Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரசிகர்களுக்கு பெரும் திரை விருந்தாக மங்காத்தா
Page 1 of 1
ரசிகர்களுக்கு பெரும் திரை விருந்தாக மங்காத்தா
அஜித்தின் 'மங்காத்தா' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல தடைகளைக் கடந்து பெரும்
எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியான அஜித்தின்..
...பொன்விழாப் படமான மங்காத்தாவை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 'பில்லா' படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அஜித்துக்கு படமே அமையாத நிலையில், இந்த 'மங்காத்தா' படத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் கடந்த ஓராண்டாக இந்தப் படம் தயாராகி வந்தது. ஆனால் வெளியாகும்போது பல்வேறு சிக்கல்களை இப்படம் சந்தித்தது. படம் வெளியாகும் தேதியைகூட அறுதியிட்டு கூறமுடியாத நிலை. ஆனால் கடைசி நேரத்தில் ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, படத்தை சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட வைத்தார். உடன் ராதிகாவின் சரத்குமாரின் ராடன் மீடியாவும் படத்தை இணைந்து வெளியிட்டது.
நேற்று காலை படத்தின் முதல்காட்சிக்கு அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சிறப்புக் காட்சிகள் காலை 4 மணியிலிருந்தே ஆரம்பித்து விட்டன. படம் பார்த்த அத்தனை பேரும் மீண்டும் படத்தைக் காண டிக்கெட்டுகளுக்காக அலைய ஆரம்பித்துள்ளனர். ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்த இரு தினங்களில் வாரவிடுமுறை என தொடர்ந்து ஹாலிடே மூடில் உள்ள ரசிகர்களுக்கு பெரும் திரை விருந்தாக 'மங்காத்தா' அமைந்துவிட்டது.
இந்த ஒரு வாரத்தில் பல கோடிகளை 'மங்காத்தா' அள்ளிவிடும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரசிகர்களுடன் இன்று காலை சத்யம் தியேட்டரில் 'மங்காத்தா' படத்தை நடிகர் சிம்பு அஜித் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார்.
சிம்பு, தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்காத்தா விமர்சனம்
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. அஜீத்துக்காக இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என்பதுதான் சரியாக இருக்கும். உள்ளூர் சமாச்சாரத்தை கொஞ்சம் ஹாலிவுட் சாயத்தில் முக்கியெடுத்திருக்கிறார். களைகட்டுகிறது ஆட்டம்!
இந்தியாவின் நிஜ சூதாட்டமான ஐபிஎல் கிரிக்கெட்டில், பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார் ஜெயப்பிரகாஷ். இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி.
இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், ஜெயப்பிரகாஷிடம் வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நால்வர் கோஷ்டி. இன்னொரு பக்கம், இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் உஷாராகி, அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பையில் களமிறக்குகிறது. விஷயம் புரிந்து உஷாராகிறது வைபவ் கோஷ்டி. அப்போதுதான் இந்த நால் அணியை மோப்பம் பிடித்து, அவர்கள் மூலமே விஷயத்தைக் கறந்துவிடுகிறார் அஜீத். சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி இவர்.
இப்போது இவரும் அந்த ரூ 500 கோடியை தானே திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிறார் அஜீத். அந்தப் பணத்துக்காக அஜீத், ஜெயப்பிரகாஷ், போலீஸ் அதிகாரி அர்ஜூன் மற்றும் அஜீத்தின் உடனிருக்கும் நால்வரும் பெரும் சேஸிங்கை நடத்துகின்றனர். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் மங்காத்தா ஆட்டத்தின் க்ளைமாக்ஸ்.
தனது 50 வது படத்தை முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பங்குபோட்டுக் கொண்ட அஜீத்தின் பக்குவத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
கிட்டத்தட்ட சரிபாதி வெளுத்த நரை, ஐந்தாறு நாள் தாடி, அசத்தலான கறுப்புக் கண்ணாடி கெட்டப்பில் மனதை அள்ளுகிறார் அஜீத். இதற்கு முன் முன்னெப்போதும் பார்த்திராத ஒரு அசத்தல் தோற்றம் இந்தப் படத்தில். எதிர்மறை நாயகன் வேடம் என்றாலே பலவித நடிப்பையும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு சுதந்திரமும் தைரியமும் வந்துவிடுகிறது போலும். நடிப்பில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே படைத்துவிடுகிறார் அஜீத். சண்டை, நடனம், ரொமான்ஸ் என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்திருக்கிறார் அஜீத்.
பல ஆண்டுகளுக்கு தனது 50வது படம் இது என தைரியமாக அவர் சொல்லிக் கொள்ளலாம்.
அஜீத்துக்கு இணையான வேடத்தில் ஆக்ஷன் கிங்காக ஜொலிப்பவர் அர்ஜூன். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகளில் அர்ஜுன் காட்டும் வேகம் அசாத்தியமானது. ஆங்கிலத்தில் Show stealer என்பார்களே, அது சாட்சாத் அர்ஜூன்தான்!
ஹீரோயின் த்ரிஷாவுக்கு பெரிய ரோல் இல்லைதான். ஆனால் கிடைத்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தி மனதை கவர்கிறார். குறிப்பாக, ரொம்ப அழகாக இருக்கிறார், இதற்கு முந்தைய படங்களில் பார்த்ததை விட!
பிரேம்ஜி வழக்கம்போல. ஆனால் கடி கொஞ்சம் ஓவர். கத்தரி போட்டிருக்கலாம் சில காட்சிகளுக்கு. அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.
மங்காத்தா பாடலில் லட்சுமிராய் அசத்தல். ஆண்ட்ரியா, வைபவ், ஜெயப்பிரகாஷ் என அனைவரிடமிருந்தும் ஒரு ஆக்ஷன் படத்துக்குத் தேவையானதை பெற்றுக் கொண்டுள்ளார் இயக்குநர்.
மைனஸ் என்று பார்த்தால் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகள். சென்ஸார் ஊமையாக்கிய பகுதிகளில் இடம்பெறும் வசனங்களை பாத்திரங்களின் வாயசைவை வைத்தே ரசிகர்கள் கண்டுபிடித்து கத்துகிறார்கள். இதை பெண்களால் ரசிக்க முடியுமா (வெளிப்படையாக!) என்பதை யோசித்திருக்க வேண்டும்.
ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் இழுவைதான். பாத்திரங்களை அறிமுகப்படுத்தவே அரைமணிநேரத்துக்கும் மேல் இயக்குநர் எடுத்துக் கொண்டது சலிப்பை தருகிறது. அஜீத், அர்ஜூன் நன்றாக சண்டை போடுவார்கள் என்பதற்காக எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
டெக்னிக்கலாகப் பார்த்தால், இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம் எனலாம். ஒளிப்பதிவில் ஜாலம் காட்டியிருக்கிறார் சக்தி சரவணன்.
யுவன் சங்கர் ராஜாவை இன்னொரு ஹீரோ எனலாம். பாடல்கள் எல்லாமே அட்டகாசம். ரசிகர்கள் ஆடித் தீர்க்கிறார்கள் அரங்கில். பின்னணி இசையும் விறுவிறுப்பு கூட்டுகிறது படத்துக்கு.
இந்தப் படத்தின் விளம்பரங்களில் எ வெங்கட் பிரபு கேம் என விளம்பரப்படுத்துகிறார்கள். அது உண்மைதான். அஜீத்துக்காக வெங்கட் ஆடிய இந்த ஆட்டத்தில் 'தல' டாப் கியரில் எகியிருக்கிறார்
Similar topics
» ரசனைக்கு விருந்தாக வருவது இக்காட்சிகள்.
» அழகு இரவுக்காட்டசிகள் உங்கள் கண்களுக்கு விருந்தாக!
» ரசனைக்கு விருந்தாக வருவது இக்காட்சிகள்...
» Mankatha -மங்காத்தா
» கண்களுக்கு விருந்தாக 16 பெண்கள் உங்கள் முன்!
» அழகு இரவுக்காட்டசிகள் உங்கள் கண்களுக்கு விருந்தாக!
» ரசனைக்கு விருந்தாக வருவது இக்காட்சிகள்...
» Mankatha -மங்காத்தா
» கண்களுக்கு விருந்தாக 16 பெண்கள் உங்கள் முன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum