Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
2 posters
Page 1 of 1
சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
புகழ்பெற்ற ஒரு நடிகரையும், அவரைப்போல் வளர ஆசைப்பட்ட ரசிகரையும் பற்றிய கதை.
ஸ்ரீராம் கார்த்திக், கிராமத்து இளைஞன். நடிகர் ஜெயராமின் தீவிர ரசிகர். தனது டிரைவரின் திருமணத்துக்காக அந்த கிராமத்துக்கு வருகிறார், ஜெயராம். அப்போது, பல குரலில் பேசி அவருடைய மனதில் இடம்பிடிக்கிறார், ஸ்ரீராம் கார்த்திக். 'நீ சென்னைக்கு வந்து என்னைப்பார்' என்று அவரிடம் ஜெயராம் கூறுகிறார். அவரை நம்பி சென்னைக்குப் போகிறார், ஸ்ரீராம் கார்த்திக். அங்கே அவரை அலட்சியப்படுத்துகிறார், ஜெயராம். கிராமத்தில் பார்த்த ஜெயராமுக்கும், நகரத்தில் பார்க்கும் ஜெயராமுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து அதிர்கிறார், ஸ்ரீராம் கார்த்திக்.
அவருக்கு, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் 'சபாஷ் சரியான போட்டி' நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில், ஜெயராம் மாதிரி பேசி நடித்து, பிரபலம் ஆகிறார். அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு நடுவராக ஜெயராம் வரப்போவதாக அறிவிக்கப்படுகிறது. ஜெயராம் வந்தால், தன்னை காலி செய்து விடுவார் என்று பயந்த ஸ்ரீராம் கார்த்திக், அவரை கடத்துகிறார். முடிவு என்ன? என்பது ஜாலியான இறுதிக்காட்சி.
புதுமுகம் ஸ்ரீராம் கார்த்திக் இள வயது நடிகர் முரளியின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கிறார். நடிப்பிலும் அசத்தியிருக்கும் இவர் முதல் படத்திலே காமெடியிலும் சோடைபோகாமல் அசத்துகிறார். ஸ்ரீராம், ரஞ்சனியிடம் காதலை சொல்ல முயற்சிக்கும் அந்த ஒரு காட்சியோடு காதல் எபிசோடுக்கு கல்லறையை கட்டிவிட்டு, ஜெயராமுடனான போட்டியை ஆரம்பித்து விடுகிறார் இயக்குநர்.
கதாநாயகிகள் அஞ்சனா, வேலன்டினா இருவரும் வசீகரமே இல்லாத முகங்கள்.
ஹீரோக்களை கிண்டலடிக்கும் கேரக்டரில் ஜெயராம் நடித்திருப்பது ஆச்சர்யம். அது மட்டுமல்ல, ஹீரோக்களின் பந்தா, வெளிஉலகிலும், வீட்டுக்குள்ளும் அவர்கள் நடந்துகொள்ளும் முறை இவற்றை அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறார். மதுவுக்கு எதிராக பேட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்குள் மது அருந்தும்போது ஸ்ரீராம் தட்டிக் கேட்பார். "மூணு லார்ஜ் அடிச்சிருக்கேன். ஆனாலும் என் ஞாபக சக்தி எப்படி இருக்குன்னு பார்க்குறியா" என்றபடி திருப்புகழை மூச்சு விடாமல் பாடிக் காட்டுவது அபாரம். "இமேஜை காப்பாற்றுவதற்கு நாங்க தினம் தினம் போராடுறோம். ஆனா மிமிக்ரிங்கற பேர்ல அதை வீணாக்குறீங்களே" என்று பொருமுவது யதார்த்தம்.
ஜெயராமின் கார் டிரைவராக வரும் மயில்சாமியின் நகைச்சுவை எப்போதும் போல நம்மை சிரிக்க வைக்க, டெல்லி கணேஷ், வையாபுரியின் காமெடி நம்மை கடித்து சின்னா பின்னாமாக்குகிறது. அன்பின் அடையாளமாக திகழும் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனியின் பாசமழையில் ஹீரோவுடன் சேர்த்து நாமும் நனைந்து விடுகிறோம்.
இன்ஸ்பெக்டர் வேஷத்தில் பர்ஸ்சை அபகரிக்கும் வேணு அரவிந்த்தும், அவரது ஜோடியான வேலன்ட்டினாவும் அவர்களது டெக்னிக்கும் த்ரில். இதை பார்க்கிற பொதுமக்கள் நிச்சயம் உஷாராவார்கள். வேணு அரவிந்த்துக்கு இரட்டை வேடம். அது பிற்பாதியில் ஜெயராமின் கடத்தலுக்கு உதவும்போது கதையும் கிரேஸிமோகன் பாணியில் பயணம் செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதை சொல்லும் பாணி, பழைய ஸ்டைல். அதை 'காமெடி'க்கு பயன்படுத்தியிருப்பதில், சுவாரஸ்யம். ஜெயராம் கடத்தப்பட்டதிலிருந்து கதை வேகம் பிடிக்கிறது. ஆனால் திடீரென்று அவர் நல்லவராக மாறுவது, நம்பும்படி இல்லை. தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஒரு ஹீரோவின் தனிப்பட்ட வாழ்க்கையையும், ரசிகனின் அப்பாவித்தனத்தையும் ஒருங்கிணைத்து முயற்சித்தால் எல்லோரும் ஹீரோவாகலாம் என்கிற மெசேஜை சொல்ல தீர்மானித்திருக்கிறார் இயக்குநர் வேணு அரவிந்த்.
சிறையில் ஸ்ரீராமுடன் இருக்கும் சக கைதிக்கும், இயக்குநருக்குமான உரையாடலில் கதை நகர்வது புதிய யுக்தி. ஹீரோக்களின் இன்னொரு முகத்தை காட்டியிருக்கும் துணிச்சலும், ஓடிப்போன கணவனை நினைத்து அழாமல், தன் சோகம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்று வாழும் அஞ்சனாவின் கேரக்டர் உருவாக்கமும், ஸ்ரீராமுக்கும்-அஞ்சனாவுக்குமான மென்மையான காதலும் 'சபாஷ்' போட வைக்கிறது. ஆனால் நாடகத்தனமான காட்சி அமைப்புகள், பக்கம் பக்கமாக வசனங்கள், லாஜிக்கை காவு வாங்கும் திரைக்கதை, இவையெல்லாம் படத்திற்கு தடை கல்லாக இருக்கிறது.
சபாஷ் சரியான போட்டி - காமெடி கன்டெஸ்ட்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
சினிமா விமர்சகர் சின்னகுத்தூசிக்குப் பிறகு இப்படி ஒரு விமர்ஷனத்தை இங்குதான் பார்க்கிறேன் .அருமையாக புட்டு புட்டு அணு அணுவாக ரசித்து இருக்கிறார் நண்பன் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
:.”: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum