்துகள் இல்லை:
இரு பெருநாள்தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துகள்கிடையாது. நபி (ஸல்) அவர்கள்இரு பெருநாள்தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத்தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்)அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்றுஇரண்டு ரக்அத்கள்தொழுதனர். அதற்குமுன்னும், பின்னும்எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம் .
பாங்கு இகாமத் இல்லை:
இரு பெருநாள்தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது. இரு பெருநாள் தொழுகையை பாங்கும்இகாமத்தும் இல்லாமல்ஒரு தடவைஅல்ல; இரு தடவைஅல்ல; பல தடவைநபி (ஸல்)அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர்பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம்
மிம்பர் இல்லை:
வெள்ளிக்கிழமைஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவதுபோல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக்கூடாது. தரையில் நின்று தான்உரை நிகழ்த்தவேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள்வழிகாட்டியுள்ளார்கள். மதீனாவின் ஆளுநராகஇருந்த மர்வான்பெருநாள் அன்றுமிம்பரில் ஏறிபயன் செய்தபோது.“மர்வானே! நீர்சுன்னத்திற்கு மாற்றம்செய்து விட்டீர்!பெருநாள் தினத்தில்மிம்பரைக் கொண்டுவந்துள்ளீர். இதற்குமுன்னர் இவ்வாறுகொண்டு வரப்படவில்லை…” என்று இடம்பெற்றுள்ளது. ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.
நபி (ஸல்)அவர்கள் பெருநாளன்றுஒரேயொரு உரையைநிகழ்த்தினார்கள் என்பதற்கேஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்உள்ளன. இரண்டுகுத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்அமர்வதற்கோ எந்தஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக)வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம்கூறினார்கள். தரையில்நின்று மக்களைநோக்கி (உரைநிகழ்த்தி)னார்கள்.மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்: இப்னுமாஜா.
தொழும் முறை:
பெருநாள் தொழுகைக்கு சில கூடுதலான தக்பீர்கள் உண்டு. நபி (ஸல்)
அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகைக்கு சொல்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா). இந்த தக்பீர்களின் போது ஒவ்வொரு தக்பீர்களுக்கிடையில் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீஸும் இல்லை. முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ளவேண்டும். அதன் பின் கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறிக் கொள்ளவேண்டும். தக்பீர்களுக்கிடையே
கைகளை உயர்த்தவோ, பிரிக்கவோ, ஏதேனும் திக்ருகள் சொல்லவோ நபி (ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை.
தக்பீரும் பிரார்த்தனையும்:
இரு பெருநாள்களிலும்அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும்வண்ணம் அதிகமதிகம்தக்பீர்கள் கூறவேண்டும். மேலும்திடலில் இருக்கும்போது, தமதுதேவைகளை வல்லஇறைவனிடம் முறையிட்டுக்கேட்க வேண்டும்.திடலில் கேட்கும்துஆவிற்கு முக்கியத்துவமும்மகத்துவமும் உள்ளது.
பெருநாளில்நாங்கள் (தொழும்திடலுக்கு) புறப்படவேண்டுமெனவும், கூடாரத்திலுள்ளகன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச்செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம் .பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.ஆண்களின் தக்பீருடன்அவர்களும் தக்பீர்கூறுவார்கள். ஆண்களின்துஆவுடன் அவர்களும்துஆச் செய்வார்கள்.அந்த நாளின்பரக்கத்தையும், புனிதத்தையும்அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்முஅத்திய்யா (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
அல்லாஹு அக்பர்என்று கூறுவதுதான் தக்பீர்ஆகும். பெருநாளைக்குஎன நபி
(ஸல்) அவர்கள் தனியான எந்தத்தக்பீரையும் கற்றுத்தரவில்லை. அதற்குஆதாரப்பூர்வமான எந்தச்செய்தியும் இல்லை.மேலும் பெருநாளில்கடமையான தொழுகைகளுக்குமுன்னால் அல்லதுபின்னால் சிறப்புதக்பீர் சொல்லவேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள்இல்லை. மேலும்பெருநாளில் தக்பீர்களைச்சப்தமிட்டு கூறக்கூடாது.
submit_url = "http://abuwasmeeonline.blogspot.com/2011/08/blog-post_28.html"
Similar topics
» பெருநாள் தொழுகை !
» பெருநாள் தொழுகை
» மினா போர்ட்டில் இருக்கும் பள்ளியில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைப் பெற்றது !
» மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
» நபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)
» பெருநாள் தொழுகை
» மினா போர்ட்டில் இருக்கும் பள்ளியில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைப் பெற்றது !
» மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
» நபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum