Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50
3 posters
Page 1 of 1
Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50
'சென்னை-28', 'வெண்ணிலா கபடி குழு' வரிசையில் கிரிக்கெட் விளையாட்டை கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்.
தேனியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு வாரிசாக
இருக்கிறார் கதாநாயகி ஹரிணி. அவருக்கு கொடைவாணன், கொலைவாணன் என்று இரண்டு
முறைமாமன்கள். இரண்டு முறை மாமன்கள் என்பதால் யாருக்கு பெண் என்று போட்டி
நடக்கிறது. எந்த விஷயம் என்றாலும் முட்டிகொள்ளும் இவர்கள், கல்யாண
விஷயத்திலும் முட்டிக்கொள்கிறார்கள். வழக்கம் போல் ஊர் பெரியவர்கள் ஏதாவது
போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெண்ணை திருமணம் செய்து
வைக்கலாம் என்று யோசனை சொல்கிறார்கள். அப்போது சிறுவன் ஒருவன் "எத்தனை
நாளைக்குத்தான் ரேக்ளா ரேஸையும், மாடு பிடிப்பதையும் வைப்பிங்க. கிரிக்கெட்
போட்டி வைத்து அதுல வெற்றி பெறுபவனுக்கு பெண்ணை கொடுங்கப்பா" என்று சொல்ல,
அதற்கு ஹரிணியும் சம்மதம் தெரிவிக்கிறார்.
கிரிக்கெட்டுக்கும், ஃபுட் பாலுக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களில்
ஒரு குழுவினர் நிஜ கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷை கிராமத்திற்கு கடத்திக்
கொண்டு வந்து தங்களுக்கு கிரிக்கெட் கற்றுத் தரச் சொல்கின்றனர். இவர்கள்
எப்படி கிரிக்கெட் கற்றுகொண்டு வெற்றிபெறுகிறார்கள், ஹரிணி யாரை திருமணம்
செய்து கொண்டார் என்பதை கிரிக்கெட்டுடன், முழுநீள நகைச்சுவையை கலந்து
கொடுத்திருப்பதுதான் இப்படத்தின் கதை.
நிஜத்தில் இதுவெல்லாம் நடக்கிற கதையா என்ற ஆராய்ச்சிக்கு செல்வதற்கு
எல்லாம் இயக்குநர் ரசிகனுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. திரைக்கதையில்
அப்படியொரு விறுவிறுப்பு. இதற்காக இயக்குநர் யுவ்ராஜை பாராட்டியாக
வேண்டும்.
கிரிக்கெட் கோச்சராக வருகிறார் சடகோபன் ரமேஷ். கிரிக்கெட் ஆட மட்டுமில்ல
நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரைப் போன்று இன்னொரு
கோச்சராக வரும் மயில்சாமி காமெடி சாமியாராகியிருக்கிறார். லிப்ட் கேட்டு
சடகோபன் ரமேஷுடன் காரில் வரும் மயில்சாமி இந்திய கிரிக்கெட் வீரர்களை
எல்லாம் மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லிக் கொண்டு சிரிப்பைக்
கிளப்புகிறார். இவர் கிராமத்து ஆளுங்களுக்கு கிரிக்கெட் சொல்லித்தரும்
இடங்கள் முக்கியமாக BALL பற்றி பாடம் எடுப்பது செம காமெடி.
கொடைவாணனாக வருகிறவரும் அவர் நண்பராக வரும் அவதாரமும் புதுமுகமாம்.
புதுமுகம்னு வெளிய சொல்லிராதீங்கப்பு... இருவருமே தமிழ்சினிமாவுக்கு புதிய
அவதாரங்கள்தான். இவங்க இரண்டு பேரு நடிப்பையும் பார்த்தா 40 படம் நடிச்ச
மாதிரியில்ல இருக்கு... பின்னி பெடல் எடுத்திருக்காங்க. ஒரு அப்பாவி
வெள்ளந்தி கேரக்டரை இதைவிட மேலாக யாராலும் பண்ணமுடியுமாங்கிறது
சந்தேகம்தான். அண்ணே உங்க மாமா பொண்ணை கடத்திட்டு போயி
முடிச்சுருங்கண்ணே... என்கிற அல்லக்கையிடம், அடப்பாவி கொலை பண்ண சொல்றியா
என்று புரிஞ்சுக்கிற அளவுக்கு நல்லவராக இருக்கிறார் கொடைவாணன். அந்த பொண்ணை
கட்டிப் புடிச்சுருங்கண்ணே என்றால், ம்ஹூம் எனக்கு பயத்துல கக்கூஸ்
வந்திரும் என்றெல்லாம் பம்முகிறார். அசாத்திய பாடி லாங்குவேஜ் சகிதம் இவர்
படுத்தி எடுக்கையில் தியேட்டரே கதி கலங்கிப் போகிறது.
கொடைவாணனுடன் வருகிற அவதாரம் இருக்கிறாரே... அப்பப்பா... இந்த அவதாரத்தை
எங்கதான் கண்டுபிடிச்சாங்களோ... நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்க வெச்சு
பஞ்சர் ஆக்குகிறார். என்ன ஒரு டயலாக் பிரசன்டேஷன்.
கொலைவாணனாக நடித்திருப்பவர் நல்லாவே நடித்திருந்தாலும், அவரது நடிப்பு கொஞ்சம் அப்பப்போ இது நடிப்புங்கிற மாதிரி உறுத்துது.
கொலைவாணனும் கொடைவாணனும் யாருக்காக மல்லுக்கட்டுகிறார்களோ அந்த தேவதை
வேடத்தில் புதுமுகம் ஹரிணி. ஹரிணி கிடைப்பாங்கன்னா அவங்க ரெண்டு பேரு
மட்டுமில்ல யாரு வேணும்னாலும் மல்லுக்கட்டுவாங்க பாஸ். குழந்தைத்தனமான
முகம், கண்களாலே பேசிவிடும் ஹரிணி நம்மை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுகிறார்.
ஒரு பாடலுக்கு வெள்ளைக்காரிகள் சகிதம் ஆட்டம் போட்டிருக்கிறார் டைரக்டர் யுவ்ராஜ்.
படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியாகட்டும், ஒவ்வொரு
கதாபாத்திரமாகட்டும் ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில்
கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் யுவ்ராஜ், அதனுடன் மலைகளும்,
மரங்களும் எவ்வளவு முக்கியம் என்ற ஒரு மெசஜ்சையும் நமக்கு
சொல்லியிருக்கிறார். அதுவும் சடகோபன் ரமேஷ் ஒரு காட்சியில், "மலைகளும்,
மரங்களும் இல்லையென்றால் மழை இருக்காது. மழை இல்லையென்றால் விவசாயம்
இருக்காது. இப்படியே போனா, ஏர் கலப்பையை எக்ஸிபிஷன்லையும், பள்ளி, தவளை
போன்றவற்றை அறிவியல் புத்தகத்துலயும்தான் பாக்கணும்" என்று பேசும் வசனம்
சிந்திக்க வைக்கும் வசனமாக இருக்கிறது.
ரன்னுக்காக ஓடும் காட்சிகளில் மூச்சிரைக்கும் சத்தத்தை மட்டும் விட்டு
பின்னணி இசையை ஒலிக்கவிடாமல்.... இது போலவே சில இடங்களில் பின்னணி இசைக்கு
வேலை இல்லாமல் அந்த இடத்தையும் நன்றாகவே ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்
இசையமைப்பாளர் அருள்தேவ். பாடல்கள் கேட்கலாம் ரகம். கோபி அமர்நாத்தின்
ஒளிப்பதிவு, ஓப்பனிங் காட்சியிலேயே சபாஷ் போட வைத்து இறுதிக் காட்சிவரை
மனதில் ஓவியமாக பதிகிறது.
இப்படி ஒரு படத்தை யுவ்ராஜுடன் இணைந்து தயாரித்த முரளிராமனுக்கு தனியே
நன்றி சொல்ல வேண்டும். எளிய கதைக்கருதான் என்றாலும், அதை காமெடி கலந்த
காட்சிகளாக்கி, கிராமத்தி பின்னணியோடு கிரிக்கெட்டும் கலந்து
கொடுத்திருக்கிறார் யுவ்ராஜ். நீண்ட நாளைக்குப் பிறகு முழுநீள காமெடிப்
படம் பார்த்த திருப்தியை நமக்கு போட்டி போட்டுக் கொண்டு தந்திருக்கிறது
இந்த 'போட்டா போட்டி'
போட்டா போட்டி - சென்ச்சூரி!
நடிகர்கள்
சடகோபன் ரமேஷ், ஹரிணி, மயில்சாமி, சிவம், கணேஷ், உமர்
இசை
அருள் தேவ்
இயக்கம்
யுவ்ராஜ்
தயாரிப்பு
வி. முரளி ராமன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50
சடகோபன் ரமேஷ் நடிப்பு சூப்பர்
படத்தோடு சேர்ந்தே காமெடி கலக்கல்..
கொடைவாணனாக வருகிறவரும் அவர் நண்பராக வருபவரும் புதுமுகம் என்று இந்த விமர்சனம் பார்த்த பின்பே தெரியுது அவங்க நடிப்பு ரொம்ப நாள் நடிச்சு அனுபவப்பட்டதா தெரியுது..
கிரேசி மோகனின் காமெடி வசனங்கள் போன்று இந்தப்படத்திலும் இருப்பது பிளஸ்..
படத்தோடு சேர்ந்தே காமெடி கலக்கல்..
கொடைவாணனாக வருகிறவரும் அவர் நண்பராக வருபவரும் புதுமுகம் என்று இந்த விமர்சனம் பார்த்த பின்பே தெரியுது அவங்க நடிப்பு ரொம்ப நாள் நடிச்சு அனுபவப்பட்டதா தெரியுது..
கிரேசி மோகனின் காமெடி வசனங்கள் போன்று இந்தப்படத்திலும் இருப்பது பிளஸ்..
Similar topics
» சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» மண்டையை போட்டா
» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» மண்டையை போட்டா
» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum