Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
3 posters
Page 1 of 1
கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
கலைஞர் ரி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ.
அபிப்பிராயம்
ஸ்பெக்ரம் வழக்கு கனிமொழிக்கு சாதகமாக திரும்பும் அறிகுறி
டில்லி:
டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து ரூ. 200 கோடி பெற்ற வழக்கில் கலைஞர் டி. வி.
க்கு அமுலாக்கப் பிரிவு ரூ. 1.25 கோடி அபராதம் விதிக்கும் என்று தெரிகிறது. இந்தப்
பணத்தைக் கொடுத்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு ரூ. 222 கோடி அபராதம்
விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
2 ஜி ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர்
தொலைக்காட்சிக்கு டி.பி. ரியாலிட்டி நிறுவனம் ரூ. 200 கோடி கொடுத்ததாக புகார்
கூறப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்திடம் வட்டிக்குத் தான் ரூ. 200 கோடியைப்
பெற்றதாகவும், அதை 10 சதவீத வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர்
தொலைக்காட்சி கூறி வருகிறது.
இந்த விவகாரத்தில் தான் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக
இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சிக்கும் ஷாகித் உசேன் பல்வாக்குச் சொந்தமான டி.பி.
ரியாலிட்டி நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கும் பணிகளில் அமுலாக்கப் பிரிவு
ஈடுபட்டுள்ளது. பணத்தைத் திரும்பத் தந்துவிட்டதால் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.1.25
கோடி மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி தனது
கடன்களை அடைக்க பயன்படுத்தியுள்ளது. இந்தக் கடன்கள் 16 சதவீத வட்டிக்கு
வாங்கப்பட்டவை. ஆனால் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு கலைஞர் தொலைக்காட்சி 10
சதவீதம் மட்டுமே வட்டியோடு பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளது.
இதன் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 6 சதவீத வட்டித் தொகையான ரூ. 1.25 கோடி
மிச்சமாகியுள்ளது. இதனால் இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சி அபராதமாக செலுத்த
வேண்டும் என்று அமுலாக்கப் பிரிவு கருதுகிறது.
இந்த அபராதத் தொகையை வசூலிக்கும் வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ 1.25 கோடி
மதிப்புள்ள சொத்துக்களை கையப்படுத்தும் பணியை அமுலாக்கப் பிரிவு விரைவிலேயே
தொடங்கவுள்ளது.
அதேபோல கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் தந்த டி.பி. ரியாலிட்டிக்கு ரூ. 222
கோடியளவுக்கு அபராதம் விதிக்கவும் அமுலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கக் காரணம், ரூ. 200 கோடியை கலைஞர்
தொலைக்காட்சிக்கு தந்துவிட்டு அதை வட்டியோடு திரும்பப் பெற்று இலாபமும் அடைந்துள்ளது
இந்த நிறுவனம். தவறும் செய்துவிட்டு வட்டி இலாபமும் அடைந்த நிறுவனம் என்ற வகையில்
அந்த நிறுவனம் ரூ. 200 கோடியையும் அதற்குக் கிடைத்த வட்டியான ரூ. 22 கோடியையும்
அபராதமாகச் செலுத்த வேண்டும் என அமுலாக்கப் பிரிவு கூறுகிறது.
இந்த நிறுவனத்தின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கும் பணிகளையும்
அமுலாக்கப் பிரிவு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான
டைனமிக்ஸ் ரியாலிட்டி, டி.பி ரியாலிட்டி, கன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன், நிகார்
கன்ஸ்ட்ரக்ஷன், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பென் ஆகியவற்றின் ரூ. 222 கோடி
மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
குறை,தவறுகள் என்று சொல்லணும் என்ற முடிவில் காங்கிரசு .
அதை செய்வனே செய்வது சி.பி.ஐ.
அதை செய்வனே செய்வது சி.பி.ஐ.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
பொய்யான வழக்கிட்டு, அசிங்கம் செய்து, வாழ்வின் நிம்மதி பறிபோக செய்த அரசியல்வாதிகள் மனிதர்கள் தானா!
Re: கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
இல்லைதான் @.Atchaya wrote:பொய்யான வழக்கிட்டு, அசிங்கம் செய்து, வாழ்வின் நிம்மதி பறிபோக செய்த அரசியல்வாதிகள் மனிதர்கள் தானா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கலைஞர் 'டிவி'க்கு ரூ.113 கோடி- வருமான வரி நோட்டீசு
» 300 கோடி ரூபா செலவில் மலர்ந்தது தாமரைத் தடாகம்!
» நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum