Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்
Page 1 of 1
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்
பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசையா? இதோ மகிழ்ச்சியாக வாழ ஆறு வழிகள்.
உறவு முக்கியம்:
திருமண வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதற்கும் தொடரும் உறவு என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தின் நோக்கமும் இதுவே.
மாறாத அன்பு:
எவ்வளவு வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும், எத்தனை முறை முடியுமோ,
அத்தனை முறைகளும் `நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று உங்கள் துணையிடம்
கூறுங்கள். இந்த வார்த்தைகள் உங்களவளின் உள்ளத்தை அசைப்பதாக இருக்க
வேண்டும். இதுவே வாழ்க்கைப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களை
சுவையானதாக்கும்.
வேறுபட்ட சூழல்:
இரண்டு வேறுபட்ட சூழலில் இருந்த இருவர் வாழ்க்கையின் பொருட்டு ஒன்று
சேரும்போது அன்பு, காதலுக்கு இணையாகவே வாக்குவாதங்களும், சண்டைகளும்
எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான பிரச்சினைகள் கூட பலநேரங்களில் ஊடலில்
இருந்து தான் தொடங்கும்.
பலநேரங்களில் அன்பின் ஆழத்தை அதிகரிக்கவேண்டிய இந்த ஊடலுக்குள் ஈகோ
புகுந்து முரண்பாட்டை அதிகரித்து விடும். இந்த முரண்பாடுகளை கோபமான
வார்த்தைகளில் வெளிப்படுத்துவதால் பாதிப்பு நேரலாம். விபரீதம் உணர்ந்து
யாராவது ஒருவர் இறங்கி வர வேண்டும்.
கால மாற்றங்கள்:
தம்பதியர் ஒருவர் மற்றவரை தரக்குறைவாக
எடைபோடக்கூடாது. இவர் நம்மவர், இவள் நம்மவள் என்கிற உணர்வே இதயத்தின்
ஆக்கிரமிப்பாக இருக்க வேண்டும்.
இந்த ஆக்கிரமிப்பு மட்டும் கண்மூடித்தனமாக இருந்தாலும் தப்பில்லை.
வாழ்க்கை இனிக்குமே.தம்பதியருக்கு மனஅழுத்தம் பலவிதங்களில் வரலாம்.
நோய்கள், பணப்பிரச்சினை, தொழிலில் ஏற்றத்தாழ்வுகள், அண்டை அயலாருடன்
மோதல், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் வரலாம்.
இப்படிப்பட்ட தம்பதியினருக்கு மோசமான எதிரி நம்பிக்கை இழப்பு. சந்தேகம்
முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.
வலியுறுத்துங்கள்:
கணவன் குடிகாரனாகவும், மனைவி குறை கூறுபவளாகவும் இருந்து விட்டால்,
பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மற்றவர்கள் இவர்களை சந்திக்கும்
போது ஒருவர் மீதான குறையை மற்றவர் நாசூக்காக வெளிப்படுத்தலாம். இந்த
மறைமுக வலியுறுத்தலுக்கு நாளானாலும் பலன் உண்டு.
தொழிலை மதியுங்கள்:
அடுத்தது தம்பதியருக்குள்ளான தொழில் மரியாதை. மனைவியின் வேலை மதிப்பு
மிக்கதாக இல்லை என்று கணவன் உதாசீனம் செய்தால், அது அவளைக் கவலைப்படுத்தி
விடும். அதே போல், மனைவி உயர்ந்த பதவியில் இருந்து கணவனை விட அதிகம்
சம்பாதித்தால், அதனால் உண்டாகும் பொறாமை கணவனை அரித்து விடும். அவன்
அவளைப் பலவழிகளில் காயப்படுத்துவான். அலுவலக பிரச்சினையை வீட்டிற்கு
கொண்டு வருவது இருவருக்கும் நல்லதல்ல.
பிரச்சினையின் ஆழத்தை இரண்டு பேரின் பார்வையிலிருந்து பார்ப்பது
எப்போதும் நல்லது. இரண்டு பக்கங்களிலுமே மாறுபட்ட கருத்துக்கள் எழலாம்.
ஆனால், வேற்றுமைகளை உடனே களைய வேண்டும். தாமதமானால், சமாதானம் ஏற்பட
தொழில் முறை குடும்பநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தினசரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சந்தோசமான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்
» மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு...!
» உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம்
» உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்.
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
» மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு...!
» உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம்
» உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்.
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum