சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Khan11

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 16:46

First topic message reminder :

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி
(ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து
விட்டன. அவர்களின் முன்னறிவிப்பு நடந்ததிலிருந்து அவர்கள் ஒர் ' இறைத்தூதர்
தான்' என்பது நிரூபணமாகி உள்ளது.

நடந்தது போக இனியும் நடக்கும் என
அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே
இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.

மறுமை
நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம்
யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.

மறுமை
வராது என்று நம்பவோர் ஒரு புறம், வருவதை நம்பினாலும் இப்போது வராது என்று
நம்புவோர் ஒரு புறம் என, மறுமை பற்றிய சந்தேகிப்பேர் வழிகளுக்கு மறுமை
வரும் அதற்கு முன் சில அடையாளங்கள் நிகழும் என்பதையே இந்த நூலில்
விவரிக்கப்படுகிறது.

இந்த அடையாளங்கள் ஏற்படும் காலங்களில் நாம் வாழ
நேரிடலாம், இயலாமலும் போகலாம். இந்த அடையாள நிகழ்வின் போது (ஈமானிய) இறை
விசுவாசத்தில் குழப்பம் ஏற்படும் என்பதை அறிவதால், அக்காலத்தை அடையும்
முஸ்லிம்கள் முழுமையான ஈமானுடன் மரணிக்க நாம் பிராத்திக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட மறுமைக்கான அறுவடை நிலமாக இவ்வுலக வாழ்க்கை அடைந்திட வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அன்புடன்


கே.எம்.முஹம்மது மைதீன் உலவி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 16:57

12-நபி என்று கூறுவோர் வருவர்

'இருபெரும்
குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு, அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்
கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன் வைக்கும் வாதமும்
ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக
தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும்
தன்னை 'நபி' என்று வாதாடுவான்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ|ஹுரைரா (ரலி) நூல்-புகாரீ 3609.

நபி (ஸல்)
அவர்கள்தான் இறுதி நபி என்பது இஸ்லாமிய நம்பிக்கை ஆகும். தன்னை நபி என்று
சிலர் வாதிட்ட நிலை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஏற்பட்டது. யமாமாப்
பகுதியில் முஸைலமா என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். இவன் அபூபக்கர்
(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டான். இதே போல் யமன் பகுதியில்
அஸ்வத் இப்னு அன்ஸிய்யு என்பவன் தன்னை நபி என்று அறிவித்தான். இவனும் நபி
(ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான். அபூபக்கர் (ரலி) அவர்களின்
காலத்தில் துலைஹா இப்னு குவைலித் என்பவன் தன்னை 'நபி' என்றான். ஸஜாஹ் என்ற
பெண்ணும் தன்னை நபி என்று கூறினாள். இந்த இருவரும் பின்னர் மனம் திருந்தி
இஸ்லாத்தில் இணைந்து விட்டனர் என அறியமுடிகிறது.

ஹிஜ்ரீ 60 ஆம்
ஆண்டுகளில் முக்தார் இப்னு அபீ உமைத் ஸகஃபீ என்பவன் தன்னை நபி என்று
வாதிட்டான். அவனும் கொல்லப்படான். அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களின்
காலத்தில் 'ஹாரிஸ்' என்பவன் தன்னை நபி என்றான், அவனும் கொல்லப்பட்டான்.
அப்பாஸியாக்களின் ஆட்சியின் போதும் பலர் தங்களை நபி என்று வாதிட்டதாகப்
பார்க்கிறோம்.

இதே போல் தன்னை நபி என பஞ்சாப் மாநிலம் காதியான்
எனும் ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வாதிட்டான். 1839-1908ல்
வாழ்ந்தவன் இவன். அஹ்மதியா என்ற பெயரில் புதிய மதம் கண்டான். இன்றும் கூட
அவனின் கருத்தை ஏற்றுக் கொண்ட சிலர் உண்டு. இப்படி பலரும் தன்னை நபி என
வாதிட்டோர் உண்டு. பலரும் 'நபி' என வாதிட்டாலும் சற்று பலமான இன்று
வாதிடுவோர் முப்பது பொய்யர்கள் தான். நபி (ஸல்) அவர்களும் இதனால் தான்
முப்பது என்று எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார்கள்.

தன்னை நபி எனக்
கூறி கொள்ளும் நபர்கள் வருவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து,
அப்படிக் கூறியவர்கள் வந்துள்ளனர் என்பதை அறிவதிலிருந்தும் மறுமை நாள் வெகு
விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:03

13-பூகம்பம் அதிகரிக்கும்

கல்வி
அகற்றப்படும், பூகம்பங்கள் அதிகரிக்கும், காலம் சுருங்கும், குழப்பங்கள்
தோன்றும், கொலை அதிகரிக்கும், செல்வம் கொழிக்கும் அதுவரை மறுமை நிகழாது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்-புகாரீ.

ஈரான், எகிப்து, இந்தோனேசியா, சீனா, ஜப்பான்,
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன.
இதுமாதிரி இனி பூகம்பங்கள் அடிக்கடி அதிக அளவில் நிகழும் என விஞ்ஞானிகள்
அறிவித்துள்ளனர். பூகம்பங்கள் அதிக அளவில் நிகழ்வதும் மறுமை நாள்
சமீபத்தில் வர உள்ளது என்பதை பறைசாற்றுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:03

தவறான தொழிலும் நல்லது என ஆகும்

'ஒரு
காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா?
(அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்' என்று
நபி (ஸல்) கூறினார்கள் - அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ.

நல்ல
வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் எல்லாம்
போய்விட்டது. 'பணம் வேண்டும், சொத்துப் பெருக வேண்டும்' அதற்கு எந்த
தொழிலாயினும் செய்யத் தயார் என்ற எண்ணத்தற்கு மனிதன் வந்துவிட்டான். தான்
செய்யும் தொழில் மூலம் சமூகமே பாதிக்கும் என்று தெரிந்தாலும் அந்தத்
தொழிலையே செய்கிறான்.

'இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் தொழில்
இது' எனத் தெரிந்தும் அந்தத் தொழிலையே செய்கிறான். அனுமதிக்கப்பட்டுள்ளதா?
இல்லையா? என்ற சிந்தனை எல்லாம் போய் விட்டது. 'நாய் விற்றக் காசு
குறைக்கப்போவதில்லை' என்றும், ' சாராயம் விற்றகாசு போதையாகிவிடப்
போவதில்லை' 'கருவாடு விற்றக் காசு நாறாது' என்று கூறும் அளவுக்கு தவறான
தொழிலும் நல்ல தொழில் என ஆகி விட்டது. இதுவும் 'மறுமை நாள் இதோ வரப்
போகிறது' என்று கட்டியம் கூறுகிறது எனலாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:03

பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமையும்

மக்கள்
தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலைக் கட்டுவர்.
இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் : அறிப்பாளர் – அனஸ் (ரலி) நூல் - நஸயீ.

பள்ளிவாசல்
தொழுவதற்காக அமைக்கபடுகின்ற ஒன்று. இறைச் சிந்தனை சிந்திக்க, இறைவனை வணங்க,
அவனை நினைவு கூற பள்ளிவாசல் அவசியம் ஆகும். ஆனால் இன்று பள்ளிவாசல்களோ
ஆடம்பர அடையாளங்களாக மாறி நிற்கின்றன.

100 பேர் மட்டும் வாழும்
பகுதிகளில் 10,000 பேர் நின்று தொழும் அளவுக்கு பள்ளிவாசல் அமைவதைக்
காணலாம். சுpல ஊர்களிலோ பள்ளிவாசலை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில்
கோடிக்கணக்கில் கொட்டிச் சீரழிப்பதைக் காணலாம். 'எங்களூர் பள்ளிவாசலே
பெரும் பள்ளி' என்று கூறிட பெருமை கொள்ள பள்ளிவாசல் கட்டிடங்கள்
அமைக்கப்படுகிறது என்பதே உண்மை. இதுவும் 'மறுமை வர உள்ளது' என்பதை
அறிவுறுத்துகிறது.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:04

இறை நம்பிக்கை (ஈமானில்) தடுமாற்றம்

'கியாமத்
நாளின் ஆரம்பத்தில் (தோன்றுவதற்கு முன்) இரவின் இருள் போல் குழப்பங்கள்
ஏற்படும். காலையில் மூஃமினாக இருந்தவன், மாலையில் காபிராகி விடுவான். சிலர்
தங்களின் மார்க்கத்தை இவ்வுலகப் பொருட்களுக்காக விற்பார்கள்' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் -
திர்மிதீ, அஹ்மத்.

காலையில் மூஃமினாக இருந்தவன் மாலையில் காபிராகி
விடுவான். மாலையில் மூஃமினாக இருந்தவன், காலையில் காபிராகி விடுவான் என்பதை
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் விளக்கும் போது, 'பிறரது உயிர், உடமை, மரியாதை
ஆகியவற்றைப் பேணுபவனாக காலையில் இருந்தவன், மாலையில் அவற்றைப் பறிக்கக்
கூடியவனாக ஆவான். அதுபோல் மாலையில் பிறரது உயிர், உடமை, கண்ணியம்
ஆகியவற்றைப் பேணியவன், காலையில் அவற்றைப் பறிப்பவனாக இருப்பான்' என்று
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹிஷாம் - நூல் : திர்மிதீ.

தன்னை
மூஃமின் என்றும் கூறும் பலரிடம், ஈமான் இவர்களிடம் உள்ளதா? என்று எண்ணும்
அளவுக்கு அவர்களின் செயல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். மார்க்கத்தை
அற்பக்காசுக்கும், பதவிக்கும் மாற்றிக் கொள்வோர் உண்டு. இது மூஃமின்களிடம்
ஈமானில் ஏற்படும் தடுமாற்றம் எனலாம். இத்தகையத் தடுமாற்ற நிலை மறுமை நாள்
வரப் போகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.

முஸ்லிமாக இருக்கமாட்டான்

'தவ்ஸ்'
இனப் பெண்களின் புட்டங்கள், 'துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை
மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் 'தவ்ஸ்' இன
மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7116).

அபூ ஹுரைரா
(ரலி) அவர்கள் இந்த 'தவ்ஸ்' குலத்தைச் சேர்ந்தவர்களே. இக்குலத்தார்
இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட
'துல்கலஸா' சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள்
போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர்.
நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும்.
அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹுல் பாரீ).

'இப்பூமியில்
'அல்லாஹ், அல்லாஹ் என்று கூறக்கூடியவர் இல்லாமல் போகும் வரை மறுமை நாள்
வராது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்.

மறுமை நாள் நெருங்கும்
வேளையில் மூஃமின்களை தேடி அலைய வேண்டியதே ஏற்படும். இப்போதும் கூட
மூஃமின்கள் என்று தங்களைச் கூறிக் கொள்வோரிடம் ஈமானிய அடையாளங்களோ,
இஸ்லாமிய நடவடிக்கைகளோ இருப்பது அரிதுதான்.

இஸ்லாத்தில் இணையும்
முன் தங்களின் குலதெய்வமாக வணங்கிய சிலைகளுக்கு, முக்கியத்துவம் தரும்
அளவுக்கு முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்வோரின் நபர்களின் நிலை மாறிவிடும்.
இதற்கு உதாரணமாகவே 'தவ்ஸ்' இனத்தவர் பற்றி நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.

சிறிய அளவிலான மாற்றம், காலப்போக்கில்
'அல்லாஹ்' என்று கூறும் நபர்களே இல்லாமல் போகும் அளவுக்கு மாறிவிடும்.
அப்போது மறுமைநாள் வரும் என்று நபி (ஸல்) கூறுவதிலிருந்தும், அந்த
மாற்றத்தை நோக்கி முஸ்லிம்களில் பலர் சென்று கொண்டிருக்கின்றனர்
என்பதிலிருந்தும் மறுமை நாள் மிக சமீபத்தில் நிகழப் போகிறது என்பதை
அறியலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:04

14-(பெரிய) பத்து அடையாளங்கள்

சிறிய அளவில் ஏற்படும் அடையாளங்கள் அல்லாமல் பெரும் அடையாளங்களாக பத்து அடையாளங்களையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

'புகை
மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது,
ஈஸா நபி (அலை இறங்கி வருவது, யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வருவது.
கிழக்கே ஒன்று, மேற்கே ஒன்று, அரபு தீபப்பகுதியில் ஒன்று என மூன்று
நிலச்சரிவுகள் (பூகம்பங்கள்) நிகழ்வது. இவற்றில் இறுதியாக யமனிலிருந்து
புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டி ஒன்றிணைக்குதல் ஆகிய பத்து
அடையாளங்களை நீங்கள் காணும் வரை மறுமை நாள் வராது' என்று நபி (ஸல்)
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல் - முஸ்லிம்.

இந்த பத்து அடையாளங்களும் தொடர்ந்து ஏற்பட்டதும், அதன் பின் உலகம் அழியும். மறுமை நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

'சூரியன்
மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று
அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறை நம்பிக்கை (ஈமான்)
கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது ஈமான் (இறை நம்பிக்கை) பயனளிக்காது'
என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் -
முஸ்லிம், இப்னுமாஜா.

'சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த
நாள் வராது. அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும் போது ஈமான் கொள்வார்கள். ஆனால்
அது எவருக்கும் ஈமான் பயனளிக்காத நேரமாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா.

அந்த
பத்து அடையாளங்களின் மிக பிரதானமான மூன்று அடையாளங்கள் ஏற்படுமாயின் ஈமான்
கொள்வது கூட பயனளிக்காது என்பதிலிருந்து அந்த அடையாளங்களின்
முக்கியத்துவம் புரியலாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:05

15-(1)புகை மூட்டம்

வானம்
தெளிவான புகைகளை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை
மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்..
(அல் குர்ஆன் 44:10-11).

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று
விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம், இது ஒரு
(இறை விசுவாசியை) ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். (இறை மறுப்பாளரை)
பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை
வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபி
(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ மாலிக் (ரலி) நூல் - தப்ரானி.

மறுமை
நாள் வரப்போகிறது என்பதை எடுத்துக் கூறும் பெரும் அடையாளங்களில் ஒன்று.
வானிலிருந்து புகை வருவதாகும். அந்தப் புகை பூமியில் வசிப்போரைத் தாக்கும்.
இதில் இறைவனை நம்பி வாழும் முஸ்லிமையும் அந்தப் புகை தாக்கும். ஆனால்,
அதன் மூலம் ஜலதோஷம் அடைந்தால் ஏற்படும் சிரம அளவுக்கே மூஃமின் இருப்பான்.
ஆனால் இறைவனைப் புறக்கணித்து வாழ்ந்தவர்களை அந்தப் புகை நெருங்கும்போது அதை
அவர்கள் சுவாசித்ததும் வயிறு ஊதி உடலும் பெருத்து காது வழியாக புகை வருவது
தெரியும். கடுமையான சோதனையாக அது அமையும். இந்த புகை மூட்டச் சோதனை
வருமாயின் மறுமை நாள் நெருங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது
தான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:05

16-(2)அதிசயப் பிராணி

அவர்களுக்கு எதிரான தீர்ப்பு உறுதியாகும் போது
இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்டுத்துவோம்.
அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நம் வசனங்களை
நம்பாமல் இருந்தது தான் (அல் குர்ஆன் 527:82).

சூரியன்
மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப்பிராணி மக்களுக்குக்
காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில்
தோன்றினாலும் அதைக் தொடர்ந்து அடுத்ததும் தோன்றி விடும் என நபி (ஸல்)
கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் -
முஸ்லிம்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக அதிசயப்பிராணி ஒன்று
வரும் என்று அல்லாஹ்;வும், நபி (ஸல்) அவர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அந்தப் பிராணி பூமியிலிருந்து தான் வரும் என திருக்குர்ஆன் கூறுகிறது.
வானிலிருந்து அல்ல, என்ற உண்மையோடு அந்தப் பிராணி திடீரென வரும் என்றே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகின்றார்கள்.

மனிதர்கள் இதுவரை கண்டு
கொண்டிருக்கக்கூடிய பிராணிகளில் சேர்ந்தது அல்ல என்பது மட்டும் விளங்க
முடிகிறது. அதன் வடிவம் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக நமக்குத்
தெரிவிக்கப்படாவிட்டாலும், அது பேசும் பிராணியாக இருக்கும் என்பதை மட்டும்
விளங்க முடிகிறது. பேசும் பிராணியாக அது இருப்பதால்தான் அது அதிசயப்
பிராணியாகவும் ஆகிறது.

அந்த அதிசயப் பிராணி வந்து விட்டால்,
மறுமையின் அடுத்த அடையாளமும் உடனே வந்து விடும் என்றும் நபி (ஸல்) அவர்கள்
கூறுகிறார்கள். அதிசயப் பிராணி பற்றி நாம் நம்ப வேண்டுமே தவிர, அதன் வடிவம்
அது பேசும் மொழி பற்றி கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அது பகல்
வேளையில் வரும் என்பதால் அதை அந்த நேரத்தில் இருப்போர் காணலாம், பேசலாம்.
அப்பிராணி வரும் நேரத்தில் மக்களில் இறை நம்பிக்கையற்றவர்களே அதிகம்
இருப்பார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:06

17-(3)மேற்கில் சூரியன் உதிப்பது

அதிசயத்தக்க அடையாளங்களில் இதுவும்
ஒன்றாகும். மனிதன் இயலாத ஒன்றைக் குறிப்பிடும் போது சூரியன் மேற்கே
உதித்தாலும் உதிக்கும் அது நடக்காது என்பார்கள். அந்த அளவுக்கு சூரியன்
மேற்கே உதிப்பது என்பது இயலாத காரியம், ஆனால்...

'சூரியன்
மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள்
(இறைவனை) நம்புவார்கள். ஆனால் அதற்கும் முன்பே நம்பிக்கை கொள்ளாமல்
இருந்தோருக்கு அப்போது கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6506.

மறுமை
நாளின் நெருக்கத்தில் மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும். சூரியன்
கிழக்கில் இருந்து உதித்தால் என்ன நடக்குமோ, அதுதான் மேற்கிலிருந்து
உதித்தாலும் நடக்கும் என்று கருதிவிட முடியாது. இந்த மாற்றமான நிகழ்வு,
பெரும் பயங்கரத்தை நிகழ்த்தி விடும்.

பூமி, சூரியனைச் சுற்றி
வருகிறது. இதனால் இரவு பகல் ஏற்படுகிறது எனப் புரிந்து வைத்துள்ளோம்
மணிக்கு ஆயிரம் மைல் வேத்தில் இந்த பூமி சுழன்று வருகின்றது. இந்த அதி
தீவிர சுழற்சியின் போதுதான் சூரியன் கிழக்கில் உதிக்கிறது. திடீரென அந்த
வேகச் சுழற்சியை நிறுத்தி எதிர் திசையில் சுற்ற வைத்தால் தான் சூரியன்
மேற்கில் உதயமாக முடியும்.

நம் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய
கார் 80 கிலோ மீட்டர் வேத்தில் செல்கிறது. அப்பொது நம் டிரைவர் திடீரென
பிரேக் போட்டால் நாம் காரிலிருந்து தூக்கி எறியப்படுவோம், அல்லது காரே
தலைகீழாகக் கவிழும் அதே கார் அதே வேகத்தில் திடீரென பின்னோக்கி ஓடினால்
என்னவாகும்? விபத்து ஏற்படும் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா? மோசமான
விளைவு ஏற்படும் அல்லவா?

இது மாதிரியே பூமியின் சுழற்சி திடீரென
எதிர் திசையை நோக்கிச் சுழன்று, சூரியன் மேற்கே உதிக்குமானால், நாம் வாழும்
கட்டிடங்கள் நொறுங்கி விழும். மலைகள் கூட தூள் தூளாகி விடும். அனைத்தின்
செயல்பாடுகளும் இதரக் கோள்களும் தலைகீழ் மாற்றத்திற்குள்ளாகி உலகமே
பேராபத்திலும், பேரழிவிலும் சிக்கிச் சீரழியும்.

இப்படி ஓர் அதிர்வை – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சூரியன் மேற்கில் உதயமாகின்ற நிலையும், மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:06

18-(4)தஜ்ஜாலின் வருகை

'நூஹ்
(அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது
சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி
உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.

'ஆதம்
(அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால்
விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்)
கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - முஸ்லிம்.

'தஜ்ஜால்'
எனும் கொடியவனின் வருகையும் நாளை மறுமை நாள் வருவதற்கு முன் அடையாளமாகும்.
இந்த தஜ்ஜாலின் வருகை, பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இவனது வருகையை
பெரிய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.

தவறான அறிமுகம்.

தஜ்ஜால்
பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் சில செய்திகள், நம் மனித அறிவுக்கு ஏற்றதாக
இல்லை எனக் கருதும் சிலர், 'தஜ்ஜால்' என்பதற்கு 'தீயசக்தி' என்ற அளவில்
மட்டுமே பெர் சூட்டுகின்றனர். பிரிட்டிஷார் கையில் உலகத்தின் பாதி
இருந்தபோது, பிரிட்டனை சில மவ்லவிகள் 'தஜ்ஜால்' என்று வர்ணித்தனர். இன்னும்
சிலரோ அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில நாட்டுத்
தலைவர்களையும் கூட 'தஜ்ஜால்' என்று வர்ணித்தனர்.

இஸ்லாமிய
மார்க்கத்தின் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டிருக்கிற சிலர் தங்களின்
கற்பனைக் குதிரையில் உதித்த கதைகளை தஜ்ஜாலின் பெயரால் புனைந்து பரப்பி
விட்டனர். 'தஜ்ஜாலின் தலை வானத்துக்கும், கால் தரைக்குமாய் இருக்கும்
அளவுக்கு வளர்ந்து இருப்பான். கடலின் நீர் அவனது கரண்டைக் காலுக்கும்
கீழேதான் இருக்கும். கடலின் மீனைப் பிடித்து, சூரியனில் காட்டிச்
சுட்டுத்தின்பான். பனை மரத்தை வேரோடுப் படுங்கி பல் தேய்ப்பான்' என்று
அவர்களின் கற்பனைகள் கூறுகின்றன. இவை எதுவும் உண்மை அல்ல!.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 17:42

சரியான அறிமுகம்

'நிச்சயமாக
அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன்
அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வலது கண் திராட்சை போன்று சுருங்கி இருக்கும்'
என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இன்னு
மஸ்ஊத் (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

'இறைவனால் அனுப்பி
வைக்கப்பட்ட எந்த ஒரு இறைத்தூதரும் தம் சமுதாயத்தவரை பெரும் பொய்யனான
ஒற்றைக் கண்ணனை எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்,
நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணன் அல்ல, அவனது இரு கண்களுக்குமிடையே 'இறை
மறுப்பாளன்' என எழுதப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் - புகாரீ 7131.

ஊனமடைந்த கண்,
மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமாக சதைக் கட்டி ஒன்று தொன்படும் என்றும் நபி
(ஸல்) கூறி உள்ளனர் : நூல்கள் - முஸ்லிம், அஹ்மத்.

'ஊனமடையாத கண், பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போல் அமைந்திருக்கம்' ( அஹ்மத்).

'அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான், அவனின் உடலமைப்பு கவர்ச்சியாக அமைந்திருக்கும்' (அஹ்மத்).

'சற்று குண்டான உடலுடையவனாக இருப்பான்' (முஸ்லிம்).

'பின்புறத்திலிருந்து பார்த்தால் அவனின் தலைமுடி அலை அலையாய் இருப்பதாகத் தெரியும் (அஹ்மத்).

'பரந்த நெற்றியுடையவனாக இருப்பான்' (பஸ்ஸார்)

'குள்ளமாகவும் கால்கள் இடைவெளி அதிகம் உள்ளவனாகவும் இருப்பான்' (அபூதாவூத்).

தஜ்ஜால்
பற்றிய சரியான அறிமுகம் இது. இது அல்லாத எந்த அறிமுகமும் சிலரால் கற்பனை
செய்யப்பட்டதே என்பதை கருத்தில் கொள்க! 'அவனின் ஒரு கண் ஊனம், மறுகண் பச்சை
நிறக்கல் போல் இருக்கும்' என்பதுதான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை
ஆகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:22

தஜ்ஜால் எங்கு உள்ளான்

தஜ்ஜால் இனிமேல் பிறப்பவன் அல்ல. ஏற்கனவே
பிறந்தவன் ஆவான். அவன் தற்போதும் இருந்து வருகிறான். இவனை, கிருத்துவராக
இருந்து பின்பு இஸ்லாத்தில் இணைந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் நேரில்
ஏதேச்சையாக கண்டுள்ளார்கள். அவனை தான் கண்ட விபரத்தை நபி (ஸல்) அவர்களிடம்
கூறியபோது அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளனர். தஜ்ஜால் பற்றிய
இதர விபரம் அந்த ஹதீஸ் மூலம் நமக்குப் புரிகிறது.

நபி (ஸல்)
அவர்களின் (தொழுகைக்கான) அழைப்பாளர் 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' (தொழுகைக்கான நேரம்
வந்துவிட்டது) என்ற அறிவித்தார். இதைக் கேட்ட நான் பள்ளிவாசலுக்குச்
சென்றேன். நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடிந்ததும், நபி (ஸல்)
அவர்கள் சிரித்துக் கொண்டே மிம்பரில் அமர்ந்தார்கள். 'அனைவரும் தொழுத
இடத்திலேயே அமருங்கள்' என்று கூறிவிட்டு 'நான் உங்களை ஏன் கூட்டினேன்
என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள், 'அல்லாஹ்வும் அவனின் தூதருமே
நன்கறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம்.

அல்லாஹ்வின் மீது
சத்தியமாக, உங்களை அச்சுறுத்தவோ ஆர்வமூட்டவோ உங்களை நான் ஒன்று
கூட்டவில்லi. தமீமுத்தாரி முன்பு கிருத்தவராக இருந்தார். அவர் வந்து
இஸ்லாத்தில் இணைந்து விட்டார். தஜ்ஜால் பற்றி உங்களுக்குச் கூற
வந்ததுக்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். (அவர் என்னிடம்
கூறியதை நீங்களும் கேளுங்கள்).

லக்ம், ஜுகாம் ஆகிய சமூகத்தில்
முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன் (புயல் காரணமாக) ஒரு
மாதகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் சமயம் ஒரு தீவில்
ஒதுங்கினோம். கப்பலில் வைத்திருந்த சிறு தோணிகள் மூலம் அந்த தீவில்
நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் மயிர்கள் நிறைந்த ஒரு பிராணி எதிர்
கொண்டது. அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாதைகளை (உறுப்புக்களைக்)
கூட அவர்களால் அறிய இயலவில்லை.

அந்தப் பிராணியிடம் அவர்கள், 'உனக்கு
ஏற்பட்ட கேடே நீ என்ன பிராணி?' என்று கேட்டனர். 'ஜஸ்ஸாஸா' என்று அது
கூறிவிட்டு, 'நீங்கள் இதோ இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் செல்லுங்கள், அவர்
உங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டுவார்' என்றும் அப்பிராணி கூறியது. அந்த
மனிதனின் பெயரையும் கூறியது. அந்தப் பிராணி ஒரு பெண் ஷைத்தானாக இருக்குமோ
என்று பயந்தோம்.

நாங்கள் அந்த மடத்தை நோக்கி விரைந்தோம். அங்கு
சென்றதும் ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை இதுவைர நாங்கள்
பார்த்ததே இல்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும் முட்டுக்கால்களுக்கும் இடையே
தலையைச் சேர்த்து கழுத்தில் இரும்பால் கட்டப்பட்டிருந்தான், 'உனக்கு
ஏற்பட்ட கேடே! ஏனிந்த நிலை' என்று கேட்டோம்.

அதற்கு அந்த மனிதன்
'(எப்படியோ) என்னைப் பற்றி அறிந்து விட்டீர்களே! நீங்கள் யார்? எனக்
கூறுங்கள்' என்றான். 'நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் நாங்கள் பயணம்
செய்தபோது, ஒரு மாதம் கடல் அலையால் அலைகழிக்கப்பட்டோம். இப்போது தான் இந்த
தீவிற்கு வந்தோம். அடர்ந்த மயிர்கள் நிறைந்த ஒரு பிராணியைக் கண்டோம். அது,
நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதரைப் பாருங்கள்' என்று கூறியது. எனவே
உம்மிடம் விரைந்து வந்தோம்' என்று கூறினோம்.

'பைஸான் என்ற இடத்தில்
உள்ள பேரீத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என்று கூறுங்கள்' என அந்த மனிதன்
கேட்டான். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதற்கு அம்மனிதன் 'விரைவில்
அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் போகலாம்' என்றான். 'சூகர் எனும் நீருற்றில்
தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன்
படுத்துகிறார்களா? என்று கேட்டான். அதற்கு நாங்கள் ' ஆம், தண்ணீர்
அதிகமாகவே உள்ளது. அங்குள்ளோர் அத்தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர்'
என்று கூறினோம்.

'உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலை
என்ன? என்பதை எனக்குக்கூறுங்கள்' என அம்மனிதன் கேட்டான். 'அவர்
மக்காவிலிருந்து புறப்பட்டு, தற்போது மதீனாவில் உள்ளார்' என்று கூறினோம்.
'அரபியர்கள் அவருடன் போர் புரிந்தார்களா?' என்று அம்மனிதன் கேட்டான். ஆம்
என்றோம். 'போரின் முடிவு எப்படி இருந்தது?' என்று கேட்டான். 'அவர் தன்
அருகில் வசித்த அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்' என்று கூறினோம்.
'அவருக்கு அவர்கள் கட்டுப்படுவதே சிறந்தது' என்று அவன் கூறினான்.

நான்
இப்போது என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான்தான் தஜ்ஜால். நான்
(இங்கிருந்து) வெளிறே வெகு சீக்கிரம் எனக்கு அனுமதி தரப்படலாம். அப்பேது
நான் வெளியே வருவேன். பூமி முழுதும் பயணம் செய்வேன். நாற்பது நாட்களில்
எந்த ஊரையும் நான் அடையாமல் விட மாட்டேன். மக்கா, மதீனா இரு ஊர்களைத் தவிர.
அந்த இரு ஊர்களும் எனக்கு தடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஊர்களுக்குள்
நான் நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு வானவர் என்னை
எதிர் கொண்டு தடுப்பார். அதன் வழிகள் அனைத்திலும் அதைக் காண்கானிக்கின்ற
வானவர்கள் இருப்பர்' என்று அம்மனிதன் கூறினான்.

இவ்வாறு தமீமுத்தாரீ
(ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம் கைத்தடியை
மிம்பரில் தட்டிவிட்டு, 'இது (மதீனா) தூய்மையான நகரம், தூய்மையான நகரம்'
என்று கூறினார்கள். 'இதே செய்தியை நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் தானே'
என்று மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதும், மக்கள் 'ஆம்' என்று பதில்
கூறினர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் சிரியா நாட்டின் கடல்
பகுதியில் உள்ளான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்லை,
இல்லை! அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என்று மூன்று முறை
கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜால்
என்பவனை பார்த்தோரில் முக்கியமானவர், தமீமத்தாரி (ரலி) அவர்கள் ஆவார்.
அவர்களும் கூட கடல் பயணத்தின் போது, புயலால் திசை மாறி, ஒரு தீவுக்கு
ஒதுங்கியதால் அது எந்தப் பகுதி என்பதை சரிவர புரிந்து கொள்ள இயலாததால்
குறிப்பிட்ட இடம் பற்றி அவர்களால் கூற இயலவில்லை. இதனால் தான் நபி (ஸல்)
அவர்களும் கூட தமீமுத்தரி (ரலி) அவர்களின் தகவல் அடிப்படையில் மூன்றில் ஒரு
பகுதியாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கிறார்கள். அவன் இருக்கும் இடம்
இதுதான் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், ஒரு கடல்கரைத் தீவில் அவன்
இருக்கிறான் என்பது மட்டும் உறுதியாகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:22

தஜ்ஜால் ஒரு காஃபிர்

தங்களை நபி என்று வாதிடுவோர் பற்றி நபி (ஸல்)
அவர்கள் கூறும்போது, அவர்களை 'தஜ்ஜால்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். எனவே
இந்த தஜ்ஜாலை அவர்களில் ஒருவனாக கருதிவிடக் கூடாது.

பொதுவாக
முஸ்லிம்களை வழிகெடுக்கும் பணியில் ஈடுபடுவோரில் ஒரு சாரார் தங்களையும்
முஸ்லிம் என்று கூறிக் கொண்டே வழிகெடுப்பர். மற்றொரு சாராரோ தங்களை
முஸ்லிம் எனக் கூறாமல் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்யும்
பணியில் ஈடுபடுவார்கள். நபி என்று கூறி வழிகெடுத்த தஜ்ஜால்கள் (பொய்யர்கள்)
முதல் வகையினர். இந்த தஜ்ஜாலோ இதில் இரண்டாம் வகையினரைச் சேர்ந்தவன்.

'தஜ்ஜாலின்
நெற்றிக்கிடையே 'காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த,
எழுதத் தெரியாத அனைத்து மூஃமின்களும் அதைப் படிப்பார்கள்' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்-முஸ்லிம்.

'இஸ்பஹான்
பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான்' என்று நபி
(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் - அஹ்மத்.

தஜ்ஜால்
இயற்கையிலேயே காஃபிர். யூதன் என்பதே சரி! தங்களை நபி என்று வாதிடுவோரை
'தஜ்ஜால்' எனக்குறிப்பிடுவது, அவனைப் போல் இவர்கள் குழப்பவாதிகளாகவும்,
பொய்யர்களாகவும் இருந்ததுதான். எனவே அவர்களில் ஒருவனாக இவனைக் கருதக்
கூடாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:24

தஜ்ஜால் தன்னைக் கடவுள் எனக் கூறுவான்

'தஜ்ஜால் பிறவிக் குருடையும்,
வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம்
'நானே கடவுள்' என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன்
சோதனையில் தோற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இறைவன்' என்று ஒருவர் கூறி,
அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு
ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.

தன்னை கடவுள் எனக்கூறியும், கடவுளாக ஏற்க வேண்டும் என்று கூறியும் தஜ்ஜாலின் குழப்ப நிலைத் தொடரும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:24

தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்

'வானத்திற்கு
மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச்
செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்' என்று நபி (ஸல்)
கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கட்டுடல்
உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான்.
பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான
முகத்துடன் உயிர் பெறுவான்'

'ஒரு மனிதனைக் கொன்று அவன்
உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது'
என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர்
நூல்-அஹ்மத்.

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும்
வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும்.
அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை
நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும்,
அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு
கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். 'இதைக்
கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.

இப்படி
பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும் வீழ்வர்.
சாதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை
இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள்
செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:24

தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை

'...பின்னர்
மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள்
ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை
ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து
நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ்
இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜாலை ஏற்க மறுத்துப்
புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க
வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:25

தஜ்ஜாலிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை

'தஜ்ஜாலிடம்
தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று
காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு
என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில்
ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்' என்று
நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்கள் - புகாரீ,
முஸ்லிம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:25

தஜ்ஜால் வாழும் காலம்

தஜ்ஜால்
பூமியில் எவ்வளவு காலம் இருப்பான்? என்று நாங்கள் கேட்போது, 'நாற்பது
நாட்கள் இருப்பான். ஒரு நாள், ஒரு வருடம் போன்றும், மற்ற நாட்கள் சாதாரண
நாட்கள் போன்றும் இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:26

தஜ்ஜால் போக இயலாத ஊர்கள்

'மதினா
நகருக்கு தஜ்ஜால் பற்றிய பயம் தேவை இல்லை. அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு
நுழைவு வாயில் (பாதைகள்) இருக்கும். ஓவ்வொரு பாதையின் நுழைவாயிலிலும்
இரண்டு (வானவர்கள்) இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ பக்ரா (ரலி) நூல் - புகாரீ.

'அவன் நாற்பது
நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களுக்கும் அவன் செல்வான். ஆனால்
மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளிவாசல், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய
நான்கு பள்ளிவால்களையும் அவனால் நெருங்க இயலாது' என்று நபி (ஸல்)
கூறினார்கள் (அஹ்மத்).


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:27

தஜ்ஜாலிடமிருந்து தப்பிக்க...

தஜ்ஜால்
ஏற்படுத்தும் குழப்ப நிலைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றி, ஈமானையும்,
பாதுகாத்திட இரண்டு வழிகளை நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் காணும் மக்களுக்காக
கற்றுத் தருகிறார்கள்.

(1) அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கை விட்டும் பாதுகாப்புத் தேட நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

'அல்லாஹூம்ம
இன்னீ அஊதுபிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இறைவனா! தஜ்ஜாலின் குழப்பத்தை
விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). தொழுகையில் இதைத்
தொடர்ந்து ஓதிப் பிராத்திக்கும் எவரும் தஜ்ஜால் பின்னே போக மாட்டார்கள்.
தொழாதவர்களும், தங்களின் பிரார்த்தனையில் இதைக் கேட்காதவர்களும் தஜ்ஜாலின்
மாயா ஜாலங்களில் மயங்கி ஈமானை இழப்பார்கள். அவன் பின்னே அவனை ஏற்றுக்
செல்வார்கள்.

(2) உங்களில் ஒருவர் தஜ்ஜாலை அடைந்தால், 'கஹ்பு'
அத்தியாயத்தின் ஆரம்ப பகுதியை ஓதிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; -
முஸ்லிம், திர்மீதி.

இந்த இரண்டு வழிகள் மூலமே தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இருந்து தப்பிக்க இயலும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:27

தஜ்ஜால் கொல்லப்படும் இடம்

தஜ்ஜால்
கீழ் திசையிலிருந்து மதீனாவை குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான்.
அப்போது மலக்குகள் அவனது முகத்தை 'ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள்.
அங்கேதான் அவன் அழிவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

கஸ்பஹான்
பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை
நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு
நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள்
இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச்
செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் 'லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச்
செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள்.
அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான
தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

ஒற்றைக்
கண்ணனான, காஃபிர் என நெற்றில் எழுதப்பட்டுள்ள தஜ்ஜால் மக்களிடையே வந்து,
சில மாயாஜாலச் செயல்களில் ஈடுபட்டு, நாற்பது நாட்களில் உலகம் முழுவதும்
சுற்றி வந்து மக்களை வழிகெடுக்கும் படியான செயலில் ஈடுபடுவான் என்பது,
மறுமை நாள்வரும் முன் நடக்கக்கூடிய செயலாகும்.

தஜ்ஜாலின் வருகை
மூலம் மறுமை நாள் மிக மிக ... அருகில் வந்து விட்டது என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும். மறுமை நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் பல
நடந்து முடிந்து விட்டது போல், இதுவும் நடக்கும் என்ற உண்மையை நம் மனதில்
நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றும் எவரும் தங்கள்
பிரச்சாரத்தை பெண்களிடமிருந்தே துவங்குகின்றனர். தங்கள் மீது பெண்களுக்கு
உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சில போலி விளம்பரங்களையும் பொய்யான
வாக்குறுதிகளையும் கூறிப் பெண்களை நம்ப வைக்கின்றனர். இதே வழிமுறையைத் தான்
தஜ்ஜாலும் கையாளுவான். அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள்.
ஒரு குடும்பத்தில் மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொண்ட ஆண்கள் பலர்
இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், தர்ஹாக்களுக்குச்
செல்வதையோ, அனாச்சாரங்கள் புரிவதையோ பிரச்சாரம் செய்தாலும் கூட தடுத்து
நிறுத்த முடிவதில்லை. இதே நிலைதான் தஜ்ஜால் வரும்போதும் நிகழும்.

'பமிரிகனாத்
என்னும் இந்த உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்போது
அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவுக்கெனில்,
(அன்று) ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம்
சென்று அவர்கள் தஜ்ஜாலைப் பின்பற்றிச் சென்றுவிடக் கூடாது என அஞ்சி,
அவர்களைக் கயிற்றினால் கட்டி வைப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் - அஹ்மத்.

அல்லாஹ்வின்
மீது உறுதியான நம்பிக்கையில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் நயவஞ்சகர்கள்
அனைவரும் தஜ்ஜாலின் அற்புதங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமானை இழந்து அவனைப்
பின்பற்றிச் செல்வார்கள். எனினும், ஆண்களை விட பெண்களே அதிக அளவில்
தஜ்ஜாலைப் பின் பற்றுவார்கள் என்று இந்த நபி மொழி கூறுவதால், பெண்கள்
கூடுதலான எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். தஜ்ஜாலின்
சோதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடிய வண்ணம் இருக்க வேண்டும்.

தஜ்ஜாலை பெண்களே அதிகம் பின்பற்றுவர். கிறித்தவ வேதமான பைபிள் மற்றும் இந்து வேதங்களிலும் தஜ்ஜால் பற்றி குறிப்பு காணப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:28

19-(5) ஈஸா நபியின் வருகை

நிச்சயமாக
அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்...
(அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன் iயில் வைத்திருப்பவன் மீத
சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு
வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா
வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம்
கொழிக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

மறுமை நாள் வரும்
முன், 'வர உள்ளது' என்பதை தெரிவிக்கும் அடையாளமாக ஈஸா நபி (அலை) அவர்களின்
வருகையும் இருக்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு
முன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர்
வருவாரா? இது சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் எழவே செய்யும்.

'ஈஸா
(அலை) அவர்கள் மறுமைநாளின் அடையாளமாவார்' என்ற இறைவனின் அறிவிப்பை பலமுறை
நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாசகம், ஈஸா நபியின் வருகைக்கு
முன் வந்த 'தவ்ராத்' வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அல்லது அவர்களுக்கே
வழங்கப்பட்ட 'இன்ஜீல்' வேதத்தில் கூறப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் வந்து சென்றபின்
இனியும் வருவார் என்றே குர்ஆன் கூறுகிறது. எனவே, ஏதோ ஒரு ஈஸா அல்ல முன்பு
வந்த நபியான ஈஸாதான் மீண்டும் வருவார் என்பதே உண்மை. இதனால் தான் மறுமையின்
அடையாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின் வருகையும் அமைந்துள்ளது.

இன்னும்
மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று
விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக்
கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா)
அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய
சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான)
அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக,
அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன்.
மிக ஞானமுடையவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158).

'அவரை அவர்கள்
கொல்லவில்லை' என அல்லாஹ் அறிவிப்பதின் மூலம் அவர்கள் கொல்லப்படவில்லை
என்பதோடு 'உயிருடன் உள்ளார்' என்பதும் விளங்கும். 'உயிருடன் எங்கே
உள்ளர்கள்?' என்ற கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக தன்னிடம் உயர்த்திக்
கொண்டான் என்றும் அல்லாஹ் கூறி விட்டான், அதாவது, ஈஸா நபி (அல) அவர்கள்
'உயிருடன் வானில் உள்ளார்' என்பது மேற்கண்ட வசனம் மூலம் உறுதியாகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:28

நபி ஈஸா (அலை) வருகையை மறுப்போர்

ஈஸா
நபி (அலை) அவர்கள், மறுமையின் அடையாளமாக வருவார்கள் என்பதை மறுக்கும்
சிலரும் உண்டு. குறிப்பாக தன்னை நபி என வாதிட்டு, 'அஹ்மதியா' எனும் மதத்தை
உருவாக்கிய மிர்ஸாகுலாம் என்பவனும், அவனைப் பின்பற்றும் அவனது
மதத்தவர்களும் ஈஸா நபி முன்பே இறந்துவிட்டார்கள் என்று கூறுவர்) இந்தக்
கூட்டத்தினரை ' காதியானிகள்' என்று கூறப்படும். இவர்கள் தங்களை முஸ்லிம்கள்
என்று கூறிக்கொள்வர். (ஆனால், இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்க)

இவர்கள் குர்ஆனில் உள்ள
சில வசனங்களை வைத்தே, ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்ற வாத்ததை முன்
வைக்கிறார்கள். ஈஸா நபியின் வருகையோடு சம்பந்தப்பட்ட இவர்களின் வாதம்
உள்ளதால் அவர்களுக்குரிய பதிலை அறிந்து கொள்வது அவசியமாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:30

வாதம் - 1

'அனைத்து ஆத்மாவும் மரணத்தை அனுபவித்தே ஆக வேண்டும்'
என்று அல்லாஹ் குர்ஆனில் (3:185, 21:35, 29:57) கூறுகிறான். பிறப்பவர்
இறந்தாக வேண்டும் எனும் போது, ஈஸாவிற்கு மட்டும் சலுகை இருக்க
வாய்ப்பில்லை. அவர் இறந்து விட்டார் என்பதே உண்மை.

விளக்கம் - 1


எல்லா
உயிரினமும் மரணிக்கத்தான் வேண்டும் என்ற கருத்தில் நாம் மாற்றுக் கருத்து
கொள்ளவில்லை. ஈஸா நபிக்கு மரணமே கிடையாது என்று நாம் கூறவே இல்லை. 'இனி
அவர் இறப்பார்' என்றே கூறுகிறோம். தற்போது வானில் உள்ளார்கள். மீண்டும்
உலகிற்கு வருவார்கள், வாழ்வார்கள், மரணிப்பார்கள் என்றே கூறுகிறோம். எனவே,
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் 'ஈஸா நபி மரணித்து விட்டார்கள்' என்று
வாதம் வைக்க முடியாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:30

வாதம் - 2

'முஹம்மத்
அல்லாஹ்வின் தூதரே தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று
விட்டனர்' என்று அல்லாஹ் குர்ஆனில் (3:144) கூறுகிறான். ஈஸா (அலை) அவர்கள்
உட்பட எல்லா தூதர்களும் சென்று விட்டனர் என்பதையே இது காட்டுகிறது.

மேலும்
நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது, சில நபித்தோழர்கள் நம்ப மறுத்தனர்.
அவர்களிடம் அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தையே ஓதிக் காட்டினார்கள்.
அதன் பிறகே 'நபி (ஸல்) அவர்களும் இறப்பவர்கள்தான். இப்போது
இறந்துவிட்டார்கள்' என்று ஏற்றனர் என ஹதீஸ்கள் கூறுகின்றன.

எல்லா
நபிமார்களும் மரணித்து விட்டனர் என்று இந்த வசனத்திற்குறிய விளக்கத்தை
புரிந்திருந்தால் தான் நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களின் மரணத்தை
நம்பினர். ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை என அவர்கள் நம்பி இருந்தால், இந்த
வசனமும் அவர்களுக்கு 'நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை' என்பதைப் போதித்து
இருக்காது. ஈஸா உட்பட அனைத்து நபிமார்களும் இறந்து விட்டனர் என்று அவர்கள்
நம்பியதால்தான், இந்த வசனத்தை ஏற்று நபி (ஸல்) அவர்களின் மரணத்தையும்
ஒப்புக் கொண்டார்கள். எனவே, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை இந்த
வசனம், மற்றும் ஹதீஸ் மூலம் விளங்க முடிகிறது.

விளக்கம்- 2

ஈஸா
(அலை) அவர்கள் இனி வர உள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லையானால்,
இவர்களின் இந்த ஆதாரம் வலுவானதாகவே அமையும். ஆனால் ஈஸா (அலை) அவர்கள்
வருவார்கள் எனும் ஆதாரத்தையும் கருத்தில் கொண்டு சிந்தித்தால், 'அவருக்கு
முன் பல தூதர்கள் சென்று விட்டனர்' என்ற வசனத்திலிருந்து ஈஸா (அலை) அவர்கள்
விதி விலக்குப் பெற்றுள்ளார்கள் என விளங்கலாம்.

இது போலவே ஈஸா
(அலை) அவர்கள் உட்பட அனைவரும் இறந்து விட்டனர் என நம்பியதால் நபி (ஸல்)
அவர்களின் மரணத்தை நபித்தோழர்கள் ஏற்றுக்கொண்டனர் என்ற வாதமும் சரியல்ல.
ஈஸா (அலை) அவர்கள் வருவார்கள் என்பதை நம்பிய அவர்கள், உயிருடனும்,
உடலுடனும் உயர்த்தப்பட்டார்கள் என்றே நம்பினார்கள். 'உடல் இங்கே உள்ளது.
உயிர் மட்டுமே உயர்த்தப்பட்டது' என அவர்கள் நம்பவில்லை. அப்படி அவர்கள்
நம்பி இருந்தால், நபி (ஸல்) அவர்களின் அசைவற்ற உயிரற்ற உடலைக் கண்டபின்,
நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நம்பாமல் இருந்திருப்பார்களா? நபி (ஸல்)
அவர்களின் உடலும் காணாமல் போயிருந்தால், ஈஸா நபி போல் நபி (ஸல்) அவர்களும்
உயர்த்தப்பட்டு உயிருடன் உள்ளார்கள் என்று எண்ணலாம். ஆனால், அப்படி ஒரு
சூழலே இல்லாத போது நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு ஈஸா நபியின் மரணம் பற்றி
இணைத்து சிந்திக்க வேண்டியதில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 2 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum