Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியா 2020 ல்
4 posters
Page 1 of 1
இந்தியா 2020 ல்
என் இந்தியா 2020 ம் ஆண்டில் எப்படி இருக்கும் என்பதற்கு, தற்போதைய படித்திருப்போரின் சதவிகிதம், இந்தியாவின் ஆண்டு வருமானம், இன்று இந்தியாவின் கடன் தொகை, மேலும் துறைவாரியாக தேவை எவ்வளவு, போன்ற விவரங்களை கொண்டு புள்ளியியல் கணக்குகளை நான் ஆராய்வதற்கு விரும்பவில்லை. புள்ளியியல் கணக்குகளுக்கு எல்லை உண்டு. எனவே அது என் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் எல்லை கொண்டு வந்துவிடும் அல்லவா. பறப்பதற்கு கூட வசதி இல்லாத காலத்திலேயே நிலவில் கால் வைக்க ஆசைப்பட்டதினாலேயே மனிதன் தற்போது வேறு கிரங்களுக்கும் செல்ல முடிகிறது. எனவே எல்லையில்லாமல், அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும் என்ற ஒரு மகானின் அறிவுரைப்படி, ஆசைப்படுவதில், கனவு காணுவதில் என்ன கஞ்சத்தனம் என்று, எனக்கு இந்தியா 2020ல் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதுபற்றி சிந்திக்க எனது கற்பனை குதிரையினை தட்டி விட்டேன்.
• 2020 ம் ஆண்டு இந்தியாவின் இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களும் படித்தவர்களாக இருப்பர்.
• காஷ்மீர் மாநிலம் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பள்ளியின் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரே நிலையிலான பாடம் போதிக்கப்படும்.
• உலகத் தரம் வாய்ந்த படிப்புகள் அனைத்து கல்லூரிகளிலும் போதிக்கப்படுவதால் யாருக்கும் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று ஆவல் இருக்காது.
• பிச்சைக்காரர்கள் பெயருக்கு கூட இருக்க மாட்டார்கள்.
• நாட்டின் வருமானத்தை நிர்ணயிக்கும் வயதினரான 30 முதல் 50 வயதில் ஒருவர் கூட சோம்பித் திரிய மாட்டார்.
• அனைவரும் படித்து வருமானம் ஈட்டும் நிலையில் வறுமையென்பது இல்லாமல் போகும்.
• நகரத்துக்கு நிகராக கிராமங்களிலும் அழகான வீடுகள், தெருக்கள், கடைகள், தங்குமிடங்கள், இரயிலடிகள், பேருந்து நிலையங்கள் இருப்பதால், கிராமத்து மக்கள் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால் தூண்டப்படாமல், உழவுத் தொழிலை செம்மையாக செய்வர்.
• நம் பூமியை காக்கும் நம் தாயான மரங்கள், இருக்கும் மனித இனத்துக்கு தேவையான அளவு பூத்துக் குலுங்குவதால் பூமித்தாய் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பாள்.
• ஆன்மீகம் என்பது ஒரு சிலரது போதனைகள் என்பது மாறி, அனைவரும் அதன் வழியில்; தான் இருப்பர்.
• வல்லரசு நாடான இந்தியா வளரும் நாடுகளுக்கு கடன் கொடுக்க முன்வந்துள்ளது என்று உலக வானொலிகள் அப்போது செய்தி வெளியிடும்.
• இந்திய விஞ்ஞானிகள் வேற்று கிரங்களில் உயிரினம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர் என்று இணையதளத்தில் செய்தி வெளியிடப்படும்.
• ஆண்டவனின் ரூபமாக திகழும் சூரியனின் சக்தியினை கொண்டு அனைத்து விதமான சக்தி தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
• மதம் மற்றும் இனம் குறித்து கலவரங்கள் இல்லாமல் காவல் துறையினருக்கு வேலையில்லாமல் போகும்.
இப்படி நான் கண்ட கனவுகள் ஏராளம், ஏராளம். இங்குள்ள பெரும்பாலோருக்கும் இந்த கனவுகள் இருக்கலாம் அல்லது இவை பிடித்திருக்கலாம். ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்த தற்போதைய சுழ்நிலையிலிருந்து மாற்றம் நிகழ வேண்டும். அப்படியானால் மாற்றம் எங்கு நிகழ வேண்டும் என்று யோசித்தேன். ஆட்சியாளர்களிடமா? அரசியல்வாதிகளிடமா? மாணவர்களிடமா? உழைப்பாளர்களிடமா? இல்லை. இவர்கள் அனைவரும் இருக்கும் இந்த சமூகமே மாற வேண்டும். சமூகம் என்பது என்ன? உங்க குடும்பமும் எங்க குடும்பமும் தாங்க. அப்படியென்றால் மாற்றம்.....ஆம். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தனிமனிதரிடமும் மாற்றம் வர வேண்டும். சரி என்ன மாற்றம் வேண்டும்.? தன் தாயத்திருநாட்டின் மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஏற்றுக் கொண்டு, நாடு எப்படி முன்னேற வேண்டும் என்று நான் கண்ட கனவு போல் அனைவரும் கண்டால் நிச்சயம் நிச்சயம் அவை நடக்கும்.
சுவாமி விவேகானந்தரின் ஒரு அருமையான வாசகத்தை சொல்கிறேன்.
ஒரு திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு திட்டத்தை உங்கள் வாழ்கையாக்குங்கள். – அதைப் பற்றியே யோசியுங்கள், கனவு காணுங்கள், அந்த திட்டத்திலேயே வாழுங்கள். உங்கள் நாடி, நரம்பு, மூளை இவற்றில் எல்லாம் அந்த திட்டமே நிறைந்திருக்கட்டும். மற்ற எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளுங்கள். இது தான் வெற்றிக்கு வழி. எப்படி நினைக்கிறோமே அப்படியே வாழலாம் என்று அருளியுள்ளார்.
எனது வாழும் ஆசான் அப்துல் கலாம் அவர்களோ 'எண்ணம் என்பது உனது முதலீடாக வேண்டும். உன் வாழ்கையில் எத்தனை ஏற்றத் தாழ்வுகளை நீ சந்தித்தாலும் அது ஒரு பொருட்டில்லை.' என்று கூறியுள்ளார்.
இந்திய திருநாட்டின் ஒவ்வொரு தனிமனிதனும் தன் நிலையுணர்ந்து, திட்டம் தீட்டி, இலக்கினை அடைய உழைத்தால், நான் கண்ட கனவுகளுக்கு மேல் இந்தியா இன்னும் பன்மடங்கு எவ்வளவோ முன்னேறும்.
எனவே தனிமனித மாற்றம் இருந்தால் மட்டுமே, நாம் ஜெகத்தினை வெல்லலாம். உங்களை நேசியுங்கள், உயிரினங்கள் அனைத்தையும், நேசியுங்கள். இயற்கையை நேசியுங்கள். திட்டமிடுங்கள், அதைப்பற்றியே கனவு காணுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் பலிக்க எனது வாழ்த்துக்கள்

anandstarct- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: இந்தியா 2020 ல்
இன்றய இந்தியாவில் சாந்தி வேண்டும் மக்களுக்கு எதிர்கால இந்தியா பற்றிய கற்பனை படிக்கும் போதே நிறைவுற்றால் வல்லரசாகிவிடுவது உறுதியாகிடும் என்ற எண்ணம் தோன்றுகிறது அரசுடன் மக்களும் ஒவ்வொரு இந்தியரும் உழைத்தால் இந்த நிலையினை அடைந்திடலாம்
இக்கட்டுரை பகிர்வுக்கு நன்றி
இக்கட்டுரை பகிர்வுக்கு நன்றி
Re: இந்தியா 2020 ல்
ஆசைப்படுவதில், கனவு காணுவதில் என்ன கஞ்சத்தனம் என்று, எனக்கு இந்தியா 2020ல் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதுபற்றி சிந்திக்க எனது கற்பனை ...................
தன் தாயத்திருநாட்டின் மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஏற்றுக் கொண்டு, நாடு எப்படி முன்னேற வேண்டும் என்று நான் கண்ட கனவு போல் அனைவரும் கண்டால் நிச்சயம் நிச்சயம் அவை நடக்கும்.
:!+: :!+: @. @. :];: :];: #heart #heart

Similar topics
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» 2020 அலப்பறைகள்
» 2020-இல் 26,100 இந்திய வலைதளங்கள் முடக்கம்
» 2020 -ல் உலகம் எப்படி இருக்கும்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum