Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முக்கனிகளின் முத்தான பலன்கள்!!!
3 posters
Page 1 of 1
முக்கனிகளின் முத்தான பலன்கள்!!!
பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். நாம் தினமும் காய்கறிகள் கீரைகள்போன்றவற்றை சமைத்துதான் சாப்பிடுகிறோம். இவற்றில் சில சத்துக்கள்சமைக்கும்போது அழிந்து விடுகின்றன. ஆனால் சமைக்காத பொருளான பழங்களில்உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. வளரும்குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதுபழங்கள் தான். பழங்களில் தான் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய பழங்களில் முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழையின் மருத்துவ பயன்களை அறிவோம். இந்த முக்கனிகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும்.
மாம்பழம்
http://abuwasmeeonline.blogspot.com
ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம்தென்னிந்தியா தான். தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்அதிகம் விளைகிறது. ஆந்திராவிலும் அதிகம் விளைகிறது. மாம்பழம் பொதுவாக கோடைக் காலத்தில் அதிகம் விளையும். நன்கு கனிந்தமாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது. 100 கிராம் மாம்பழத்தில் நீர்ச்சத்து – 76.0 கிராம் நார்ச்சத்து – 0.6 கிராம் தாதுப் பொருள் – 0.4 கிராம் கொழுப்பு – 0.4 கிராம் புரதம் – 0.5 கிராம் மாவுப்பொருள் – 17.0 கிராமுக்கனிகளின் பயன்கள்ம் சுண்ணாம்புச் சத்து – 13 மில்லி கிராம் இரும்புச் சத்து – 1.2 மில்லி கிராம் கரோட்டின் – 2740 தஞ் எரிசக்தி – 72. கலோரி தையமின்-0.8 மி.கி நியாசின் – 0.8 மி-கி ரைபோஃபிளேவின் – 0.08 மி.கி வைட்டமின் சி – 16.0 மி.கி. மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள் காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்திவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் புண்குணமாகும். மேற்கண்ட முறைப்படி அருந்தி வரும் நாட்களில் மலம் அதிகளவு வெளியேறினால் தேனை இரட்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம்,. · மாம்பழத்தின் சாறுடன், தேன், குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள், பச்சைகற்பூரம் இவைகளை சிறிதளவு சேர்த்து அதில் காய்ச்சிய பாலைக் கலந்து இரவுஉணவுக்குப்பின் அருந்தி வந்தால் இதயம் பலப்படும். · சிறு குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டப்பின் மாம்பழம் கொடுப்பது நல்லது.மாம்பழத்தை நெய்யில் தடவிக் கொடுப்பது மிகவும் நல்லது. இரவில் பாலும்கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று வளரும். இரவு உணவின் அளவைக் குறைத்து மாம்பழத் துண்டுகளை சாப்பிட்டு பால் அருந்தினால் உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் கூடும். மாத விலக்கு சீராக இல்லாத பெண்கள் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் அதைபாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும். இரவு உணவுக்குப்பின் மாம்பழச் சாறு சாப்பிட்டு வந்தால் முகம் பளபளக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கி ஆண்மையை அதிகரிக்கும். புளிப்பு மாம்பழச் சாறு 100 மி.லி. அதனுடன் 50 கிராம் நெய் இரண்டையும்கலந்து ஒரு சட்டியில் ஊற்றி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடேற்றிஇறக்கிக் கொள்ளவும். காலை, பகல் உணவோடு ஊறுகாய்க்குப் பதிலாகசேர்த்துக்கொண்டு வந்தால் உணவு எளிதில் சீரணமாகும். நரம்பு தளர்ச்சிநீங்கும். நீரிழிவு நோய் கொண்டவர்கள், சொறி, சிரங்கு உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது .
பலாப்பழம்
பலாப்பழத்தின் தாயகம் இந்தியாதான். முக்கனிகளில் இரண்டாவது கனியாகும். வெளியில் கரடுமுரடான முட்களுடன் காணப்படும் பெரிய பழமாகும். உள்ளே மஞ்சள் நிறத்தில் சுளைகளாக காணப்படும். 100 கிராம் பழத்தில் வைட்டமின் ஏ – 150 மில்லி கிராம் வைட்டமின் பி – 6 மி.கி வைட்டமின் சி – 6 மி.கி இரும்புச் சத்து – 0,5 மி.கி. சுண்ணாம்புச்சத்து – 20 மி.கி கலோரி – 88 மி.கி புரதம் – 1.9 கிராம் தாது உப்புக்கள் -0.9 கிராம் சர்க்கரைச்சத்து – 19.8 கிராம் அடங்கியுள்ளன பலாப்பழத்தின் மருத்துவப் பயன்கள் · பலாப்பழத்தை நேரடியாக உண்பது நன்கு சுவையாக இருக்கும். ஆனால் அவ்வாறுஉண்ணாமல் பலாப்பழத்தை தேன், நெய், சர்க்கரை சேர்த்து உண்பது நல்லது. பலாப்பழச் சுளைகளை நெய்விட்டு வதக்கி உட்கொண்டால் உடல் வலுவடையும். பலாச் சுளைகளை தேனில் நனையவிடுங்கள், சிறிது நேரம் கழித்து சிறிதுநெய்விட்டு கலக்கவும். மீண்டும் சிறிது நேரம் ஊறவைக்கவும். மாலை வேளையில்இதனை சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்பட்டு எப்போதும் மனம்புத்துணர்வுடன் காணப்படும். பலாச் சுளைகளுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்எளிதில் சீரணமாகும். இருமல் கட்டுப்படும். நாவறட்சி நீங்கும். களைப்புமுற்றிலும் நீங்கும். பலாச் சுளைகளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மண்சட்டியில் போட்டு அதில்பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது தேனையும்,நெய்யையும் கலந்து ஏலக்காய் தூளையும் சேர்த்து அருந்தினால் சுவையாகஇருப்பதுடன் உடலுக்கு நலத்தையும் கொடுக்கும். இரத்தம் விருத்தியாகும்.நரம்புகளுக்கு வலு உண்டாகும். உடல் நன்கு வளர்ச்சிகாணும். காச நோயாளிகள்,வாத நோயாளிகள், பித்த நோயாளிகள் பால் கொடுக்கும் தாய்மார்கள்,மலச்சிக்கல் உள்ளவர்கள் பலாப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழம்
முக்கனிகளில் மூன்றாவது கனிதான் வாழை. எந்தக் காலத்திலும் கிடைக்கும்பழமாகும். உலக மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில்வாழைப்பழத்திற்குத்தான் முதலிடம். வாழைப்பழம் சமய விழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழத்தில்பலவகைகள் உள்ளன. நாட்டு வாழைப்பழம், மலை வாழை, பச்சை வாழை, பேயன் வாழை,செவ்வாழை, நாவரை வாழை, மொந்தன் வாழை, கற்பூரவல்லி வாழை, நேந்திரன் வாழை,ரஸ்தாளி வாழை, சர்க்கரை வாழை, கதலி வாழை, சிங்கன் வாழை, மட்டி வாழை என பலவகைகள் உண்டு. இதில் எல்லா வகை பழங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. வாழைப்பழத்தில் உண்ணத் தகுந்தவை – 71 % புரதம் – 1.2 கிராம் சர்க்கரை சத்து – 27.2 கிராம் சக்தி – 116 கலோரி சுண்ணாம்புச் சத்து – 17 மி.கி, இரும்பு சத்து – 0.9 மி.கி வைட்டமின் சி – 7 மி.கி பாஸ்பரஸ் – 36 மி.கி வாழைப்பழத்தின் மருத்துவப் பயன்கள் வயிற்றப்புண் ஏற்பட்டால் சரியாக சாப்பிட முடியாமல் தவிப்பார்கள்.இவர்கள் முறையாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் நீங்கும். மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும். இரவு உணவுக்குப்பின் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் தணியும். நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஆணும், பெண்ணும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் பழுத்த நேந்திரம் பழத்தை இட்லி சட்டியில் வைத்து இட்லி அவிப்பதுபோல்அவித்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் நெய் கலந்து சாப்பிட்டால்மெலிந்த உடல் தேறும். உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவதுஇரவு உணவுக்குப் பதில் 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பைகுறையும். முக்கனி லேகியம் நன்கு கனிந்த மா, பலா, வாழை பழங்களை எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி மண்பாத்திரத்தில் இட்டு குலுக்கி அதனுடன் தேன் கற்கண்டு கலந்து இலேகியமாக்கிசாப்பிட்டு வந்தால் முக்கனிகளின் சத்துக்கள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். முக்கனிகளில்மருத்துவப் பயன்கள் அனைத்தும் உடலுக்கு வலு தருவதாகும். இவற்றை சாப்பிட்டுநீண்ட ஆயுளைப் பெறுவோம்.
நன்றி: தமிழ்சோர்ஸ்
Re: முக்கனிகளின் முத்தான பலன்கள்!!!
என் வீட்டு முற்றத்தில் காய்த்திருக்கும் பலாவினை தின்ன வழியின்றி தவிக்கிறேன் பதிவு போட்டு வெறுப்பேத்துங்க
அது சும்மா சொன்னது
அருமையான பதிவு நன்றி சகோ
அது சும்மா சொன்னது
அருமையான பதிவு நன்றி சகோ
Re: முக்கனிகளின் முத்தான பலன்கள்!!!
எனக்கும் அந்த வெறுப்பு லைட்டா உள்ளது ஹாசிம் @.நேசமுடன் ஹாசிம் wrote:என் வீட்டு முற்றத்தில் காய்த்திருக்கும் பலாவினை தின்ன வழியின்றி தவிக்கிறேன் பதிவு போட்டு வெறுப்பேத்துங்க
அது சும்மா சொன்னது
அருமையான பதிவு நன்றி சகோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முத்தான சொத்துக்கள்.
» முத்தான கருத்துக்கள் மூன்று
» முத்தான காதல் கவிதைகள்
» முன்னேற முத்தான வழிகள்!
» முத்தம் தர முத்தான யோசனைகள் பத்து!
» முத்தான கருத்துக்கள் மூன்று
» முத்தான காதல் கவிதைகள்
» முன்னேற முத்தான வழிகள்!
» முத்தம் தர முத்தான யோசனைகள் பத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum