சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Khan11

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

+10
gud boy
முனாஸ் சுலைமான்
ஹம்னா
kalainilaa
*சம்ஸ்
arull
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Atchaya
யாதுமானவள்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 6:07

First topic message reminder :

ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய வேண்டும் என்ற உந்துதல் எதாவது ஒரு கால கட்டத்தில் வரும். ஒவ்வொரு பிரபலங்களைப் பார்க்கும் போதும் அவர்களை முன்னோடியாக வைத்து நாமும் அவர்களைப் போல் பேசவோ பாடவோ எழுதவோ நடிக்கவோ பெரிய தொழிலதிபர் ஆகவோ,,, ஆகவேண்டுமென்று தோன்றுவதுண்டு. அதை எண்ணத்தில் கொண்டு மெல்ல மெல்ல முயன்று தான் கொண்ட லட்சியத்தினை சிலர் அடைந்தும் விடுவர்.

உதாரணமாக அறிஞர் அண்ணாவைப் போல் பேசவேண்டும், அவரைப் போல் எழுதவேண்டுமென்று அன்றைய காலகட்டத்தில் ஒரு பெருங் கூட்டமே முயன்று அதில் சிலர் ஓரளவு தான் இலட்சியங்களை எட்டியும் பிடித்துள்ளனர். ரஜினி போல் நடிக்க வேண்டும் ரஜினி போல் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று இன்றைய கால கட்டத்தில் நம் கண் முன்பு ஒரு பெருங் கூட்டம் உள்ளது. தன்னைத்  திருவள்ளுவனாகவே நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் முதல் திரிஷாவாகவே நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் வரை நாம் இன்றைய கால கட்டத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  இதில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. வீணாய் போனவர்கள் பலர்.

வெற்றி பெறுபவர்கள் யாரெனில் உள்ளுணர்வில் தான் கொண்ட லட்சியத்தில் உண்மையான உந்துதலோடு உழைப்பையும் நேரத்தையும் கொடுத்ததும் அவமானப்படுத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள்.  இப்படி நிராகரிக்கப்பட்டவர்களோ இன்னும் இன்னும் முயன்று என்னால் முடியும் என்ற ஒரே எண்ணத்தில் தான் முழு நேரத்தையும் அந்த எண்ணத்துடனே வாழ்ந்து சாதனை படைத்துவிடுகின்றனர்.

இப்போது நான் என்ன சொல்ல வருகிறேனென யூகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பொழுது போக்க " ஒரு தமிழ்க் களஞ்சியத்தில் தன்னுடைய ஆக்கங்கள் கொடுத்தும் நேரத்தைக் கொடுத்தும் சம்ஸ் என்ற  ஒரு தமிழன் எல்லா நண்பர்களுடன் தானும் ஒருவராய் இருந்தும் அந்த ஒருவரில் தன் பங்கு அதிகமாய்க் கொடுத்தும் நேரகாலமின்றி உழைத்தும் சாதாரண ஒரு உறுப்பினராக; ஆனால் அக்களஞ்சியத்தின் வளர்ச்சியின் மேல் அக்கறை கொண்டு ஈடுபாட்டுடன் செயல் பட, ஒரு கட்டத்தில் சொல்லும் தரமில்லாத பலவித மன உளைச்சலுக்கு ஆளாகிறார். காரணமாக அங்குள்ள நிர்வாகத்தினரே ஆகிவிடுகின்றனர்.தான் மட்டுமல்ல தன்னுடைய சக தோழர்களும் தொடர்ந்து அவமானப்பட்டும் சில கட்டங்களில் அறிவுறுத்தப்பட்டும் தொடரும் நிலையினை அடைகிறார்கள்.. எல்லோரும் ஒரே விதமான மனவுளைச்சலுக்கு உட்படும்போது  தன்மானம் அங்கிருந்து வெளிவர முடிவெடுக்கிறது.  

திறமை நம் கையிலிருக்க நாம் ஏன் எங்கோ சென்று எழுதவேண்டும். நாம் அனைவரும் ஒரு புதிய தளம் தொடங்குவோமே என்று தொடங்கியது தான் சேனைத் தமிழ் உலா.

இதில் என்ன விசெடமேன்றால்... மேலே சொன்னது போல் அவர்களைப் போல் (அண்ணா, ரஜினி, திரிஷா )ஆகவேண்டும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு தொடங்கியதல்ல...அவர்களைப்போல்(அத்தமிழ்க் களஞ்சியம்)  நாம் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கி... தமிழ் மீது ஆர்வம் கொண்ட நண்பர்களும், அங்கிருந்து மனக்கசப்புடன் வெளிவந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் கணினி வல்லுனர்களும் இன்னும் நல்லுணர்வு உள்ளவர்களும் இணைந்து செயலாற்றும் படி எள்ளளவும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடாதபடிக்கு ஒவ்வொரு நிமிடமும் நட்போடும் அன்போடும் தத்தமது ஆக்கங்களை இங்கே பகிர்ந்து ... ஒன்றாய்... பயணிக்கிறது சேனை உறவுகள்.

அப்பப்பா.... இரவா பகலா... எதுவுமே இல்லை இந்த சேனை நண்பர்களிடம். சம்ஸ் என்ற மனிதனின் அன்பு , நண்பன் ஹாசிம் கலைநிலா ஹம்னா... இவர்களின் உறக்கம் கூட சேனைக்காகவே ஒதுக்கப்பட்டுவிட்டது இந்த ஓராண்டில்.  உழைப்பு வீணானதாக சரித்திரம் இல்லை.  பட்ட அவமானங்கள் அவமானப்படும்படி இன்று இவர்கள் உயர்ந்து நிற்பதைக் கண்டு பேரும் பெருமையும் மகிழ்ச்சியும் பெறும் பலநூறு உள்ளங்களில் யாதுமானவளின் உள்ளமும் ஒன்று என்பதை நான் இங்கு பதிக்கிறேன்.

அக்களஞ்சியத்தக் குறை சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே எழுதப்பட்டது. அக்களஞ்சியம் இல்லையென்றால் சேனை என்ற ஒன்று இல்லாமல் இருந்திருக்கும். இன்று உலக தமிழ் வலைத்தளத்தில் நாம் முதலாவது இடத்தில் நிற்கும் அளவிற்கு உலகத் தமிழினமே நம்மை வியந்து உயர்ந்து பார்க்கும் பெருமை நமக்கு அக்களஞ்சியத்தால் கிடைத்தது என்பதால்.... இரண்டு லட்சம் பதிவுகள் கடந்த மகிழ்ச்சியில் உலக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ள மகிழ்ச்சியில் அக்களஞ்சியத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

"சேனை என்பது ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு". மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும் சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்..  பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க சேனை! வளர்க அதன் புகழ்!  

யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Wed 14 Sep 2011 - 20:11; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:26

kalainilaa wrote:திறமை நம் கையிலிருக்க நாம் ஏன் எங்கோ சென்று எழுதவேண்டும். நாம் அனைவரும் ஒரு புதிய தளம் தொடங்குவோமே என்று தொடங்கியது தான் சேனைத் தமிழ் உலா.

இதில் என்ன விசெடமேன்றால்... மேலே சொன்னது போல் அவர்களைப் போல் (அண்ணா, ரஜினி, திரிஷா )ஆகவேண்டும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு தொடங்கியதல்ல...அவர்களைப்போல்(அக்களஞ்சியம்) நாம் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கி... தமிழ் மீது ஆர்வம் கொண்ட நண்பர்களும், அங்கிருந்து மனக்கசப்புடன் வெளிவந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் கணினி வல்லுனர்களும் இன்னும் நல்லுணர்வு உள்ளவர்களும் இனைந்து செயலாற்றும் படி எள்ளளவும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடாதபடிக்கு ஒவ்வொரு நிமிடமும் நட்போடும் அன்போடும் தத்தமது ஆக்கங்களை இங்கே பகிர்ந்து ... ஒன்றாய்... பயணிக்கிறது சேனை உறவுகள்.

ஆதங்கம் ,அடித்தளமாய் மாறியதால் ,அவசியமானது சேனை!
சேனை இன்று ,சோலையாய் மாறியதற்கு ,நண்பன் ,சம்ஸ்,ஹாசிம்
யாது,ஹம்னா ,மீனு ,இன்னும் தொடரும் நண்பர்கள் கூட்டம்.இது யாருக்கும் எதிரியாக நினைத்து ஆரம்பிக்கவில்லை, அது அவசியமுமில்லை,நம்மை எதிரியாக நினைத்தால் பயமுமில்லை.எதுக்கும் எதற்கும் கவலைப்பட்டதுமில்லை .எல்லாக் கதைகளும்,கரைகளும்
கடந்து வந்ததே போதும்,பதிலுரைக்க!

உங்கள் கட்டுரை,சில ரகசியங்களை ,சொல்லியது .
பகிர்வுக்கு நன்றி .நன்றி .

எல்லாவற்றுடனும் சேர்த்து கலையின் கலக்கலான இன்ஸ்டன்ட் கவிதைகளும் சேர்த்து சேனையின் ஒவ்வொரு இலையும் நறுமணம் பரப்புகிறது

தங்கள் கருத்திற்கு நன்றி கலைநிலா....

Last edited by யாதுமானவள் on Wed 14 Sep 2011 - 20:12; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:29

ஹம்னா wrote:"சேனை என்பது ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு". மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும் சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்.. பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க சேனை! வளர்க அதன் புகழ்!

யாதுமானவள்.
"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 331844 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 331844 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 331844 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 331844
இக்கடுரையைப் படிக்கும் போது மெய் சிலிர்க்குது அக்கா.
உண்மைகளை எடுத்துச்சொன்னீர்கள். கண்கள் கலங்கி விட்டது.
நன்றி அக்கா நன்றி. "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 755559 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 755559 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 755559

சேனையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான காரணமே ஹம்னாதான். ஹன்மாவையும் சம்ஸ் வையும் நீடூழி வாழ்த்துவதில் மிக்க மகிழ்கிறேன். இருவரும் அன்போடும் ஒற்றுமையோடும் ஒத்த கருத்தோடும் இன்னும் பலப்பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:31

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:
Atchaya wrote:ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 800522 தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை

நன்றி ரவி !

அக்கா என்னாச்சு இருதடவயும் அட்சயா & ரவின்னு கொடுதிட்டிங்க

சந்தோஷம் அதிகமாக இருக்கும் போது அதிகமுறை நன்றி சொல்வதில் தவறேதுமில்லை ஹாசிம். தங்களுக்கும் மீண்டும் நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Sep 2011 - 16:57

எடுத்துக்காட்டாக யாதுமானவள் அக்க எழுதிய கட்டுரையினைப்படித்தேன்
ஆனால் இங்கு குறிப்பிட்டிருக்கும் விபரமும் அந்த தளமும் எனக்கு தெரியாது இருந்தாலும்
ஒரு விடையத்தினை நாம் அனைவரும் புரிந்துதான் ஆகவேண்டும்
தலைக்கனம் என்று சொல்வார்கள்
அதாவது நான் என்னும் அகங்காரம் அது யாரிடம் உள்ளதோ அவரும் உருப்பட மாட்டார் மற்றவரையும் அனுசரிக்க மாட்டார்
எனவே எதிலும் தேவை விட்டுக்கொடுப்பு அதுதான் மனிதனின் பெரிய ஆயுதம்
ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து செயல் படும் அனைத்து வேலையும் என்றும் தோல்வி கண்டதே இல்லை அந்த வகையில் சில ஆதாரங்கலைக்காட்டி இக்கட்டுரையை தந்திருக்கும் அக்காவின் ஆதங்கம் ஏதோ ஒரு உண்மை சொல்கிறது அந்த வகையில் சேனையின் சொந்தங்கள் எல்லாவிடையத்திலும் எல்லாரையும் அனுசரிக்கும் விதம் கண்டு எல்லா உறவுகளும் அன்புடனும் விருப்பத்துடனும் இங்கு உலாவருவது பெரிய சந்தோசமாக இருக்கிறது எனவே நான் என்னும் அகங்காரமும் சுயநலமும் ஒழிந்து நாம் என்னும் பொது நலத்துடன் முன்னேறுவோம் வாழ்த்துக்கள். "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by gud boy Wed 14 Sep 2011 - 18:05

நாம் எத்தனை உயரத்தில் இருந்தாலும்,கீழே இருந்து தான் வந்தோம்...என்ற எண்ணம் இருக்கும் வரையில் முன்னேற்றம் தான்..அதில்லாமல் மேலே இருந்து தான் குதித்தோம் என்ற எண்ணமிருந்தால் ?????????????????
நானும் அங்கிருந்து மனக் கசப்பில் இங்கு வந்தவன் தான்,,,இன்று வரை மன மகிழ்ச்சியை தவிர வேறெதுவையும் நான் இங்கு சந்திக்கவில்லை...
காரணம் நண்பன் அவர்கள்,உண்மையிலேயே நண்பனாக இருப்பதால் தான்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 20:30

முனாஸ் சுலைமான் wrote:எடுத்துக்காட்டாக யாதுமானவள் அக்க எழுதிய கட்டுரையினைப்படித்தேன்
ஆனால் இங்கு குறிப்பிட்டிருக்கும் விபரமும் அந்த தளமும் எனக்கு தெரியாது இருந்தாலும்
ஒரு விடையத்தினை நாம் அனைவரும் புரிந்துதான் ஆகவேண்டும்
தலைக்கனம் என்று சொல்வார்கள்
அதாவது நான் என்னும் அகங்காரம் அது யாரிடம் உள்ளதோ அவரும் உருப்பட மாட்டார் மற்றவரையும் அனுசரிக்க மாட்டார்
எனவே எதிலும் தேவை விட்டுக்கொடுப்பு அதுதான் மனிதனின் பெரிய ஆயுதம்
ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து செயல் படும் அனைத்து வேலையும் என்றும் தோல்வி கண்டதே இல்லை அந்த வகையில் சில ஆதாரங்கலைக்காட்டி இக்கட்டுரையை தந்திருக்கும் அக்காவின் ஆதங்கம் ஏதோ ஒரு உண்மை சொல்கிறது அந்த வகையில் சேனையின் சொந்தங்கள் எல்லாவிடையத்திலும் எல்லாரையும் அனுசரிக்கும் விதம் கண்டு எல்லா உறவுகளும் அன்புடனும் விருப்பத்துடனும் இங்கு உலாவருவது பெரிய சந்தோசமாக இருக்கிறது எனவே நான் என்னும் அகங்காரமும் சுயநலமும் ஒழிந்து நாம் என்னும் பொது நலத்துடன் முன்னேறுவோம் வாழ்த்துக்கள். "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 528804

உண்மை முனாஸ், நான் என்ற அகங்காரம் தலைதூக்கியது. யாரை என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஆணவம் கண்ணை மறைத்தது.... நாங்கள் இல்லையென்றால் நீங்கள் ஒன்றுமில்லை என்னும் கர்வம்... மீண்டும் அவர்களை கெஞ்சவேண்டுமென்ற மதர்ப்பு... இப்படி ஏகப்பட்ட கணங்கள்... தலையில் கொண்டு ஆடிய ஆட்டமென்ன... ஹப்பப்பா....

ஆனால் இங்கு கெஞ்சுகிறார்கள்... எதோ ஒரு மன உளைச்சலில் சிறிதுகாலம் நான் விலகி இருக்கிறேன் எனச்சொன்னதும் அத்தனை உறவுகளும் துடித்த துடிப்பு இன்னும் உயிர்ப்புடன் என்னுள் இருக்கிறது....
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மனக்கலக்கமுர்று சில நொடிப்பொழுதும் பிரியக்கூடாதென்று என்னிடம் கூறிய ஒவ்வொருவரின் வார்த்தைகளும் ஒவ்வொரு நாளும் நினைக்கும்படியுள்ளது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக... தாங்கள் எழுதிய அந்த வரி என்னை ஏன் இதயத்தை சிறிது கிள்ளிவிட்டு அழவைத்தது ..." சேனையில் நுழைந்ததுமே அக்கா இருக்காவா என கண்ககள் தேடும். அக்கா இன்றைக்கு என்ன எழுதி இருக்கார் என்று மனம் தேடும்" என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள்... ஹப்பா... ம்ம்ம்... பெருமிதம் கொள்கிறேன் . இப்படிப்பட்ட ஒரு நட்புறவோடு பயணிப்பதை நினைத்து.

"இக்கட்டுரையை தந்திருக்கும் அக்காவின் ஆதங்கம் ஏதோ ஒரு உண்மை சொல்கிறது அந்த வகையில் சேனையின் சொந்தங்கள் எல்லாவிடையத்திலும் எல்லாரையும் அனுசரிக்கும் விதம் கண்டு எல்லா உறவுகளும் அன்புடனும் விருப்பத்துடனும் இங்கு உலாவருவது பெரிய சந்தோசமாக இருக்கிறது "

இதுவே சேனையின் வெற்றி.

தங்கள் பதிலுக்கு நன்றி முனாஸ்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 20:35

kiwi boy wrote:நாம் எத்தனை உயரத்தில் இருந்தாலும்,கீழே இருந்து தான் வந்தோம்...என்ற எண்ணம் இருக்கும் வரையில் முன்னேற்றம் தான்..அதில்லாமல் மேலே இருந்து தான் குதித்தோம் என்ற எண்ணமிருந்தால் ?????????????????
நானும் அங்கிருந்து மனக் கசப்பில் இங்கு வந்தவன் தான்,,,இன்று வரை மன மகிழ்ச்சியை தவிர வேறெதுவையும் நான் இங்கு சந்திக்கவில்லை...
காரணம் நண்பன் அவர்கள்,உண்மையிலேயே நண்பனாக இருப்பதால் தான்..

நண்பன் மட்டுமா நண்பன்? இங்கு எல்லோருமே நண்பன்கள் தான். எல்லாமுமே நன்மைகள்தான். எல்லாமுமே நலன்கள் தான்.

இந்த வெற்றியால் நாமும் சாதித்துவிட்டோம் என்று இருமார்ந்துவிடக்கூடாது. இன்னும் இன்னும் இன்னும் என்ற வாக்கியம் மட்டுமே நாம் கொண்டு இன்னும் மேல்நோக்கி சென்றுகொண்டே இருக்கவேண்டும்.
நன்றி கிவிபாய்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by gud boy Wed 14 Sep 2011 - 20:45

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:நாம் எத்தனை உயரத்தில் இருந்தாலும்,கீழே இருந்து தான் வந்தோம்...என்ற எண்ணம் இருக்கும் வரையில் முன்னேற்றம் தான்..அதில்லாமல் மேலே இருந்து தான் குதித்தோம் என்ற எண்ணமிருந்தால் ?????????????????
நானும் அங்கிருந்து மனக் கசப்பில் இங்கு வந்தவன் தான்,,,இன்று வரை மன மகிழ்ச்சியை தவிர வேறெதுவையும் நான் இங்கு சந்திக்கவில்லை...
காரணம் நண்பன் அவர்கள்,உண்மையிலேயே நண்பனாக இருப்பதால் தான்..

நண்பன் மட்டுமா நண்பன்? இங்கு எல்லோருமே நண்பன்கள் தான். எல்லாமுமே நன்மைகள்தான். எல்லாமுமே நலன்கள் தான்.

இந்த வெற்றியால் நாமும் சாதித்துவிட்டோம் என்று இருமார்ந்துவிடக்கூடாது. இன்னும் இன்னும் இன்னும் என்ற வாக்கியம் மட்டுமே நாம் கொண்டு இன்னும் மேல்நோக்கி சென்றுகொண்டே இருக்கவேண்டும்.
நன்றி கிவிபாய்
எல்லாருமே நண்பர்கள் தான் அக்கா....நண்பன் அவர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன்...எல்லாரையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்ற ஆசை தான்..அதற்கு இடம் பத்தாதல்லவா?

நன்றி..அக்கா...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 23:38

kiwi boy wrote:நாம் எத்தனை உயரத்தில் இருந்தாலும்,கீழே இருந்து தான் வந்தோம்...என்ற எண்ணம் இருக்கும் வரையில் முன்னேற்றம் தான்..அதில்லாமல் மேலே இருந்து தான் குதித்தோம் என்ற எண்ணமிருந்தால் ?????????????????
நானும் அங்கிருந்து மனக் கசப்பில் இங்கு வந்தவன் தான்,,,இன்று வரை மன மகிழ்ச்சியை தவிர வேறெதுவையும் நான் இங்கு சந்திக்கவில்லை...
காரணம் நண்பன் அவர்கள்,உண்மையிலேயே நண்பனாக இருப்பதால் தான்..
:+=+: :+=+: :+=+: )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 23:41

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:நாம் எத்தனை உயரத்தில் இருந்தாலும்,கீழே இருந்து தான் வந்தோம்...என்ற எண்ணம் இருக்கும் வரையில் முன்னேற்றம் தான்..அதில்லாமல் மேலே இருந்து தான் குதித்தோம் என்ற எண்ணமிருந்தால் ?????????????????
நானும் அங்கிருந்து மனக் கசப்பில் இங்கு வந்தவன் தான்,,,இன்று வரை மன மகிழ்ச்சியை தவிர வேறெதுவையும் நான் இங்கு சந்திக்கவில்லை...
காரணம் நண்பன் அவர்கள்,உண்மையிலேயே நண்பனாக இருப்பதால் தான்..

நண்பன் மட்டுமா நண்பன்? இங்கு எல்லோருமே நண்பன்கள் தான். எல்லாமுமே நன்மைகள்தான். எல்லாமுமே நலன்கள் தான்.

இந்த வெற்றியால் நாமும் சாதித்துவிட்டோம் என்று இருமார்ந்துவிடக்கூடாது. இன்னும் இன்னும் இன்னும் என்ற வாக்கியம் மட்டுமே நாம் கொண்டு இன்னும் மேல்நோக்கி சென்றுகொண்டே இருக்கவேண்டும்.
நன்றி கிவிபாய்
:”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 7:22

kiwi boy wrote:நாம் எத்தனை உயரத்தில் இருந்தாலும்,கீழே இருந்து தான் வந்தோம்...என்ற எண்ணம் இருக்கும் வரையில் முன்னேற்றம் தான்..அதில்லாமல் மேலே இருந்து தான் குதித்தோம் என்ற எண்ணமிருந்தால் ?????????????????
நானும் அங்கிருந்து மனக் கசப்பில் இங்கு வந்தவன் தான்,,,இன்று வரை மன மகிழ்ச்சியை தவிர வேறெதுவையும் நான் இங்கு சந்திக்கவில்லை...
காரணம் நண்பன் அவர்கள்,உண்மையிலேயே நண்பனாக இருப்பதால் தான்..

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 876805 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 876805 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 876805நண்பன் மட்டும்தானா "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 930799 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 930799

நானும் அதை ஒத்துக்கிறேன் தோழா அவரது தோழமை நண்பர்களை அணுசரிக்கும் விதம் யாருக்கும் வந்திடாது "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 741156 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 741156

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Nov 2014 - 14:50

வேலையின் நிமித்தம் உள் சென்றேன் என்கண்ணில்பட்டது காணாதோரின் பார்வைக்கு சேனையின் ஆரம்பகாலக் கதை

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Nisha Thu 20 Nov 2014 - 14:53

திரி நகர்த்தும் பணியை உங்கள் தலையில் போட்டாச்சா? ஜமாயுங்கள் சார்!

 இந்த பதிவை நான் நேற்று இரவு படித்தேன்!

மேலெழுப்பியதற்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Nov 2014 - 14:55

Nisha wrote:திரி நகர்த்தும் பணியை உங்கள் தலையில் போட்டாச்சா? ஜமாயுங்கள் சார்!

 இந்த பதிவை நான் நேற்று இரவு படித்தேன்!

மேலெழுப்பியதற்கு நன்றி!
நன்றி அக்கா யாதுமானவள் அக்காவின் எழுத்தில் அமைந்த இந்த திரி மிகவும் முக்கியமானது

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Nisha Thu 20 Nov 2014 - 14:57

ம்ம்ம்ம்ம் புரிந்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Nov 2014 - 14:59

Nisha wrote:ம்ம்ம்ம்ம் புரிந்தது!
அங்கு திரும்பச்சென்ற போதான் புரிகிறது எவ்வளவு அன்யோன்யமாக காலம் கடந்திருக்கிறது என்று எத்தனை உறவுகளை எவ்வாறெல்லாம் வாழ்த்திருக்கிறோம் நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Nisha Thu 20 Nov 2014 - 15:01

புரியவில்லைப்பா! எங்கு திரும்பச்சென்ற போது புரிகின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Nov 2014 - 15:02

Nisha wrote:புரியவில்லைப்பா! எங்கு திரும்பச்சென்ற போது புரிகின்றது?
வாழ்த்துத் திரியினுள் சென்றபோது விதவிதமான வாழ்த்துகளைக் கண்டபோது நெகிழ்ந்தேன்

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by பானுஷபானா Thu 20 Nov 2014 - 15:04

தூசி தட்டிட்டிங்களா. இந்த தூசி யாது அக்க்காவை இங்க கூட்டி வரனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Nov 2014 - 15:06

பானுஷபானா wrote:தூசி தட்டிட்டிங்களா. இந்த தூசி யாது அக்க்காவை இங்க கூட்டி வரனும்.
அக்கா விளையாட்டில் பிசியாயிருக்காங்க PHD செய்வதாக சொன்னார்கள் பார்க்கலாம் வருவாங்க

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Nisha Thu 20 Nov 2014 - 15:07

ம்ம்ம் இப்ப புரிந்தது! 

எப்போதும் ஓல்ட் இஸ் கோல்ட் தான்!

ஆனால் இத்தனை ஆதங்கமாய் , ஆக்ரோசமாய்  எழுதியவர்கள் பின் தொடர்ந்தவர்கள் இடை நடுவில்  சென்றதேனோ?  பலர் கண்ணை உறுத்தும் படியாயிருந்த எழுத்து பிழைகளை  களையாமல் விட்டதேனென என்னுள்  கேள்வி இருக்கின்றது  ஹாசிம்!

நாம் இருக்கும் வீடு என நாம் நினைத்தால் அதை துசி இல்லாமல் துடைத்து சுத்தமாய்  வைத்திருக்கணும் என நினைக்க மாட்டோமோ! நம்மை மற்றவர் மதிக்க நம் சூழலையும் நாம் பத்திரமாய் பாதுகாக்கணும் என தோன்ற மாட்டுதோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Nov 2014 - 15:17

Nisha wrote:ம்ம்ம் இப்ப புரிந்தது! 

எப்போதும் ஓல்ட் இஸ் கோல்ட் தான்!

ஆனால் இத்தனை ஆதங்கமாய் , ஆக்ரோசமாய்  எழுதியவர்கள் பின் தொடர்ந்தவர்கள் இடை நடுவில்  சென்றதேனோ?  பலர் கண்ணை உறுத்தும் படியாயிருந்த எழுத்து பிழைகளை  களையாமல் விட்டதேனென என்னுள்  கேள்வி இருக்கின்றது  ஹாசிம்!

நாம் இருக்கும் வீடு என நாம் நினைத்தால் அதை துசி இல்லாமல் துடைத்து சுத்தமாய்  வைத்திருக்கணும் என நினைக்க மாட்டோமோ! நம்மை மற்றவர் மதிக்க நம் சூழலையும் நாம் பத்திரமாய் பாதுகாக்கணும் என தோன்ற மாட்டுதோ?
புரிகிறது அக்கா செய்வோம் நன்றி

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by இன்பத் அஹ்மத் Thu 20 Nov 2014 - 17:04

நனறி அக்கா
தவறாய் புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by சுறா Fri 21 Nov 2014 - 14:12

தலைப்பில் உள்ள எதிரிகளுக்கு நன்றி என்பதை "உருவாக காரணமானவர்களுக்கு நன்றி" என்று மாற்றுங்கள் நண்பர்களே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by பானுஷபானா Fri 21 Nov 2014 - 14:15

சுறா wrote:தலைப்பில் உள்ள எதிரிகளுக்கு நன்றி என்பதை "உருவாக காரணமானவர்களுக்கு நன்றி" என்று மாற்றுங்கள் நண்பர்களே

!_ !_ !_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” - Page 2 Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum