சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

அல்சர் நோயை தடுக்க Khan11

அல்சர் நோயை தடுக்க

Go down

அல்சர் நோயை தடுக்க Empty அல்சர் நோயை தடுக்க

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 7:55

அல்சர் நோயை தடுக்க R7_ulcers
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தின் மேற் பகுதியில்
ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம்.
செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.



புண் எதனால் ஏற்படுகிறது: குடல் புண் தோன்றுவதற்குரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
குடல்புண் இருப்பதை அறிவது எப்படி: காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம். இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன.
இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
நெஞ்சு எரிச்சல்: சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு.
பிறகு இவ்வலி மறைந்து சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்.


அல்சர் நோயை தடுக்க Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அல்சர் நோயை தடுக்க Empty Re: அல்சர் நோயை தடுக்க

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 7:55

இரைப்பை பாதிக்கும்: சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின் அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ் சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்.
வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால் இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது.
அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
கவலையாலும் வரும்: சாப்பிட வேண்டிய உணவுகளை தவிர்க்க கூடாது. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ வளைவதோ கூடாது. அப்படி செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ் செரிச்சல் ஏற்படும். இரவில் அதிக நேரம் விழித்திருக்க கூடாது. மனநிலையை தடுமாற விடக்கூடாது. அவசரப்படக் கூடாது. கவலைப்படக் கூடாது. கவலையும் அல்சரை கொண்டு வரும். மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்த கூடாது.
செய்ய வேண்டியவை: குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது.
மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப்பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
புகை வேண்டாம்: அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.



குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன: பொரித்த அல்லது தாளித்து செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பன்டைஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயை சாப்பிடக் கூடாது, தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


அல்சர் நோயை தடுக்க Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அல்சர் நோயை தடுக்க Empty Re: அல்சர் நோயை தடுக்க

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 7:55



அல்சர் நோயை தடுக்க Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அல்சர் நோயை தடுக்க Empty Re: அல்சர் நோயை தடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum