சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Khan11

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 16:46

First topic message reminder :

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி
(ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து
விட்டன. அவர்களின் முன்னறிவிப்பு நடந்ததிலிருந்து அவர்கள் ஒர் ' இறைத்தூதர்
தான்' என்பது நிரூபணமாகி உள்ளது.

நடந்தது போக இனியும் நடக்கும் என
அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே
இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.

மறுமை
நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம்
யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.

மறுமை
வராது என்று நம்பவோர் ஒரு புறம், வருவதை நம்பினாலும் இப்போது வராது என்று
நம்புவோர் ஒரு புறம் என, மறுமை பற்றிய சந்தேகிப்பேர் வழிகளுக்கு மறுமை
வரும் அதற்கு முன் சில அடையாளங்கள் நிகழும் என்பதையே இந்த நூலில்
விவரிக்கப்படுகிறது.

இந்த அடையாளங்கள் ஏற்படும் காலங்களில் நாம் வாழ
நேரிடலாம், இயலாமலும் போகலாம். இந்த அடையாள நிகழ்வின் போது (ஈமானிய) இறை
விசுவாசத்தில் குழப்பம் ஏற்படும் என்பதை அறிவதால், அக்காலத்தை அடையும்
முஸ்லிம்கள் முழுமையான ஈமானுடன் மரணிக்க நாம் பிராத்திக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட மறுமைக்கான அறுவடை நிலமாக இவ்வுலக வாழ்க்கை அடைந்திட வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அன்புடன்


கே.எம்.முஹம்மது மைதீன் உலவி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:30

வாதம் - 3

'ஈஸா நபி
இன்றும் உயிருடன் உள்ளார். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. இதிலிருந்தே
உங்கள் நபியை விட எங்களின் ஈஸா சிறந்தவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்' என
கிருத்துவர்கள் நம்மிடம் பெருமை பேசக் காரணமாக அமையாமல் இருக்க ஈஸா இறந்து
விட்டார் என்று கூறத்தான் வேண்டும்.

விளக்கம் -3

நபிமார்கள்
சிலருக்கு சிலரை விட சில சிறப்புக்களை அல்லாஹ் வழங்கி உள்ளான். இதற்காக
நபிமார்களில் சிலரை விட சிலரை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. இதே
ஈஸா நபியை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை இன்றிப் பிறந்தார். நபி (ஸல்)
அவர்கள் தந்தையின் விந்து மூலம் பிறந்தார்கள். இதைவைத்துக் கூட 'எங்கள்
நபியின் பிறப்பே அற்புதம்' என கிருத்தாவர்கள் வாதாடலாம். இதற்காக 'ஈஸா
நபியும் தந்தையின் விந்து மூலமே பிறந்தார்' என்று கூறமுடியுமா?

ஈஸா
நபி (அலை) அவர்களை விட எத்தனையோ பல சிறப்புக்களை அல்லாஹ், முஹம்மத் நபி
(ஸல்) அவர்களுக்கு வழங்கி உள்ளான். பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான நபி,
இறுதி நபி, மறுமை வரை உள்ள மக்கள் அனைவரும் பின்பற்ற பட வேண்டிய நபி. ஏன்
ஈஸா (அலை) அவர்கள் இனிவரும் போது கூட முஹம்மத் நபி (ஸல்) அவர்களையே
பின்பற்றுவார் என்பன போன்ற சிறப்புக்களைக் கூறலாம்.

கிருத்துவர்களின்
முட்டாள்தனமான வாத்திற்கு அறிவுப்பூர்வமான பதில்கள் ஏராளம் உண்டு. ஆனால்,
அவர்களின் முட்டாள்தனமான வாதத்திற்காக நாம் சத்தியக் கருத்தை மாற்றிக்
கொள்ள முடியுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:31

வாதம் - 4

நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் எனக்கு போதித்துள்ளான் - அல் குர்ஆன் 19:31.

இந்த
வசனத்தில் உள்ள ஈஸா (அலை) அவர்களின் வாக்கு மூலப்படி 'அவர்கள் உயிருடன்
இருந்தால் தொழுதாக வேண்டும், ஜகாத் கொடுக்க வேண்டும்' என்று
புரியமுடிகிறது. இந்த வகையில் இப்போது அவர்கள் உயிருடன் உள்ளார்கள்
என்றால், தொழுகையின் நேரம் பற்றி எப்படி அறிவார்? எத்தனை நேரம் தொழ
வேண்டும்? இது போல் ஜகாத் கொடுத்தாக வேண்டும் என்றால், ஜகாத்தின் கடமையை
ஏற்படுத்தும் அளவுக்குரிய பொருளாதாரம் எப்படிக் கிடைக்கும்? அப்படியே
கிடைத்தாலும் ஜகாத் வாங்கிட மக்கள் தேவைதானே! மக்கள் இல்லாமல் ஜகாத்தை
எப்படி வழங்குவார்? இப்படிச் சிந்தித்தால் ஈஸா உயிருடன் இல்லை என்பதே சரி!

விளக்கம் -4


திருக்குர்ஆன்
19:30-32 ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி
பெயர்த்துள்ளனர். எனவே, இம்மொழி பெயர்ப்பில் எது சரியானது என்பதை விரிவாக
நாம் ஆராய்வோம்.

ஏனெனில், தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு
சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக்
காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து
விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

1-நான் அல்லாஹ்வின் அடிமையாவேன், எனக்கு வேத்ததை அவன் வழங்கினான் மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான் (திருக்குர்ஆன் 19:30)

2-நான்
எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும்,
நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத்
கொடுக்குமாறும் எனக்கு கட்டளையிட்டான் (திருக்குர்ஆன் 19:31)

3-மேலும்,
எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை
துர்பாக்கியசாலியாகவும், அடக்கு முறை செய்வபனாகவும் அவன் ஆக்கவில்லை
(திருக்குர்ஆன் 19:32).

இரண்டாவது வசனத்தில் 'நான் உயிருள்ளவனாக
இருக்கும் போது தொழ வேண்டும், ஜகாத் கொடுக்க வேண்டும்' என, ஈஸா நபி
கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு
வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஜகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஜகாத்
கொடுக்க முடியவில்லையானால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதுதான்
பொருள். ஏனெனில், உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஜகாத் கடமை என்று ஈஸா நபி
அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும்
வாதம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச்
செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம்
குறிப்பிட்டுள்ள 19:32 வசனத்திற்குத்தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புகளில்
மொழிபெயர்ப்பாளர்கள் தவறான பொருள் தந்துள்ளனர்.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் 'வ பர்ரன் பிவாலி ததீ' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. 'எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்' என்பது இதன் பொருள்.

செய்பவன்+ஆக+உம்
(செய்பவனாகவும்) என்பதில் 'உம்' மைப் பொருளை எங்கே முற்றப் பெறச் செய்வது
என்பதில் தான் பலரும்; கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

'உம்'மைப்
பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை.
அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை
முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்ராஹீமை நல்லவனாகவும்,
வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும்,
வல்லவனாகவும் என, இரண்டு 'உம்'மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு
மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் 'கருதுகிறேன் இப்ராஹீமை
நல்லவனாகவும், வல்லவனாகவும்' என்ற வரிசைப்படி அமையும்.

'நல்லவனாகவும்'
என்பதை முற்றுப் பெறச் செய்வதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம்
பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, மூன்றாவது வசனத்தை (அதாவது திருக்குர்ஆன் 19:32) வசனத்தை ஆராய்வோம்.

'என்
தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்' என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய
வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய
முடியும்.

என்னை நபியாகவும் ஆக்கியானன் என்று 19:30 வசனம்
கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக 'என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை
செய்பவனாகவும் அவன் ஆக்கினான்' என்ற கருத்து கிடைக்கிறது.

'என்
தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்' என்ற சொற்றொடரை இரண்டாவதாக நாம்
குறிப்பிட்ட 19:31 வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும்.

நான்
உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும்
காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்
என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும்.

நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப்பெறச் செய்வதுதான் மிகவும் சரியானதாகும்.

'உம்மை'ப்
பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில்தான் முற்றுப்
பெறச் செய்ய வேண்டும், அருகில் முற்றுப் பெறச் செய்ய முடியாத நில
ஏற்பட்டால் தான் தொலைவில் முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண
விதியாகும்.

'என் தாயருக்கு நன்மை செய்பவனாக' என்பது 19:32 – வது
வசனம், அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் முற்றுப் பெறச் செய்ய
வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்துவிட்டு அதற்கும் முன்னால் சென்று
19:30 வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக்
கொள்ள முடியாது.

எனவே, 'நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம்' என்பது தான் சரியான பொருளாகும்.

எனவே,
ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமன்றி தாயாருக்கு நன்மை
செய்பவராகவும் இருந்தால்தான், அவர் மீது ஜகாத் கடமையாகும். அவர் எப்போது
உயர்த்தப்பட்டு விட்டாரோ, அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத
நிலை ஏற்பட்டு விடுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:31

ஈஸா நபிக்கு ஜகாத் எப்போது கடமையாகும்? என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.

1-ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.

2-அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக் கூடியவராக இருக்கவேண்டும்.

இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால்தான் அவர் மீது ஜகாத் கடமையாகும்.

ஈஸா
நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும், அப்போது தான் அவர்கள்
உயிருடன் இருந்தார்கள், தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும்
இருந்தார்கள்.

அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ,
அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது.
தயாருக்கு நன்மை செய்பவராக என்ற நிபந்தனை இல்லை.

இன்று கூட ஈஸா நபி உயிருடன்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.

எனவே
ஜகாத் அவர்கள் மீது கடமையில்லை. யாருக்கு ஜகாத் கொடுப்பார் என்று கேட்பது
அபத்தமானதாகும். ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய
மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது.

இதில் மற்றொரு
கேள்வியும் பிறக்கும் அதாவது நபி ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருந்து தனது
தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால், அவர் மீது ஜகாத் கடமையாகும்
என்றிருந்தால் தொட்டில் பருவத்தில் இறைகட்டளைபடி மக்களிடன் பேசி தன் தாயின்
கற்பின் மீது ஏற்பட்ட அவதூறை துடைத்து தன் தாய்க்கு பெரும் நன்மை
செய்தார்களே அப்போது உயிருடன் இருந்த நபி ஈஸா (அலை) அவர்கள் எவருக்கும்
ஜகாத் கொடுத்தார்களா? என்று


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:32

இதற்கு விடையானது,

1. அல்லாஹ் நபிமார்கள் சிலருக்கு சில
அற்புதங்களையும், அதில் சிலருக்கு பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களையும், சில
நபிமார்களுக்கு அதிசய பிறப்பையும் வழங்கினான். தொட்டில் பருவத்தில் பேசும்
அற்புதத்தை நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். அது நடந்தது தன்
தாயின் கற்பின் மீது ஏற்பட்ட அவதூறை துடைக்கும் நிற்பந்தமான அந்நேரத்தில்
மட்டுமே. அந்நாளிலிருந்து அவர்கள் தொடர்ந்து மக்களிடம் உரையாடிக்
கொண்டிருந்ததற்கு எந்த ஆதாரத்தையும் நாம் காணமுடியவில்லை. இது நபி ஈஸா
(அலை) அவர்களுக்கு அந்நேரத்தில் அல்லாஹ் வழங்கிய ஒரு சிறப்புத் தகுதி என்று
சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக் கூடியவராக
இருக்கவேண்டும் என்ற விதியில் இது அடங்காது.

2. ஒரு தாய்க்கு நன்மை
செய்வதென்பது மார்க்கத்திற்கு முரணில்லாத விஷயங்களில் அவர்களுக்கு
கட்டுப்படுவதும், எக்காலத்திலும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பதும்,
அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பிராத்திப்பதும் ஆகும். மேலும் நம்
சக்திக்குட்பட்டு அவர்களுக்கு ஊண் உடை உறைவிடம் போன்றவைகளில் மிகுந்த
அக்கறை செலுத்துவது, வயதான காலத்தில் அவர்களிடம் மரியாதையாகவும்
கண்ணியத்துடனும் நடப்பது, அவர்களுடைய மனதை நோவினை செய்யாமல் இருப்பது
போன்றவைகளாகும். (மேலும் பார்க்க திருக்குர்ஆன் - 17:23, 29:8, 31:14,
31:15, 46:15)

3. நபி ஈஸா (அலை) அவர்கள் பேசி இருக்காவிட்டாலும் இது
போன்ற கேள்விகளை எழுப்பலாம். உதாரணமாக தொட்டில் பருவத்தில் இருக்கும்
குழந்தை திடீரென எதையோ பார்த்து புன்னகைக்கும். தனது கைகால்களை உதறும்,
வாய் உளறும். அப்போது அதைப்பார்க்கும் அதன் தாய் பேரானந்தம் அடைவாள். தான்
அக்குழந்தையை பெற்றெடுக்கும் போது அடைந்த துன்பத்தைகூட முற்றிலும்
மறப்பாள். ஒரு தாயை மகிழ்விப்பது எத்தனை பெரிய நன்மை. குழந்தை
பருவத்திலிருந்த நபி ஈஸா (அலை) அவர்கள் இப்படியொரு நன்மையையும் தன்
தாய்க்கு செய்துதான் இருப்பார்கள். எனவே அப்போது உயிருடன் இருந்த நபி ஈஸா
(அலை) அவர்கள் எவருக்கும் ஜகாத் கொடுத்தார்களா? என்றும் கேள்வி எழுப்பலாம்.
ஆகையால் உபகரணம் என்பது இதுபோன்றவற்றை குறிக்கவில்லை என்பதை இதிலிருந்து
அறியலாம்.

4. தன் அன்றாட உணவிற்கே தன்தாயை நம்பி உயிர்வாழும்
பச்சிளம் குழந்தை பருவத்திலிருந்த நபி ஈஸா (அலை) அவர்கள், தன்தொட்டில்
பருவத்தில் பேசி தன்தாய்க்கு நன்மை செய்தார் அதனால் அவர்கள் ஜகாத்
கொடுத்தார்களா என்று விவாதிப்பது அறிவீனமான விவாதமாகும். ஒற்றுமை ஆசிரியர்

எப்போது வருவார்கள்?

டமாஸ்கஸ்
நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா (கோபுரம்)வுக்கு அருகில்
அவர் இறங்குவார். இரண்டு வானவர்கனின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக
இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும், தலையை
உயர்த்தினால் முத்துப்போல் தண்ணீர் சிதறும். அவரது மூச்சுக் காற்று படும்
எந்த இறை மறுப்பாளரும் இறந்தே போவார். பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள்.
'லுத்' எனும் ஊர்வாசலில் அவனைப் பிடித்துக் கொல்வார்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி)
நூல்-திர்மிதீ.

தஜ்ஜால் வந்து, பூமியில் பெரும் குழப்பம்
விளைவிக்கும் காலகட்டத்தில் ஈஸா நபி (அலை) இறங்கி வந்து, அவனைத் தேடிக்
கொல்வார்கள். தஜ்ஜாலின் வருகையை வைத்தே ஈஸா (அலை) அவர்களின் வருகையும்
இருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:32

20-(6) யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை

'இறுதியில்
யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள், உடனே அவர்கள்
(வெள்ளம் போல்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள்'... (அல்
குர்ஆன் 21:96).

மறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும்
கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும்
ஒன்றாகும். இந்த வசனத்தில் 'அவர்கள் திறந்து விடப்படுவார்கள்' என்று
உள்ளது. இதிலிருந்து அவர்கள் அடைத்து வைக்கபட்டுள்ளனர் என்பது
தெரியவருகிறது.

மேலும், அவர்கள் இனி படைக்கப்பட்டு வருபவர்கள் இல்லை. எற்கனவே உள்ள படைப்பினம் தான் என்பதையும் புரிய முடிகிறது.

'அவர்கள்
மேடான பகுதியிலிருந்து விரைந்து வருவார்கள்' என்ற வாசகத்தின் மூலம்
அவர்கள் மலைப் பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் விளங்க
முடிகிறது.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:33

இரும்பு சுவருக்கு பின்னே...!

(துல்கர்ணைன்
எனும் மன்னர்) இரண்டு மலைகளுக்கும் முன்னே ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள்.
இவர்கள் பேசுவதை அவர்கள் விளங்கிக் கொள்பவர்களாக இல்லை. துல்கர்ணைன்
அவர்களே! யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இந்த பூமியல் குழப்பம்
விளைவித்து வருகின்றனர் எனவே, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே நீங்கள்
தடுப்பு (ச் சுவர்) ஏற்படுத்துதுவதற்காக உங்களுக்கு நாங்கள் வரி
செலுத்தட்டுமா, என்று கேட்டனர்.

'என் இறைவன் எனக்களித்துள்ள வசதி
எனக்குச் சிறந்ததாகும் எனவே, (உடல்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவுங்கள்.
அவர்களுக்கும் உங்களுக்குமிடையே ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துகிறேன்' என்று
துல்கர்ணைன் கூறினார்.

'என்னிடம் இரும்புக் பாளங்களைக் கொண்டு
வாருங்கள்' (என்றும் கூறினார்), இரு மலைகளுக்கிடையே (உள்ள இடைவெளி)
மட்டமானதும் 'ஊதுங்கள்' என்றார். அது நெருப்பாக ஆனதும் (செம்பை) என்னிடம்
கொண்டு வாருங்கள் இதன் மீது அதை நான் ஊற்றுகிறேன் என்று கூறினார்.

இதில் ஏறவும் அவர்கள் சக்தி பெற மாட்டர்கள். அதில் துவாரமிடவும் சக்தி பெற மாட்டார்கள்.

இது
என் இறைவனின் அருட்கொடையாகும். (எனினும்) என் இறைவனின் வாக்கு வரும்போது
அதை அவன் தூள்தூளாக்குவான். என் இறைவனின் வாக்கு உண்மையானதாகும்' என்றும்
அவர் கூறினார்.

அந்நாளில், அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை
மோதவிடுவோம். மேலும் 'சூர்' ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம்...
(அல்குர்ஆன் 18:94-99).

மலைப்பகுதியில் வாழ்ந்த யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ்
கூட்டத்தினர் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பெரும் துன்பங்களை
அளித்து வந்துள்ளனர். இதைக் கண்டு செய்வதறியாது நின்ற மக்கள். அப்போது
உலகின் அனைத்துப் பகுதியையும் ஆட்சி செய்த மன்னர் துல்கர்ணைன் அவர்களிடம்
முறையிட்டனர், அவர் இரும்பைக் காய்ச்சி, அதன் மீது செம்பை ஊற்றியதும்,
கெட்டியான சுவராக ஆகிpட்டது. கெட்டியான அந்த இரும்புச்சுவருக்குப்
பின்புறம் தான் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் உள்ளது என்பது தெரிய வருகிறது.
திறந்துவிட்டால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு அலைகள் போல் வருவார்கள்
என்பதிலிருந்து அவர்கள் எண்ணிலடங்கா கூட்டம் என்பதும் புரிய வருகிறது.

இவ்வாறு அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதி எங்குள்ளது என்ற விபரம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கூறப்படவில்லை.

தெரியாமல் இருப்பது ஏன்?

நவீனக்
கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ள காலம் இது. ஆகாய
விமானங்களும். ராடார் கருவிகளும், தொலை நோக்குக் கருவிகளும் என அதி நவீனக்
கருவிகள் உள்ள இந்தக் காலத்தில், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வாழும்
மலைப் பகுதியயைக் கண்டு பிடிக்கப்படாமல் இருக்க முடியுமா? செம்பை உருக்கி
ஊற்றப்பட்டு இரும்புச் சுவர் அமைத்திருக்கும் போது அதன் பளபளப்பைக் கண்டே
அவர்களின் இருப்பிடம் அறியலாம் தானே? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

இது
ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. மனிதனிடம் நவீனச் சாதனங்கள் இருக்கிறது
என்பது உண்மைதான், ஆனால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது
அதைவிட உண்மையாகும்.

பூமிக்கு அப்பாற்பட்டு நின்று பூமியைப்படம்
பிடித்து இருக்கிறார்கள், பூமியின் பரப்பளவைத்தான் கண்டு பிடித்துள்ளார்கள்
தவிர, பூமியை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு கருவிகள்
பயன்படவில்லை. சில பகுதிகள் இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது
என்றுதான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மண்ணில் இன்றும் மனிதக்கால்களோ,
பார்வையோ படியாத இடங்கள் ஏராளமாக உள்ளன.

சுக்கிவாய்ந்த கருவிகள்
மூலம் பூமி முழுதும் ஆராயப்பட்டாலும் கூட, காடுகளை மேலோட்டமாகத்தான்
பார்க்கலாமே தவிர, துல்லியமாக காணமுடியாது. மரமும், செடிகளும்
நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

மலைகளால் சூழப்பட்ட
காடுகளிலோ, குகைகளிலோ யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்த
கருவிகள் மூலமும் அவர்களைக் காண முடியாது. செம்பு எனும் உலோகம்
பாசிபடிந்து பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் அந்த பளபளப்பை கண்டுபிடிக்க
முடியாமல் அதை அருகில் இருந்து பார்த்தாலும், தூரத்தில் இருந்து
பார்த்தாலும் மலைமேல் புல் வளர்ந்துள்ளது போல் பசுமையாகவே தெரியும்.

எனவே,
எவரது கண்களுக்கு புலப்படாத பகுதியில் அந்தக் கூட்டத்தினர் வாழ்கின்றனர்.
இனி வருங்காலத்தில் மனிதர்கள் அவர்கள் வாழும் பகுதியை அடைய நேரிடலாம். அந்த
நேரமும், மறுமை நாளின் அடையாளமாக, அவர்கள் வெளியேறும் காலமாகவும்
இருக்கலாம். எல்லாவற்றையும் விட மறுமையின் அடையாளமாக அவர்களின் வருகை
இருக்கும் என்பதாலேயே அல்லாஹ் மனிதர்களின் பார்வையை விட்டு மறைத்து
வைத்திருக்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:33

யஹ்ஜுஜ் - மஹஜுஜ் மனித இனமே!

அவர்கள்
மனித இனத்தை விட்டும் அப்புறப்படுத்தி, மறைக்கப்பட்டிருப்பதால் அவர்களை
ஏதோ ஒரு புது இனம் என்று விளங்கிவிடக்கூடாது, அவர்களும் மனித இனமே!.

யஹ்ஜுஜ்
மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள்
விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில்
ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல்
மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :
அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - அஹ்மத், தப்ரானி.

அவர்களின் உருவம்

'யஹ்ஜுஜ்
மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே
இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்)
வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும்
அமைந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் :
காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள் - அஹ்மத், தப்ரானி.

18:99
வது வசனத்தில் உள்ள 'அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோத விடுவோம்'
என்ற வாசகப்படி நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டமாக இருப்பர் என்பது
புரிந்தாலும், அவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பதும்
புரிகிறது.

இதே போல் புகாரீ ஹதீஸ் (எண் 3348) 'நரகத்தில் நாம்
ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்'
என்று கூறுகிறது. இந்த வாசகம் மூலமும் அவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. அதே
வேளையில் உயரமும் குறைவானது என்பதைப்புரியலாம்.

இது போல் ஒரு நபர்
ஆயிரம் குழந்தைகளை வாரிசாகப் பெறுவார்' என்ற வாசகம் மூலம், அவர்களின்
பிறப்பின் போதே உயரம் மிகச்சிறியதாக இருக்கும் என்றும் புரியலாம்.
இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில்
மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்' என்று இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 21:96 வது வசனத்தில் உள்ள 'விரைந்து வருவார்கள்' என்ற வாசகம் மூலம், அவர்கள் அதிவேகமாக இயங்குவார்கள் என்பதும் விளங்குகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:35

ஈஸா நபியின் பிரார்த்தனையால் அழிவர்!

'யஹ்ஜுஜ்
- மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல்
கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த
கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) 'அந்த
இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது' என்று கூறுவார்கள். பின்னர்
பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.

'பூமியில்
உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம்'
என்று கூறுவார்கள், தங்கள் அம்புகனை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின்
அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா
நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.

பின்னர், ஈஸா
நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள்.
அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல்
காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும்
அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யுஹ்ஜுஜ்
மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு
இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின்
தோழர்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின்
கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை
சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்' என்று நபி (ஸல்)
கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கடும்
அமளி – துமளியில் ஈடுபடும் யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டம், இறுதியில் ஈஸா
நபியிடமும் போருக்கு நிற்பார்கள். அவர்களை முற்றுகையிடும் வேளையில்
அவர்களின் பிரார்த்தனை காரணமாக அழிவார்கள். இந்தக் கூட்டத்தினர் வெளியேறிய
நாட்களில் கடும் பஞ்சமும் ஏற்படும் என்பதையம் இந்த ஹதீஸில் புரிய
முடிகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:35

யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ்களின் அழிவுக்குப் பின்...

(யஹ்ஜுஜ்
- மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய)
அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு
விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து
வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர்
பூமியை நோக்கி, 'உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும்
திரும்பக்கொடு' என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு
மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல்
அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும்.
பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு
பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை
கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின்
இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான்.
அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின்
உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர்.
கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள்
நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ்
இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - திர்மிதீ.

இந்த ஹதீஸ் மூலம், யஹ்ஜுஜ் -
மஹ்ஜுஜ் கூட்டத்தாரின் மறைவுக்குப் பின், மக்களிடையே செல்வம் பெருகி, வளமாக
வாழ்வு ஏற்படும் என்பதைப் புரிய முடிகிறது. வளமான வாழ்க்கையை அனுபவிக்கும்
காலத்தில் முஸ்லிம்களின் உயிர்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுவிடும்
என்பதும், அதன்பின்னர் இறைமறுப்பாளர்களும் தீய நடத்தை உள்ளவர்களும் வாழும்
போதே உலகம் அழியும் என்பதும் தெரிகிறது. தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை,
யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும்
என்பதும் நமக்குத் தெரிகிறது.

21 - (7) கிழக்கே ஒரு பூகம்பம், (8) மேற்கே ஒரு பூகம்பம், (9) அரபு நாட்டில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள்

'(மதீனாவின்)
கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு
பூகம்பம் என மூன்று பூகம்பங்கள் - நில நடுக்கம் ஏற்படும் அதை நீங்கள்
காணும் வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல் - முஸ்லிம்.

பூகம்பங்கள்
தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன இதுவும் மறுமைநாளின்
அடையாளங்களில் ஒன்று. நாம் முன்னரே கண்டோம், இங்கே குறிப்பிடப்படும்
பூகம்பங்கள் மூன்றும் பெரிய அளவில் இருக்கும் என்பதையே நமக்கு
விளக்குகிறது.

மூன்று பூகம்ப நிகழ்வுகளையும் மூன்று அடையாளங்களாக
நபி (ஸல்) அவர்கள் கூறுவதால், ஒரே நேரத்தில் இந்த மூன்று பூகம்பங்களும்
நிகழாது என்பதையும், அடுத்தடுத்து இந்த பூகம்பங்கள் ஏற்படும் என்பதையும்
நாம் விளங்கலாம்.

22 - (10) பெரும் நெருப்பு

'யமனிலிருந்து
நெருப்புத் தோன்றி மக்களை அவர்களின் மஹ்ஷரின் பால் விரட்டிச்செல்லும். அது
நிகழும் வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுihபா (ரலி) நூல் - முஸ்லிம்.

யமனில் தோன்றும் இந்த
நெருப்பு மக்களை நாலா திசைகளிலும் சூழ்ந்து கொள்ளும். இந்த நெருப்பின்
வளையத்திற்குள் மக்கள் சிக்கிக்கொள்வர். மக்கள் ஓவ்வெடுக்க எண்ணும் போது,
அந்த தீயும் ஓய்வெடுக்கும், உண்ணும் வரைக்காத்திருக்கும், பிறகு துரத்தும்.

அவர்களில்
மீதாமான (மூன்றாம் பிரிவி)னர்களை (பூமியில் ஏற்படும் பெரும்) தீ நெருப்பு
ஒன்று திரட்டும். அவர்கள் மதியம் ஓய்வெடுக்கும் போதும், இரவில்
ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அவர்கள் அடையும் போதும், மாலை நேரத்தை
அவர்கள் அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்கின் போதும்) அந்த நெருப்பு
அவர்களுடனேயே இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6522.

மறுமை நாளின் அடையாளமாக மக்களை நாலா திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டும் வகையில் உள்ள பெரும் நெருப்பும் ஒன்றாகும்.

'ஹிஜாஸ்
பகுதியலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, ஷாம் நாட்டின் புஸ்ரா (ஹவ்ரா) எனும்
ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள்
நிகழாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் - புகாரீ 7118.

இந்த ஹதீஸல் கூறப்படும் தீவிபத்து என்பது வேறு. பெரும் அடையாளங்களில் ஒன்றாகக் கூறப்படும் 'பெரும் நெருப்பு' என்பது வேறு.

'இந்த
நெருப்பு ஹிஜ்ரி 654 நடந்து முடிந்து விட்டது. ஹிஜாஸ் பகுதியில் இந்த
தீவிபத்து ஏற்படும் முன் பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்திற்குப்
பின் 'அல்ஹர்ராப்' பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, எரிமலை ஒன்றும்
வெடித்தது. இந்த நெருப்பு, புஸ்ரா நகரின் எல்லை வரைத் தெரிந்தது' என்று
வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, சிறிய அளவில் அணைக்க
இயலாத அளவுக்கு ஏற்படும் நெருப்பை மறுமை நாளின் அடையாளம் எனக்கருதத் தேவை
இல்லை. இதே வேளையில் மறுமை நாளின் அடையாளமாக பெரும் தீவிபத்து ஏற்படும்.
அது அணைக்க இயலாத அளவுக்கு இருக்கும். இந்த நெருப்பின் வேகம் கூடுதலாக
இருக்கும் என்பதோடு, அது மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும்.
மக்கள் உண்ண, உறங்க விரும்பினால் அதற்காக சிறிது அவகாசம் தரும். அதன்பின்
மீண்டும் துரத்தும். எனவே, மறுமை நாளின் அடையாளமாக 'பெரும் நெருப்பு'
ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வோமாக!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by நண்பன் Mon 10 Jan 2011 - 18:36

வேண்டுகோள்!

இதுவரை மறுமை
நாள் ஏற்பட உள்ளது என்பதை உணர்ந்திட சில அடையாளங்கள் உண்டு என்று நமக்கு
நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள அடையாளங்களைக் கண்டோம்.
அவற்றில் பல முடிந்துவிட்டன, நிகழ்ந்து விட்டன, கண்கூடாக நாமும்
கண்டுள்ளோம்.

பெரும் அடையாளங்களாக உள்ள 'புகை மூட்டம், சூரியன்
மேற்கே உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ்
மறறும் மஹ்ஜுஜ் கூட்டம் வருகை, கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம்,
அரபுப் புகுதியில் ஒரு பூகம்பம், பெரும் நெருப்பு' ஆகிய பத்து அடையாளங்கள்
பற்றியும் அறிந்து கொண்டோம். இவை வெகு விரைவில் நிகழும் என்பதையும்
அறிந்து கொண்டோம்.

மறுமை நாள் வெகுவிரைவில் வர உள்ளது. மறுமை வாழ்வே நிலையானது என்பதால் மறுமை நாள் சிறப்புற அமைய முயற்சிப்பதே சரியான அணுகுமுறையாகும்.

'உலக
வாழ்க்கை வீணும், விளையாட்டுமேயன்றி வேறில்லை. இறையச்சமுடையோருக்கு மறுமை
வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் அதை சிந்திக்க வேண்டாமா?... (அல்குர்ஆன்
6:32)

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும் ஒரு (வானவர்)
அனைவரையும் அழைத்து, 'சொர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும்
வாழ்வீர்கள். ஒரு போதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள்
இங்கு ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு போதும் நோயாளியாக ஆக மாட்டீர்கள்,
மேலும் நீங்கள் இங்கு இளமையிலே இருப்பீர்கள். ஒரு போதும்
முதுமையடையமாட்டீர்கள். மேலும் நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிப்பீர்கள். ஒரு
போதும் கஷ்டப்பட மாட்டீர்கள்' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் அறிவிப்பாளர்கள் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி)
நூல் - முஸ்லிம்.

எனவே மறுமையும், அதில் கிடைக்கும் சொர்க்க
வாழ்க்கையுமே நிரந்தரமானது என்பதை உணர்ந்து, இந்த உலகில் வாழும்போதே
நற்செயல் புhநிது, நல்லடியார்களில் ஒருவராக நாமும் மறுமைநாளில்
சேர்ந்திருக்க முயற்சிப்போமாக!

அல்லாஹ் போதுமானவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்) - Page 3 Empty Re: இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum