சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

பெருநாள் தொழுகை Khan11

பெருநாள் தொழுகை

3 posters

Go down

பெருநாள் தொழுகை Empty பெருநாள் தொழுகை

Post by gud boy Tue 6 Aug 2013 - 21:51

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)
2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
3) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)
4) நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உன்றுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த திக்ரும் இல்லை. அல்லாஹ்வை புகழக்கூடிய, பெருமைப்படுத்தக்கூடிய, துதிக்கக்கூடிய வார்த்தைகளை கூற வேண்டும். உதாரணமாக
 سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ الله ُ، وَالله ُأَكْبَرُ
பெருநாள் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ இல்லை. பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்தும் இல்லை.
ஸதகத்துல் ஃபித்ர்
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
 2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
 3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி, இத்தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸாயி)
 4) நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி, ”தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றி திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தர்மத்தை கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு, இத்தர்மம் செய்தவர், நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ”தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாம்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!
 சட்டங்கள்: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக, மீதப் பொருள் மற்றும் தானியம் இருப்பின், அவர்கள் இத்தர்மத்தைக் கொடுக்க தகுதி பெறுவார்கள். பெருநாள் அன்று உண்ண தானியம் இல்லாதவர்கள், இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.
அளவு: நடுத்தரமான அளவுடைய ஒருவரின் இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு, ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே, கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும். இன்றைய நிறுவையின் படி, கிட்டத்தட்ட இரண்டரைக் கிலோ அரிசி வழங்குவது அதன் அளவாகும்.
 நேரம்: இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தவர் இக்கடமையை நிறைவேற்றியவராகமாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.
- See more at: http://niduri.com/?p=6446#sthash.ZcaIiTqH.dpuf
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெருநாள் தொழுகை Empty Re: பெருநாள் தொழுகை

Post by gud boy Tue 6 Aug 2013 - 22:03

பெருநாள் தொழுகையில் பெண்கள் .

பொதுவாகப் பெண்கள் பள்ளி வாசலுக்கு வருவதை அனுமதித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்கள் பள்ளி யில் தான் தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடவில்லை. அதை வலியுறுத்தவும் இல்லை. ஆனால் வேறெந்த தொழுகைக்கும் வலியுறுத்தாத அளவுக்கு பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 324, 351, 974, 980, 981, 1652)



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 971)

பெருநாளுக்கென ஒரு பரக்கத் இருக்கின்றது. அந்த நாள் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் (மாதவிடாய்ப் பெண்களும்) தக்பீர் சொல்ல வேண்டும். ஆண்கள் துஆச் செய்யும் போது பெண்களும் தங்களுக்காக துஆச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. கற்பனைக் காரணங்களைக் கூறி பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைக் தடுப்பவர்கள், பரக்கத்தான அந்த நாள் பெண்கள் செய்ய வேண்டிய வணக்கங்களுக்குத் தடையாக அமைந்து விடுகின்றார்கள். பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதற்கு, சுன்னத்தான திடல் தொழுவதை விட்டுவிட்டு பள்ளிவாசலைத் தேர்ந்தெடுத்ததும் மிக முக்கியமான காரணம்

திடல் தொழுகை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீது அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 956)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசல் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுந் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1190)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரணப் பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதிருப்பார்கள். இன்னும் சில ஊர்களில் பெண்களுக்கென தனியாக பெருநாள் தொழுகை நடத்துகின்றார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இப்படி பெண்கள் தனியாக ஓரிடத்தில் கூடி ஜமாத்தாக பெருநாள் தொழுகை தொழுததாக எந்த ஒரு ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை.

தொழுகையும் குத்பாவும்பெருநாள் தொழுகை ஜும்ஆ தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுகையும், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின் போது முதல் இமாம் உரை நிகழ்த்தி விட்டுப் பின்னர் தொழுகை நடத்த வேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதல் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 962)



பாங்கு இகாமத் உண்டா? .

நோன்புப் பெருநாலும், ஹஜ் பெருநாலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. (அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, (நூல்: புகாரி 960)



முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். எனவே பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.



பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் உண்டா? .

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைத் தான் துவக்குவார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 956)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 964, 989, 1431, 5881, 5883)


சில ஊர்கலில் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.



தொழுகை முறை .

பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்துக் காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும். பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்க் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. நிய்யத் என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல! எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும். வாயால் சொல்வது நபிவழியல்ல! இதை முன்பே நாம் விளக்கியுள்ளோம்.

கூடுதல் தக்பீர்கள் .

சாதாரண தொழுகைகல் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்ல வேண்டும்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 492 அபூதாவூத்)

இந்த ஹதீஸில் 7+5 தக்பீர்களை கிராஅத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது.

சாதாரண தொழுகைகல் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையிலும் உண்டு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு ஓத வேண்டிய அல்லாஹும்ம பாஇத் பைனீ...... அல்லது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ..... போன்ற துஆக்கல் ஏதேனும் ஒன்றை ஓதிக் கொள்ள வேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு கிராஅத் ஓத வேண்டும்.



தக்பீர்களுக்கு இடையில்....

ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான். தஹ்லீல் என்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல் தஸ்பீஹ் என்றால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல் தஹ்மீத் என்றால் அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல் எனப் பொருள்.



இதே போல் தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்வது தான் இதன் பொருளாகும்.

தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்க மாட்டோம். இது போன்று தான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக் கூடாது. 7+5 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள். இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் ஏதேனும் திக்ருகள் சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார்கள். சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்ற திக்ரை தக்பீர்களுக்கிடையில் கூறும் வழக்கம் சில பகுதிகல் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை.

இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ ஆதாரம் ஏதுமில்லை.



ஓத வேண்டிய அத்தியாயங்கள் .

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓத வேண்டிய சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் தொழுகையில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (அத்தியாயம்: 87) ஹல் அதாக ஹதீசுல் காஷியா (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்து விட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1452)



அபூ வாகித் அல்லைஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்ட போது, அவ்விரு தொழுகைகளிலும் காஃப் வல் குர்ஆனில்மஜீத் (அத்தியாயம்: 50) இக்தர பதிஸ் ஸாஅ (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 1477)

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓத வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய சூறாக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிலிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

இவ்வாறாக மற்ற தொழுகைகளைப் போன்ற ருகூவு, சுஜுதுடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.



பெருநாள் (குத்பா) உரை .

பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவது நபிவழியாகும்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் இரு பெருநாட்கலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 962)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் முதலில் தொழ வேண்டும். அதன் பிறகு தான் உரை நிகழ்த்த வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான ஊர்கலில் தொழுவதற்கு முன்பாக ஓர் அரை மணி நேர உரை முதலில் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெருநாள் தொழுகை Empty Re: பெருநாள் தொழுகை

Post by பானுஷபானா Wed 7 Aug 2013 - 10:08

பகிர்வுக்கு நன்றி

நாங்க பள்ளியில் தான் போய் தொழுவோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெருநாள் தொழுகை Empty Re: பெருநாள் தொழுகை

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 10:49

தகவல்களுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருநாள் தொழுகை Empty Re: பெருநாள் தொழுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum