Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
+2
முனாஸ் சுலைமான்
nazimudeen
6 posters
Page 1 of 1
படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
மல்லிகை
பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள், என் தலை முடியைப்
பார்த்து, ''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும் குறுக்கே
புகுந்த நீங்கள் ''இது நரையா? முப்பது வருடம் மல்லிகைப் பூவை சூடிச்சூடி
இவள் கூந்தலும் மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள். ''அப்பா உன்னை
விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள். கட்டிக் கொண்டவளை விட்டுக்
கொடுக்க அவருக்குத் தெரியாது,மகளே.
நனையும் குழந்தை
கிழிந்த
ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன்
கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன் முதுகையே கூடாரமாக்குவாள்.
அப்படியும் அக்குழந்தை நனையும் தாயின் கண்ணீர்த்துளிகளால்.
விழும் போது
விடிகாலை
சேவல் கூவியது. 'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும்
நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது. மாலை
நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது. ''நான் விழுந்து
கொண்டிருக்கிறேனே! என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா? எழும் போது
வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன் கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன்.
''எழும் போது தாங்க வருபவன் எல்லாம் விழும் போது தாங்க வருவதில்லை.''
சூரியன் உணர்ந்து சொல்லியது..
தண்ணீர்
தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார், ''இதுவே மேலும் குளிர்ந்தால்...?'' 'பனிக்கட்டி'என்றான் சீடன். ''கொதித்தால்...?'' 'நீராவி'
ஞானி சொன்னார், ''மனிதனும் குளிரும் போது திடமாகிறான். கொதிக்கும் போது ஆவியாகிறான்.''
அழகும் பலனும்
புல்
வெளி. அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது, ''இந்த அந்தி நேர
மேகம் தான் எத்தனை அழகு! தகதகவென தங்க நிறத்தோடு. அந்த அழுக்கு மேகத்தைத்
தான் பிடிக்கவில்லை. கன்னங்கரேல் என்று.'' அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி. சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது. நா
உலர்ந்தது. உயிர் மெல்ல மெல்ல வறண்டது. அதே நேரத்தில், அழுக்கு மேகம்
இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது. புல்வெளி எங்கும் பூரிப்பு.
அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது: ''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக்
கொண்டது பார்த்தாயா? அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய
அவசியமில்லை. பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.''
விடாமுயற்சி
கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி. குருவும் அவரது சீடர்களும்
காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார், ''உனக்கு என்ன
தெரிகிறது?'' 'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி
தெரிகிறது.' அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான், 'துன்பங்கள்
தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.' குரு
சொன்னார், ''சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு.''
சேதம்
ஒரு
யானை தோட்டத்தில் நுழைந்தால் அது உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும்.
தேனீ தேன்எடுப்பது மட்டும் வித்தியாசமானது. அது தேனை எடுப்பதால் பூவிற்கு
எந்த சேதமும் மாற்றமும் ஏற்படுவதில்லை. ஒரு பூவைப் பார்த்து அதில் தேனீ
தேன் எடுத்ததா இல்லையா என்பதை அறிய முடியாது.
நிழல்
நான் மாறும்
போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும் நண்பன்
எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.
மலரின் அழகு
தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின்
கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை
விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.
தெளிவு
தண்ணீர் தெளிவானது. கண்ணாடி தெளிவானது. அதே போல் தான்
மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும்
படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போது தான்
அடுத்தவரைப் பார்த்து சிரிக்கத் தோன்றும். தெளிவு வந்து விட்டால்
தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம். நம்முடைய அகந்தையில்
செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.
சுமை
குடையும் ஒரு சுமை தான் மழை இல்லாத போது. படிப்பும் ஒரு சுமை தான் வேலையில்லாதபோது.
பசுவின் புகழ்
பன்றி,
பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள்
உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என்
மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப
மாட்டேன் என்கிறார்கள் .'' பசு கூறியது : நீ கூறுவது உண்மையே. அதன் காரணம்
நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''
நான் எங்கே?
நண்பனே.
என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்? நான் உன் அருகிலேயே இருக்கிறேன். நான்
ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை. என்னை உண்மையில் தேடினால் ஒரு
கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய். நான் உன் நம்பிக்கையில்
இருக்கிறேன் நண்பனே! ---கபீர்தாசர்
மாற்றம்
ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?'' ஆந்தை: கீழ் திசை நோக்கி
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால்
முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய். _சீனக்
குட்டிக் கதை
வித்தியாசம்
பொதுநலம்
என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை
இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று
உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால்
கால்பந்து உதை படுகிறது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல்
தருவதால் அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன்
புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.
மதிப்பு
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்.
நன்றி: தமிழ் தாயகம்
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
அருமை அன்புத்தோழரே சிறந்த தொகுப்பு
அத்தனையும் அருமையான விளக்கங்கள் நன்றி பகிர்வுக்கு
நன்றி நன்றி

இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
தேன் துளிகளாக தொகுத்து வளங்கிய அன்பு உடன் பிறப்பிற்கு ஆயிரம் நன்றிகள் பயனுள்ள துணுக்குகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள், என் தலை முடியைப்
பார்த்து, ''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும் குறுக்கே
புகுந்த நீங்கள் ''இது நரையா? முப்பது வருடம் மல்லிகைப் பூவை சூடிச்சூடி
இவள் கூந்தலும் மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள். ''அப்பா உன்னை
விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள். கட்டிக் கொண்டவளை விட்டுக்
கொடுக்க அவருக்குத் தெரியாது,மகளே
கட்டிக் கொண்டவளை விட்டுக்
கொடுக்க அவருக்குத் தெரியாது,மகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
புல்
வெளி. அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது, ''இந்த அந்தி நேர
மேகம் தான் எத்தனை அழகு! தகதகவென தங்க நிறத்தோடு. அந்த அழுக்கு மேகத்தைத்
தான் பிடிக்கவில்லை. கன்னங்கரேல் என்று.'' அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி. சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது. நா
உலர்ந்தது. உயிர் மெல்ல மெல்ல வறண்டது. அதே நேரத்தில், அழுக்கு மேகம்
இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது. புல்வெளி எங்கும் பூரிப்பு.
அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது: ''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக்
கொண்டது பார்த்தாயா? அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய
அவசியமில்லை. பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.''
அழகான உதாரணம் மிக மிக அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
தண்ணீர் தெளிவானது. கண்ணாடி தெளிவானது. அதே போல் தான்
மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும்
படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போது தான்
அடுத்தவரைப் பார்த்து சிரிக்கத் தோன்றும். தெளிவு வந்து விட்டால்
தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம். நம்முடைய அகந்தையில்
செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
அருமையான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ரசிக்க ரசிக்க இயற்கை
» ரசித்து மகிழ்ந்த கதை,,,
» ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்?
» முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
» கவுதம் மேனன் சூட்டிங்கை ரசித்து பார்க்கும் சமீரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum