Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உண்மையான பலசாலி
4 posters
Page 1 of 1
உண்மையான பலசாலி
கோபம், கோபம்
உண்மையான
பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம்
வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும்
வழக்குகள்.
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல்
சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக
உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்)
மற்றவர்கள் மதிக்காத போது...
நம்முடைய
பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது
(தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும்
போது...
எதிர்பார்த்த
மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன. ஒருவன்
மற்றொருவனைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது அவன் "குரங்கு" என்று
பதிலுக்குத் திட்டினால், அந்தச் செயல்தான் கோபம் ஆகும். ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித
அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம்
என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து -
பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும். ஒரு
மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம்
போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள்
இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும்
சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை
ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்... வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும்.
(கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) திருமணம் மற்றுமுள்ள
தொடர்புகளை அழித்து விடும்.
தொழிலை
முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. மன
இறுக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். முறையாக சிந்தித்து
செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான
இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள.
55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது. கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு
விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும்
விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு என சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக, கோபம்
உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை
இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
கோபத்தை குறைக்க சில வழிகள்:
1.
கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு
பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். 2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே
உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள். 3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள் 4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். 5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள். 6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மௌனமாக இருங்கள்.
ஒருமுறை இவைகளை கடைபிடித்துப் பாருங்கள்....
கோபம் பற்றி அல்லாஹ்வின் தூதர் சொன்னது என்ன தெரியுமா?
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்)
அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில்
ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக்
கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அ¥து பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம்
பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்''என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று
கூறினார். அதற்கு அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்'' என்றார். (புகாரி 6115-6048-3282)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: கோபம்
ஷைத்தானிடமிருந்துள்ளது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான்.
நெருப்பு தண்ணீரால்தான் அணைக்கப்படும். எனவே உங்களில் ஒருவருக்குக் கோபம்
வந்தால் அவர் உளுச் செய்யட்டும்.(அபூதாவூத்,அஹ்மத்)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், உங்களில்
ஒருவருக்கு அவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர்
உட்கார்ந்து விடட்டும். கோபம் அகன்றுவிட்டால் சரி. இல்லாவிடில் அவர்
படுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். (அஹ்மத்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்! ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.
பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.(புகாரி 6064-6066-5143-6724)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,)அல்லாஹ்வின் அடியார்களே!(அன்பு பாராட்டுவதில்)சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு
மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.(புகாரி 6065-முஸ்லிம்)
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: உண்மையான பலசாலி
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,)அல்லாஹ்வின் அடியார்களே!(அன்பு பாராட்டுவதில்)சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு
மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.(புகாரி 6065-முஸ்லிம்)
நன்றி தோழரே .
மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.(புகாரி 6065-முஸ்லிம்)
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உண்மையான பலசாலி
மிக மிக நல்ல பதிவு அன்பு உடன் பிறப்பே ஜஷாக்கல்லாஹ் ஹைர் இன்னும் இது போன்று தரமான பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்.
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 74 வயதிலும் தம் கட்டும் பலசாலி பாட்டி (படங்கள், வீடியோ இணைப்பு)
» உண்மையான நட்பு...
» உண்மையான பக்தன்
» உண்மையான ஆசிரியர்.
» உண்மையான பன்னின்னு!
» உண்மையான நட்பு...
» உண்மையான பக்தன்
» உண்மையான ஆசிரியர்.
» உண்மையான பன்னின்னு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum